~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கொலுசு - முதல் சிறுகதை


என் இனிய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2004
நான் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன், சும்மா பார்த்துட்டே இருக்கியே எதாவது பேசு,
உன்னதான் எதாவது பேசு டா .
நீ ரொம்ப அழகா பேசுற
போடா உனக்கு இதே வேலையா போச்சு
- வெட்கப்பட்டாள்

எனக்கு ஒரு ஆசைடி, உனக்கு ஒரு கொலுசு வாங்கி தரனும்
அத போட்டுகிட்டு ஜல் ஜல்ன்னு நீ நடந்து வரத பார்க்கணும்
உனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை?
ஏனென்றால் உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்
உண்மையா ??
- வெட்கப்பட்டாள்

2005
எனக்கு ஒரு ஆசைடி
போதும் நிப்பாட்டு, உன்னோட ஆசையை தூக்கி குப்பைல போடு
நான் என்ன பண்ணட்டும் காசு இருந்தா இப்பவே வாங்கி தருவேன்
அப்ப காசு இருக்கும் போது இந்த டயலாக் பேசு.
-கோவப்பட்டாள்

2006
கொலுசு நல்ல இருக்கா?? என் அப்பா வாங்கி தந்தார்.
2000 ரூவா.
நான் 5000 ரூவாக்கு கொலுசு வாங்கிடறேன் பாரு

ஹலோ யார் பிரசாத்தா?
ஆமா நீங்க யாரு?
நீ லவ் பண்ணுறியே சங்கீதா அவளால ஏமாத்தப்பட்டவன்
என்ன சொல்லுர? என் சங்கீதா அந்த மாதிரி எல்லாம் பண்ணமாட்ட
ரொம்ப ஓவரா நம்பாத அவள. நான் வாங்கி குடுத்த கொலுசதான் இப்ப போட்டு இருக்கா
2000 ரூவா , அவ அப்பன் வாங்கி குடுத்தான்னு சொல்லி இருப்பாளே??
என்ன சொல்லுர நீ? அப்ப அந்த கொலுச நீதான் வாங்கி கொடுத்தியா ?


ஹாய் டா ஏன் முகம் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு ?
யாரு அந்த பையன் ?
யாருனா ? எந்த பையன கேக்குற ?
உனக்கு கொலுசு வாங்கி குடுத்தானே அவன கேக்குறேன்.
-மௌனம் ஆனாள் .

2008
என்னங்க நான் ஒரு கொலுசு வாங்கிட்டுமா
நான் அன்னைக்கே சொன்னேன்ல நான் ஏன் கொலுசு வெறுக்கிறேன்னு, வேற எது வேணா கேளு வாங்கிதறேன் கொலுசு மட்டும் வேண்டாம்.
-அமைதி ஆனாள்.

2018
அப்பா
என்னடா செல்லம்
என்னோட பர்த்டேக்கு என்ன வாங்கி தருவிங்க?
உனக்கு என்னடா வேணும்?
எனக்கு கொலுசு வேணும் பா.
அப்பாக்கு கொலுசு புடிக்காதே மா.
அப்ப எனக்கு பர்த்டே கிப்ட் ஏதும் வேண்டாம் போ.
-கோவப்படாள்

அப்பாகிட்ட என்னடா கோவம் உனக்கு? டின்னர் வேண்டாம்ன்னு சொன்னியாமே?
ஆமா எனக்கு கொலுசு வாங்கி தர மாட்டேன்னு சொன்னிகள்ல
அதுக்காக சாப்பிடமாட்டியா?
கொலுசு வாங்கிதறேன் வா வந்து சாப்பிடு.
தேங்க்ஸ் பா
- நான் சந்தோஷமானேன்.

-----------------------------------------------------------------------------------------------



திரும்பிப் பார்க்கிறேன் - 28/12/2009

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கலைஞர் தொலைகாட்சியில் தமிழ் படம் பற்றி ஒரு ப்ரோக்ராம் போட்டு இருந்தாங்க. ஷிவா பற்றி உங்களுக்கு தெரியும் மொக்கை மன்னன் கொஞ்ச நேரம் அவரிடம் பேசினால் நம் மண்டை காஞ்சி கருவாடா ஆகிடும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அவர்தான், படத்தின் இயக்குனர் அமுதன் , தயாரிப்பாளர் துரை அழகரி பக்கத்தில் வைத்து கொண்டு பேட்டி எடுத்தார். துரையிடம் ஷிவா இந்த படத்தை ஏன் நீங்க தயாரிக்க ஒத்துகிட்டிங்க என்று கேட்டார் , கொஞ்சம் கூட முகத்தில் ஒரு ரியாக் ஷன் காட்டமல் செம ஜோக் அடிச்சாரு. " என்னைய மதுரைக்கு கடத்திட்டு போய் மிரட்டி இந்த படத்த தயாரிக்க வச்சிட்டாங்க" இத கேட்ட ஷிவா ஜெர்க் ஆகி "உங்கள மதுரைக்கு கடத்திட்டு போய் மிரட்டினாங்க?" "ஆமாங்க" என்றார் இவர். நாங்களும் நம்பிட்டோம் பாஸ் ..

-----------------------------------------------------------------------------------------------------

தமிழ் படத்தின் பாடல்களை கேட்டேன் இசை அமைப்பாளர் புதுசு என்றார்கள் ஆனால் அந்த மாதிரி ஏதும் தெரியவில்லை பாடல்களை கேட்கும் போது.

"குத்து விளக்கு" அடுத்த கத்தாழ கண்ணால வெர்ஷன், உஜ்ஜைனி பாடி இருக்கும் ஐயிடம் சாங். பாடலின் முதலில் வரும் அந்த வீணை கேட்கும் போது வசூல்ராஜாM.B.B.S படத்தில் வரும் "சீனா தான" நினைவுபடுத்துகிறது.

தீம் மியூசிக்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கனும் இதுல அந்த மாதிரி எல்லாம் இல்ல, கலாய்க்கிறது என்று முடிவான பிறகு தீம் மியூசிக் மட்டும் விதிவிலக்கா என்ன? மாஸ் படத்துக்கு என்ன மாதிரியான தீம் இருக்குமோ அதே மாதிரி இருக்கு ஆனா நடுவு நடுவுல "முடியல , தாங்கல, இது ஓவர்ன்னு" ஹீரோக்கு ஆப்பு வைக்கிற வார்த்தைகள் இருக்கு.

" ஒ மகா சியா " கேட்கும் போது கண்டிப்பா உங்களின் சிரிப்பை அடக்க முடியாது. புரியாத மொழிகளை போட்டு ஒரு டெம்ப் கிரியேட் பண்ணுவாங்க ரஹ்மான் , ஹாரிஸ் ஜெயராஜ் , விஜய் ஆண்டனி இந்த வார்த்தைகளை மற்றுமே வைத்து செம ரவுசான மெலடி பாட்டு . ஹரிஹரன் குரல் சூப்பராக செட் ஆகி இருக்கிறது.

"ஒரு சுறாவளி" ஷங்கர் மகாதேவன் பாடி இருக்கும் இந்த பாடல் , படையப்பா படத்தில் வரும் வெற்றிகொடி கட்டு படத்தின் பிரதிபலிப்பு போல இருக்கு, கொஞ்சம் வித்தியாசமா, அதே சமயம் பாஸ்ட் பீட் சாங். சின்ன பாடல் தான் கேட்கும் போது மிக சுவாரசியமா இருக்கு .

ஹீரோக்கு ஓபனிங் சாங் இல்லாமல் எப்படி ?? "பச்ச மஞ்ச சிவப்பு தமிழன் நான்" செம தத்துவ பாடல், சாம்பிள் தத்துவம் ஒண்ணு பாருங்க

" தயிர்ல போட்டா தயிர் வட, போடலன்னா அது மேதுவட, ஓட்ட இருந்தா அது ஓட்ட வட", சாம்பிள்க்கு இது போதும்ன்னு நினைக்கிறன். இந்த மாதிரி தத்துவம் அடித்து தூள் கிளப்பும் பாடல்.
-----------------------------------------------------------------------------------------------------
Hans Zimmer இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்கிர்களா?? Pirates of the Caribbean 1,2and3 parts , The Da vinci code , Dark knight , Angels and Demons போன்ற படங்களின் இசை அமைப்பாளர்.

Pirates of the Caribbean படத்தை பார்த்தவர்கள் படத்தில் வரும் அந்த
பின்னணி இசையை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து இருக்கமாட்டார்கள்.

Jonny Deep செய்யும் சாகசங்கள் மற்றும் சேட்டைகளை இசையின் முலமாக
ரசிக்க வைத்தவர், The Da vinci code மற்றும் Angels and Demons படங்களில் நடக்கும் அந்த சேசிங் சீன் மற்றும் பரபரப்பான கட்சிகளை இவரின் இசையின் முலம் நம்மை மேலும் திகில் ஊட்ட செய்யும்.

இவரின் Angels and Demons படத்தின் orchestra மியூசிக் ஒரு நண்பன் முலமாக கிடைத்தது. படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வரும் இந்த இசையை முழு வடிவம் கேட்கும் போது இருக்கும் பரவசமே தனி. இந்த லிங்க் சொடுக்குங்க தரவிரக்கம் செய்யலாம் முழு பின்னணி இசையை..

-----------------------------------------------------------------------------------------------------

ஒரு வாரமா சாந்தம் தியேட்டர்ல டிக்கெட் கிடைக்காமல், ஒரு வழியா நேத்து மாலை காட்சிக்கு அவதார் படத்தின் டிக்கெட் கிடைத்தது. ரொம்ப ஆவலாக சென்றேன் ஆனால் எனது ஆவலை அந்த 3D கண்ணாடியால் ஏன் தான் வந்தோமோ என்று ஆகிவிட்டது. அந்த கண்ணாடியின் பிரேம் கொஞ்சம் தடிசாக இருந்தது. படம் ஆரமித்து 5 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது அதற்க்குள் மூக்கில் சிறிது வலி எடுக்க ஆரமிதுவிட்டது. சிறிது நேரத்தில் அதை தூக்கி போடலாம் போல இருந்தது வலி. கண்ணாடியை எடுத்தால் படம் மங்கலாக தெரிகிறது. படம் முடியும் வரை கண்ணாடியை கண்களுக்கு நேராக கையில் பிடித்து கொண்டே படம் பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது படம் AWESOME .. இந்த படத்தை தியேட்டர்ல அதும் 3Dல பாருங்க புதியதோர் படைப்பை கண்டுக்களிங்க.



பிட் ...

இந்த பதிவுக்கு ஏன் பிட்ன்னு பேரு வச்சேன்னு கடைசில சொல்லுறேன், அதுக்காக கடைசி வரிக்கு உடனே போயிடாம முழுவதும் படிங்க.

கொஞ்ச நாளுக்கு முன்பு விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி தன் கணவர் அவரின் பெயரை சொல்லி கூப்பிடுவது இல்லைன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். அவரின் கணவரோ ரொம்ப சாதரணமா பதில் சொன்னார் நான் அவளின் பெயரை சொல்லி சில நேரங்களில் கூப்பிடுறேன். அவரு என்னோட முழு பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை, ஒருவேளை எனது பெயர் அவருக்கு பிடிக்காமல் இருக்கும் என்றார் அந்த பெண்மணி. அவரின் கணவரோ ஆமாம் என்பதா இல்லை என்பதா?? ஏதும் சொல்லாமல் முழித்தார். உங்கள் முழு பெயர் என்ன என்று கோபிநாத் கேட்க அதுவரை இருந்த கவலையை மறந்து சிரித்து கொண்டே சொன்னார்.

இந்த வாரத்தில் ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தேன், ஒரு கடைல தினகரன் ஹெட்லயன்ஸ் பேப்பர் கொட்டை எழுத்துல ஒரு நியூஸ் போட்டு இருந்துச்சு, படிச்ச உடனே சிரிப்பு அடக்க முடியல. அதே சமயம் அந்த நியூஸ் அவ்வளவு முக்கியமான்னு தோணுச்சு, நாட்டுல எவ்வளவோ நடக்குது அதை எல்லாம் விட்டுட்டு இதை போட்டு இருக்காங்களே என்கிற ஆதங்கம் வந்தது. சன் குழுமத்தின் ஒரு அங்கமான அந்த பத்திரிகைக்கு எப்படி விளம்பரம் பண்ணினால் விற்பனை ஜோரா நடக்கும் என்று நன்றாக தெரியும் அதை அன்று பார்த்து திரும்ப தெரிந்துகொண்டேன். அந்த மேட்டர் என்னன்னா ..

" ஷகிலாவுக்கு திருமணம் "

இப்ப தெரிஞ்சி இருக்கும் ஏன் இந்த பதிவுக்கு பிட் என்கிற பெயர் வைத்தேன் .

அந்த பெண்மணியின் பெயர் ஷகிலா பானு, அவரின் கணவர் இவரை பானு என்று தான் கூப்பிடுகிறார்.

டிஸ்கி:- மக்கா தயவுசெய்து ஷகிலாக்கு கல்யாண வாழ்த்துகள் என்று பின்னுடத்தில் சொல்லிடாதிங்க.

2009 எனது பார்வையில் - தொடர் விளையாட்டு

2009 என்னை எழுத தூண்டிய வருடம். படிப்பதில் இருந்த ஆர்வத்தை எழுத்தில் திருப்பிய வருடம். படிப்பதை ஒரு தவம் போல கழித்த நாட்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலையுலகம் என்பது மிக பெரிய கடல் அதில் மிக அதிகமாக படித்துகொண்டு இருந்தேன். எங்கோ கிடைத்த ஒரு லிங்க் மூலம் படிக்க ஆரமித்த பழக்கம் என்னை ஒரு அடிமை போல ஆக்கிவிட்டது. யார் என்று தெரியாத பெரிய பெரிய எழுத்தாளர்களை ஒரு சேர வலைத்தளத்தில் வாசித்த நாட்கள் அதிகம். சாரு , ஜெயமோகன், ராமகிருஷ்ணன் என்று ஒரே நாளில் பலரின் எழுத்துகளை படித்தது ரொம்ப வித்யாசமான சுவையாக இருந்தது. புத்தகத்தின் மீது இருந்த மோகம் என்னை ஆட்டி படைத்த நாட்கள் அதிகம், ட்ரெயின் பாஸ் வாங்க வைத்து இருந்த பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டேன். வரலாறு புத்தகங்களை தேடி தேடி படித்த நாட்கள் எண்ணில் அடங்க முடியாததாக இருக்கிறது. பின்நவினத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் படித்த புத்தகம் சிலது.


என்ன எழுதுவது என்றே தெரியாமல் எழுத வந்தவன். வாசிப்பு அனுபவமே இருந்த எனக்கு எப்படி எழுதுவது என்றே தெரியாமல் மனம்போன போக்கில் டைப் அடித்த நாட்கள் அதிகம். கொஞ்சம் போல் தெரிந்த எழுத்து நடையை எழுதுவதற்குள் சிரம்மப்படேன் ஆரம்பத்தில். சொந்த கதை, சோக கதை என்று சிலது எழுதினாலும் சிறுகதை எழுதுவதற்கு மிகவும் சிரமம் ஆகா இருக்கிறது எனக்கு. எப்படி எழுதினாலும் ஒரு பக்கத்துக்குள் ஒரு கதையை கொண்டு வர முடியவில்லை. பார்க்கலாம் 2010 ஆம் வருடம் எழுதுவேனா என்று. யார்றேன்று தெரியாமல் நண்பா, சகா, தலைவரே, தல, அண்ணே என்று அன்புடன் அழைக்கும் நண்பர்கள் நிறைய சேர்ந்துவிட்டன. உரிமையுடன் தவறை சுட்டி காட்ட, வயது விதியாசம் பார்க்காமல் கிண்டல் பண்ண பெரும் உதவி புரிந்தது பின்னுடமிடும் இடம்.

சொந்த வீடு கட்டியது, மகன் பிறந்தது என்று சந்தோசமாக இருந்த நாட்கள் அதிகம். மற்றவற்றை பார்த்தால் (+) (-) சரி விகிதத்தில் இருக்கிறது.

என்ன இருந்தாலும் 2009 ஆண்டு என்பது எனக்கு படிப்பதிலும் எழுதுவதிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.

--------------------------------------------------------------------------------------------------------

ஒரே கேள்விக்கு பலரின் வித்தியாச பதிலை படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது . யாரவது இந்த விளையாட்டை ஆரமிப்பார்கள் என்று பார்த்தேன் ஒருவரும் முன் வரவில்லை . அதனால் இதை நானே தொடங்குவது என்று முடிவு செய்தேன்.

கேள்வி: 2009 எனது பார்வையில்

விதிமுறை :
ஒருவர் இரண்டு பதிவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்


நான் அழைக்க விரும்புவது

பரிசல்காரன் - இதை நன்றி கடன் என்று கூட சொல்லலாம், இவர் என்னை ஒரு தொடர் விளையாட்டு மூலம் நிறைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு சிறு வெளிச்சம் இருந்தால் போதும் நீங்கள் முன்னேறிவிடலாம் என்கிற வாசகத்துக்கு பொருந்தும் பெரிய வெளிச்சம் .

வால்பையன் - இவரை நான் சந்தித்ததை ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன். ரொம்ப அருமையான மனிதர். எதிர் விளையாட்டு விளையாட பிடிக்கும். வாரத்துக்கு ஒன்று தான் என்றாலும் பதிவு நச்சுன்னு இருக்கும்.
எனது பதிவுகளில் ஒரே ஒரு பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வாங்க காரணமாக இருந்தது வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு என்கிற பதிவு.


திரும்பி பார்க்கிறேன் - 20/12/2009


மனைவி, மகனை பார்க்க ஊருக்கு போயிட்டு இருந்தேன், கரூர் கிட்ட வரும் போது எனக்கு எதிரில் இருந்த ஒரு அன்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன்.

நீங்கள் எதற்காக வாழ்கிரிகள் ?? என்றார்.

என்னடா ஊருக்குள்ள இன்னும் கால் அடி எடுத்து வைக்கல அதுக்குள்ள 71/2 நம்மள தேடி வருதேன்னு நினைத்தேன்.

எதுக்காக கேக்குறிங்க ?

நான் ஒரு ப்ரொஜெட் பண்றேன் அதுக்காக வேணும் என்றார். இதுவரை 65 நபர்களிடம் இந்த கேள்வியை கேட்டாராம் அதில் 4 வயது ரொம்ப ஏழ்மையான பையன் சொன்ன பதிலும் 65 வயது ரொம்ப பணக்காரர் ஒருவர் சொன்ன பதிலும் ஒரே மாதிரி இருக்கு, வாழ்கையின் அர்த்தம் தெரியாமல் பதில் சொன்ன 4 வயது பையனும் , வாழ்ந்து முடித்த 65 வயது பெரியவரும் பதில் எப்படி ஒன்றாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டும் அவசியம் இல்ல, என்னோட நம்பர் தரேன் அதுக்கு SMS மட்டும் பண்ணுங்க போதும் என்று அவரின் நம்பர் குடுத்தார்.

சார் நீங்க கேட்ட கேள்வி அருமையானது தான், இந்த கேள்வியை வேறு மாதிரியும் பார்க்கலாமா ?

எந்த மாதிரி ?

நீங்க எதற்கு பிறந்திர்கள்ன்னு வச்சுக்கலாமா?

அப்படி கூட வசிக்கலாம்.

அப்ப இந்த கேள்வியை எனது அப்பா , அம்மாவிடம் தான் நீங்க கேட்கணும், அவங்க என்ன சொல்லுவாங்க அவங்க அப்பா அம்மாவிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும்ன்னு, இப்படியே போன தலைமுறை, அதற்கு முந்தின தலைமுறைன்னு போயிட்டு இருக்குமே தவர பதில்வராது.

சற்று நேரத்தில் அவரின் பேச்சு வேறு பக்கமாக மாறியதை புரிந்து கொண்டேன். இயேசு பற்றி ரொம்ப சில்லாகி பேசினார், அவர் கண்டிப்பாக இந்த பூமியில் திரும்ப உயிர் பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல, கோவில்க்கு போகணும்ன்னு தோணுச்சுனா போவேன், வேண்டாம்ன்னு தோணுச்சுனா போகமாட்டேன், ஒரு தடவை கோவிலுக்கு அருகில் சென்று ஏனோ போக பிடிக்காமல் எனது மனைவியை மட்டும் சாமி கும்பிட்டுவா என்று அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்தேன். அப்படிபட்ட ஆளு நான் என்கிட்ட பிரசங்கம் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு அவருக்கு தெரியல. சிரிது நேரத்தில் கரூர் ஸ்டேஷன் வந்தது வெளியில் வந்ததும் நான் செய்த முதல் வேலை Xavier என்கிற பெயரை எனது மொபைல இருந்து அழித்தது தான்.

----------------------------------------------------------------------------------------

பர பர என்று ஒரு 1000 சரம் பட்டாசு வெடிச்ச மாதிரி இருந்துச்சு இந்தியா vs ஸ்ரீலங்கா முதல் கிரிக்கெட் மேட்ச். நினைச்சு பார்க்க முடியாத ஸ்கோர் சேஸ் பண்ண ஸ்ரீலங்கா வீரர்கள் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது. தில்ஷன் ஆட்டத்தில் அனல் பறந்தாலும் சங்ககரா ஆட்டத்தில் தான் இடியுடன் கூடிய மின்னல் இருந்துச்சு. ஒரு கட்டத்துல வெறுத்து போய் சேனல் மாதி வேற சேனல் பார்த்தேன் திரும்ப neo sports சேனல் பார்த்தா இந்த இரண்டு பேரும் அவுட். இது நல்ல இருக்கேன்னு கொஞ்சம் நேரம் வேற சேனல் பார்க்கிறது , பிறகு கிரிக்கெட் சேனல்க்கு தாவ்றதுன்னு இருந்தேன், நினைத்த மாதிரியே விக்கெட் போய்ட்டு இருந்துச்சு, இந்தியாவும் ஜெய்ச்சிடுச்சு.அடுத்த மேட்சுல இதே மாதிரி பண்ணினேன் ரிமோட் போச்சு, இந்தியா தோத்துடுச்சு. இதுல இருந்து ஒண்ணு தெரியுது ரிமோட்க்கும் கூட இந்தியன் டீம் நிலைமை தெரிஞ்சி இருக்கு. அதுக்கே பொறுக்காம பனால் ஆகிடுச்சு
.

-----------------------------------------------------------------------------------------------



மேலே இருக்கும் படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள், மொபைல்ல கிளிக் பண்ணிய இடம் லயோலா கல்லூரி முன்பு, சாரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள ஷேர் ஆட்டோல போயிட்டு இருந்தேன் அப்ப தான் இந்த பசங்க அபாயம் தெரியாமல் ரொம்ப மும்மரமா தம் அடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க. வீட்டில் உபயோகபடுத்தும் மின்சாரத்தை தொட்டாலே நாம காலி இவங்க கால் வச்சிக்கிட்டு இருக்குற இடம் ஒரு ஜங்ஷன் பாக்ஸ் உயர் அழுத்தம் உள்ள மின்சாரம் இருக்கும் இடம் ஷாக் அடிச்சிதுன்னு வைங்க ஆளே கருகி போய்டுவான். இதுல இன்னொரு கொடுமை அந்த மஞ்சள் நிற தார்பாய் இடத்துக்கு கீழே ஒரு டீ கடை இருக்கு.

ஒரு வார்த்தை இருக்கு படிச்சவனோ இல்ல படிக்காதவனோ சொல்லுவான் ஏதாவது ஒரு இடத்தில இதை கேட்கலாம், அது என்னனா

"படிச்சி இருக்கல அறிவு இல்ல ?? "

இதை இவர்களுக்கு நான் இங்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

------------------------------------------------------------------------------------

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு பாடல் இருக்கிறது " என் ஜன்னல் வந்த காற்றே " ரொம்ப மெலோடியா தொடங்கும் , அப்படியே வெஸ்ட்டன் அப்படியே செம குத்து . கேக்கும் போதே ரொம்ப வித்தியாசம் இருக்கு யுவன் மியூசிக். ரோஷினி, பிரியா , திவ்யா பாடி இருக்காங்க அவங்க அவங்க ட்ரக்கு ஏத்த மாதிரி நிறைய வித்தியாசதோட பாடி இருக்காங்க. மறக்காம கேளுங்க அப்பறம் அதை மறக்க மாட்டிங்க. 3 விதமான பெண்கள் , 3 விதமான பீட்ஸ் . கேட்கும் போதே தோணுது படத்தில் வரும் அந்த 3 பெண்களின் கேரக்டர் ஒரு பாடலில் சொல்லிவிட்டார்கள் என்று .




கேட்டாள் . . .

உனக்கு எத்தனை முறை சொல்லுவது
என்றாள்
தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே
என்றாள்
கடிதம் குடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்
என்றாள்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்றாள்
கண்ணில் நீர்த்துளி படர
கேட்டாள்
ஏன் ரெண்டு நாளாவரல ??

சாருவின் புத்தக வெளியிட்டு விழா : பாகம் 2

இந்த தொகுப்பை விழாவில் நடந்த சிறு சிறு சம்பவங்களை கொண்டது , அதனால் இதை விழா துளிகள் என்று வைத்து கொள்ளலாம்.

விழா ஆரம்பம் ஆனது மாலை 6 மணிக்கு, நான் அரங்கத்துக்கு 5 மணிக்கே சென்றுவிட்டேன். கூட்டம் அவ்வளவு இல்லை. அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் கடைசில் உட்கார்ந்து இருந்ததால் சாரு பேசுவதை என்னால் சரியாக கேட்க முடியவில்லை இந்த முறை முன்னாடி உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கைகளை ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள். அன்பர் ஒருவர் சிற்றுண்டி தயாராக இருக்கிறது சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார். கேசரி, வடை , பணியாரம் என்று ரசனைகார மனிதர் ரசனையாக உபசரித்து இருந்தார். கரும்பு திண்ண கூலி என்பார்களே அது இதுதான்.


தல கேபிள் சங்கர்க்கு போன் பண்ணினேன், என்ன தல எப்போ வருவிங்க என்றேன். கிளம்பி கொண்டே இருக்குறேன் என்றவர் , என்ன அரங்கத்தில் ஒரு 100பேர் இருப்பார்களா என்றார், அந்த சமயத்தில் கூட்டம் அவ்வளவு கூட இல்லை நானும் ஆமாம் என்றேன். விழா ஆரமித்து மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, உட்கார இருக்கை இல்லாமல் நிறைய அன்பர்கள் நின்று கொண்டே விழாவை பார்த்துகொண்டு இருந்தார்கள். பதிவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள், சிறிது நேரத்தில் கேபிள் சங்கர் வந்தார் எனது பேச்சை நம்பி லேட் ஆகா வந்தாரா என்று தெரியவில்லை அவரும் நின்று கொண்டே விழாவை கண்டுகளித்தார். பதிவர்கள் Butterfly சூர்யா, முரளிகண்ணன், லக்கி லுக், அதிஷா, நர்சிம், நிலாரசிகன், அடலேறு, தண்டோரா என்று எனக்கு நன்கு தெரிந்த முகங்களை பார்த்ததில் கொஞ்சம் சந்தோசம்.

விழா ஆரமிப்பதற்கு முன் கவிஞர் மனுஷ புத்திரன் அவர்களின் புத்திரன் புத்திரி போட்ட ஆட்டம் அரங்கை கொஞ்ச நேரம் ரசிக வைத்தது. மகன் இவரை ஹமிது ஹமிது என்று எல்லோருக்கும் கேட்கும் படி உரக்க கத்திகொண்டே இருந்தார். குழந்தைகளை பார்பதற்கு என்றே செல்வி , பெரியம்மா ஒருவர் மற்றும் 2 அன்பர்கள் என்று மாறி மாறி இவர்களை அரங்கத்தை விட்டு வெளியே கூட்டி செல்வதும், பிறகு உள்ளே வருவது என்று இருந்தார்கள்.

எதாவது விழா அல்லது எங்காவது செல்லவேண்டும் என்று கிளம்பும் போது கண்டிப்பாக கேமரா எடுத்து வைத்து கொள்ளவேன். ஏன் என்று தெரியவில்லை அன்று எடுத்து வைக்க மறந்துவிட்டேன், கொஞ்சம் கவலையில் ஆழ்ந்து இருந்தேன் அந்த நேரம் பார்த்து நண்பன் ஒருவர் போன் செய்தான், அவன் மீது கொஞ்சம் எரிச்சல் அடைந்தேன், ஏன் என்றால் என் கையில் கேமரா இருப்பதை அவன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான் என்னை போட்டோ எடு போட்டோ எடு என்று நச்சரிப்பான். இவனை எல்லாம் போட்டோ எடுத்தோமே சாருவை போட்டோ எடுக்க முடியாம போய்விட்டதே என்கிற கவலை.

எனது அருகில் ஒரு அன்பர் உட்கார்ந்து கொண்டு இருந்தார், விழா ஆரமித்து நெடு நேரம் கை தட்டவில்லை அரங்கமே கை தட்டும், சிரிக்கும் ஆனால் இவர் தேமே என்று உட்கார்ந்து கொண்டு இருந்தார். கையில் ஒரு நோட் எடுத்து சுருக்கெழுத்து மூலம் விழாவை தனது பேனாவின் துணையுடன் பதிவு செய்துகொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவரும் கை தட்டுவது, சிரிப்பது என்று இருந்தார். இவருக்கு நேர் மாறாக இருந்தார் எனக்கு பின்னால் இருந்தவர் , இவர் சிரிப்பது அரங்கமே கேட்க வேண்டும் என்று சிரித்தாரா தெரியவில்லை, செம பேஸ் வாய்ஸ் அவருக்கு. எனது அருகில் இருந்தவர் அனைத்து விருந்தினர்கள் பேசையும் குறிப்பேடுத்தவர் சாரு பேச ஆரமிக்கும் போது தனது இருக்கையை விட்டு எழுந்து போய்விட்டார். விழாவின் நாயகனே சாருதான் ஆனால் அவரின் பேச்சை மட்டும் குறிப்பேடுக்காமல் அப்பறம் என்ன இதுக்காக வந்தார் என்று தெரியவில்லை.

4 மணிநேரம் எப்படி விழா சென்றது என்று தெரியவில்லை. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருந்தது அனைவரின் பேச்சும். விழா 5 மணிக்கு ஆரமித்து இருந்தால் என்னை போன்று தூரத்தில் இருந்து வரும் அம்பர்களுக்கு கொஞ்சம் சவுகரியமாக இருக்கும் வீட்டுக்கு செல்ல. அடுத்த வருடம் இதே மாதிரி 10 புத்தகங்களை வெளியிடமாட்டேன் ஒரே ஒரு புத்தகம் தான் அதும் நாவல் என்றார் சாரு. அந்த புத்தகம் வெளியாவதற்கு முன்பே இந்த புத்தகங்களை படித்து விடவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்குறேன். பார்க்கலாம்.

சாருவின் புத்தக வெளியிட்டு விழா


சாருவை நான் எப்படி எல்லாம் கொண்டாடுவேன் என்று எனக்கே தெரியாது. அவரின் எழுத்துகளுக்கு அடிமை என்றே சொல்லலாம் அவ்வளவு வெறி அவரின் எழுத்துகளை படிப்பதற்கு. இணையத்தளத்தில் இவரின் வலைதளத்தை திறக்காத நாள் இல்லை.இன்று என்ன எழுதி இருப்பார் என்று தினமும் அவரின் வலைத்தளத்துக்கு சென்று வருவேன். நான் கொண்டாடும் எழுத்தாளரின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டேன்.

சாருவின் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா, சென்ற சனிக்கிழமை மாலை பிலிம் சேம்பர் ஹாலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். தனது வசீகர குரலால் தொகுத்து வழங்கினார் நிர்மலா பெரியசாமி. கவிஞர் மனுஷபுத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முதும் பெரும் எழுத்தாளர் கந்தசாமி புத்தகங்களை வெளியிட எஸ். ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார் , ஷாஜி, மதன் பாப், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் வசந்தபாலன், திருநங்கை கல்கி, செல்வி , அவந்திகா போன்றோர் பெற்று கொண்டனர்.


எழுத்தாளர் கந்தசாமி பேச்சில் சாரு எழுதுவதை ரொம்ப ரசனையாக சொன்னார். இவரின் பேச்சை கேட்கும் போது இலக்கிய உலகில் பலமான அனுபவம் கொண்டவர் என்று தெரிந்தது.


அழகிய பெரியவனின் பேச்சு ஆரம்பம் முதல் கடைசி வரை ரொம்ப சீரியஸ் டைப்ஆக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்கள் மீது நடைபெறும் வன்முறைகளை கடுமையாக எதிர்த்தார், அதே சமயம் ஹிந்துத்தவாதிகள் மற்றும் ஜெயமோகன் அவர்களை கடுமையாக விமர்சித்தார்.

மதன் பாப் எதற்கு அழைத்தார் என்று தெரியவில்லை, அவர் என்ன பேச வருகிறார் என்றும் தெரியவில்லை. சிரித்தார் பேசினரே தவிர சிந்திக்க ஒன்றும் இல்லை அவரின் பேச்சில்.

ஷாஜி ரொம்ப சாதரணமாக ஆரமித்து நகைச்சுவையாக பேசினார். சாருவுடன் தனக்கு இருக்கும் நட்பு, அவரின் எழுத்துகளை தான் எப்படி எல்லாம் மொழி மாற்றம் செய்கிறேன் என்றும். மலையாள இலக்கிய உலகில் இவருக்கு இருக்கும் மரியாதையை முதலில் பேசிவிட்டு, கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்கிற புத்தகத்தில் உள்ள முக்கால் வாசி தலைப்புகளை பற்றி பேசி அமர்ந்தார். மிக நீண்ட பேச்சு இவருடையது.

தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போதும் விழாவில் கலந்து கொண்டு அருமையாக பேசினார் இயக்குனர் வசந்தபாலன். தனது வெயில் படத்தை சாரு விமர்சிக்காத குறையை அங்கே பகிர்ந்து கொண்டார். அமீர்க்கு கிடைக்க போகும் மிளகா பொடியை நாசுக்காக வெளிபடுத்தினார், தமிழ் சினிமாவை சாரு கிழி கிழி என்று கிழிப்பதை சிரித்து கொண்டே சொன்னவர், ஒரு படம் நன்றாக இல்லையென்றால் எப்படி எல்லாம் கிழிபாரோ அதே சமயம் நன்றாக இருக்கும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை சொல்லி சந்தோசப்பட்டார்.

கல்கி பேசும் போது தங்கள் பாலினத்தவர்கள் சமுதாயத்தில் எப்படி எல்லாம் வஞ்சிக்கபடுகிறார்கள் என்று பேசினார். எந்த பார்வையாளனும் இடையில் கைதட்டாமல் கேட்ட ஒரே விருந்தினர் பேச்சு இவருடையது தான். அது ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை இவர் மாற்று பாலினத்தை சேர்ந்தவரா அல்லது இவரின் பேச்சு மற்றவர்களை போல ரசனை இல்லாததால் என்று தெரியவில்லை. பேச்சை முடிக்கும் முன்னர் தனக்கு அவ்வளவுவாக மேடைகளில் பேசவராது என்று ஒத்துக்கொண்டார்.

பாரதி கிருஷ்ணன் பேச்சு ரொம்ப சுவாரசியமாகவும் , நகைச்சுவையுடனும் ஆரமித்தது நேரம் செல்ல செல்ல இவரின் பேச்சு ரொம்ப சிரியஸ் ஆக சென்றது. கீழ் வெண்மணியில் நடந்த தலித் படுகொலை, கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் என்று இவரின் பேச்சு அனல் கக்கியது , நிதிபதிகளை கூட விட்டு வைக்காமல் அடித்து விள்ளசினார். இவர் இடையில் சொன்ன ஒரு வார்த்தை என்ன என்று எனது மண்டையை போட்டு குழப்பி கொண்டேன். அந்த கேள்வி என்னவென்று கடைசில் கேட்கிறேன் பதில் தெரிந்தவர்கள் பின்னுடத்தில் சொல்லவும்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது தனக்கும் தனது வாசகர் இருவருக்கும் நடந்த கடித போக்குவரத்தை சுவைப்பட சொன்னார். சாரு இங்கே உட்கார்ந்து கொண்டு மலாவி தேசத்தை எப்படி எல்லாம் வர்ணித்தார் அதற்கு அவரின் வாசகர் ஆனந்த் அதை எப்படி எடுத்து கொண்டார் என்றும், அந்த புத்தகத்தை படிக்கும் போது சாரு மலாவி தேசத்தில் இருப்பதாய் போன்றும் ஆனந்த் மயிலாப்பூரில் இருப்பது போன்றும் இருக்கிறது என்றார். அருமையான எழுத்தாளர் இவரின் புத்தகவெளியிட்டு விழாவிற்கு செல்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமே.

இயக்குனர் மிஷ்கின் பேச்சு அதி தீவிர இலக்கிய படிப்பாளி போன்று இருந்தது, வாயில் நுழைய தெரியாத பெயர்களை எல்லாம் சொன்னார் , நினைவுபடுத்தி பார்கிறேன் !!!! சுத்தம் ஒருத்தர் பெயரும் நினைவுக்கு வரவில்லை. சாருவிற்கு தான் எப்படி அறிமுகம் ஆனேன் என்று சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருந்த அணைத்து அன்பர்களும் நெடு நேரம் கைதட்டினார்கள். தனது நந்தலாலா படம் பற்றி சிரிது நேரம் பேசி அந்த கதை எனது அண்ணன்னின் பதிப்புதான் என்றதும் அரங்கமே சிரிது நேரம் அமைதியாக இருந்தது என்பதே உண்மை. ரசனைகார மனிதர் சாருவை போலவே தண்ணி அடிப்பதை சந்தோசமாக ஒத்து கொண்டார். சாருவுடன் சேர்ந்து தண்ணி அடிக்க போகிற நாளை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாக உண்மையை அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார்.


கடைசியாக விழாவின் நாயகன் சாரு பேசும் போது எப்பயும் போல நக்கல் நையாண்டி என்று இவரின் எழுத்துகளை போல இருந்தது பேச்சு. தனக்கு உடம்பு சரியில்லாத போதும் உயிர்மை பதிப்பகத்தில் செலவிட்ட நாட்களையும், தள்ளாடி நடந்து என்ற போது கூட தான் தண்ணி அடித்து வந்து இருக்கிறேன் என்று நினைத்து கொண்ட உயிர்மையில் வேலை செய்யும் அன்பர்கள் என்று சிரித்து கொண்டே சொன்னார். மறக்காமல் தனக்கு உதவி செய்த அணைத்து அன்பர்களுக்கும் நன்றியை சொன்னார். மதன் பாப் ரொம்ப ரசனைகார மனிதர் இப்பொது கூட தண்ணி அடிப்பதை தனது வீட்டில் வைத்து கொள்ளலாம் வாங்க என்கிற உண்மையை சபையில் நகைச்சுவையுடன் பேசினார். அகநாழிகை புத்தக வெளியிட்டு விழாவில் தான் இவரின் பேச்சை முதல் முதலில் கேட்டேன், அன்று என்னை யாரவது பார்த்து இருந்தார்கள் என்றால் என்னை பார்த்து சிரித்திருப்பார்கள். உண்மையில் வாயை திறந்து கொண்டு தான் நான் இவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தேன். மிக பெரிய சந்தோசத்தை குடுத்த நாள் அது.

கேள்வி : நிர்வாணம் அல்லது அம்மணம் அல்லது ??? அந்த வார்த்தை என்ன ?? பதில் தெரியுமா ?




விழாவை பற்றி எழுத இன்னும் இருக்கிறது அதனால் இரண்டு பகுதியாக எழுதுகிறேன். விழாவில் நடந்த சில சுவாரசியமான தொகுப்பு அடுத்த பதிவில் .

ரயில் பயணங்கள் - 3


ஒரு முறை தப்பு செய்தல் அதை தெரியாமல் செய்து விட்டதாக எண்ணி மன்னித்து விடலாம், ஆனால் அதுவே இரண்டு மூன்று முறை நடந்தால்??

நேற்று மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.

தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் 40 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

இந்த நியூஸ் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. ஏதோ பெரிய விஷத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்று கொட்டை எழுத்துகளில் இருக்கிறது. தினமும் சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்லும்அனைத்து மின்தொடர் ரயில் வண்டிகளில் சின்ன சின்ன பைகளாக எப்படியும் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதுஎன்பதை கண் கூடாக பார்கிறேன் .

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருந்து கும்மிடிபூண்டி மார்கமாக சூலூர்ப்பேட்டை செல்லும் மின்சார ரயில் வண்டியில் நடக்கும் அநியாங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்கிறது, அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.

சென்னை மாநகரில் இருக்கும் முக்கால் வாசி ரேஷன் கடைகளில் முன்னால் ஒரு பெண்மணி பார்ப்பதற்கு ரொம்ப சாது போல அல்லது எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பார். அரிசி வாங்க வரும் மக்கள் யாராவது ஒருவரை எதிர் பார்த்து கொண்டு இருப்பார். 1 ருபாய் குடுத்து அரிசி வாங்கும் ஒருவரிடம் நைசாக பேசி அந்த அரிசியை 3 ருபாய் முதல் 5 ருபாய் வரை அவர்களிடம் இருக்கும் அரிசியை இவர் வங்கி கொள்வார்.

இப்படி வாங்கும் அரிசி எல்லாம் இரண்டு வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. திருத்தனி மார்கமாகவும், கும்மிடிபுண்டி மார்கமாகவும் மின்சார ரயில் வண்டியில் கடத்துகிறார்கள். இதற்கு ரயில்வே போலீசில் வேலை செய்யும் பல கருப்பு ஆடுகள் துணை போகிறது. சென்ற மாதம் வெளியான ஒரு தினசரி பத்திரிகையில் போலீஸ்காரர் ஒருவர் மாமுல் வாங்கி அதை தனது தொப்பிக்குள் மறைத்து வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் நடக்கும் ஒன்று.

சூலூர்ப்பேட்டை செல்லும் வண்டியில் இவர்கள் அதை எடுத்து செல்லும் முறையே வேறு. யாரும் அதை சாக்குமுட்டையில் அடைத்து செல்வதுயில்லை. கிடைக்கும் துணிபை அல்லது மீன் சுமந்து செல்லும் குண்டாவில் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் எடுத்து செல்கிறார்கள். ஒருவர் கண்டிப்பாக 100 கிலோக்கு கம்மியாக எடுத்து செல்வதுயில்லை.


ரயில் வண்டியில் இவர்கள் எடுத்து செல்லும் போது அந்த மூடைகளை சீட்க்கு அடியில் பதுக்கி வைத்து விடுகிறார்கள், ரயில் வண்டியோ ஸ்டேஷன்னில் நிற்பது ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கும் அதற்குள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஏத்தி விடுவார்கள், (இதை ஏற்றுவதற்கு என்று ஒருவர் துணைக்கு வருவார்). இந்த கடத்தல் தொழிலை முழுக்க முழுக்க செய்வது பெண்கள் என்பது தான் கொடுமை. பார்ப்பதற்கு ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல இருக்கும் அவர்களின் தோற்றம். சீட்டு அடியில் பதுக்கி வைத்த பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி கதவு ஓரத்தில் உட்கார்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் பார்வை எல்லாம் அந்த அரிசி மூட்டையின் மேல் தான் இருக்கும்.

நம் கண்முன்னே நடக்கும் இந்த கொடுமையை தட்டி கேட்ட முடியாது. கேட்டால் அவ்வளவு தான் அங்கேயே மானத்தை வாங்கி விடுவார்கள். அவர்களின் அர்ச்சனையை காது குடுத்து கேட்டக முடியாது.

இந்த கடத்தல் தொழில் பற்றி எனக்கு முதலில் ஏதும் தெரியாமல் ஒரு பெண்மணிக்கு உதவி செய்து இருக்கிறேன். பார்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தார் , துணி மூட்டை போல ஒன்றை சுமந்து வந்தார். அதை இறக்கி வைக்க கொஞ்சம் உதவினேன். எனது செயலை சிலர் மர்மமாக பார்த்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை இது எல்லாம் கடத்தல் என்று . அந்த பெண்மணி எல்லா சீட்க்கு அடியலயும் அதை பதுக்கி வைத்தார், அடுத்த நாள் இதே போன்று அவர் செய்தார் , அப்போது தான் கொஞ்சம் சந்தேகபட்டேன், நண்பன் ஒருவனிடம் இதை பற்றி கேட்கும் போதுதான் தெரிந்தது இந்த கடத்தல் எல்லாம்.

கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதை எல்லாம் எப்படி தடுக்க போகிறார்களோ. ஆண்டவனுக்கே வெளிச்சம் ..

வருகிறது ""பா"" தமிழில்


அழகான " பா" படத்தை பார்த்து ரசித்து இருந்து அதை பற்றி சிறிய கருத்தை போன பதிவில் எழுதி இருந்த நேரத்தில் , கொடுமையான ஒரு புகைப்படத்தை அனுப்பி என்னை மண்டை காய வைத்த அதி பிரதாபனை வன்மையாக கண்டிக்கிறேன்..


படம் உதவி அதி பிரதாபனை

ஆனா சகா என்னால சிரிப்பு அடக்க முடியலபா எப்படி உனக்கு கிடச்சுது இது எல்லாம் ?



ஆப் சென்சுரி..... :) , Paa மற்றும் ஆரியா - 2




அட கொக்காக மக்கா , நானும் 50 பதிவ எழுதிட்டேனா என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்படி இப்படின்னு ஏதும் உருப்படியா எழுதல ஏதோ எழுதி இருக்கிறேன் அவ்வளவு தான் இவ்வளவு நாட்களாக என்னோட பதிவை படிச்சி பின்னுடம் போட்டு என்னை வாழ வைத்துகொண்டு இருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி சாமியோ...

---------------------------------------------


நேற்று "பா" படத்தை பார்த்தேன் என்ன ஒரு நக்கல் , நையாண்டி, நடிப்பு என்று படம் மனசை அள்ளுது. எந்த இடத்திலையும் படம் சோர்வு அடையாமல் செல்கிறது. ஆரோ என்கிற கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பு அருமை. படத்தின் ஆரம்பத்தில் ஆரோவை அமிதாப் எப்போதும் போல நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தானே பார்த்தேன், சிறிது நேரத்தில் அமிதாப் மறந்து போக வைத்துவிடுகிறார் அவரின் நடிப்பால். படத்திற்கு ஏன் "பா" என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை, "மா" என்று வைத்து இருக்கலாம் , அபிஷேக்விட வித்யாபாலன் தான் ஆரோவை எல்லா வகையிலும் தாங்குகிறார். இளையராஜா இசை மென்மையாக எல்லா இடத்திலையும் மனதை ஆட்கொள்கிறது, விக்ரமன் படங்களில் ஒரே ஒரு தீம் மியூசிக் வைத்து எல்லா இடத்திலை அதையே போட்டு வைப்பார். அதே போன்று தான் இந்த படத்தின் தீம் மியூசிக் எல்லா இடங்களிலயும் வருகிறது. சோகம் என்றாலும் சரி, சந்தோசம் என்றாலும் சரி.

அமிதாப் நிறைய அவார்ட் வாங்க போறார் என்பது நிச்சயம்.

--------------------------------------------------------

ஆர்யா - 2 கேபிளார் விமர்சனத்தை படித்து பார்த்து கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சும்மா சொல்ல கூடாது படம் டாப் கிளாஸ்.

அல்லு அரவிந்த் நடிப்பு சூப்பர். எல்லாவற்றையும் செய்து விட்டு ஒண்ணுமே செய்யாததை போல இருக்கும் உலகமாக கேடி. காஜல் நடிப்பு கூட சூப்பர், திடிர் திடிர் என்று எக்ஸ்பிரஷன் மாத்தி நம்மை ஜொள்ளு விட வைக்கிறார். (ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கா பா )

படத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதை தான். அடுத்து என்ன சீன் வர போகுதுன்னு நம்மளால கணிக்கவே முடியாது அந்த அளவுக்கு டக்கு டக்குன்னு மாறிட்டே இருக்கு கதையின் ஓடம்.

கண்டிப்பாக படத்தை பாருங்க உங்களுக்கு இந்த கேடியை பிடிக்கும் ..

என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

திராத தலைவலியுடன் சென்றேன் மருந்து கடைக்கு

தேவதை ஒருத்தி என்ன வேண்டும் என்று கேட்டாள்

தலைவலி என்று இதய பகுதியை தொட்டு காமித்தேன்

சிரித்துகொண்டே கேட்டாள்





""லூசா பா நீ ""

திரும்பி பார்கிறேன் - 07/12/2009









சொந்த வீடு கட்டி குடியேறுவது என்பது எவ்வளவு பெரிய வேலை. கடந்த 6 மாதமாக இருந்த டென்ஷன் எல்லாம் ஒரு வழியாக முடிந்து நேற்று எங்களின் புதிய வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்தி புதிய வீட்டில் குடி வந்துவிட்டோம். அப்பா அம்மாக்கு அளவில்லா மகிழ்ச்சியை குடுத்தது இந்த நிகழ்ச்சி. அப்பாவின் ஆசை என்பது ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே, 40 வருடங்கள் ஆகி விட்டது அவர் சென்னை வந்து. ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர், அவரின் ஆசை நிறைவேறியது .

வீட்டிற்கு அப்பா அம்மாவின் பெயர் வைத்துளோம்.

அன்பாலே அழகான வீடு , ஆனந்தம் அதற்குள்ளே.......
----------------------------------------------------------------------------------

போன வார ஹாட் டாபிக் சேவாக் தான். மனுஷன் என்ன அடி அடிக்கிறார் ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பே வந்து விட்டது அவர் அடிக்கும் பௌண்ட்ரி பார்த்து . பாவம் குலசேகரா தான் அவர் பவ்லிங் போட்டாவே அது எல்லை கோட்டை தண்டி தான் செல்கிறது. சங்ககார முகத்தில் சந்தோசத்தை பார்க்கவே முடியவில்லை.
ஒரு சில சமயம் இவரின் பேட்டிங் ஸ்டைல் பார்த்து வாய் அடைத்து போயிருக்கிறேன் , பல சமயம் சொற்ப்ப ரன்னில் அவுட் ஆகும் போது
ஏன்டா இவரை இன்னும் டீம்ல வச்சிருக்காங்க என்றே தோன்றும்.

எதுவாக இருந்தாலும் சரி இவரை பார்த்து எல்லா டீம்முக்கும் ஒரு பயம் இருப்பது என்னவோ உண்மைதான்.

----------------------------------------------------------------------------


ரேணிகுண்டா படத்தை பார்த்தேன். டிரைலர் பார்க்கும் போது இருந்த கற்பனையில் பாதி அளவே படத்தில் இருக்கிறது. ஆனால் படத்திற்கு செம ஓபனிங் என்றே சொல்லலாம்.

திரைகதையில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. படத்தின் எலும்பு சக்தியின் ஒளிப்பதிவு தான். பர பர சீன் எல்லாம் செம கிளாசா இருக்கு. அதும் ஜானி போடும் அந்த சண்டை கட்சியில் இவரின் கேமராதான் ஸ்டன்ட் மாஸ்டர். கால் ஊனமுற்ற பையன் என்னமா நடிச்சி இருக்கான். காமெடி , ரவுடி என்று அவன் செய்யும் சேட்டைகள் பல பல.

இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் இதை விட நல்ல படத்தை இதை விட தரமானதாக தர முடியும்.

ஒரு தடவை பார்க்கலாம். விரிவான விமர்சனத்துக்கு தல கேபிள் சங்கர் பதிவை பார்க்கவும்.

------------------------------------------------------------------

ஒரு சொல்லை ஒருவர் எத்தனை முறை சொன்னால் கேட்க புடிக்கும் ? ஒரு விளம்பரத்தை எத்தனை தடவை பார்த்தால் புடிக்கும் ? ஒரு பாடலை எத்தனை தடவை கேட்டால் புடிக்கும்??

எல்லாவற்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா !!

சாப்பிட சாப்பிட அமுதமும் நஞ்சு ஆகும் என்பது மாதிரிதான் இருக்கிறது இந்த Tata DOCOMO விளம்பரம். சேனல் திருபினால் docomo , docomoன்னு சொல்லுறத கேக்கும் போதே நம்ம மண்டைல யாரோ டொக்கு டொக்குன்னு கொட்டுற மாதிரி இருக்கு. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆரமிக்கும் இந்த விளம்பரம் தாம்பரம் வரை ஒவ்வொரு ரயில் நிலையம் வரும் போது கேட்டு கொண்டு இருக்கும். முதலில் இந்த விளம்பரம் வந்த போது ரொம்ப வித்தியாசமான சவுண்டா இருக்கே என்று விரும்பி பார்த்தேன். எங்க போனாலும் இந்த ஜிங்கல்ஸ் கேட்டு கேட்டு எரிச்சல் தான் இப்பொது வருகிறது. அதும் அந்த Friends Train என்கிற விளம்பரம் வரும் போது எல்லாம் எங்க இருந்துதான் எனக்கு அவ்வளவு எரிச்சல் வருமோ தெரியாது. டூ ட் டூ , டூ ட் டூ , டூ ட் டூ என்று இவர்கள் சொல்லுவதை கேட்கும் போது இவர்களிடம் "டூ" விட வேண்டும் என்கிற எண்ணம் தான் வருகிறது.

இப்போ புதுசா UNINOR என்கிற ஒரு மொபைல் கம்பெனி சென்னையில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது, இவர்கள் என்ன பாடுப்படுத்த போறார்களோ ..
----------------------------------------------------------------------

இன்னைக்கு படிச்சது போதும் நாளைக்கு திரும்ப வந்து பாருங்க. புது பதிவு இருந்தா அத படிங்க, புதுசு இல்லை என்றால் ????






















இதையே படிச்சிட்டு போங்க..

My Sassy Girl - 2003 & 2008




அழகான ராட்சஸி என்று தமிழ்ல் பெயர் வைத்து இந்த படத்தை யாராவது ரீமேக் செய்து வெளியிட்டால் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.

ரொமான்டிக் காமெடி படங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. ரொமான்டிக் படங்களில் காமெடி என்பது ஒரு இலை மாதிரி ஒட்டி கொண்டு வரும்.

ஆனால் இந்த படத்தில் காமெடிக்குள் தான் ரொமான்டிக் இருக்கிறது.

My Sassy Girl கொரியா மற்றும் ஆங்கிலதில் வெளிவந்த அருமையான படம்.

நான் முதலில் பார்த்தது My Sassy Girl - 2008 ஆங்கில பதிப்பை.




கதையின் ஓட்டம் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டி போட்டு விட்டது. ரொம்ப ரசனையான திரைக்கதை , சிரித்து சிரித்து ரசித்து ரசித்து பார்த்தேன்.

ஆங்கில பதிப்பை பார்த்த பிறகு கொரியன் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற வெறி உண்மையில் எனக்கு வந்தது.


எனது ராசி அடுத்த நாளே அந்த படத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். You Tube மூலமாக .

My Sassy Girl - 2003 (Korea)


உங்கள் காதலி என்னவெல்லாம் செய்தால் ரசிப்பிர்களோ அதை தான் கதையின் நாயகன் செய்கிறான். என்ன ஒரே வித்தியாசம் இதில் அவள் செய்வது இவனை இம்சை படுத்துவது தான்.

எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு அதை தாண்டும் போது தான் நாம் கோவப்படுகிறோம். ஆனால் இவனோ இவள் செய்யும் எல்லாவற்றையும் ரசிக்கிறான்.

இவளால் போலீஸ்யிடம் மாட்டிகொள்வது, பொது இடத்தில அவளின் ஹீல்ஸ் செப்பல் போட்டு கொண்டு நடப்பது, அவள் ரசிக்கும் அல்லது அவள் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்கிறாளோ அதை எல்லாம் மறுப்பு சொல்லாமல் செய்வது. அவள் அடிக்கும் அடிகளை பெற்றுக்கொண்டு அவன் காட்டும் முகப்பாவனைகள் எல்லாம் அவர்ளுடன் சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ரயில் வண்டியுள் ஒரு சிறுவன் கோட்டை கிழித்து கொண்டு இருப்பான். இவள் ஒரு போட்டி வைப்பாள் , அதில் அவன் தோற்று அவளிடம் அடிவாங்கும் காட்சி செம சிரிப்பை வர வைக்கிறது.

படத்தில் நடித்து இருக்கிற பெண்ணைவிட அந்த பையன் தான் சூப்பர். வீட்டில் அடிவாங்கும் போதும் சரி , அவளிடம் அடிவாங்கும் போதும் சரி அவன் காட்டும் முகப்பாவனை சூப்பர் ...

கொரியா படத்தில் இருக்கும் ரசனை , ஆங்கில படத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆங்கில படத்துக்காக பலது மாற்ற பட்டு இருக்கிறது.

ஆங்கில படத்தில் ஹீரோ இமேஜ் கேட்டு விடாமல் இருக்கும். ஆனால் கொரியன் படத்தில் அது எல்லாம் இருக்காது, இயல்பான நடிப்பின் மூலம் அழகா தெரிகிறது .

----------------------------------------------------------------
படத்தில் ஒரு காட்சியை பார்த்த போது இதை எங்கையோ பார்த்து இருக்கேன் என்று யோசித்தேன்.

அட அது நாம சிவா மனசுல சக்தி படத்துல வர சீன்.

கொய்யால இப்படி எல்லாம் சுட்டு தான் தமிழ் சினிமா வளந்துட்டு இருக்கு ..

படத்தை பார்க்காதவர்கள் அட்லீஸ்ட் You Tube வெப்சைட்ல பார்த்துடுங்க.
Torrentல சரியா டவுன்லோட் ஆகவில்லை.



கார்த்திகேயனுடன் ஒரு சந்திப்பு




சில சந்திப்புகளை நான் தவற விட்டுருக்கிறேன் ஒன்று அது எனக்கு பிடிக்காமல் இருக்கும் அல்லது அந்த சந்திப்புக்கு நான் தேவையில்லாதவன் வேறு வேலைகள் என்னை ஆட்கொள்ளும்.ஆனால் நண்பர் கார்த்திகேயன்யுடனான
சந்திப்பை தவிர்க்க கூடாது என்கிற முனைப்பில் இருந்தேன், அது நேற்று நிறைவேறியது.


கார்த்திகேயன் "கீதப்பிரியன்" என்கிற தலைப்பில் எழுதி வருகிறார். ஷார்ஜாவில் வேலை செய்பவர், இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார். வந்த முதல் நாளே அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டேன். அவரின் ஹைதரபாத் பயணத்தால் நேற்றுதான் சந்திக்க முடிந்தது.

மாலை 8 மணியளவில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து என்னை பிக் அப் செய்ய வண்டியுடன் வந்து இருந்தார். சுய அறிமுகத்துக்கு பிறகு அவரின் நண்பர் என்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார் என்றார். நேராக அவரின் நண்பர் கடைக்கு சென்றோம், பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் பக்கத்தில் இருந்த சின்ன ரெஸ்டாரண்ட் முன் நிறுத்தினர், உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் ஏதோ ஒரு மளிகை கடை அல்லது Stationary கடையாகதான் இருக்கும் என்று நினைத்தேன்


.

Buddha Hut என்று மங்கள் வெளுச்சதில் இருந்த போர்டு எங்களை வரவேற்றது, கடைதான் சிறியது ஆனால் உள்ளே இவர் செய்து இருக்கும் உள் கட்டமைப்பு பார்த்து வாயை பிளந்தேன். உண்மையில் அருமையான இருக்கிறது உள் கட்டமைப்பு.


ராஜகோபால் என்பது நண்பரின் பெயர், பெயர் தான் பழசு பார்க்க இளமையாக இருக்கிறார் தோற்றத்தில், அருமையாக சமைக்கிறார். அவரின் தொழில் எல்லாம் சிறுவர் முதல் இளைஞர் வரை அவரின் கடைக்கு இழுபதுதான் தான் குறி. அங்கு இருக்கும் ஐட்டம் எல்லாம் எனது வாழ்நாளில் இதுவரை கேள்விப்படாதது. வாயில் நுழையாத பெயர்கள்தான் லைட் அண்ட் டேஸ்டி உணவுகள்.

அவர் என்னிடம் பேசிய முதல் வரி " உங்கள எங்கையோ பார்த்து இருக்கேன்" . You too Rajagopal !!!! என்றது மனம். அது என்னமோ தெரியல சிலர் என்னை பார்க்கும் போது இந்த வார்த்தையை முதலில் கூறுவது அதிகமாகி கொண்டே வருகிறது ( ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ??? ஹி ஹி ஹி No Tension please ).

அருமையான Sandwich செய்து குடுத்தார், ரொம்ப லைட் மற்றும் சுவை .. ஹ்ம்ம் ஹ்ம்ம் பல்லாவரம் ஏரியா மக்கள் கண்டிப்பா இவரின் கடைக்கு ஒருமுறை உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு செல்லுங்கள் மாலை வேளையில் அருமையான உணவை குழந்தைக்கு வாங்கி குடுங்கள். அங்கு இருந்து கிளம்பும் போது சிறுவர் சிறுமியர் கூட்டம் அனைத்து இடங்களை ஆக்கிரமித்து கொண்டது. பேச்சு வாக்கில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு பதில் தராமல் மழுப்பிவிட்டார் , கேள்வி என்னவென்றால் கல்லா பெட்டி அருகில் துப்பாக்கி ஒன்றை மாட்டி வைத்து இருந்தார். " பாஸ் அந்த துப்பாக்கிய குருவிக்காரன் யாரவது கிட்ட இருந்து சுட்டிங்களா" என்றேன் சிரித்தாரே தவிர அதற்கு பதில் சொல்லவேயில்லை.

அடுத்த முறை பார்க்கும் போது கண்டிப்பாக பதில் வாங்கிவிடவேண்டும் .

அவரிடம் இருந்து விடைப்பெற்று நண்பர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றோம். அவரின் மனைவி , குழந்தை வர்ஷினி, அவரின் மச்சினன் ஹரி சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், பிறகு ஹரி அவர்களின் சொந்த ஊர் ஆனா காரைக்குடி பக்கம் என்று வேள்விப்பட்ட போது அங்கு இருக்கும் செட்டிநாடு ஆரண்மனைகள் பற்றி நிறைய பேசினோம். எங்க சந்திப்புக்கு முதல் நாள் தான் கலைஞர் தொலைகாட்சியில் செட்டிநாடு அரண்மனைகள் பற்றிய தொகுப்பை பார்த்தேன். என்ன ஒற்றுமை பாருங்க, தமிழ்நாட்டில் நான் செல்லாத ஒரு சில ஊருகளில் காரைக்குடியும் ஒன்று, அங்கு இருக்கும் செட்டிநாடு அரண்மனைகளை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன். காரைக்குடி வாழ் அன்பர்கள் யாரேனும் இதை படித்தால் என்னை தொடர்புகொள்ளவும் , உங்கள் ஊரு சிறப்பை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன். எங்க பேச்சு சினிமா பக்கம் சென்றது அவர் ரசித்த படங்கள், நான் ரசித்த படங்கள் என்று எங்கள் ரசனைகளை பகிர்ந்து கொண்டோம். ஜக்கி சேகர் வந்து சென்றதை பற்றி சந்தோசமாக பகிர்ந்து கொண்டார், ஒரு நாள் முதலே வந்திருந்தால் அவரையும் சந்தித்து இருந்து இருப்பேன். நடுவில் எனக்கு தோசை பரிமாற்றப்பட்டது அருமையான தோசை வித் கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி. சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது அவருக்காக நான் வாங்கி வந்த மதன் எழுதிய " வந்தார்கள் வென்றார்கள்" என்கிற புத்தகத்தை பரிசளித்தேன். அவர் எனக்கு ஒரு Body spray பரிசளித்தார். இனிதான சந்திப்பு இனிதாகவே முடிந்தது,

வரும் 12 ஆம் தேதி திரும்ப அமீரகம் செல்கிறார் அவர் கிளம்புவதற்கு முன் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அவரிடம் குடுக்க வேண்டும். அடுத்த முறை அவர் இந்திய வரும் போது இது எல்லாம் வாங்கிட்டு வாங்க என்று.

ஏன் என்றால் நான் ஒரு காமன் மென். ஹி ஹி ஹி .


யோகி - இது விமர்சனம் அல்ல !!!

வெளிநாட்டு படங்களை குறிப்பாக உலக தரம் வாய்ந்த படங்கள் மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிய படங்களை பார்க்கும் மனிதர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்று பார்த்தால் ரஜினி படத்திற்கு முதல் காட்சியில் எத்தனை பேர் வருவார்களோ அவ்வளவே தான் இருக்கும் எண்ணிகையில். அவர்களின் விமர்சனத்தை தவிர்த்து அல்லது படிக்காமல் யோகி படம் பார்த்தால் இந்த படம் ஒரு புது முயற்சி அல்லது சூப்பர் படம் என்று சொல்லலாம்.



படத்தை கண்டிப்பா பாருங்க உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும். உங்கள் கருத்துகளையும் சொல்லிடு போங்க.

ஏன் என்றால் நாம எல்லாம் காமன்மேன் ,,