என் இனிய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
2004
நான் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன், சும்மா பார்த்துட்டே இருக்கியே எதாவது பேசு,
உன்னதான் எதாவது பேசு டா .
நீ ரொம்ப அழகா பேசுற
போடா உனக்கு இதே வேலையா போச்சு
- வெட்கப்பட்டாள்
எனக்கு ஒரு ஆசைடி, உனக்கு ஒரு கொலுசு வாங்கி தரனும்
அத போட்டுகிட்டு ஜல் ஜல்ன்னு நீ நடந்து வரத பார்க்கணும்
உனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை?
ஏனென்றால் உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்
உண்மையா ??
- வெட்கப்பட்டாள்
2005
எனக்கு ஒரு ஆசைடி
போதும் நிப்பாட்டு, உன்னோட ஆசையை தூக்கி குப்பைல போடு
நான் என்ன பண்ணட்டும் காசு இருந்தா இப்பவே வாங்கி தருவேன்
அப்ப காசு இருக்கும் போது இந்த டயலாக் பேசு.
-கோவப்பட்டாள்
2006
கொலுசு நல்ல இருக்கா?? என் அப்பா வாங்கி தந்தார்.
2000 ரூவா.
நான் 5000 ரூவாக்கு கொலுசு வாங்கிடறேன் பாரு
ஹலோ யார் பிரசாத்தா?
ஆமா நீங்க யாரு?
நீ லவ் பண்ணுறியே சங்கீதா அவளால ஏமாத்தப்பட்டவன்
என்ன சொல்லுர? என் சங்கீதா அந்த மாதிரி எல்லாம் பண்ணமாட்ட
ரொம்ப ஓவரா நம்பாத அவள. நான் வாங்கி குடுத்த கொலுசதான் இப்ப போட்டு இருக்கா
2000 ரூவா , அவ அப்பன் வாங்கி குடுத்தான்னு சொல்லி இருப்பாளே??
என்ன சொல்லுர நீ? அப்ப அந்த கொலுச நீதான் வாங்கி கொடுத்தியா ?
ஹாய் டா ஏன் முகம் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு ?
யாரு அந்த பையன் ?
யாருனா ? எந்த பையன கேக்குற ?
உனக்கு கொலுசு வாங்கி குடுத்தானே அவன கேக்குறேன்.
-மௌனம் ஆனாள் .
2008
என்னங்க நான் ஒரு கொலுசு வாங்கிட்டுமா
நான் அன்னைக்கே சொன்னேன்ல நான் ஏன் கொலுசு வெறுக்கிறேன்னு, வேற எது வேணா கேளு வாங்கிதறேன் கொலுசு மட்டும் வேண்டாம்.
-அமைதி ஆனாள்.
2018
அப்பா
என்னடா செல்லம்
என்னோட பர்த்டேக்கு என்ன வாங்கி தருவிங்க?
உனக்கு என்னடா வேணும்?
எனக்கு கொலுசு வேணும் பா.
அப்பாக்கு கொலுசு புடிக்காதே மா.
அப்ப எனக்கு பர்த்டே கிப்ட் ஏதும் வேண்டாம் போ.
-கோவப்படாள்
அப்பாகிட்ட என்னடா கோவம் உனக்கு? டின்னர் வேண்டாம்ன்னு சொன்னியாமே?
ஆமா எனக்கு கொலுசு வாங்கி தர மாட்டேன்னு சொன்னிகள்ல
அதுக்காக சாப்பிடமாட்டியா?
கொலுசு வாங்கிதறேன் வா வந்து சாப்பிடு.
தேங்க்ஸ் பா
- நான் சந்தோஷமானேன்.
-----------------------------------------------------------------------------------------------
14 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
இன்னும் விரிவா எழுதிருக்கலாமே...முதல் கதை....ok ok!
@ அன்புடன் அருணா
நன்றிங்க, இன்னும் எழுதணும்ன்னு தான் நினைத்தேன், ஆனால் கதையின் நடை மாறிவிடும்.
ரொம்ப நல்லா இல்லாட்டியும் மோசமாயில்ல தம்பி, முதல் முயற்சின்னால நூத்துக்கு 35 மார்க் போடுறேன் உனக்கு, எஞ்சாய்
நல்லா இருக்கு. இன்னும் டயலாக்ல கவனம் செலுத்தி இருக்கலாம்.
Enn Iniya Annanukku (Romeo Boy) enathu manamaarntha Pirandhanaal Nal Vaazhthukkal.... Mattrum Blog Nanbargalukku Iniya Puthaandu Nalvaazhthukal.
nice romeo...
different theme...
நல்ல முயற்சி.. விரைவில் இன்னும் நல்லா எழுதுவீங்கன்னு நம்பறேன்.. வாழ்த்துக்கள்..
அட...முதல் முயற்சினு நம்பவே முடியல... நல்லா தான் பாஸ் இருக்கு...இன்னும் நிறைய எழுதுங்க...
அட நல்லாருக்கே..
@ மீசைக்காரன்
ரொம்ப நன்றிங்க .. இன்னும் நல்லா எழுத முயற்சிக்கிறேன் .
@சின்ன அம்மிணி
ரொம்ப நன்றிங்க .. அடுத்து எழுதும் போது கண்டிப்பா டயலாக் அதிகம் இருக்குற மாதிரி எழுதுறேன் .
@ lollu
தேங்க்ஸ் டா தம்பி
@ DHANS
நன்றி தன்ஸ்.
@ அன்புடன்-மணிகண்டன்
கண்டிப்பா மணி
@ செந்தில் நாதன்
உங்கள் கருத்துக்கு நன்றி. கண்டிப்பா நிறைய எழுதுறேன்
@ கார்த்திக்கேயனும்
நிஜமாளுமேவா தல ??
முதல் கதை, கொலுசு ஒலியுடன் நல்லா இருக்கு.
@ Chitra
ரொம்ப நன்றிங்க
romba confusiona iruku kathai.
@ senthil
குழம்பும் படி ஏதும் இல்லையே.. எந்த இடத்தில உங்களுக்கு குழப்பம் ?
Post a Comment