~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அட பார் ரா... லுக் - 2

அட பார் ரா ...


குமார் சொன்ன ஐடியா கேட்டு இன்னொரு நண்பன் ரமேஷ் இப்படி சொன்னான். எனக்கு தான் கொஞ்சம் கூட ஒத்து கொள்ள முடியவில்லை. பின்ன குமார் சொன்ன ஐடியா கேட்டு அடிக்காத குறையா திட்டினேன். அவன் சொன்ன ஐடியா இதுதான் ராக்கிங் பண்ற பசங்கள பத்தி அவங்க பெற்றோர்கள் கிட்ட போட்டு குடுத்துடலாம் என்று. உருப்புடுற மாதுரி எதாவது சொல்லுடா நாயே என்று திட்டினேன். அவனுங்கள ஆளு வச்சி அடிச்சிடலாம் என்று ஒரு அல்ல கை சொன்னான். எனக்கு என்னமோ இது எல்லாம் பிடிக்கவில்லை .


பேசாம ஸ்டிரைக் பண்ணலாம் இவனுக ராக்கிங் பண்ணுறத பத்தி நாளைக்கு பெரிய மேட்டர் ஆகும் டிவி, நியூஸ் பேப்பர்ல எல்லாம் வரும் என்று கூறினேன். இதுக்கு பாதிக்கு பாதி தான் பசங்க ஒத்துகிடங்க. குமார் இதுக்கு சரி என்று சொன்னான். நானும் அவனும் அடுத்து என்ன பண்ணலாம் என்று டீ கடையில் தம் அடித்து கொண்டே பேசிக்கொண்டு இருந்தோம்.


ரூம்க்கு வந்தா ஒருத்தனும் காணோம், எங்க போய் இருக்காங்கன்னு தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன் அழுது கொண்டே ரூம்க்கு எட்டி பார்த்தான். அவன் முகம் எல்லாம் வீங்கி போய் இருந்தது.குமார் தான் அவனிடம் என்ன என்று விசாரித்தான், சீனியர் பசங்க வந்து அவங்க ரூம்க்கு எல்லோரையும் வர சொல்லிடு போனாக. போனதும் அவனுக இவனுகள அடிச்சு இருக்காங்க. குமார்க்கு இனிமேல சும்மா இருக்க முடியாது அவனுகள தட்டி வைக்கணும் என்று கதி கொண்டு இருந்தான் . நான் தான் கொஞ்சம் பொறுமையா இரு நாளைக்கு காலைல பாத்துக்கலாம் என்று சொன்னேன். ஒவ்வொருத்தனா வீங்கிய முகத்துடன் வந்தாங்க.எல்லோரிடமும் பரிவாக பேசி மெஸ்க்கு சாப்பிட கிளம்பினோம், எங்க குரூப்ல இருக்குற ஒருதன் பேரு கணேஷ், மெஸ்க்கு போகும் வரை ஒரு வித பயத்துடனே வந்தான்.விதி யாரைவிட்டது மெஸ்ல எங்களுக்கு முன்னாடியே சீனியர் பசங்க இருக்குற பரோட்டா எல்லாம் காலி பண்ணிட்டு இருந்தாங்க. கணேஷ் குமார சைடுல தள்ளிட்டு போனான். அவனிடம் அந்த சீனியர் கும்பல்ல இருந்த ஒருத்தன மட்டும் அடையாளம் கட்டி இவன்தான் எல்லோரையும் அடித்தான் என்று கூறினான் .அவனுக போகுற வரைக்கும் ஒதுங்கியே இருந்தோம். குமார் அவனுக நல்ல தண்ணி போட்டு இருக்காங்க என்பதை அவங்களின் நடை வைத்தே கண்டுபிடித்து சொன்னான்.சாப்பிட்டு விட்டு எல்லோரும் ரூம்க்கு கிளம்பும் போது குமார் , நான் மற்றும் கணேஷ் முவரும் பின்னால் வருகிறோம் என்று கூறி மற்றவர்களை அனுப்பி வைச்சோம்.


கணேஷ் சீனியர் பசங்க ரூம் எங்க இருக்கிறது என்று காட்டினான், அவங்க ரூம்க்கு கீழ தான் பாத்ரூம் எல்லாம் இருக்கும்.குமார் கணேஷிடம் ரூம்க்கு போய் 3 துண்டு எடுத்துட்டு வா என்று அனுப்பினான்.


அவன் சென்ற பிறகு அடுத்த என்ன பண்ண போகிறோம் என்று அவன் சொன்னதை கேட்டு எனக்கு பாத்ரூம் போகணும் போல இருந்தது .லுக் தொடரும்...

மோதி விளையாடு - திரைவிமர்சனம்


இந்தியாவில் இருக்கும் மிக பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் கலாபவன் மணி. இவரது மகன் வினய். பணம் பற்றி எந்த ஒரு அறியாமையும் இல்லாமல் அது எதோ ஒரு பேப்பர் மாதுரி செலவு செய்யும் மேல் தட்டு வர்கத்து பையன் . இவரோட நண்பன் மனோஜ் , குழந்தையில் இருந்து இவருடன் இருக்கிறார். தனது மகனுக்கு எதிரிகளால் ஆபத்து இருப்பது தெரிந்து வினய் சுற்றி எப்போது ஒரு செக்யூரிட்டி கும்பல் இருந்து கொண்டே இருக்கும்.

கதாநாயகி காஜல் அகர்வால் செய்யும் ஒரு சிறு தவறல் வினையின் கார் விபத்தில் மாட்டி கொள்ள , காரின் செலவை ஈடு கட்ட தனது வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து வேலை செய்து அதை கழித்து கொள்ள சொல்கிறார். இவர் வீட்டுக்கு போனதும் அங்கு இருக்கும் மதனிடம் கொஞ்சம் ஓவரக வழிய அது காதல் என்று அவர் எடுத்து கொள்ள, இதற்கு இடையில் வினய் காஜல் மீது காதல் கொள்ள, காஜல் வினய் மீது காதல் கொள்கிறார். தனது காதலை காஜல்லிடம் கூற வினய் ஒரு ஹோட்டல்க்கு வர சொல்கிறார். வினய் வருவதற்கு முன்பாக மனோஜ் அங்கு சென்று காஜல்லிடம் தனது காதலை கூறி இது வினைக்கு தெரியும் என்று கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்து வினய் மனோஜுடன் காஜல் யாரை காதலிக்கிறார் என்று கேட்டு முடிவு பண்ணலாம் என்று இரண்டு பேரும் காரில் பயணிக்கும் போது மனோஜ் எதிர்பாராத விதமாக கலாபவன் மணியின் எதிரிகளால் சுட்டு கொலை செய்யபடுகிறார்.

மனோஜ் இறந்த பிறகு வினய் வாழ்கையில் பல மாற்றங்களை சந்திக்கிறார், அவரின் செக்யூரிட்டி விளக்கி கொள்ளப்படுகிறது. யாரும் அற்ற ஆனதை போல் ஆகிறார் , இந்த இடத்தில தான் அவருக்கு உண்மை தெரியவருகிறது தான் கலாபவன் மணி மகன் இல்லை மனோஜ் தான் உண்மையான மகன், தனது மகனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வினய்யை தான் தனது மகன் என்று எல்லோருக்கும் தெரியும் படி நடத்தி இருக்கிறார் .

ஒரு புறம் கலாபவன் மணி ஆட்கள் இவரை துரத்த, இன்னொரு புறம் கலாபவன் மணி எதிரிகள் இவரை துரத்த இவர்களிடம் இருந்து வினய் எப்படி தப்பித்தார் என்பதை கொஞ்சம் கூட சூடே இல்லாமல் இயக்கி இருக்கிறார் சரண் ..

வினய் சொந்த குரலில் பேசி இருப்பது நல்ல முயற்சி, இவரின் கொஞ்சும் தமிழ்தான் காது குடுத்து கேட்க முடியவில்லை. நீங்க இன்னும் வளரனும் வினய்... ( உயரத்தில் அல்ல , தமிழ் உச்சரிப்பில் )

காஜல் கொஞ்சம் போல குறும்பு செய்து விட்டு போய் இருக்கிறார் .

படத்தின் பெரும் பங்கு ஒளிப்பதிவாளர் கருண்ணுகே சேரும் . படத்தின் காட்டப்படும் அந்த பங்கள , அலுவலங்கள் , கடற்கரை எல்லாம் ரிச்நெஸ் சூப்பர்ராக இருக்கிறது .

மியூசிக் டைரக்டர் அவரின் பங்கை செய்வனே செய்து காட்டி ஒரு பாடலில் தேவா உடன் வந்து பாடிவிட்டு போகிறார் .

சரண் படம் என்றாலே திரைகதை பெரிய பங்கு பெரும் . இதில் கொஞ்சம் கூட அது இல்லை. மனோஜ் தான் கலாபவன் மணியுடைய மகன் என்று இடைவேளைக்கு முன்பே கணிக்க முடிந்தது. லாஜிக் இல்லாத விஷயங்கள் இதில் நிறைய உண்டு. இந்தியாவில் இருக்கும் மிக பெரிய பணக்காரர் ஒரே நாளில் ரோட்டுக்கு வருவது கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் சொன்னது பெரிய சறுக்கல் சரணுடைய படங்களில் எல்லாம் எதாவது ஒரு இடமோ இல்லை ஒரு பொருளோ கண்டிப்பாக அந்த படத்தை சுற்றியே வரும். இவரது அமர்க்களம் படத்தில் வரும் ஸ்ரீனிவாச தியேட்டர் , அல்லி அர்ஜுன படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றை பார்க்கலாம் . இந்த படத்தில் இந்திய பெரும் தலைகள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் மற்றும் அவர்களின் அலுவலங்கள் அவர்களின் பங்களா என்று படம் முழுக்க பரவ விட்டு இருக்கிறார் .

சரண் சார் - அடுத்த படம் நம்ம தல நடிக்கிறது . கொஞ்சம் பார்த்து பண்ணுக சார் ..

மோதி விளையாடு : திரைகதையில் இருக்கும் பெரிய ஓட்டையால் பெரிதாக விளையாட முடியவில்லை