~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சிலவற்றை திரும்பி பார்கிறேன் (2) ....

சரவணன் தேடி கிளாஸ்க்கு வந்தேன் அவன் இப்பொது எப்பயும் போல அவன் இடத்தில இருந்தான் , ஆனால் அவன் முகம் மட்டும் கவலையின் ரேகை படர்ந்து இருந்தது . அவன் பக்கத்தில் உட்கார்ந்தேன், அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவனிடம் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது . என்னடா ஆச்சு என்று கேட்டேன் அவன் கண்கள் இரண்டும் சிவந்து பொய் இருந்தது . சுற்றி முற்றும் பாத்தேன் இவனை யாராவது பார்க்கிறகள் என்று, இரண்டு கண்கள் மட்டும் என்னையும் அவனையும் பார்த்துக்கொண்டு இருந்தது முதல் வரிசையில் இருக்கும் பெண்கள் இடம் இருந்து, அட நம்ம சரவணன் ஆளு என்னை எதுக்கு இந்த லுக் விடுகிறாள் . சரவணன் இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரும் குரல் எடுத்து அழுவன் என்றே தோன்றியது. முதலில் இவனை பார்க்கலாம் என்று அவனிடம் ஏன்டா அழுற என்று கேட்டேன் . அவன் கண்கள் இப்பொது அவனின் ஆளு பக்கம் சென்றது . என்னடா ஆச்சு கேக்குறேன் ஏதும் பேசமாட்டேன் என்பதை போல முகத்தை வைத்து கொண்டு இருந்தான் வந்த கோபத்தில் அவன் ரெண்டு கண்களையும் விரல விடு நோண்டலாம் போல இருந்துச்சு. 

அவனே ஆரமித்தான், அவன் காதலிக்கு ( அதன் முருக கடவுள் மனைவி பெயரை கொண்ட பெண்) காதல் கடிதம் எழுதி அதை எனோட ரெகார்ட் நோட் புக்குள்ள மறந்து வச்சுட்டன் . அடப்பாவி உன்னோட லைப்காக என்னோட லைப் போகபோதே என்று நினைத்த உடன் என்னோட கண்களில் இருந்து கண்ணிர் வர ஆரமித்தது . என்ன இருந்தாலும் நீ என்னோட நண்பன் உன்னை இக்கட்டில்மாட்டி விடமாட்டேன் என்று சத்யம் செய்து குடுத்தேன். இதுல என்னோட சுயநலம் இருந்தது இப்ப இவன நான் மாட்டிவிட்டால் கண்டிபா இவன் எனக்கு ஏதும் வரைந்து தரமாட்டான். சரி இதுக்கு என்ன பண்ணி இவனையும் என்னையும் காப்பாற்றுவது ??? மதியம் PT கிளாஸ் நேரதுல டீச்சர் கிட்ட பேசலாம் . மதியம் சாப்பிடவில்லை இரண்டு பெரும் ஆளுக்கு ஒரு ஐடியா ரெடி பண்ணி வச்சு இருந்தோம்.

சரவணன் என்னைப்போல இல்லை நன்றாக படிக்கும் மாணவன் எப்பயும் வகுப்பில் முதல் 5 இடங்கள்குள் வந்து விடுவான் . நான் என்னதான் படிச்சு , பிட் அடிச்சாலும் ரேங்க் பட்டியல்ல இருக்கமாட்டேன் . சயின்ஸ் பரிச்சைக்கு வரலாறு புக் பிட் பேப்பர் எடுத்துட்டு போன எங்க பொய் பாஸ் ஆகுறது . இதுல என்னோட பெயர் ஸ்கூல் முழுக்க பரவி இருந்தது, என்னை பார்த்தாலே பொண்ணுக எல்லாம் 10 அடி முன்னால் அல்லது பின்னால் நடபர்கள் . ஒரு வாருங்கள ரவுடி ரெடி ஆகி கொண்டு இருந்தான் என்றே சொல்லலாம் . சரி இப்ப இந்த மேட்டர் நாம சுமுகமா முடிச்சு குடுத்தா நம்ம பேரு கொஞ்சம் போல உயரும் நண்பர்கள் மத்தியில். PT வகுப்பு ஆரமித்து விட்டது இந்த டைம்ல டீச்சர் கண்டிபா ரூம்ல தான் இருபாங்க. என்னோட நேரம் டீச்சர் நல்ல துங்கிட்டு இருந்தாங்க, எப்படி இவங்கள எழுபுறது . சரி வந்தாச்சு இனி நாடகத்த ஆரமிசுடலம் . 

போத் என்று கேட்ட சத்தில் டீச்சர் துக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்தார், யாரும் இல்லையே என்ன சத்தம் என்று திரும்ப துங்க போனவர் தன் காலடியில் ஏதோ ஒன்று இருபதை பார்த்து திடுகிட்டார் . நான் தான் என்று தெரிந்த பின்னர் பார்வையில் என்னை பொசுக்கி விடுவர் போல இருந்தது .
ஏன் இங்கு வந்தாய் என்று வினவினார் . ( கோர்ட்ல எல்லாம் உண்மை தவற வேற ஏதும் பேசமாட்டேன் என்று சொல்லிட்டு பொய் வேசுவங்க , இங்க எல்லாம் உல்டா பொய் தவிர வேறு ஏதும் பேசமாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டேன் )  டீச்சர் என்னோட ரெகார்ட் புக்ல இருந்த லெட்டர் என்னுடையது இல்ல அது எங்க ஏரியால இருக்கும் ஒரு அண்ணா எங்க எதிர் வீட்டு அக்கா கிட்ட குடுக்க சோனக. அத குடுக்க மறந்து ரெகார்ட் நோட்ல வச்சிட்டேன் . டீச்சர் என்னை நம்பவே இல்லை, சரி டீச்சர் என்னோட கையெழுத்தும அந்த லெட்டர்ல இருக்குற கையெழுத்தும சரியாய் இருகிறதா பாருங்கள் . 

டீச்சர் சரி பார்த்தார் இரண்டுக்கும் சம்பதமே இல்லை , இருந்தாலும் அவர் என்னை விடுவதா இல்லை . படிக்குற வயசுல எதுக்கு இந்த மாதுரி வேலை பாக்குற இத எல்லாம் உங்க அப்பா கிட்ட சொலிகுறேன் நீ நாளைக்கு உங்க அப்பாவை இல்லாம வராத என்று கூறிவிட்டார்.  இனியும் அமைதியா இருந்தால் வேளைக்கு ஆகாது, போத் இந்த முறை கண்டிபா மனம் இறங்கி விடுவர் என்கிற நம்பிக்கையுடன் அழுது புரண்டேன் . டீச்சர் இது எங்க அப்பாக்கு தெரிந்தால் என்னை துளைத்து கட்டுவர் அது மட்டும் இல்லாம எனோட படிப்பும் நீறுதிவிடுவர். இதற்கு பிறகுதான் அவரின் மனம் இறங்கி வந்தது. சரி இனி மேல இந்த மாதுரி எல்லாம் தப்பு பண்ண கூடது என்று பத்து நிமிட மொக்கைகு பிறகு அவரிடன் இருந்த லெட்டர் வாங்கி கொண்டு வந்தேன் . மேட்டர் சுமுகமா முடிந்தது, சரவணன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை டான்ஸ் அடியது . அந்த லெட்டர் எங்கே என்றுகேட்டான் அதை டீச்சர் கிழிச்சு போடு விட்டார் என்று ஒரு பொய் சொல்லி விட்டேன் ( இது என்னைக்காவது உதவும் என்று ) .