~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பிப் பார்க்கிறேன் - 28/12/2009

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கலைஞர் தொலைகாட்சியில் தமிழ் படம் பற்றி ஒரு ப்ரோக்ராம் போட்டு இருந்தாங்க. ஷிவா பற்றி உங்களுக்கு தெரியும் மொக்கை மன்னன் கொஞ்ச நேரம் அவரிடம் பேசினால் நம் மண்டை காஞ்சி கருவாடா ஆகிடும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அவர்தான், படத்தின் இயக்குனர் அமுதன் , தயாரிப்பாளர் துரை அழகரி பக்கத்தில் வைத்து கொண்டு பேட்டி எடுத்தார். துரையிடம் ஷிவா இந்த படத்தை ஏன் நீங்க தயாரிக்க ஒத்துகிட்டிங்க என்று கேட்டார் , கொஞ்சம் கூட முகத்தில் ஒரு ரியாக் ஷன் காட்டமல் செம ஜோக் அடிச்சாரு. " என்னைய மதுரைக்கு கடத்திட்டு போய் மிரட்டி இந்த படத்த தயாரிக்க வச்சிட்டாங்க" இத கேட்ட ஷிவா ஜெர்க் ஆகி "உங்கள மதுரைக்கு கடத்திட்டு போய் மிரட்டினாங்க?" "ஆமாங்க" என்றார் இவர். நாங்களும் நம்பிட்டோம் பாஸ் ..

-----------------------------------------------------------------------------------------------------

தமிழ் படத்தின் பாடல்களை கேட்டேன் இசை அமைப்பாளர் புதுசு என்றார்கள் ஆனால் அந்த மாதிரி ஏதும் தெரியவில்லை பாடல்களை கேட்கும் போது.

"குத்து விளக்கு" அடுத்த கத்தாழ கண்ணால வெர்ஷன், உஜ்ஜைனி பாடி இருக்கும் ஐயிடம் சாங். பாடலின் முதலில் வரும் அந்த வீணை கேட்கும் போது வசூல்ராஜாM.B.B.S படத்தில் வரும் "சீனா தான" நினைவுபடுத்துகிறது.

தீம் மியூசிக்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கனும் இதுல அந்த மாதிரி எல்லாம் இல்ல, கலாய்க்கிறது என்று முடிவான பிறகு தீம் மியூசிக் மட்டும் விதிவிலக்கா என்ன? மாஸ் படத்துக்கு என்ன மாதிரியான தீம் இருக்குமோ அதே மாதிரி இருக்கு ஆனா நடுவு நடுவுல "முடியல , தாங்கல, இது ஓவர்ன்னு" ஹீரோக்கு ஆப்பு வைக்கிற வார்த்தைகள் இருக்கு.

" ஒ மகா சியா " கேட்கும் போது கண்டிப்பா உங்களின் சிரிப்பை அடக்க முடியாது. புரியாத மொழிகளை போட்டு ஒரு டெம்ப் கிரியேட் பண்ணுவாங்க ரஹ்மான் , ஹாரிஸ் ஜெயராஜ் , விஜய் ஆண்டனி இந்த வார்த்தைகளை மற்றுமே வைத்து செம ரவுசான மெலடி பாட்டு . ஹரிஹரன் குரல் சூப்பராக செட் ஆகி இருக்கிறது.

"ஒரு சுறாவளி" ஷங்கர் மகாதேவன் பாடி இருக்கும் இந்த பாடல் , படையப்பா படத்தில் வரும் வெற்றிகொடி கட்டு படத்தின் பிரதிபலிப்பு போல இருக்கு, கொஞ்சம் வித்தியாசமா, அதே சமயம் பாஸ்ட் பீட் சாங். சின்ன பாடல் தான் கேட்கும் போது மிக சுவாரசியமா இருக்கு .

ஹீரோக்கு ஓபனிங் சாங் இல்லாமல் எப்படி ?? "பச்ச மஞ்ச சிவப்பு தமிழன் நான்" செம தத்துவ பாடல், சாம்பிள் தத்துவம் ஒண்ணு பாருங்க

" தயிர்ல போட்டா தயிர் வட, போடலன்னா அது மேதுவட, ஓட்ட இருந்தா அது ஓட்ட வட", சாம்பிள்க்கு இது போதும்ன்னு நினைக்கிறன். இந்த மாதிரி தத்துவம் அடித்து தூள் கிளப்பும் பாடல்.
-----------------------------------------------------------------------------------------------------
Hans Zimmer இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்கிர்களா?? Pirates of the Caribbean 1,2and3 parts , The Da vinci code , Dark knight , Angels and Demons போன்ற படங்களின் இசை அமைப்பாளர்.

Pirates of the Caribbean படத்தை பார்த்தவர்கள் படத்தில் வரும் அந்த
பின்னணி இசையை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து இருக்கமாட்டார்கள்.

Jonny Deep செய்யும் சாகசங்கள் மற்றும் சேட்டைகளை இசையின் முலமாக
ரசிக்க வைத்தவர், The Da vinci code மற்றும் Angels and Demons படங்களில் நடக்கும் அந்த சேசிங் சீன் மற்றும் பரபரப்பான கட்சிகளை இவரின் இசையின் முலம் நம்மை மேலும் திகில் ஊட்ட செய்யும்.

இவரின் Angels and Demons படத்தின் orchestra மியூசிக் ஒரு நண்பன் முலமாக கிடைத்தது. படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வரும் இந்த இசையை முழு வடிவம் கேட்கும் போது இருக்கும் பரவசமே தனி. இந்த லிங்க் சொடுக்குங்க தரவிரக்கம் செய்யலாம் முழு பின்னணி இசையை..

-----------------------------------------------------------------------------------------------------

ஒரு வாரமா சாந்தம் தியேட்டர்ல டிக்கெட் கிடைக்காமல், ஒரு வழியா நேத்து மாலை காட்சிக்கு அவதார் படத்தின் டிக்கெட் கிடைத்தது. ரொம்ப ஆவலாக சென்றேன் ஆனால் எனது ஆவலை அந்த 3D கண்ணாடியால் ஏன் தான் வந்தோமோ என்று ஆகிவிட்டது. அந்த கண்ணாடியின் பிரேம் கொஞ்சம் தடிசாக இருந்தது. படம் ஆரமித்து 5 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது அதற்க்குள் மூக்கில் சிறிது வலி எடுக்க ஆரமிதுவிட்டது. சிறிது நேரத்தில் அதை தூக்கி போடலாம் போல இருந்தது வலி. கண்ணாடியை எடுத்தால் படம் மங்கலாக தெரிகிறது. படம் முடியும் வரை கண்ணாடியை கண்களுக்கு நேராக கையில் பிடித்து கொண்டே படம் பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது படம் AWESOME .. இந்த படத்தை தியேட்டர்ல அதும் 3Dல பாருங்க புதியதோர் படைப்பை கண்டுக்களிங்க.