~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சிலவற்றை திரும்பி பார்கிறேன் ....என்னுடையே முதல் பதிவான இதில் எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும் ...


நம்ம ஏரியால எல்லாம் முக்குல ஒரு painter இருபாரு . M.G.R , Shivaji, Rajini , Kamal இப்படி எதாவது ஒரு நடிகன் கண்டிபா அவரோட கடைல போஸ் குடுத்து இருபாங்க. நல்ல தத்துரூபமா இருக்கும் இவங்க வர்ணம் எல்லாம் . இவங்க எங்கையாவது ஒரு சுவத்துல பெயிண்ட் பண்ணும் போது அத வேடிக்கை பார்க்க ஒரு கும்பல் இருக்கும் . அண்ணா சாலைல நிறைய ரச்சசா விளம்பர போர்டுக இருந்த நேரத்துல இவங்களுக்கு நல்ல வேலையும் , நல்ல சம்பளம் கிடைத்தது . எவ்வளவு பெரிய விளம்பர பலகை ஆனாலும் இவர்கள் அநாயசமாக கயுறு கட்டி தொங்கிடே அடிகுரத பார்க்க எதோ ஜெமினி சர்க்கஸ் பாக்குறது மாதுரி இருக்கும் . இவங்க பிரதான தொழில் பெயிண்ட் அடிக்குறது , விளம்பரங்கள் எழுதுகிறது என்று இவர்கள் வாழ்கையில் எதோ ஒன்று கண்டிபாக தங்கள் வகிற்று பிழைப்புகாக இருந்தது. ஆனால் இன்று இவர்களது நிலைமை ? எத்தனையோ புதிது புதிது டெக்னாலஜி வந்து நாம் அதை பெரியதாக கொண்டாடும் இந்த வேளையில் இவர்கள் வாழ்கை மட்டும் அதாலபலதில் கொண்டு சென்றுவிட்டது .
எப்போ பிளேக்ஸ் போர்டு , டிஜிட்டல் போர்டு , வினையல் போர்டு இப்படி நிறைய புது புது டெக்னாலஜி வந்துச்சோ இவங்க வாழ்க்கையில் மிக பெரிய சரிவை கொண்டு வந்து உள்ளது . டெக்னாலஜி பயன்படுத்த தெரிந்த சிலரை அது எங்கோ கொண்டுபோய் விட்டது நல்ல பணம் , நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. ஆனால் அது எலோருக்கும் கிட்டவில்லை .

என்னுடன் படித்த ஒரு பள்ளி தோழனின் அப்பா painter நன்றாக வரைவர் . தன்னுடைய அப்பா painter என்பதில் அவனுக்கு எந்த ஒரு சங்கடம் இல்லை. பள்ளியில் சயின்ஸ் ரெகார்ட்ஸ் எல்லாம் இவன் வரையும் படங்கள் எந்த ஒரு அடித்தல் கிறுக்கல் இல்லாமல் இருக்கும் . அவனின் அப்பா அவனுக்கு சிறிய வயதில் இருந்தே வரைவதி ஆர்வம் கொண்டு வந்து உள்ளார் . அதனால் என்னமோ இவனின் பின்னல் மட்டும் கூட படிக்கும் பெண்கள் எல்லாம் தனியாக ஒரு பார்வை இருக்கும் . 

பள்ளியில் முருகன் மனைவின் பெயர் கொண்ட பெண் ஒருத்தி எங்கள் வகுப்பில் படித்தல் . நன்றாக படிபள் அதனால் என்னமோ என்னை மாதுரி மக்கு பசங்கள பார்த்த எதோ ஒரு ஜந்துவ பார்த்து ஒதுங்குற மாதுரி போவாள் . மாணிக்க வேண்டும் எனது நண்பனின் பெயர் சொல்ல மறந்துட்டேன் . அவன் பெயர் சரவணன் . அந்த முருக கடவுள் பெயர் கொண்ட பெண்ணை இவனுடன் இணைத்து பேசுவது எனது முக்கியமானது வேலை ஆனது . சரவணன் எதும் எதிர்த்து பேசமாடன் . அவனுக்கு தெரியும் நான் கிண்டலுக்கு தன் பேசுறேன் . ஆனால் காதல் யாரை விட்டு வைத்தது பத்தாவது படிக்கும் போதே இவர்கள் காதலில் விழுந்துவிட்டார்கள் . சரவணன் இதை பற்றி எதும் என்னிடம் சொல்லவே இல்லை. 

சயின்ஸ் டீச்சர் வரைய சொன்ன ஒரு அண்டோமி படம் அவனிடம் குடுத்து வரைய சொனேன் . சரவணன் எனக்கு வரைந்து குடுக்கும் படம் மட்டும் கொஞ்சம் அடித்து அடித்து வரைவான் இல்லை என்றால் டீச்சர் கண்டிபாக கண்டுபிடித்து விடுவர். டீச்சர் எல்லோரையும் ரெகார்ட் நோடேயும் தனது டேபிள் வைக்க சொன்னார்கள். எனது நோடே சரவணன் இடம் இருந்து வாங்கி ரொம்ப தெனாவட்டு ஆகா அவரின் முன்னால் வைத்து திரும்பினேன் . சனி என்னோட உச்சன் தலையில் வந்து உக்காந்துதாறு என்று சொல்ல வேண்டும்.

என்னோட ரெகார்ட் தன் முதலில் எடுத்து பார்த்த டீச்சர் எதோ பேயி அறைந்த மாதுரி முளிச்சாங்க . ஏனடா இப்படி முளிகுரங்க நீ எதாவது மாதி வரஞ்சு வச்சியா என்று சரவனிடம் கேட்டால் அவன் அந்த இடத்திலே இல்லை . கடைசி பெஞ்ச்ல எதோ அட்டை போல் முகத்தை மறைத்து ஒளிந்து இருந்தான் புரிந்து விட்டது எடகுடமா எதோ நடந்து விட்டது என்று. ஆனால் என்ன என்று தான் தெரிய வில்லை .

டீச்சர்ரின் முகம் Dinosaur முகம் போல ஆத்திரத்தில் பெருசாகி கொண்டே இருந்தது . என்னை பொசுக்கி விடுவது போல பார்த்து முறைத்தார் . சரவணன் இன்னும் அங்கயே ஒட்டி ஒண்டு இருந்தான் . டீச்சர் என்ன நினைத்தாரோ எனோட ரெகார்ட் நோட் மட்டும் கடைசில் வைத்து விட்டு மற்ற எல்லா ரெகார்ட் நோட் பார்த்து மார்க் போடு கொண்டு இருந்தார் .அவரின் வகுப்பு முடியே 10 நிமிடங்கள் இருக்கும் போதே கிளம்பியவர் என்னோட ரெகார்ட் நோட் கையோட எடுத்து கொண்டார் போகும் போது என் அருகில் வந்து தன்னுடன் வர சொல்லி சொன்னார் . இந்த தடவை நான் சரவணனை பார்க்காமல் அவருடன் கிளம்பினேன் . எந்த ஒரு தப்பு செய்யும் போதும் அதுக்கு அதாரம் இல்லாம செய்யணும் ( இது எனோட LKG முதல் படிக்கும் நண்பன் கார்த்திக் சொன்னது ). அவரின் பினளே சென்று என்னுடைய ரெகார்ட் நோட் புக் குடுத்து போ என்று சொன்னவர் , திரும்பும் போகும் போது நாளை எனோட அப்பாவை பள்ளிக்கு குட்டிட்டு வர சொன்னார் . என்னடா இது ஒன்னும் புரியாமல் விழித்தேன் . சரி இதுல சரவணன் கை வண்ணம் இருக்குது முதல அவன கவனிப்போம் என்று கிளாஸ்க்கு வந்தேன். 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ....