~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சின்ன சின்ன கதைகள் - 2/25


 ரேஸ் 

கோபி எப்போதும் தன்னை ஒரு  ஹீரோ என்று  தான் நினைத்து கொள்வான். அவன் உடன் சுற்றும் அனைத்து பொடிசுகளும்  அவன் சொல்வதையே வேதவாக்காக எடுத்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவன். கோபிவுடன் ஊரு சுற்றும் அடிபொடிகள் எல்லாம் அவனை எதிர்த்து பேசபயபடுவார்கள் அல்லது அவர்கள் அந்தரங்க விஷயங்கள் எதாவது ஒன்று அவனிடம் சிக்கிக்கொண்டு இருக்கும் அதை அவன் வெளிய சொல்லிவிடுவானோ என்கிற பயம் கூட. L.ரவிக்குமார், S.கார்த்திக் கூட இப்படி மாட்டியவர்கள் தான். கோபி இந்த மாதிரியான விஷயங்களை பாதுகாப்பதில் கெட்டிகாரன் அவர்களை மிரட்டுவானே தவிர வெளியே யாரிடமும் சொல்லமாட்டான் , S.கார்த்திக்கின் பரம வையாரி ரமேஷ் கோபிக்கு ஆட்டு கால் சூப் வாங்கி குடுத்து கேட்ட போது கூட, அந்த சூப்பை முழுவதுமாக குடித்துவிட்டு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டான்.  

உலகத்தில் இருக்கும் அத்தனை சைக்கிள்லில் தனது தான் பெஸ்ட் என்று நினைப்பவன் கோபி, மணிக்கு 20 மையில் வேகத்தில் செல்லும் அந்த மோட்டார், கியர், ஹெட் லைட் இல்லாத BSA சைக்கிள்  (பைக்கில்!!) செல்வதை தான் விரும்புவான். தனது வயது ஒத்த பசங்க யாரவது அவனை முந்தி சென்றால் டென்ஷன் ஆகிவிடுவான். பெடலை மேதி மேதி என்று மேதித்து அவனை முந்தி செல்லவே ஆசைப்படுவான்.

ஹீரோ ஒருவன் இருந்தால் வில்லன் ஒருவன் இருக்க தானே செய்வான், அவன் விசு. கோபியுடன் தான் படிக்கிறான் கோபி வகுப்பறையில் இரண்டாம் பெஞ்சில் உக்கார்ந்து இருப்பான், விசு கடைசி பெஞ்ச்.  விசுவின் அப்பா அவனுக்கு கியர் வைத்த சைக்கிள் வாங்கி குடுத்தார்.  கோபியின் வீட்டு முன் இருக்கும் கோவிலில் நிறுத்தி அவனை கடுப்பு ஏத்தினான். விசுவின் புதிய சைக்கிள்லால் கவரப்பட்ட அல்லு சில்லு எல்லாம் அவனுடன் செல்லவே ஆசைப்பட்டது.  நாளுக்கு நாள் இவர்களும் ஏரியா தாதா ஆவதற்கு முயற்சி செய்வதை கண்கூடாக பார்க்க நேர்ந்தது.




 அரையாண்டு பரிசை லீவில் L.ரவிக்குமார் சதியால் விசுவுடன்  போட்டி வைக்கலாம் என்று சங்கத்தின் தலைவர் கோபி முடிவு பண்ணினான். செய்தி  L.ரவிக்குமார் மூலம் விசுவிற்கு சென்றது. கோபியின் அட்டகாசத்துக்கு முடிவுகட்டும் நோக்கத்தில் சரித்திர பிரசித்தி  பெற்ற அந்த சவாலை ஏற்றுகொண்டான். பந்தயதில்  யார் தோற்கின்றாரோ அவர் இனி ஸ்கூல்க்கு நடந்து தான் வரவேண்டும் என்று விசு ஒரு கோரிக்கை வைத்தான். கோபி அதற்கு தயார் என்று செய்தி அனுப்பினான்.   ரேஸ்க்கு நாள் குறிக்கப்பட்டது, போட்டிக்கு 4 நாளே இருந்தது , தினம் இருவரும் ரேஸ் நடைபெற போகும் பள்ளி மைதானத்தில் அடிகடி பயிற்சியை எடுத்து கொண்டு இருந்தார்கள். வண்டியை எப்படி எல்லாம் வேகமாக ஓட்ட வைக்கமுடியும் என்று கோபி சைக்கிள் கடைகாரரிடன் கேட்டு கொண்டு இருந்தான்.ரேஸ் நாள் வந்தது, இருவரும் எழுந்து அவர் அவர் குலதெய்வதை வேண்டி  நெற்றியில் திருநீர் பூசி கொண்டு வீர நடை போட்டு சென்றார்கள்.

அடிபொடிகளுடன் விசு மைதானத்திற்கு முன் நின்று கொண்டு இருந்தான் அவன் அருகில் அவன் அப்பா !!!! பக்கத்தில் கோபி அப்பா !!!   விசு அழுது  கொண்டு இருந்தான், கோபி மைதானத்தில் நிற்கும் அவன் அப்பாவிடம் சிரித்த முகத்துடன் வந்து நின்றான். கொஞ்சமும்  அவன் இதை எதிர்பார்கவில்லை பொளேர் என்று அவன் மண்டையில் ஒரு போட்டார். 
 "மொளச்சு மூணு இலை விடல அதுக்குள்ள ரேஸ் விடுறியோ?? இதுக்கு தான் நாலு நாளா மாஞ்சு மாஞ்சு சைக்கிள் தொடச்சிட்டு இருந்தியா ??" அடுத்த நங்ங்ங்ங்....  கோபியின் அப்பா அவனை வறுத்து எடுத்து கொண்டு இருந்தார். 

பளார் என்று சத்தம் கேட்டது திரும்பி பார்த்தான் கோபி தாரை தாரையாக கண்ணீர் விட்டு கொண்டு இருந்தான் விசு. "வாடா வீட்டுக்கு அங்க இருக்கு உனக்கு. ஸ்கூல்க்கு போக சைக்கிள் வாங்கி  குடுத்தா ரேஸ் விடுறியா ரேஸ்சு  ". லுங்கியை மடித்து கட்டியபடி முறைத்தார்.

"இனிமேல சைக்கிள் எடுத்து பாரு அப்பறம் இருக்கு உனக்கு. ஸ்கூல்க்கு இனி நடந்தே போ"  இருவரும் கோரஸ்சாக சொன்னார்கள் .
  
இரண்டு வருங்கால ரௌடிகளும் கலங்கிய கண்களுடன் இழுத்துகொண்டு செல்லபட்டார்கள் அவர்களின் அப்பாகளால்  . 

 ரமேஷ் எதுவும் தெரியாமல் நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டு அவன் வழியில் சென்றான். 



ரௌடி கோபியின்  ராஜ்ஜியம் தொடரும்..... 



With Love
Romeo ;)