~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 12/10/09

வேட்டைக்காரன் பாட்டு ரிலீஸ் ஆனாலும் ஆனது எங்க ஏரியால பசங்க ஸ்பீக்கர்ல போட்டு கலக்கிட்டு இருக்காங்க. சீனா மற்றும் கொரியா மொபைல் யூஸ் பண்ணுறவங்க புலி வருது பாட்ட ரிங்க்டோனே வச்சிக்கிட்டு செம ரகள பண்ணுறாங்க.


பக்கத்துக்கு ஏரியா கோவில்ல எதோ விசேஷம் நண்பன் வீடும் அங்கதான் இருக்கு. அவன பார்க்கலாம்ன்னு போனேன் பத்து ஸ்பீக்கர்ல புலி வருது பாட்டு பிச்சிக்கிட்டு பாடுது. அவன் இருக்குற தெருல ஒருத்தர் வீடும் திறந்து இல்ல எல்லா கதவு , ஜன்னல் எல்லாம் முடி இருக்கு அங்க இருந்தா பேச முடியாதுன்னு அவனும் நானும் கொஞ்சம் தூரம் இருக்குற ஒரு டீ கடைக்கு போனோம்.
"ஏன்டா மச்சி இந்த மாதுரி சவுண்ட் அதிகமா வச்சி பாட்ட போடுறாங்களே ஏன் இப்படி பண்ணுரிங்கன்னு அவங்கள கேட்க மாட்டிய?? பாரு உன் வீட்டுக்கு முன்னாடிதானே ஸ்பீக்கர் கட்டி இருக்காங்க!! சரியான காட்டு மிராண்டி பசங்கள இருப்பானுக போல" என்று கண்ட மேனிக்கு அவங்களை திட்டினேன். அதுக்கு அவன் சொன்னான், இந்த ஸ்பீக்கர் செலவ இவங்க ஏரியா விஜய் ரசிகர் மன்றம் ஏத்து இருக்கு அதும் இல்லாம இவன மாதுரி பசங்க 10 பேருக்கு வேட்டைக்காரன் படம் முதல் ஷோக்கு ப்ரீயா டிக்கெட் தராங்களாம் அதனால இவனுக ஏதும் கண்டுகிறது இல்ல". பேசி முடிச்சி அவன வீட்டுல டிராப் பண்ணலாம் என்று வீட்டு அருகில் சென்றோம்.


ஒலி பெருகியில் ஒருவர் கோவில் திருவிழாக்கு ஸ்பன்செர் பண்ணவங்க பெயர் சொல்லிடு இருந்தாரு. " மைக் , ஸ்பீக்கர் மற்றும் மின்சார உபகரணம் ஸ்பன்செர் செய்த நமது விஜய் ரசிகர் மன்ற தலைவர் நண்பர் சரவணனை மனமார வாழ்த்துகிறோம்"

எனது நண்பன் பெயர் சரவணன்.

என்னை பார்காமலே வீட்டுக்குள் சென்றான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேத்து The Taking of Pelham 1 2 3 இந்த படத்த பார்த்தேன் . Denzel Washington மற்றும் John Travolta நடிச்சது . படம் ஆரமிச்ச 5 ஆவது நிமிடத்தில் இருந்து திரைகதை செம வேகத்தில் செல்கிறது.
கதையின் சுருக்கம் : John மற்றும் அவரின் சகாக்கள் முன்று பேரு சேர்ந்து லோக்கல் ட்ரைன் கடத்துகிறார்கள். கடத்திய பிறகு John லோக்கல் ட்ரைன் கண்ட்ரோல் சென்டர்க்கு தொடர்பு கொள்கிறான். அந்த தொடர்பை ரயில்வே கட்டுபாடு அறையில் இருக்கும் சாதாரண ஊழியர் Denzel யிடம் ரயில் கடத்த பட்டு இருப்பதையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் 10 மில்லியன் டாலர் பணம் வேண்டும் அப்படி வர வில்லை என்றால் அங்கு பிணைகைதி யாக இருக்கும் 19 நபர்களில் 61வது நிமிடத்தில் இருந்து கொலை செய்யப்படும் என்று மிரட்டுகிறான். இதற்கு பிறகு நடக்கும் பர பர கதை சூப்பர்.

Denzel Washington நடிப்பு அருமை ரயில் கடத்தப்பட்டு இருப்பதில் இருந்து இவரின் முக மாற்றங்கள் மாறும் ஒவ்வொரு சீன்லையும் கலக்கி உள்ளார்.
John Psycho வில்லன் என்றே சொல்லலாம். ஹிஸ்டிரிய நோயாளி போல சில சமயம் காட்டு கத்தல் கத்துவதும். பின்பு அருமையாக சிரிப்பதும் என்று கலக்கி உள்ளார்.

Dont miss the chance to watch this Movie.

இந்த படம் ஆரமிக்கும் போது தட்டில் சாப்பாடு போட்டு உட்கார்ந்தேன் படம் முடியும் வரை பாதி கூட சாப்பிடவில்லை. ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியாமல் பார்த்து கொண்டு இருந்தேன். அம்மாவிடம் சரியான டோஸ் வாங்கினேன். பின்ன சாப்பாடு போட்டு ஒரு மணி நேரம் ஆகியும் பாதி சாப்பாடு கூட சாப்பிட வில்லை என்றால்??
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் நமக்கு தலை தீபாவளி. மாமனார் மாமியார் தீபாவளிக்கு வந்து அழச்சிட்டு போய்டாங்க ஆனா எப்படி போறதுன்னு தான் தெரியல. எப்பயும் ரயில தான் போவேன் டிக்கெட் சுத்தம்மா இப்ப இல்ல ஸ்பெஷல் ட்ரைன் டிக்கெட் எல்லாம் வைடிங் லிஸ்ட் 300க்கு மேல இருக்கு. நாளைக்கு தக்கல் டிக்கெட் ஒபெனிங் இதுக்காக காலைல 5 மணிக்கும் எல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போகலாம்ன்னு இருக்கேன். பதிவர்கள் யாராவது தக்கல் டிக்கெட் எடுக்குறவங்க இருந்திங்கன சென்னை சென்ட்ரல் அல்லது சென்னை பீச் ஸ்டேஷன் வரதா இருந்த சொல்லுங்க சேர்ந்தே போகலாம். ஆன்லைன்ல புக் பண்ணல்லாம் என்று ஐடியா குடுகத்திங்க IRCTC சர்வர் எல்லாம் 8 to 9am சுத்தமா அவுட் ஆகிடும். அனுபவம் தான் வேற என்ன ....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர் சுந்தர்ரை பதிவர் ரோசா தாக்கி சம்பவம் நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு. அவர் நலமுடம் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்

போன நூற்றாண்டு மில்லியன் டாலர் வேள்வி ஆனால் இது வரைக்கும் யாராலயும் பதில் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..




""கார் வச்சி இருந்த சோப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சி இருக்காங்க"" ??