ரொம்ப விறு விறுப்பாக உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா?? |
கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருக்க வேண்டுமா??
அடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ள பரபரப்பாக படிக்க வேண்டுமா?
அப்ப உங்களுக்கு ஏத்த புத்தகம் இதுதான்.
 |
ஒரு புத்தகம் என்னை இத்தனை தூரம் ஈர்த்தது இல்லை. அவ்வளவு வேகம் ஒவ்வொரு அத்தியாமும் வரி விடாமல் சுவாரசியம் குறையாமல் படுவேகமாக செல்கிறது.
90'களில் ஜெ அரசால் நக்கீரன் பத்திரிகை எப்படி எல்லாம் பழி வாங்கபட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறது இந்த புத்தகம்.
ஆட்சியாளர்களால் ஒரு பத்திரிகையை எந்த வழிகளில் எல்லாம் முடக்க முடியுமோ அதை எல்லாம் கொஞ்சம் கூட வஞ்சனை வைக்காமல் செய்ததை தோலுரித்து காட்டி இருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.
ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரு பத்திரிகையை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்பதை படிக்கும் போது நம்மை அறியாமல் இவர்களின் மேல் ஒருவித பரிதாபம் எழுகிறது.
மன தைரியம் மட்டும் இல்லை என்றால் இவர்கள் என்றோ காணாமல் போயிருபார்கள். |
நக்கீரனுக்கு எதிராக ஜெ அரசு செய்த அடக்குமுறைகள், பத்திரிக்கைகள் வெளிவராமல் இருக்க இவர்கள் செய்த தகிடுதடங்கல் , போலீஸ்காரர்களை ஏவிவிட்டு நடத்திய ரெய்டுகள், அதை எப்படி எல்லாம் முறியடித்து ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை தாமதிக்காமல் குறிபிட்ட நாளில் வெளிக்கொண்டு வந்தது, இவை எல்லாவற்றையும் படிக்கும் போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறைச்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.
சாதாரண நடையில் தான் இருக்கிறது பக்கங்கள் எல்லாம், ஆனால் அதில் இருக்கும் விஷயமோ அசாதாரமானது.
ஒரு தொடராக வெளிவந்ததை புத்தக வடிவில் கொண்டு வந்து இருகிறார்கள்.
நல்ல தீனி உள்ள புத்தகம்.
புத்தகம் கிடைக்கும் இடம் சேலஞ்ச் விலை - ருபாய் 190/- நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105,ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014.
With Love Romeo ;) |