~~ROMEO~~

Everyday Starts with Happy :)

புத்தக சந்தையில் பதிவர்கள் சந்திப்பு

புத்தக கண்காட்சியில் பதிவர்கள் சந்திப்புன்னு கேபிள் பதிவில் படித்ததும் சொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. புத்தக கண்காட்சிக்கு செலவதே ரொம்ப சந்தோசம், இதில் பதிவர்கள் சந்திப்பு என்றால் இரட்டிப்பு சந்தோசம் தானே.

பதிவர்கள் சந்திப்பிற்கு முன் எழுத்தாளர் அழகிய பெரியவனை சந்தித்து, சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் கிழக்கு பக்கம் பதிவர்கள் வர ஆரமித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது. சர்புதீன் பேசியபோது பதிவர்கள் சிலர் இடை இடையே பேசிக்கொண்டு இருந்ததால் அவரின் பேச்சை முழுமையாக கேட்க முடியவில்லை. அவராலும் முழுமையாக பேசமுடியவில்லை போன்று இருந்தது அவரின் பேச்சு. அவரை மட்டுமே பேசவிட்டு கடைசியில் தங்களது எண்ணங்கள் மற்றும் கேள்வியை எழுப்பி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். சர்புதீன் பதிவர்களை தனியாக சந்திக்கும் போது தனது நோக்கத்தை திரும்ப விளக்கி கொண்டிருந்தார்.

பதிவர்கள் மற்றும் புத்தக கண்காட்சியில் எடுத்த புகைப்படங்கள்







கார்க்கி, பலா பட்டறை, ஜெட்லி, மீன்துளியான், புலவன் புலிகேசி மற்றும் பலரை முதல் முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அண்ணன்கள் ஜாகி, கேபிள், தண்டோரா, நரசிம்,பைத்தியக்காரன்,அப்துல்லா, காவேரி கணேஷ், Butterfly சூர்யா மற்றும் சிலரை சந்தித்ததில் சந்தோஷமாக கழிந்தது அன்றைய மாலை பொழுது.
அண்ணன் தண்டோரா ஒரு கதை சொன்னார், அதை அவரின் பதிவில் எழுத சொன்னேன் பார்க்கலாம் எழுதுவாரா என்று.

அடுத்த முறை கண்டிப்பாக இதே போன்று ஒரு பதிவர் சந்திப்பை புத்தக கண்காட்சியில் வைக்கவேண்டும், இதே போன்று சந்தோஷமாக கும்மி அடிக்கவேண்டும் ...


மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? பதிவுலக ஸ்டார் என்கிற நிலை போய் இவரும் ஒரு பதிவர் என்கிற ரகத்தில் சேர்ந்தாலும் சேரலாம்.