~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சிரிப்பு வலி ஆகி போனா தீபாவளி.

இது நடந்து 15 வருடங்கள் ஆகி இருக்கும் இப்பொது நினைத்தாலும் இன்று நடந்தது போன்று இருக்கிறது.

நாங்கள் குடி இருந்த இடத்தில் என் வயது ஒத்த பசங்க நிறைய பேர் இருபார்கள். மூலைக்கு ஒரு குரூப் என்று இரு பக்கம் ஆட்கள் எதிர் எதிர் துர்வம் போல நின்று கொண்டு இருப்போம். எதுவென்றாலும் ஏட்டிக்கு போட்டி தான் நடக்கும். விளையாட்டு , பிகர் கரெக்ட் பண்றது, பஸ்ல சீட் புடிக்குறது என்று ரணகளம் ஆகத்தான் இருக்கும்.



தீபாவளி டைம்ல எங்க சைடு பசங்க பட்டாசு வெடிச்சிட்டு இருந்தோம் அந்த சைடுல இருக்குற பையன் ஒருத்தன் ஜிகு ஜிகுன்னு டிரஸ் பண்ணிட்டு வந்தான். அத புடிக்காத ஒருத்தன் அவன் கிட்ட பேச்சு குடுக்குற மாதுரி அவன் சட்டை பாகெட்ல ஒரு மிளகா பட்டாச கொளுத்தி போட்டுட்டான். அதுபட்டுன்னு வெடிச்சு பாக்கெட் சிதறவும் அவன் நெஞ்சு பகுதி தீயால் கருகி . பய புள்ள ஐயோ அம்மான்னு கத்திகிட்டே ஓடினான்.



எங்களுக்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் அவன் அந்த சைடு பசங்கள கூடிட்டு வந்தா எப்படி சமாளிக்கிறது?

கொஞ்ச நேரத்துல நாங்க நினைத்து போலதான் நடந்தது. அந்த சைடுல இருந்து 10 பசங்க கூட கிழிஞ்சி போனா சட்டைய போட்டுட்டு அந்த பையன் கண்ணுல கொலை வெறியோட வரான் . நாங்க இருந்ததோ 4 பேரு அவனுக அடிச்சா நாங்க தப்பிச்சி ஓட கூட முடியாது. என்ன பண்றதுன்னு தெரியல அப்ப தான் அந்த பட்டாச கொளுத்தி போட்ட அந்த கபோதி குடு குடுன்னு அவன் வீட்டு குள்ள ஓடி போய் ராக்கெட் பாக்ஸ் ஒண்ண துக்கிட்டு வந்தான் அது பாம் ராக்கெட். நல்லா பெரிய ராக்கெட் அது அவங்க ஒரு 100 அடி முன்னால இருக்கும் போது அவங்க யோசிக்க கூட டைம் குடுக்காம ராக்கெட் படுக்க வச்சி அவங்க மேல பாயுற மாதுரி கொளுத்தி விட்டன்.


அது நேரா கிழிஞ்ச சட்ட பையன் மேல பட்டு வெடிக்கவும் சட்டை ரைட் சைடு கிழியவும் மத்த பசங்க எல்லாம் தேறிச்சி ஒடுனானுக. கொஞ்ச தூரம் லக்ஷ்மி வெடி பத்த வச்சி தூகி தூகி அவனுக மேல போட்டு ஓட ஓட விரட்டினோம்.


அதை நினைத்து சிரி சிரின்னு ஒரு வாரத்துக்கு மேல சிரித்தோம்.
அது எல்லாம் ஒரு காலம். அன்று இருந்த நண்பர்கள் வட்டம் எல்லாம் இப்பொது எங்கு இருகிறார்கள் என்றே தெரியவில்லை. வீட்டில் பட்டாசு வாங்கி 5 தீபாவளி ஆகிவிட்டது பலகாரம் என்பதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான் என்று ஆகிவிட்டது மனைவியிடம் உனக்கு என்ன ஸ்வீட் பண்ண தெரியும் என்று கேட்டேன். திரு திரு என்று முழித்தாள் அப்பவே தெரிந்துவிட்டது என்னவளின் அருமையை.
அம்மாவிற்கு பிறகு அதிரசம் , முறுக்கு போன்ற பலகார வகைகளின் வாசனை எல்லாம் மறந்துவிடுமோ என்கிற பயம் வருவதை மறுக்க முடியவில்லை .

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..


தலை தீபாவளிக்கு ஊருக்கு போறேன் ஹி ஹி ஹி