~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 19/10/09

தீபாவளிக்கு எப்படிடா ஊருக்கு போறதுன்னு தெரியமா இருந்தது பஸ்ல ட்ரைன்ல எதுலையும் டிக்கெட் இல்லையே அந்த கவலைதான், வியாழன் காலை நேர பணியில் இருந்தேன் மதியம் அப்படியே கோயம்பேடு சென்று திருச்சி செல்லும் எதாவது ஒரு பேருந்தில் சென்று விடலாம் என்று. மேனேஜர்யிடம் இரண்டு மணிநேரத்துக்கு முன்னதே கிளம்புவதற்கு அனுமதி வாங்கி கோயம்பேடு வந்து அடைந்தேன். எவ்வளவு கூட்டம் இருக்குமோ என்கிற பயத்துடன் திருச்சி செல்லும் பேருத்தை அருகில் சென்றேன்.


எதிர் பார்த்தற்கு நேர் எதிராக இருந்தது பேருந்து நிலையம். சார் மதுரையா?? , சார் நாகர்கோவில்லா?? , சார் திருச்சியா ?? வாங்க வாங்க சீட் இருக்கு வாங்க என்று இழுக்காத குறையாக அழைகிறார்கள். ஓவர்ரா கற்பனை பண்ணிட்டோமோ என்கிற நினைப்புதான் இருந்தது. ஒரு பேருந்து கிளம்ப தயாராக இருந்தது அதில் ஜன்னல் ஓர சீட் அமர்ந்து கொண்டேன். மதியம் 1 மணிக்கும் கிளம்பின வண்டி 3.30 மணிக்கும் ஒரு ஹோட்டலில் நின்றது (கையேந்தி பவனே நன்றாக இருக்கும் அந்த ஹோட்டல்லை ஒப்பிட்டு பார்க்கும் போது) சாப்பிடுவதற்கு மனசே வரவில்லை ஒரு காபி மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டேன். திருச்சி வருவதற்கு இரவு 8.30 மணி இத்தனைக்கும் நான் ஏறியது எக்ஸ்பிரஸ் பஸ்சில். பிரைவேட் பஸ்காரங்கதான் டிக்கெட் விலையை அதிகமா வைத்து விற்கிறார்கள் என்றால் அரசு பேருந்தில் இந்த மாதுரி எக்ஸ்பிரஸ் என்று சொல்லி டப்பா பஸ்சை காட்டி கல்லா கட்டி விடுகிறார்கள். அங்கு இருந்து கருர் செல்லும் பேருந்தில் ஏறி இரவு 10.30க்கு வீட்டுக்கு சென்று அடைந்தேன்.

ஒரு மாதமாக மனைவியை பார்க்காமல் இருந்த ஏக்கம் அவளை பார்த்தும் திறந்தது. அந்த ஒரு மாதமாக போனில் கொஞ்சல் , சண்டை என்று மாறி மாறி பரிவர்த்தனைகள் நடந்தாலும் அவை எல்லாம் அவளை பார்த்தும் மறந்தது. ஒரு மாதம் இருந்த ஏக்கம் எல்லாம் அந்த ஒரு நாள் இரவில் சந்தோசமாக கழிந்தது. அடித்து போட்டது போன்ற தூக்கம் கண்ணை திறந்தால் மணி காலை 11 .

தீபாவளிக்கு என்னவளுக்கு பரிசு ஒன்றும் தர முடியவில்லை. இந்த மாதம் கொஞ்சம் அல்ல நிறையவே பண முடக்கம். தீபாவளி பரிசாக அவளுக்கு நான் வாங்கி தந்தது ஒரு பொட்டு பாக்கெட் மட்டுமே.

பட்டாசு வெடிப்பதில் இருந்த ஆர்வம் எல்லாம் எப்போதோ மலை ஏறி விடத்தினால் அதன் சத்தம் கூட கேட்க பிடிக்கவில்லை. புது துணி உடுத்தி கொண்டு கோவிலுக்கு சென்று வந்தோம் மாலை நேரம் பக்கத்துக்கு வீட்டில் ராக்கெட் , பூந்தொட்டி, சங்கு சகரம் , அணுகுண்டுடை பற்ற வைக்க பயந்து கொண்டு இருந்த சின்ன பையன் என்று அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்ந்தேன்.


நேற்று சாயங்காலம் 6 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டேன் திருச்சி வழியாக,

இரவு 9 மணி அளவில் திருச்சியில் இருந்தது கிளம்பி பேருந்து காலை 4 மணி அளவில் சென்னை வந்து அடைந்தது .

என்னவளுக்கு சென்னை வந்து விட்ட செய்தியை குறுந்செய்தி அனுப்பினேன். அவளிடம் இருந்தது அப்பவே திரும்ப கிடைத்தது பதில்.

"அடுத்து எப்ப வருவிங்க " நிறை மாத கர்ப்பிணியான என்னவளின் கேள்வி.
"சிகிரமே" என்று பதில் அனுப்பினேன்.

அடுத்தது சின்ன பிரிவு மட்டுமே இருக்கும் என்கிற நம்பிக்கையில் வீடு வந்து அடைந்தேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------