~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 24/11/09

மகன் பிறந்த சந்தோசத்தை கொண்டாட முடியாமல் சென்ற வாரம் காய்ச்சல் என்னை பாடப்படுத்தி எடுத்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை காய்ச்சல், சளி, உடம்பு வலி என்று ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். ஒரு லாஜிக் இருக்கு தெரியுமா, அதாவது நமக்கு உடல்நிலை சரியில்லை என்கிற போது நன்றாக இருக்கும் மற்றவர்களை பார்த்தல் , இவங்க மட்டும் நல்ல இருக்காங்க நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு ஒரு பீலிங் வந்து உடம்பு சரியாகும் வரை மனசை நோகடிக்கும். அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன ?

நண்பன் ஒருத்தன் போன் பண்ணி அவன் கம்ப்யூட்டர்ல ஏதோ கோளறு சரி செய்ய வர முடியுமான்னு கேட்டான்,

அது எப்படி டா எனக்கு உடம்பு சரியில்லாத போதுதான் உன் கம்ப்யூட்டர் பீஸ் போகணுமா என்றேன்.
உடம்புக்கு என்ன ஆச்சு மச்சி ?
காய்ச்சல் டா.
உடம்ப பார்த்துகோடா, சளி இருக்கா ?
ஆமா டா .
எதனை நாளா ?
4 நாளா.
சரி கம்ப்யூட்டர் வேற ஒருத்தர் கிட்ட ரிப்பேர் பார்த்துக்குறேன். நீ போய் GH ல பண்றி காய்ச்சல் டெஸ்ட் எடுத்துக்கோ. வீடு பக்கம் வந்துடாத டா, உடம்பு சரியான பிறகு சொல்லு நான் வந்து உன்னை பார்கிறேன்.

இதுக்கு பெயர் தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பதா ?? பயம் தோற்றி கொண்டது உடனே ஆபீஸ்ல இருக்கும் என்னோட தோழியை கூப்பிட்டு

Swine Flu symptoms என்னன்னு நெட்ல பாரு என்றேன். ஏன் என்றாள்??
நடந்த கொடுமையை சொன்னேன் உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் சொன்னேன்.

சிரி சிரி என்று சிரித்து , நான் கேட்ட செய்திகளை சொன்னாள் . நல்லவேளை எனக்கு SWINE FLU symptoms இல்ல.

காய்ச்சலும் , தலைவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்ன்னு தெரியாமலா சொல்லி இருக்காங்க.

----------------------------------------------------------------------------------------------------------------------

ரேணிகுண்டா படத்தோட டிரெயிலர் பார்த்தேன், சுப்ரமணியபுரம் படத்தின் சாயல் போல இருக்கு ஆனா ஏதோ புதுசா செஞ்சி இருக்காங்கன்னு கூட தெரியுது படம் வந்தா கண்டிப்பா பார்க்கணும்.

ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்குற படம் AVATAR. படத்தின் டிரெயிலர் பார்க்கும் போதே செம கிளாஸ்ஹா இருக்கு James Cameron படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. படத்தில் 3D நியூ டெக்னாலஜி உபயோகப்படுத்தி இருக்காங்கனு புதுசு புதுசா மேட்டர் வெளி வந்துட்டு இருக்கு. எதுவாக இருந்தா என்ன ? அதான் ராமநாராயண் இருக்காரே, கண்டிப்பா தமிழ்ல டப் பண்ணி 2012 எப்படி "ருத்ரம்" ஆச்சோ அதே மாதிரி Avatar "ஆதிவாசி" ஆகலாம். படத்தின் டிரெயிலர் பார்க்க இங்கே சொடுக்கவும் .

-----------------------------------------------------------------------------------------------------------------------

தென் மாவட்டங்களில் சர்வ சாதரணமா பேசுற ஒரு வார்த்தை "ஒக்காளி" , இந்த வார்த்தையை விருமாண்டி படத்துல கமல் உபயோகபடுத்த முடியாதவாறு சென்சர் போர்டு அந்த வார்த்தையை தடை செஞ்சுட்டாங்க. இதே கமல் நடித்த சகலகல வல்லவன் படத்தில் இந்த வார்த்தை பயன்ப்படுத்தி இருப்பார். என்ன கொடுமை சார் இது ?? இது எல்லாம் பழைய செய்தி.

புது செய்தி என்னன்னா ரேணிகுண்டா படத்துல சிலம்பரசன் ஒரு பாட்டு பாடி இருக்காரு " தல்லாகுளம்" ன்னு தொடங்கும் இந்த பாடலின் நடுவில் "ஒக்காளி" என்கிற வார்த்தை அடிகடி வந்து செல்லும். முதலில் இந்த படலை கேட்ட போது கொஞ்சம் ஜெர்க் ஆகி போனேன், பாடலின் இசை நம்மை ஆட்டம் போட வைக்கிறது, பாடலின் வரிகளோ நம்மை டிரில் ஆகா வைக்கிறது அவ்வளவு வன்முறை வரிகள். இந்த மாதிரியான பாட்டு எல்லாம் கேட்ட உடனே புடிக்காது, கேக்க கேக்க தான் புடிக்கும். படலை டவுன்லோட் பண்ண இங்கே சொடுக்கவும்.

பிளஸ் இருந்தால் மைனஸ் என்று ஒன்று இருக்க தானே செய்யும் முதல் பாடலை மைனஸ் என்று வைத்து கொள்வோம் இப்பொது பிளஸ்க்கு போகலாம்

விஜய் அண்டனி இசையில் "அவள் பெயர் தமிழரசி" படத்தின் பாடல்கள் கேட்டேன். டைலமோ, ஆத்திச்சு , புலிவருது என்று புரியாத வார்த்தைகளால் நம்மை வாட்டி வறுத்தெடுத்த இவர் ரொம்ப ஆச்சரியப்படும் விதமாக கிராமிய மனம் கொண்ட பாடல்களை மெட்டமைத்துயுள்ளார்.

"நீ ஒத்த சொல்லு" , "குஜு குஜு கூட்ஸ் வண்டி" , "வடக்கா தெற்கா" ரொம்ப அருமையா இருக்கு.

குஜு குஜு கூட்ஸ் வண்டி பாடலை கேட்கும் போது "சூ சூ மாரி" கொஞ்சம் நினைவு படுத்துது. வரிகள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு. பாடலை பாடிய ஸ்ரீமதி குரல் பற்றி சொல்லுவதற்கு வார்த்தை இல்லை, அந்த அளவுக்கு சுகமா இருக்கு. அவரின் குரலுக்காகவே இன்னும் இன்னும் கேட்ட தூண்டும் பாடல்.

பாடலை டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்.

---------------------------------------------------------------------------------------------------------------------
யோசிக்க வைக்கும் தத்துவம் R.T.O ஆபீஸ்ல்.

"உரிமம் வேண்டுமா 8 போடு
உயர் வேண்டுமா ஹெல்மெட் போடு"