~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 02/11/09

தொலைகாட்சி பெட்டியால் எத்தனை சோதனைகள் வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒவ்வொருதர் சிந்தனை வெவ்வேறு மாதிரி இருக்கும். அப்பாவிற்கு பிடித்து செய்திகள், அம்மாவிற்கு பிடித்து மெகா தொடர் நாடகங்கள், எனக்கு பிடித்து ஸ்போர்ட்ஸ் ஆனால் வீட்டில் இருப்பதோ ஒரு தொலைகாட்சி பெட்டி. சண்டை சரவுகளுக்கு சொல்ல வேண்டுமா என்ன ?? அதிலும் இரவு 8 மணிக்கும் மேல் தொடர் நாடங்களை ஒரு பகுதி கூட விட்டு விடாமல் எங்க அம்மா பார்ப்பார். இதற்காகவே இரவு சமையல் என்பது 8 மணிக்கு முன்பாகவே முடித்து விடுவார்.


சென்ற வாரம் 7 மணி இருக்கும் டிஸ்கவரி சேனல் தமிழ்லில் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருந்தேன். 8 மணிக்கு ஆபீஸ்க்கு கிளம்ப வேண்டும் என்று குளிக்க சென்றேன், ரிமோட் டிவி அருகாமையில் வைத்து விட்டு சென்றேன். குளித்து முடித்து திரும்ப வந்தால் அம்மா டிஸ்கவரி சேனல் மும்மரமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒரு கணம் என்னை நானே கிள்ளி கொண்டேன், மெகா தொடரில் இருந்து அம்மா மாறினால் சரி என்று ஆபீஸ்க்கு கிளம்பி வந்துவிட்டேன்.


காலையில் வீட்டுக்கு சென்றால் அதே டிஸ்கவரி சேனல். முதல் நாள் பார்த்த WILD DISCOVERY பற்றி அப்பாவும் அம்மாவும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

தொலைகாட்சி எப்படி எல்லாம் நம்மை மாற்றி கொண்டு இருக்கிறது. இப்பொது எல்லாம் எங்கள் வீட்டில் டிஸ்கவரி சேனல் தான் அதிக நேரம் பார்த்து கொண்டு இருக்கிறோம். பயனுள்ள பல விஷயங்களை தமிழில் ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்திற்கு வரும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Signs என்கிற படத்தை போன வாரம் பார்த்தேன். படம் வந்து வெகு நாட்கள் ஆகியும் DVD கிடைக்காததால் பார்க்காமல் இருந்தேன். எதர்ச்சியாக நண்பன் ஒருவன் கேட்ட படம் வாங்க சென்ற இடத்தில Blue Ray Disk கிடைத்தது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது அந்த நிமிடம், வீட்டுக்கு சென்றதும் முதிலில் படத்தை பார்த்தேன் .

Woww. ஒரு Alien படத்தை இவ்வளவு thriller ஆகா பார்த்தது இல்லை. படத்தின் இசை நம்மை செம மிரட்டு மிரட்டி இருக்கிறது. திரைகதையில் இருக்கும் ட்விஸ்ட் எல்லாம் சூப்பர்.

படத்தை பார்த்தவர்கள் அதை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லிடு போங்க, பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க.

ஹாலிவுட்ல அடுத்த Alfred Hitchcock என்று டைரக்டர் மனோஜ் நைட் ஷமலன் தான் என்று கூருவது கொஞ்சம் கூட தப்பு இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- போன வாரம் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது . எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சாருவிடம் கேள்விகள் கேட்ட வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து கொண்டு இருக்கிறது. அவருக்கு சில கடிதங்கள் அனுப்பி உள்ளேன் அதில் இரண்டில் நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார் தனது வலைத்தளத்தில்.



படித்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே சொல்லுங்களே .


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்த வாரம் ஒரு மொக்கை ஜோக்


What is the opposite for Cyclotron (சைக்லோட்ட்ரான்) ??
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
Cycleotamatengran (சைக்கிள் ஓட்டமட்டேன்குரன்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இப்ப நான் ஓடுறேன்.....