~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 30/11/2009

உங்கள் வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை நினைத்து பாருங்கள் அதற்கு முன்னரே அந்த விஷயம் உங்கள் நினைவுக்கு வந்து சென்று இருக்கும் அது கனவில் கூட வந்து இருக்கும். அதே போன்று ஒரு நிகழ்வு சென்ற வாரத்தில் நடந்தது எனக்கு.

இரவு பணி முடிந்து காலையில் தூங்கி கொண்டு இருந்தேன். எனது நினைவு எங்கு எங்கோ சென்றது, ரயிலில் பயணித்து கொண்டு இருந்த நான் அடுத்த நொடியில் ஆட்டோவில் செல்கிறேன், பக்கத்தில் ஒரு பெண் ஒருத்தி எதேதோ பேசிக்கொண்டு பேசி கொண்டு வந்தாள், அவள் பேச பேச "ம் ம்" என்று ஒரு குரல் மட்டும் அவள் பக்கத்தில் இருந்து கேட்டு கொண்டு இருந்தது அவர்களை பார்த்தால் வட நாட்டு தம்பதியர் போல இருந்தது , அடுத்த நிமிடம் நான் ஆபீஸ்ல இருந்தேன் இவை அனைத்தும் எனது கனவில் வந்து சென்ற நிகழ்வுகள்.

தூங்கி எழுந்து வேலைக்கு கிளம்பினேன். பார்க் ஸ்டேஷன் இருந்து ரயில் முலமாக கிண்டி வந்து அடைந்தேன், புரியாத மொழி பேசிக்கொண்டு என் அருகில் இருவர் நடந்து கொண்டு வந்தார்கள், திரும்பி பார்த்தால் வட நாட்டு தம்பதியர்கள் இருவர்.

"Hai" என்றார் , நானும் " Hai" என்றேன். ஒலிம்பியா டெக் பார்க் செல்ல எந்த வழி செல்ல வேண்டும் என்றார். நான் அந்த வழியாக தான் செல்கிறேன் வாங்க சேர்ந்தே போகலாம் என்றேன். கிண்டியில் இருந்து ஷேர் ஆட்டோவில் கிளம்பினோம், எனது கனவில் வந்த மாதிரியே அந்த பெண் அருகில் நான். அதே போன்று அவள் பேசி கொண்டு இருந்தாள் பக்கத்தில் இருந்த அவள் கணவன் "ம் ம்" என்று சொல்லி கொண்டே இருந்தான்.

இது தான் கனவுகள் மெய்ப்படும் என்பதா ??


---------------------------------------------
நண்பர் கார்த்திகேயன் சென்னை வந்துள்ளார், அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டேன், சென்ற வாரத்திலே சந்திக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சில காரணங்களால் அவரை சந்திக்க முடியாமல் சென்றது, அவரும் ஹைதராபாத் சென்றதால் இந்த வாரத்தில் சந்தித்துவிட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறேன்.

------------------------------------------


ஒரு சில பதிவாளர்கள் பதிவை படிக்கும் போது ரொம்ப எரிச்சல் அடைய வைக்கிறது. அரச்ச மாவையே அரைக்கிற மாதிரி இருக்கு. மொக்கை என்கிற பெயரில் நடக்கும் இந்த கொடுமைக்கு ஒரு விடுவு காலமே வராதா ?? ஆனால் சில பதிவாளர்கள் பதிவை ரொம்ப எதிர் பார்த்துகொண்டு இருப்பேன். அவர்கள் அதிகமாக எழுத மாட்டார்கள், மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் அதும் நச்சுன்னு இருக்கும். நான் அதிகம் எதிர் பார்க்கும் பதிவர்கள் சிலரே அதில் ஜாக்கி , கேபிள் சங்கர், வால்பையன், நர்சிம், தண்டோரா இப்படி விரல் விட்டு எழுதி விடலாம். ஆனால் மொக்கை போடுகிறவர்கள் லிஸ்ட் மட்டும் எண்ணுவதற்கு கை, கால் விரல்கள் பத்தவில்லை.

-------------------------------------


உதவி வேண்டும் .

பழைய டெம்ப்ளேட் நேற்று நிறைய மக்கர் பண்ணியதால் வேறு வழியில்லாமல் இந்த டெம்ப்ளேட் மாற்ற பட்டுள்ளது.

உங்களுக்கு நன்கு தெரிந்த டெம்ப்ளேட் வெப்சைட் சொல்லுங்கள் ரொம்ப புண்ணியமா போகும் சாமி .

இப்ப இருக்குற டெம்ப்ளேட் கூட நேத்து நைட் எல்லாம் எடிட் பண்ணுறதுக்கு சண்டை போட்டேன் . HTML ஈஸியா எடிட் பண்ணனும் அந்த மாதிரி சொல்லவும்.

திரும்பி பார்கிறேன் - 24/11/09

மகன் பிறந்த சந்தோசத்தை கொண்டாட முடியாமல் சென்ற வாரம் காய்ச்சல் என்னை பாடப்படுத்தி எடுத்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை காய்ச்சல், சளி, உடம்பு வலி என்று ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். ஒரு லாஜிக் இருக்கு தெரியுமா, அதாவது நமக்கு உடல்நிலை சரியில்லை என்கிற போது நன்றாக இருக்கும் மற்றவர்களை பார்த்தல் , இவங்க மட்டும் நல்ல இருக்காங்க நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு ஒரு பீலிங் வந்து உடம்பு சரியாகும் வரை மனசை நோகடிக்கும். அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன ?

நண்பன் ஒருத்தன் போன் பண்ணி அவன் கம்ப்யூட்டர்ல ஏதோ கோளறு சரி செய்ய வர முடியுமான்னு கேட்டான்,

அது எப்படி டா எனக்கு உடம்பு சரியில்லாத போதுதான் உன் கம்ப்யூட்டர் பீஸ் போகணுமா என்றேன்.
உடம்புக்கு என்ன ஆச்சு மச்சி ?
காய்ச்சல் டா.
உடம்ப பார்த்துகோடா, சளி இருக்கா ?
ஆமா டா .
எதனை நாளா ?
4 நாளா.
சரி கம்ப்யூட்டர் வேற ஒருத்தர் கிட்ட ரிப்பேர் பார்த்துக்குறேன். நீ போய் GH ல பண்றி காய்ச்சல் டெஸ்ட் எடுத்துக்கோ. வீடு பக்கம் வந்துடாத டா, உடம்பு சரியான பிறகு சொல்லு நான் வந்து உன்னை பார்கிறேன்.

இதுக்கு பெயர் தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பதா ?? பயம் தோற்றி கொண்டது உடனே ஆபீஸ்ல இருக்கும் என்னோட தோழியை கூப்பிட்டு

Swine Flu symptoms என்னன்னு நெட்ல பாரு என்றேன். ஏன் என்றாள்??
நடந்த கொடுமையை சொன்னேன் உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் சொன்னேன்.

சிரி சிரி என்று சிரித்து , நான் கேட்ட செய்திகளை சொன்னாள் . நல்லவேளை எனக்கு SWINE FLU symptoms இல்ல.

காய்ச்சலும் , தலைவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்ன்னு தெரியாமலா சொல்லி இருக்காங்க.

----------------------------------------------------------------------------------------------------------------------

ரேணிகுண்டா படத்தோட டிரெயிலர் பார்த்தேன், சுப்ரமணியபுரம் படத்தின் சாயல் போல இருக்கு ஆனா ஏதோ புதுசா செஞ்சி இருக்காங்கன்னு கூட தெரியுது படம் வந்தா கண்டிப்பா பார்க்கணும்.

ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்குற படம் AVATAR. படத்தின் டிரெயிலர் பார்க்கும் போதே செம கிளாஸ்ஹா இருக்கு James Cameron படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. படத்தில் 3D நியூ டெக்னாலஜி உபயோகப்படுத்தி இருக்காங்கனு புதுசு புதுசா மேட்டர் வெளி வந்துட்டு இருக்கு. எதுவாக இருந்தா என்ன ? அதான் ராமநாராயண் இருக்காரே, கண்டிப்பா தமிழ்ல டப் பண்ணி 2012 எப்படி "ருத்ரம்" ஆச்சோ அதே மாதிரி Avatar "ஆதிவாசி" ஆகலாம். படத்தின் டிரெயிலர் பார்க்க இங்கே சொடுக்கவும் .

-----------------------------------------------------------------------------------------------------------------------

தென் மாவட்டங்களில் சர்வ சாதரணமா பேசுற ஒரு வார்த்தை "ஒக்காளி" , இந்த வார்த்தையை விருமாண்டி படத்துல கமல் உபயோகபடுத்த முடியாதவாறு சென்சர் போர்டு அந்த வார்த்தையை தடை செஞ்சுட்டாங்க. இதே கமல் நடித்த சகலகல வல்லவன் படத்தில் இந்த வார்த்தை பயன்ப்படுத்தி இருப்பார். என்ன கொடுமை சார் இது ?? இது எல்லாம் பழைய செய்தி.

புது செய்தி என்னன்னா ரேணிகுண்டா படத்துல சிலம்பரசன் ஒரு பாட்டு பாடி இருக்காரு " தல்லாகுளம்" ன்னு தொடங்கும் இந்த பாடலின் நடுவில் "ஒக்காளி" என்கிற வார்த்தை அடிகடி வந்து செல்லும். முதலில் இந்த படலை கேட்ட போது கொஞ்சம் ஜெர்க் ஆகி போனேன், பாடலின் இசை நம்மை ஆட்டம் போட வைக்கிறது, பாடலின் வரிகளோ நம்மை டிரில் ஆகா வைக்கிறது அவ்வளவு வன்முறை வரிகள். இந்த மாதிரியான பாட்டு எல்லாம் கேட்ட உடனே புடிக்காது, கேக்க கேக்க தான் புடிக்கும். படலை டவுன்லோட் பண்ண இங்கே சொடுக்கவும்.

பிளஸ் இருந்தால் மைனஸ் என்று ஒன்று இருக்க தானே செய்யும் முதல் பாடலை மைனஸ் என்று வைத்து கொள்வோம் இப்பொது பிளஸ்க்கு போகலாம்

விஜய் அண்டனி இசையில் "அவள் பெயர் தமிழரசி" படத்தின் பாடல்கள் கேட்டேன். டைலமோ, ஆத்திச்சு , புலிவருது என்று புரியாத வார்த்தைகளால் நம்மை வாட்டி வறுத்தெடுத்த இவர் ரொம்ப ஆச்சரியப்படும் விதமாக கிராமிய மனம் கொண்ட பாடல்களை மெட்டமைத்துயுள்ளார்.

"நீ ஒத்த சொல்லு" , "குஜு குஜு கூட்ஸ் வண்டி" , "வடக்கா தெற்கா" ரொம்ப அருமையா இருக்கு.

குஜு குஜு கூட்ஸ் வண்டி பாடலை கேட்கும் போது "சூ சூ மாரி" கொஞ்சம் நினைவு படுத்துது. வரிகள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு. பாடலை பாடிய ஸ்ரீமதி குரல் பற்றி சொல்லுவதற்கு வார்த்தை இல்லை, அந்த அளவுக்கு சுகமா இருக்கு. அவரின் குரலுக்காகவே இன்னும் இன்னும் கேட்ட தூண்டும் பாடல்.

பாடலை டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்.

---------------------------------------------------------------------------------------------------------------------
யோசிக்க வைக்கும் தத்துவம் R.T.O ஆபீஸ்ல்.

"உரிமம் வேண்டுமா 8 போடு
உயர் வேண்டுமா ஹெல்மெட் போடு"


முதலாம் வருடம்.....

வாழ்கையில் சில விஷயம் திரும்பி பார்க்கிறதுகுள்ள காணாம போயிடும் . அப்படி தான் பாருங்க இப்பதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடிச்சு.நவம்பர் 23 2008 , அன்று தான் எனக்கும் மகாலட்சுமிக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. எங்களது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.

முதல் வருட கல்யாண தினத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையை எங்கள் மகன் ஏற்படுத்திவிட்டான். அவனை விட எங்களுக்கு கொண்டாட்டம் ஒன்று பெரியது இல்லை தான் .

சென்னையில் நான், கரூரில் எங்கள் மகனுடன் மனைவி. லீவ் எடுக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், அதனால் அடுத்த வருடம் இதே தினத்தில் எங்காவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று மகனுடன் கொண்டாலாம் என்று நாங்கள் முடிவு பண்ணிரிகிறோம்.

இந்த ஒரு வருடத்தில் காதல், சண்டை, பிரிவு, முறைப்பு என்று எல்லாம் சேர்ந்த கலவையாக சுகமாக கழிந்தது.

தலை தீபாவளிக்கு ஏதும் வாங்கி தர முடியாமல் இருந்த வேதனையை இப்பொது சரி செய்து விட்டேன்.

என்னவளுக்கு புதிதாக Samsung S3600, Open டைப் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி பரிசளித்தேன். அவள் ஆசைப்பட்ட மாடல் ஆசையை பூர்த்தி செய்துவிட்டேன் என்கிற பெருமிதம்.வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் அந்த மொபைலை காமித்து முதலாம் ஆண்டு கல்யாண தினத்திற்கு நான் வாங்கி தந்த பரிசு என்று சொல்லி சந்தோசப்படுகிறாள் என்னவள்.

இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர.

பொறுப்புகள் கூடி கொண்டே செல்கிறது , இன்னும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே மண்டையை போட்டு உலுப்புகிறது.

ஆனால் அடிமனதில் இருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்று தான்.

இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே .வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு

நமது அருமை நண்பர் கேபிளார் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

-----------------------------------------------------------------------------------------------
Nov 10 ஆம் தேதி நண்பர் வால்பையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தனியாக சந்திக்கும் முதல் பதிவாளர் நண்பர் வால்பையன்.

எங்கள் சந்திப்பு திடீர் என்று முடிவானது, அன்று காலையில் தான் நான் கரூர் செல்லும் வழியில் ஈரோடு வருவதாகவும் அப்போது சந்திக்க முடியுமா என்று அவரிடம் GTALKகில் கேட்டேன், கண்டிப்பாக சந்திக்கலாம் என்றார். அவரின் போன் நம்பர் கேட்டு குறித்து கொண்டேன், ஈரோடு வந்ததும் அவரது அலைபேசிக்கு கூப்பிட்டு பஸ் ஸ்டாண்ட்யில் வெயிட் பண்ணுவதாகவும் சொன்னேன் .

பஸ் ஸ்டாண்ட் வெளிய தீபா மெடிகல்ஸ் என்று ஒரு கடை இருக்கும் அங்க வெயிட் பண்ணுக கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் என்றார்.

ஈரோடுக்கு நான் புதுசு அதும் இரவில் நான் எங்கு போய் தேடுவது என்கிற யோசனையில் தள்ளுவண்டிகாரர் ஒருவரிடம் அந்த கடை பற்றி கேட்டேன், அந்த Transformer பக்கதுல தான் இருக்கு பாருங்க என்றார். வால்பையனை சந்திக்கவேண்டும் என்று ஈரோடு சென்றால் பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் தீபா மெடிகல்ஸ் பக்கத்தில் வெயிட் பண்ணவும். அதை அவர் சொல்லுவதற்கு முன்பே நீங்க செய்துவிட்டால் மனுஷன் ரொம்ப சந்தோஷ படுவார். அவர் சொல்லுவதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த மெடிக்கல் கடை சுமார் 25 வருடங்கள் அங்கு இயங்கி கொண்டு இருக்கிறதாம், அதனால் ஈரோடு வாழும் அனைத்து அன்பர்களுக்கும் இந்த கடையை நன்கு அறிந்து உள்ளார்கள் என்பதை தள்ளுவண்டிக்காரர் சொன்னார்.


சரியான இடத்திற்கு வந்து அடைந்தேன். நிமிடங்கள் ஓடி கொண்டே இருந்தது பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னவர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வந்தார். வந்ததும் தன் பெயரை வால்பையன் என்று சிரித்த முகத்துடன் அறிமுகபடுத்தி கொண்டார், நானும் என்னை ரோமியோ பாய் என்றே அறிமுகபடுத்தி கொண்டேன். அவரின் வேலையை மற்றொருவரிடம் விட்டு வர லேட் ஆகிவிட்டது என்று சொன்னார்.

சரி வாங்க என்று அவர் பைக்கில் ஏற்றி கொண்டார் அப்போது மணி 9.45pm கிட்டதட்ட 30 நிமிடங்கள் நான் அவருக்காக அங்கு காத்து கொண்டு இருந்தேன். மாலை வேலை என்றால் அழகான பெண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் ஆனால் இது இரவாச்சே அதும் மழை வேறு கொஞ்சம் கடுப்புடனே நின்று கொண்டு இருந்தேன்.

வண்டியில் ஏற சொன்னவர் எங்கே கூட்டி சென்றார் தெரியுமா ???? நீங்கள் நினைப்பது சரி "BAR" க்கு தான் நேராக சென்றோம். அங்கு அவரின் நண்பர்கள் இரண்டு பேர் எங்களுக்குகாக வெயிட் பண்ணிட்டு இருந்தார்கள். ஒருவர் தியாகு , மற்றோவர் கார்த்திக். கச்சேரி ஆரமிக்கலாம் என்று உள்ளே சென்றோம். நான் அதிகமாக தண்ணி அடிக்கமாட்டேன் , அடித்தாலும் நண்பர்கள் கூடும் போதும் மட்டுமே அதும் பீர் மட்டுமே ஒரு பாட்டில் அடிப்பேன். அதற்கே எனது உடம்பு தங்காது என்பது முக்கியமாக விஷயம்.


எனக்கு ஒரு பீர் என்று சொல்லி அமைதி ஆனேன் ( வீட்டிற்கு சென்று மனைவியிடம் வாங்கிகட்டி கொண்டு அமைதியாக இருந்தது வேறு :( ) . வால் மற்றும் அவரது நண்பர்கள் என்னென்னமோ ஆர்டர் செய்து கொண்டு இருந்தார்கள், அதை முடித்து பேச்சு சற்று வலை பக்கம் சென்றது. வால் மொக்கை அல்லது சிரியஸ் டைப் ஆள் என்று நினைத்து சென்றால் அதை மாற்றி கொள்ளுங்கள். மனுஷன் காமெடில கலக்குறார், இவரை விட இவரின் நண்பர் தியாகு வால்லை நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஓட்டு ஓட்டு என்று ஓட்டி கொண்டு இருந்தார். நீங்கள் வால்பையனை சந்திக்கும் போது அவரின் நண்பர் தியாகு பற்றி சில வார்த்தைகள் கேட்டு பாருங்கள், ஒரு விஷத்தை கண்டிப்பாக சொல்லுவர், அதை என்னிடம் சொன்னார் அப்போது தியாகு அலுத்து கொண்டே சொன்னார் " இதை நான் 20தாவது முறை கேக்குறேன் பாஸ்" . வால்பையன் சொன்னது கேட்டு எனக்கு தியாகுவை பற்றி இப்படியும் ஒரு மனிதரா ?? என்றே என்ன வைத்தது. அது என்ன மேட்டர் என்று என்னிடம் கேட்காதிங்க வால்பையன்னிடம் கேட்டு கொள்ளவும்.

மணி ஆகி கொண்டு இருந்தது , நான் அடிகடி எனது வாட்ச் பார்த்துகொண்டு இருந்ததை பார்த்து நண்பர் கார்த்திக் என்ன விஷயம் என்று கேட்டார். மனைவி எனக்காக வெயிட் பண்ணுவ நான் கிளம்பட்டுமா ?? என்றேன். வால் என்னை பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்து விட்டார், பசி வேற வயற்றை கிள்ளியது. எங்கு ஹோட்டல் இருக்கும் என்று காமிக்கிறேன் வாங்க என்றார். இருவரும் நடந்து சென்றோம் பஸ் ஸ்டாண்ட் உள்ளே. நாங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு போலீஸ் பூத் இருந்தது , அங்கே ஒரு இளம் பெண்ணை இரண்டு பெண் போலீஸ்காரர்கள் விசாரித்து கொண்டு இருந்தார்கள். அவர்களை கடந்து சென்ற பிறகு எங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை படித்து பாருங்கள்.

வால் : தல உங்களுக்கு phycology தெரியுமா ??
நான் : ஹ்ம்ம் கொஞ்சம் தெரியும் தல .
வால் : ஒரு பொண்ணு இந்த டைம்ல ரெண்டு போலீஸ்காரங்க விசாரிக்கும் போது வாயில பபுள்கம் மேன்னுடே பதில் சொன்னால் என்ன அர்த்தம்??
நான் : ITEM !!
வால் : ஹா ஹா ஹா " க க க போ"


அவரை சந்தித்தற்கு சாட்சியாக ஒரு புகைப்படம் எடுத்து கொண்டேன், ஆனால் பாருங்க கேமராவை எனது அக்கா வாங்கி சென்றுவிட்டார்.

முதல் சந்திப்பு அருமையாக இருந்தது நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நேரம் தான் எனக்கு இல்லை. இன்னொரு முறை அவரை சந்தித்தால் அந்த குறையை தீர்த்து கொள்ள வேண்டும்.

ஜூனியர் ...


கடந்த 11 தேதி மாலை மகன் பிறந்தான் .

மனைவியை ஆபரேஷன் தியேட்டர்க்குள் அழைத்து சென்றதில் இருந்து எனக்கு பிடித்தது டென்ஷன்.

கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கிறது. நெஞ்சு பட பட என்று அடிக்கிறது. மதியத்தில் இருந்து ஏதும் சாப்பிட பிடிக்கவில்லை.

டென்ஷன் குறைக்க ஒரு தம் அடிக்கலாம் என்று டீ கடை வந்தேன். ஒரு வில்ஸ் தாங்க என்று கேட்கும் போதே எனது உதடுகள் டைப் அடித்தது.

சிகரட் வாங்கும் போது கைகள் கொஞ்சம் நடுங்கியது. அப்படியே ஒரு டீ கொஞ்சம் சக்கரை அதிகமாக போட சொல்லி குடித்தேன்.

ஹாஸ்பிடல் வந்த போது சொந்த பந்தங்கள் என்னை போலவே குழந்தையின் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள்.

நேரம் செல்லவே இல்லை. கடிகாரம் நின்றது போல ஒரு பிரம்மை. கொஞ்ச நேரத்தில் நர்ஸ் சிரித்த முகத்துடன் வந்தார்.

பையன் பிறந்து இருக்கிறான் என்று சொன்ன செய்தி கேட்ட போது சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போனது.

வாழ்த்துக்கள் பல வந்து அடைந்தது கொண்டு இருந்தே தவிர குழந்தையை கண்ணில் காட்டவே இல்லை.

சிறிது நேரத்தில் நர்ஸ் ஒருவர் குழந்தையுடன் வெளியே வந்தார்.. சந்தோஷத்தின் உச்சியில் நின்று கொண்டு இருந்தேன், எனது கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்ததை பொருட்படுத்தாமல் எங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசை கண்கள் இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்தேன்.

கடந்த 9 மாதங்களாக நான் மற்றும் என் மனைவி பட்ட வேதனைகளுக்கும் , சந்தோஷங்களுக்கும் ஒரு வழியாக விடை கிடைத்தது.

" அழகான விடை "


அடுத்து "ப்பா" என்று அவன் சொல்லும் அந்த வார்த்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் .

பிடித்தது & பிடிக்காதது - 10 ***தொடர் விளையாட்டில் நானும்***

மாதவராஜ் இந்த விளையாட்டை ஆரமிக்கும் போது நினைத்தேன் கண்டிப்பா யாரவது ஒருத்தர் நம்மை இந்த ஆட்டதில் சேர்ந்து விளையாட சொல்லுவார்கள் என்று அதே போன்று நண்பர் கார்த்திகேயன் என்னை அழைத்து இருக்கிறார் அவருக்கு நன்றியை சொல்லி விளையாட்டை ஆரமிகிறேன்..


1.இசையமைப்பாளர்

பிடித்தது - இளையராஜா
பிடிக்காதது - எஸ். எ . ராஜ்குமார்.

2. கவிஞர்கள்

பிடித்தது -தபு சங்கர்
பிடிக்காதது - கவிதை என்கிற பெயரில் புரியாத ஒன்றை எழுதும் பின்நவினத்துவ கவிஞர்கள்.

3. சமுக ஆவலர்கள்

பிடித்தது - நம்மாழ்வார்
பிடிக்காதது - சமுக ஆர்வலர் என்கிற போர்வையை போற்றிக்கொண்டு இருக்கும் பல கிரிமினல்கள்.

4.கதாநாயகர்கள்

பிடித்தது - கமல்
பிடிக்காதது - சுண்டு பொண்டு எல்லாம் கதாநாயகன் ஆகா நடிக்கும் படங்கள்.

5.எழுத்தாளர்கள்

பிடித்தது - சாரு
பிடிக்காதது - அனுராதா ரமணன்


6.உணவு

பிடித்தது - அம்மாவின் சமையல்
பிடிக்காதது - துரித உணவு

7.அரசியல்வாதி

பிடித்தது - கலைஞர்
பிடிக்காதது - ஜெயலலிதா

8.இயக்குனர்

பிடித்தது - பாலா
பிடிக்காதது - பேரரசு


9.பதிவர்

பிடித்தது - பரிசல்
பிடிக்காதது - ஏதும் இல்லை

10.இடம்

பிடித்தது - கொடைக்கானல்
பிடிக்காதது - ஊட்டி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த தொடர் விளையாட்டில் பங்கு பெற

நிலாமதி , விக்னேஸ்வரி மற்றும் ரம்யா அலைகிறேன்.


இவங்கள இது முன்னாடி யாரவது கண்டிப்பா அழைத்து இருபார்கள் , அப்படி அழைத்து இருந்தாலும் என்னோட பெயரயும் அதுல சேர்த்துகோங்க ..


இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்


2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்.


3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

திரும்பி பார்கிறேன் - 02/11/09

தொலைகாட்சி பெட்டியால் எத்தனை சோதனைகள் வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒவ்வொருதர் சிந்தனை வெவ்வேறு மாதிரி இருக்கும். அப்பாவிற்கு பிடித்து செய்திகள், அம்மாவிற்கு பிடித்து மெகா தொடர் நாடகங்கள், எனக்கு பிடித்து ஸ்போர்ட்ஸ் ஆனால் வீட்டில் இருப்பதோ ஒரு தொலைகாட்சி பெட்டி. சண்டை சரவுகளுக்கு சொல்ல வேண்டுமா என்ன ?? அதிலும் இரவு 8 மணிக்கும் மேல் தொடர் நாடங்களை ஒரு பகுதி கூட விட்டு விடாமல் எங்க அம்மா பார்ப்பார். இதற்காகவே இரவு சமையல் என்பது 8 மணிக்கு முன்பாகவே முடித்து விடுவார்.


சென்ற வாரம் 7 மணி இருக்கும் டிஸ்கவரி சேனல் தமிழ்லில் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருந்தேன். 8 மணிக்கு ஆபீஸ்க்கு கிளம்ப வேண்டும் என்று குளிக்க சென்றேன், ரிமோட் டிவி அருகாமையில் வைத்து விட்டு சென்றேன். குளித்து முடித்து திரும்ப வந்தால் அம்மா டிஸ்கவரி சேனல் மும்மரமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒரு கணம் என்னை நானே கிள்ளி கொண்டேன், மெகா தொடரில் இருந்து அம்மா மாறினால் சரி என்று ஆபீஸ்க்கு கிளம்பி வந்துவிட்டேன்.


காலையில் வீட்டுக்கு சென்றால் அதே டிஸ்கவரி சேனல். முதல் நாள் பார்த்த WILD DISCOVERY பற்றி அப்பாவும் அம்மாவும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

தொலைகாட்சி எப்படி எல்லாம் நம்மை மாற்றி கொண்டு இருக்கிறது. இப்பொது எல்லாம் எங்கள் வீட்டில் டிஸ்கவரி சேனல் தான் அதிக நேரம் பார்த்து கொண்டு இருக்கிறோம். பயனுள்ள பல விஷயங்களை தமிழில் ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்திற்கு வரும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Signs என்கிற படத்தை போன வாரம் பார்த்தேன். படம் வந்து வெகு நாட்கள் ஆகியும் DVD கிடைக்காததால் பார்க்காமல் இருந்தேன். எதர்ச்சியாக நண்பன் ஒருவன் கேட்ட படம் வாங்க சென்ற இடத்தில Blue Ray Disk கிடைத்தது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது அந்த நிமிடம், வீட்டுக்கு சென்றதும் முதிலில் படத்தை பார்த்தேன் .

Woww. ஒரு Alien படத்தை இவ்வளவு thriller ஆகா பார்த்தது இல்லை. படத்தின் இசை நம்மை செம மிரட்டு மிரட்டி இருக்கிறது. திரைகதையில் இருக்கும் ட்விஸ்ட் எல்லாம் சூப்பர்.

படத்தை பார்த்தவர்கள் அதை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லிடு போங்க, பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க.

ஹாலிவுட்ல அடுத்த Alfred Hitchcock என்று டைரக்டர் மனோஜ் நைட் ஷமலன் தான் என்று கூருவது கொஞ்சம் கூட தப்பு இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- போன வாரம் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது . எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சாருவிடம் கேள்விகள் கேட்ட வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து கொண்டு இருக்கிறது. அவருக்கு சில கடிதங்கள் அனுப்பி உள்ளேன் அதில் இரண்டில் நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார் தனது வலைத்தளத்தில்.படித்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே சொல்லுங்களே .


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்த வாரம் ஒரு மொக்கை ஜோக்


What is the opposite for Cyclotron (சைக்லோட்ட்ரான்) ??
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
Cycleotamatengran (சைக்கிள் ஓட்டமட்டேன்குரன்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இப்ப நான் ஓடுறேன்.....