~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ஜூனியர் ...


கடந்த 11 தேதி மாலை மகன் பிறந்தான் .

மனைவியை ஆபரேஷன் தியேட்டர்க்குள் அழைத்து சென்றதில் இருந்து எனக்கு பிடித்தது டென்ஷன்.

கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கிறது. நெஞ்சு பட பட என்று அடிக்கிறது. மதியத்தில் இருந்து ஏதும் சாப்பிட பிடிக்கவில்லை.

டென்ஷன் குறைக்க ஒரு தம் அடிக்கலாம் என்று டீ கடை வந்தேன். ஒரு வில்ஸ் தாங்க என்று கேட்கும் போதே எனது உதடுகள் டைப் அடித்தது.

சிகரட் வாங்கும் போது கைகள் கொஞ்சம் நடுங்கியது. அப்படியே ஒரு டீ கொஞ்சம் சக்கரை அதிகமாக போட சொல்லி குடித்தேன்.

ஹாஸ்பிடல் வந்த போது சொந்த பந்தங்கள் என்னை போலவே குழந்தையின் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள்.

நேரம் செல்லவே இல்லை. கடிகாரம் நின்றது போல ஒரு பிரம்மை. கொஞ்ச நேரத்தில் நர்ஸ் சிரித்த முகத்துடன் வந்தார்.

பையன் பிறந்து இருக்கிறான் என்று சொன்ன செய்தி கேட்ட போது சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போனது.

வாழ்த்துக்கள் பல வந்து அடைந்தது கொண்டு இருந்தே தவிர குழந்தையை கண்ணில் காட்டவே இல்லை.

சிறிது நேரத்தில் நர்ஸ் ஒருவர் குழந்தையுடன் வெளியே வந்தார்.. சந்தோஷத்தின் உச்சியில் நின்று கொண்டு இருந்தேன், எனது கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்ததை பொருட்படுத்தாமல் எங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசை கண்கள் இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்தேன்.

கடந்த 9 மாதங்களாக நான் மற்றும் என் மனைவி பட்ட வேதனைகளுக்கும் , சந்தோஷங்களுக்கும் ஒரு வழியாக விடை கிடைத்தது.

" அழகான விடை "


அடுத்து "ப்பா" என்று அவன் சொல்லும் அந்த வார்த்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் .

16 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

ரொம்ப நன்றி சந்தனமுல்லை .

ஜூனியர் போஸ்ட்க்கு எத்த படம் போட்டு இருக்கீங்க.

 

ஜீனியர் ரெமோவுக்கு வாழ்த்துக்களும் இந்த ஜாக்கியுன் அன்பும் கனிவும் நிச்சயம்...

 

நன்றி ஜக்கி..

 

அருமை நண்பர் ராஜராஜன்,
மிக்க மகிழ்சியான விஷயம் சொன்னீர்கள், வாழ்த்துக்கள், இனிப்பை நேரில் கொடுக்கணும் சொல்லிட்டேன்.:)))
நல்ல விவரனை, பையன் வளர்ந்ததும் இதை படித்து காட்டி அசத்துங்க.

 

வாழ்த்துக்கள்.

ஜூனியர் வந்தாச்சா, சரி இனி ஆதி மாதிரி பதிவுகளை எதிர் பார்க்கலாம்.

 

அருமை நண்பர் கார்த்திகேயன்க்கு ரொம்ப நன்றி . உங்களை நேரில் சந்திக்கும் போது கண்டிப்பாக இனிப்பு வழங்குகிறேன்.

 

நன்றி தராசு சார்..

நான் இன்னும் ஆதி அளவுக்கு பக்குவப்படவில்லை, எப்பயும் இதே மாதிரி இருக்கவே ஆசை படுகிறேன். பார்க்கலாம் .

 

வாழ்த்துகள் அண்ணே.

ஆமா...இனிமேலும் நீங்க ரோமியோதானா??

:))

 

\\ எம்.எம்.அப்துல்லா said...
வாழ்த்துகள் அண்ணே. // ???


இது கொஞ்சம் ஓவர் தலைவா..

ரோமியோ பாய் என்பது எனது புனைபெயர் , அதை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை .

 

வாழ்த்துக்கள் நண்பரே....93400899899

 

வாழ்த்துக்கள் தோழரே!

 

வாழ்த்துக்கள் நண்பா.

 

\\தண்டோரா ...... said...
வாழ்த்துக்கள் நண்பரே..//


நன்றி தல ..

 

\\வால்பையன் said...
வாழ்த்துக்கள் தோழரே!//

ரொம்ப நன்றி தல , உங்க குவியல்ல முதல் பத்திலையே எழுதியதற்கு

 

\\விக்னேஷ்வரி said...
வாழ்த்துக்கள் நண்பா.//


மிக நன்றி விக்னேஷ்வரி .