~~ROMEO~~

Everyday Starts with Happy :)

பிடித்தது & பிடிக்காதது - 10 ***தொடர் விளையாட்டில் நானும்***

மாதவராஜ் இந்த விளையாட்டை ஆரமிக்கும் போது நினைத்தேன் கண்டிப்பா யாரவது ஒருத்தர் நம்மை இந்த ஆட்டதில் சேர்ந்து விளையாட சொல்லுவார்கள் என்று அதே போன்று நண்பர் கார்த்திகேயன் என்னை அழைத்து இருக்கிறார் அவருக்கு நன்றியை சொல்லி விளையாட்டை ஆரமிகிறேன்..


1.இசையமைப்பாளர்

பிடித்தது - இளையராஜா
பிடிக்காதது - எஸ். எ . ராஜ்குமார்.

2. கவிஞர்கள்

பிடித்தது -தபு சங்கர்
பிடிக்காதது - கவிதை என்கிற பெயரில் புரியாத ஒன்றை எழுதும் பின்நவினத்துவ கவிஞர்கள்.

3. சமுக ஆவலர்கள்

பிடித்தது - நம்மாழ்வார்
பிடிக்காதது - சமுக ஆர்வலர் என்கிற போர்வையை போற்றிக்கொண்டு இருக்கும் பல கிரிமினல்கள்.

4.கதாநாயகர்கள்

பிடித்தது - கமல்
பிடிக்காதது - சுண்டு பொண்டு எல்லாம் கதாநாயகன் ஆகா நடிக்கும் படங்கள்.

5.எழுத்தாளர்கள்

பிடித்தது - சாரு
பிடிக்காதது - அனுராதா ரமணன்


6.உணவு

பிடித்தது - அம்மாவின் சமையல்
பிடிக்காதது - துரித உணவு

7.அரசியல்வாதி

பிடித்தது - கலைஞர்
பிடிக்காதது - ஜெயலலிதா

8.இயக்குனர்

பிடித்தது - பாலா
பிடிக்காதது - பேரரசு


9.பதிவர்

பிடித்தது - பரிசல்
பிடிக்காதது - ஏதும் இல்லை

10.இடம்

பிடித்தது - கொடைக்கானல்
பிடிக்காதது - ஊட்டி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த தொடர் விளையாட்டில் பங்கு பெற

நிலாமதி , விக்னேஸ்வரி மற்றும் ரம்யா அலைகிறேன்.


இவங்கள இது முன்னாடி யாரவது கண்டிப்பா அழைத்து இருபார்கள் , அப்படி அழைத்து இருந்தாலும் என்னோட பெயரயும் அதுல சேர்த்துகோங்க ..


இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருத்தல் வேண்டும்


2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்.


3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

8 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

பேரரசு எனக்கும் பிடிக்காது :)

 

தங்கள் வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி .. நீங்களும் இதை தொடரலாமே .

 

நண்பா என்னயும் மாட்டி விடீங்க்களா? இரண்டொரு நாட்கள் தரவும் .
முயற்சிக்கிறேன்.

 

மாட்டி விட்டுடீங்க எழுதிடுவோம்லே!

 

கவிதை என்கிற பெயரில் புரியாத ஒன்றை எழுதும் பின்நவினத்துவ கவிஞர்கள். //
அதே தான்.

என்ன, சாருவைப் பிடிக்குமா........ நீங்க தியாகிங்க.

ஊட்டி ஏங்க பிடிக்காது. எவ்ளோ நல்ல இடம்...

தங்கள் அழைப்பிற்கு நன்றி.

 

அருமை நண்பர் ராஜராஜன்
உங்க பதிவு என் டாஷ்போர்டிலேயெ வரவில்லை, ஒருவழியாக உங்க பதிவின் சுட்டியை என் பதிவிலேயே இணைத்துவிட்டேன்,இனி பதிவு போட்டதும் வருவோம்ல, எப்புடி?


நல்ல பிடித்தவை, பிடிக்காதவை
கொஞ்சம் டீடெய்லாக சொல்லியிருக்கலாம். ஓக்கே,ஊர்ல மீட் பண்ணுறோம்.
இந்த ஓட்டுப்பட்டைகளை உடனே நிறுவவும். ஓட்டு போட வசதியா இருக்கும். என்ன நான் சொல்லுரது?

 

தமிழக மக்களை அறியாமையில் வைத்துக்கொண்டு தனது குடும்பத்துக்காக கொள்ளையடித்துக்கொண்டு வரும் கலைஞரை தங்களுக்கு பிடித்திருப்பதில் உங்கள் குறுகிய கண்ணோட்டத்தை சந்தேகப்பட வைக்கிறது.

 

திரு அனானி அவர்களே,

எங்களது திராவிட குடும்பம், சிறு வயது முதலே கலைஞர் படம் தான் எங்கள் வீட்டில் நுழையும் போது எதிர் படும்.

அதனாலவோ என்னவோ எனக்கு அவரை பிடித்தது.