~~ROMEO~~

Everyday Starts with Happy :)

நான் என் வரலாறு கூறுதல்

நண்பர் பரிசல்காரன் என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறார். உண்மையா இது எனக்கு கிடைத்த முதல் மரியாதையை என்றே சொல்லுவேன்..


என்னோட வலைபக்கத்தை அதிகம் பேர் படிக்கிறது இல்லன்னு நினைச்சிட்டு இருக்கும் போது இப்படி ஒருத்தர் அழைக்கிறார் என்றால் என்னையும் இந்த ஏரியா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோசமா இருக்கு . இது என்னுடைய முதல் தொடர் பதிவு அதும் என்னோட வரலாறு கூறுதல் கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு தான் எழுதுறேன் படிச்சி பார்த்து நல்ல இருந்த வாழ்த்திட்டு போங்க ராசா / ராசாத்தி ..


ரைட் மேட்டர்க்கு போலாம் ..

"நீ எதுவாக ஆகவேண்டும் என்று நினைகிறயோ அதுவாகவே நீ ஆகிறாய்"

இதை எங்கயோ படித்தேன், படித்த உடனே மனதில் பசையாக ஒட்டி கொண்டது. ஆனா இந்த பழமொழியோ இல்ல தத்துவமோ எனக்கு அப்படியே உல்டாவா நடக்குது .


சின்ன வயசுல எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் தான் ஒரு பெரிய ஆள் ஆகா வேண்டும், நமது கண் முன்னாடி ஒருத்தரை பற்றி பெருமையாக பேசும் போது அவர் மாதுரி ஆகா வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதே போன்று தான் நான் எங்கள் வீட்டு அருகில் வசித்த ஒரு மலையாளி அங்கிள் மாதுரி ஒரு கேத்தானா ஆளா இருக்கனும், எல்லோரும் அவரை மரியாதையாக பார்க்கும் பார்வை என்மீதும் பட வேண்டும் என்றே தோன்றியது.

ஸ்கூல்க்கு போகவே பிடிக்காது, அதும் எனக்கு பாடம் சொல்லி குடுத்த வாத்தியார் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவங்க என்றே சொல்லுவேன்.

பின்ன என் மண்டைல கணக்கு என்கிற பாடமே ஏறாத ஒன்று, எதுல பாஸ் ஆகிறேனோ இல்லையோ கணக்குல பெயில் ஆகிடுவேன். வாங்காத திட்டு , அடி இல்ல ஸ்கூல்ல மட்டும் இல்ல டியூஷன்ல, அப்பா அம்மா கிட்ட எல்லாம் நல்லா வங்கி இருக்கேன். அப்படி இப்படின்னு பத்தாவது பொது தேர்வு எல்லோரும் படிச்சிட்டு இருக்கும் போது நான் எங்கையாவது வினாதாள் கிடைக்குமா என்று தேடிட்டு இருந்தேன். வேறு ஒரு ஸ்கூல்ல இருந்த பரிச்சை எழுத வந்த ஒரு பெண் செய்த உதவியால் கணக்கில் 55 மார்க் எடுத்தேன். பேப்பர்ல என்னோட நம்பர் பார்த்து நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

இனி இந்த ஸ்கூல்ல படிக்க கூடது என்ற முடிவுக்கு வந்து பாடாவதியான ஒரு ஸ்கூல்ல சேர்ந்தேன். என்னுடைய நண்பர்கள் வட்டம் இங்கு இருந்து தான் ஆரமித்தது கூடவே காதலும். 16 வயதில் எல்லோருக்கும் ஏற்படும் ஒரு வித ஈர்ப்பு என்னை ஒருத்திடம் கொண்டு சென்றது, படிப்பதில் கோட்டை விட ஆரம்பித்ததும் இங்கே தான் . காதல் கண்ணை மட்டும் அல்ல படிப்பை கூட மறைக்கும் என்று நான் பதினோராம் வகுப்பில் பெயில் ஆனா பிறகுதான் தெரிந்தது .

அடுத்தது என்ன ?? ஒண்ணும் புரியல ஆனா எதாவது பண்ணலாம் என்று நினைப்பு மட்டும் இருந்தது. என்னை கோயம்புத்தூர்க்கு பார்சல் பண்ணுவதில் வீட்டில் மும்மரமா இருந்தார்கள், அக்கா வீட்டில் அடைக்கலம் பதினோனவது தானே பெயில் பத்தாவது பாஸ்ல அப்ப டிப்ளோமா சேரலாம் என்று கூட்டு சேர்ந்து கும்மி அடித்தோம்.
எல்லோரும் கம்ப்யூட்டர் எடுக்க சொன்னார்கள் நான் தான் எதாவது வித்தியாசமா படிக்கலாம் என்று லெதர் டெக்னாலஜி சேர்ந்தேன். எந்த எடத்துக்கு போனாலும் சனி கூடவே வருதுன்னு சொல்லுவாங்களே அதே மாதுரி முதலாம் ஆண்டு கணக்கு அதும் எப்படி கணக்கு 1 மற்றும் கணக்கு 2. அத பார்க்கும் போதே தெரிந்துவிட்டது இந்த ஆண்டு கண்டிபாக அரியர் என்று, அதே மாதுரிதான் அரியர். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது திண்டுக்கல் காலேஜ்ல இருந்து சில நண்பர்கள் எங்களுடன் படிக்க வந்தார்கள். நாங்கள் தான் அந்த காலேஜ்ல படிச்சா கடைசி லெதர் பசங்க, எங்களுக்கு பிறகு யாரும் அந்த பாட பிரிவை எடுக்க வரவில்லை .

படிச்சு முடிச்சு சென்னைல ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன், 12 மணிநேர வேலை சம்பளம் என்று சொல்லி கொள்ளும் படி ஏதும் இல்லை. போதும் இந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்தேன். இந்த தடவையும் என்ன பண்ண போறேன் என்று தெரியவில்லை, எதாவது பண்ணல்லாம் என்று திரும்ப கோயம்புத்தூர் சென்றேன். மாமாவின் உறவினர் ஒருவர் திருப்பூரில் இருந்தார் அவருக்கு தெரிந்த ஆடிட்டர் ஒருத்தரிடம் கொஞ்ச நாட்கள் வேலைக்கு சேர்த்துவிட்டார் அங்கு சம்பளம் இல்லை, ட்ரைன் பாஸ் மட்டும் எடுத்து குடுத்தார்.

தினமும் சைக்கிள்ல 5 கிலோ மீட்டர் மேதிச்சு ரயில்வே ஸ்டேஷன் போகணும் அங்க இருந்து ட்ரைன் திருப்பூர் வரை. கொஞ்ச நாட்கள் மட்டுமே சென்றேன் அதும் ஒண்ணும் உருப்படியாக செட் ஆகாவில்லை. அந்த வேலையில் இருந்து விலகிவிட்டேன். அடுத்தது என்ன ??? ஒண்ணும் தெரியல, புரியல ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மனதில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தது. ஒரு துணி கடையில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்தேன் அதும் இரண்டு மாதம் மட்டுமே. அதற்கு பிறகு வீட்டில் இருந்தவர்கள் பேச்சுக்கு ஆளானேன், கையில் பைசா இல்ல காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் தான் என்னோட பொழுதுபோக்கு இடம்.

டவுன் பஸ் ஸ்டாண்ட் கொஞ்ச நேரம் , மப்சில் பஸ் ஸ்டாண்ட் கொஞ்ச நேரம் என்று சிறிது நாட்கள் சென்றது. ஒரு நாள் பஸ் ஸ்டாண்ட்ல உட்காரும் போது ஒரு அன்பர் பேச்சு குடுத்தார், போஸ்டர் ஓட்டுறவர். நான் சில நாட்கள் அங்கு அலைந்து இருந்த நாட்களில் அவரை பார்த்து இருக்கிறேன், என்னை பற்றி தெரிந்து கொண்டவர் 100 ருபாய் குடுக்கிறேன் ஒரு வேலை செய்வியா என்று கேட்டார். வேலை சுலபம் தான் ரோடுல நடந்து போறவங்க கிட்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டர் நோட்டீஸ் குடுக்கணும். 1000 நோட்டீஸ் ஒரு நாள் முழுக்க கால் கடுக்க RS புறம் ஏரியால குடுத்தேன் , இரண்டு நாட்களுக்கு பசி ஆறியது.


நண்பன் வேல்முருகன் தினமலர் பேப்பர்ல வந்த ஒரு விளம்பரத்தை காட்டினான் ஆனால் நேர்முக தேர்வுக்கு செல்வதற்கு கூட கையில் காசு இல்லை. சுரேஷ் என்னோட மிக நெருங்கிய நண்பன். காலை 7 மணிக்கும் அவன் வேலைக்கு போகும் வழியில் நிறுத்தி 10 ருபாய் வாங்கி கொண்டு சென்றேன். இந்த நிகழ்ச்சி மனதை விட்டு அகலவே மாட்டேன்கிறது. எனது நிலைமை பிச்சைகாரன் போல ஆகி விட்டதை என்று நினைத்து அழுத நாட்கள் அவை. வேலை கிடைத்துவிட்டது இதும் ஊர் சுத்துற வேலை தான் ஆனால் சந்தோசமா செய்தேன். கூடவே பகுதி நேர வேலையாக ஒரு இன்டர்நெட் சென்டர்ல வேலை. காலை 7 மணிக்கும் வீட்டில் இருந்து கிளம்பினால் இரவு 11 மணிக்கும் தான் தூங்க போவேன்.

முழு நேர வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு பகுதி நேர வேலையை முழு நேரமாக ஆக்கி கொண்டேன். கையில் கொஞ்சம் காசு புரள ஆரமித்தது கூடவே பெண் நம்பிகளும் , அவள் பெயர் வேண்டாம் ஆனால் பார்த்த உடன் பக் என்று பற்றிகொள்ளும் வசிகரம் அவளிடம் இருந்தது. அவளே காதலை சொன்னாள் 2 வருடங்கள் செல்லாத இடம் இல்லை, பார்க்காத படம் இல்லை , சாப்பிடாத ஹோட்டல் இல்லை ரொம்ப சந்தோசமாக கழிந்த நாட்கள் அவை .

8 வருடங்கள் கொஞ்சம் கஷ்டம், நிறைய சந்தோசம் என்று கழித்த கோவையை விட்டு சென்னைக்கு கிளம்பினேன். நான் எந்த துறைக்கு போக கூடாது என்று நினைத்தேனோ அந்த துறையில் வேலை தேடி வந்தேன். கம்ப்யூட்டர் பற்றி ஒண்ணும் தெரியாமல் பிறகு கொஞ்சம் கற்று கொண்டு இப்பொது IT Technical support என்கிற போஸ்டிங்ல வேலை செய்யுறேன், (அதான் முதலே சொன்னேன்ல நான் நெனைச்சது நடக்காது எல்லாமே உல்ட்டாவா நடக்கும் என்று) சென்னை வந்து 2 மாதங்கள் நான் நடக்காத இடமே கிடையாது, முக்கால் வாசி நடந்தே போவேன் வேர்வை ஆறாக ஓடும், கால்கள் தளர்ந்து உட்கார இடம் தேடும் இருந்தாலும் நடை பயணமே செய்தேன். ஏன் இந்த நடை பயணம் என்றால் ஒரே காரணம் கையில் காசு இல்லை. இதற்கு பலனாக ஒரு கம்பெனில நான் எதிர் பார்த்த வேலை கிடைத்தது . வேலைக்கு சேர்ந்த பிறகு காதலி என்னை ஏமாற்றிவிட்டாள், அவள் என்னிடம் கேட்ட கேள்வி இது தான் " 4000 ரூபாய் சம்பளத்தில் இருக்குற உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எதுக்கு கஷ்ட படணும் ?? எங்க அப்பா எனக்கு பார்த்து இருக்குற மாப்பிள்ளைக்கு 2 பனியன் கம்பெனி இருக்கு, அதனால் நான் அவனை கல்யாணம் பணிக்க போறேன்" என்றாள் . அப்போது தான் தெரிந்தது காசு காதலை கூட பிரிக்கும் என்று.

மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது அதே கம்பெனி , அதே வேலை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன்.

கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது நவம்பர் மாதம் பையனோ இல்லை பெண்ணோ பிறக்க போகிறான். வாழ்கையின் அடுத்த கட்டத்துக்கு கிளம்பிவிட்டேன்.

கஷ்டங்கள் , சந்தோசங்கள் என்று இதுவரை சரிசமமாக வாழ்கை சென்று கொண்டு இருக்கிறது. என்னை முதலில் பார்க்கும் நிறைய பேர் உங்களை எங்கயோ பார்த்தா மாதுரி இருக்கே என்று சொல்லாமல் இருந்தது இல்லை கொஞ்சம் தெரிந்த முக அமைப்பு என்னுடையது.

சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது எல்லாதையும் சொல்ல வேண்டுமா என்றும் நினைக்க தோன்றுகிறது.


ஒவ்வொரு முறை நான் கொஞ்சம் சறுக்கும் போதும் எனக்குள் இந்த பழமொழி சொல்லி கொள்வேன் " இதுவும் கடந்து போகும்" ..

படித்து முடித்த புத்தகம் - இரண்டாம் உலக போர்

இரண்டாம் உலக போர்


தினமும் மின்சார ரயில்யில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்வதால் எதாவது உருப்படியா படிக்கலாம் என்று வார வரம் வரும் வெகு ஜென மற்றும் கிரைம் பத்திரிகை பதிலாக கொஞ்சம் பெரிய புத்தகம் வாங்கலாம் என்று தான் கிழக்கு பதிபகம் வெளியீடான இரண்டாம் உலக போர் புத்தகதை வாங்கினேன். புத்தகத்தோட அட்டையில் போர் வீரர்கள் முன்னேறி செல்வதை கருப்பு வெள்ளை புகைப்படத்தின் முலம் போட்டு விடு ஒரு வித எதிர்பார்பை உண்டாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்..

ஆசிரியர் மருதன் ரொம்ப சுவாரசியமாக எழுதி உள்ளார். இது வரை முன்று முறை அதை படித்துவிட்டேன், புத்தகம் ஆரமிக்கும் முதல் பக்கத்தில் ஹிட்லர்ரின் இறந்த செய்தி வெளியான ஒரு நாளிதழ் முகப்பை போட்டு இந்த புத்தகத்தின் ஹீரோ இவர் தான் என்று சொல்லாமல் சொல்லி இருகிறார்கள் ..
உண்மையும் அதுவே !!

முதலாம் உலக போர் ஏன் நடந்தது .. அதற்கு பிறகு என்ன நடந்தது என்று விரிவாக சொல்லிய பிறகே இரண்டாம் உலக போர் தொடக்கம் ஆரமிகிறது . முதலாம் உலக போருக்கு பிறகு ஜெர்மன் நாட்டை ஹிட்லர் எப்படி எல்லாம் தயார் படுத்திகொண்டு இரண்டாம் உலக போருக்கு ஆய்தம் ஆனார் என்பதை விரிவாக சுவாரசியம் குறையாமல் எழுதி உள்ளார் .. ஹிட்லர்ரை பார்த்து பயந்த நாடுகள் வருசையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டின் நாடுகள் எல்லாம் வருவது அவரை உலகின் முக்கியமான நபர் என்று எடுத்து காட்டிவிடுகிறது.

ஹிட்லர் எப்படி எல்லாம் ஜெர்மன் நாட்டை நேசித்தார், அதே சமயம் ஏன் யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் வெறுத்தார் என்று கொஞ்சம் தொட்டு செல்கிறது.

ஹிட்லர் உடன் கூட்டு சேர்ந்த இத்தாலி அதிபர் முசோலி ஆடிய ஆடம் பிறகு அவரின் வீழ்ச்சி என்று இன்னொரு சர்வதிகாரி பற்றியும் கூருகிறார்.


ஆச்சு நாடுகளை எதிர்த்து நேச நாடுகள் நடத்திய எதிர் போர், அவைகளை ஹிட்லர் எப்படி எல்லாம் சமாளித்தார் பின்பு எப்படி வீழ்ந்தார் என்று அழகாக விவரித்து உள்ளார்.

யூதர்களை ஹிட்லரின் நாஜி படைகள் எவ்வாறு கொடுமை படுத்தியது , அவர்களை எப்படி எல்லாம் கொன்றார்கள் , அவர்களின் கொலை முகாம் பற்றி படிக்கும் போது ஹிட்லர் எவ்வளவு கொடுமைகாரர் என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஸ்டாலின் தனது படைகளை எப்படி எல்லாம் வழி அமைத்து வெற்றி கண்டார்,

அமெரிக்க ஜப்பான் மீது வீசிய அணுகுண்டு அதை எங்கு எப்படி வீசினார்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது ..

புத்தகதில் சென்னையில் ஜெர்மன் நாடு வீசிய எம்டன் குண்டு பற்றி சொல்லாதது ஒரு குறை. ஆசிரியர் இதை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது மிகவும் எதிர்பார்த்த ஒரு பகுதி இது .

குறைகள் என்று சொல்லுவதற்கு கொஞ்சமே இருக்கிறது .. இருந்தாலும் படிக்க படிக்க சுவாரசியமாக , உலகத்தில் நடந்த முக்கிய நிகழ்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் இது .


எனது நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக தரவே நான் விரும்புகிறேன்.

புத்தகம் கிடைக்கும் இடம்

இரண்டாம் உலக போர்
ISBN 978-81-8493-141-9
ஆசிரியர்: மருதன்
விலை: Rs.150
கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Private Limited
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018,
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701