~~ROMEO~~

Everyday Starts with Happy :)

படித்து முடித்த புத்தகம் - இரண்டாம் உலக போர்

இரண்டாம் உலக போர்


தினமும் மின்சார ரயில்யில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்வதால் எதாவது உருப்படியா படிக்கலாம் என்று வார வரம் வரும் வெகு ஜென மற்றும் கிரைம் பத்திரிகை பதிலாக கொஞ்சம் பெரிய புத்தகம் வாங்கலாம் என்று தான் கிழக்கு பதிபகம் வெளியீடான இரண்டாம் உலக போர் புத்தகதை வாங்கினேன். புத்தகத்தோட அட்டையில் போர் வீரர்கள் முன்னேறி செல்வதை கருப்பு வெள்ளை புகைப்படத்தின் முலம் போட்டு விடு ஒரு வித எதிர்பார்பை உண்டாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்..

ஆசிரியர் மருதன் ரொம்ப சுவாரசியமாக எழுதி உள்ளார். இது வரை முன்று முறை அதை படித்துவிட்டேன், புத்தகம் ஆரமிக்கும் முதல் பக்கத்தில் ஹிட்லர்ரின் இறந்த செய்தி வெளியான ஒரு நாளிதழ் முகப்பை போட்டு இந்த புத்தகத்தின் ஹீரோ இவர் தான் என்று சொல்லாமல் சொல்லி இருகிறார்கள் ..
உண்மையும் அதுவே !!

முதலாம் உலக போர் ஏன் நடந்தது .. அதற்கு பிறகு என்ன நடந்தது என்று விரிவாக சொல்லிய பிறகே இரண்டாம் உலக போர் தொடக்கம் ஆரமிகிறது . முதலாம் உலக போருக்கு பிறகு ஜெர்மன் நாட்டை ஹிட்லர் எப்படி எல்லாம் தயார் படுத்திகொண்டு இரண்டாம் உலக போருக்கு ஆய்தம் ஆனார் என்பதை விரிவாக சுவாரசியம் குறையாமல் எழுதி உள்ளார் .. ஹிட்லர்ரை பார்த்து பயந்த நாடுகள் வருசையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டின் நாடுகள் எல்லாம் வருவது அவரை உலகின் முக்கியமான நபர் என்று எடுத்து காட்டிவிடுகிறது.

ஹிட்லர் எப்படி எல்லாம் ஜெர்மன் நாட்டை நேசித்தார், அதே சமயம் ஏன் யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் வெறுத்தார் என்று கொஞ்சம் தொட்டு செல்கிறது.

ஹிட்லர் உடன் கூட்டு சேர்ந்த இத்தாலி அதிபர் முசோலி ஆடிய ஆடம் பிறகு அவரின் வீழ்ச்சி என்று இன்னொரு சர்வதிகாரி பற்றியும் கூருகிறார்.


ஆச்சு நாடுகளை எதிர்த்து நேச நாடுகள் நடத்திய எதிர் போர், அவைகளை ஹிட்லர் எப்படி எல்லாம் சமாளித்தார் பின்பு எப்படி வீழ்ந்தார் என்று அழகாக விவரித்து உள்ளார்.

யூதர்களை ஹிட்லரின் நாஜி படைகள் எவ்வாறு கொடுமை படுத்தியது , அவர்களை எப்படி எல்லாம் கொன்றார்கள் , அவர்களின் கொலை முகாம் பற்றி படிக்கும் போது ஹிட்லர் எவ்வளவு கொடுமைகாரர் என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஸ்டாலின் தனது படைகளை எப்படி எல்லாம் வழி அமைத்து வெற்றி கண்டார்,

அமெரிக்க ஜப்பான் மீது வீசிய அணுகுண்டு அதை எங்கு எப்படி வீசினார்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது ..

புத்தகதில் சென்னையில் ஜெர்மன் நாடு வீசிய எம்டன் குண்டு பற்றி சொல்லாதது ஒரு குறை. ஆசிரியர் இதை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது மிகவும் எதிர்பார்த்த ஒரு பகுதி இது .

குறைகள் என்று சொல்லுவதற்கு கொஞ்சமே இருக்கிறது .. இருந்தாலும் படிக்க படிக்க சுவாரசியமாக , உலகத்தில் நடந்த முக்கிய நிகழ்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் இது .


எனது நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக தரவே நான் விரும்புகிறேன்.

புத்தகம் கிடைக்கும் இடம்

இரண்டாம் உலக போர்
ISBN 978-81-8493-141-9
ஆசிரியர்: மருதன்
விலை: Rs.150
கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Private Limited
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018,
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701

5 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

வரலாறு படிப்பதில் எனக்கும் மிகுந்த ஆர்வம் உண்டு. தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

 

நன்றி ராபின் . எனக்கும் வரலாறு படிப்பதில் மிகவும் பிடிக்கும் ..

அதும் Biography படிக்கிறது என்பதே மிக சுவரசயமான ஒன்று ..

இதுவரைக்கும் நிறைய படித்துவிட்டேன் இனி வரும் பதிவுகளில் அதை பற்றி எழுதலாம் என்று உள்ளேன். உங்கள் வருகைக்கு நன்றி திரும்ப வரவும் ..

 

ராஜ்..

இன்னைக்கு ஒரு பதிவெழுதி அதைத் தொடர உங்களைக் கூப்டிருக்கேன். எழுதுங்க...

 

நன்றி பரிசல் .. இதோ எழுத ஆரமித்துவிட்டேன்..

 

நல்ல தீனி போல!

உடனே வாங்கிட வேண்டியது தான்!