~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அட பார் ரா... லுக் - 4

அட பார் ரா ஆளு என்னமோ மைனர் மாதுரி கிளம்பிட்டன் .. கணேஷ் பார்த்து குமார் கிண்டலடித்தான் ..

ஹி என்று பல்லை இளித்தான் கணேஷ் .. "பின்ன இருக்காதா மச்சி நேத்து ஆசை தீர அடிச்சு அவனுகள ஒருத்தன சச்சிடோம்ல அந்த சந்தோசம் தான்" என்றேன். "நீ சொல்லுறது சரி தான் டா மச்சி, காலைல நம்ம ரூம்க்கு போனேன் பயங்க எல்லாம் இழுத்து போர்த்திடு தூங்கிட்டு இருக்காங்க நைசா போய் டிரஸ் எடுத்து வரலாம்ன்னு போனா பரணி பையன் எழுந்துட்டன் , எங்கடா நைட் உங்கள காணோமே எங்க போய் இருந்திங்கன்னு கேட்டான். நேத்து ரமேஷ் ரூம்ல யாரும் இல்ல அதனால நாங்க அங்க படுத்துடோம்ன்னு சொல்லிட்டேன் , ஆனா அவன் ஏதோ யோசனையா கேட்டான் கொஞ்சம் உசாரா இருக்கனும் டா"

"ஆமா டா நாம நைட் எங்க இருந்தோம்ன்னு யாரு கேட்டாலும் ரமேஷ் ரூம்ல தான் இருந்தோம்ன்னு சத்தியம் பண்ணி சொல்லணும், எவனும் மதி கித்தி சொல்லிடாதிங்க" என்று எச்சரிக்கை பண்ணினான் குமார் ..

"டேய் இங்க நாம இவ்வளவு சீரியஸ் மேட்டர் பேசிட்டு இருக்கோம் இவன பாரு முக்காடு போட்டுக்கிட்டு இப்படி தூங்கிட்டு" என்று ரமேஷ் போர்வையை இழுத்தேன் + அதிர்ச்சியில் உறைந்தேன் ... பய புள்ள ஜட்டிய கூட போடாம படுத்துட்டு இருக்கான் .. கருமம் புடிச்சவன் .. "டேய் என்னடா கோலம் இது லுங்கி எல்லாம் அவுந்து இருக்குறது கூட தெரியமா தூங்கிட்டு இருக்குற எழுந்துரா முதல" கொஞ்ச நேரத்தில் ஷகிலா மாதுரி லுங்கியை மார்பு வரை கட்டி கொண்டு எழுந்து வந்தான்,
கணேஷ் பார்த்து " என்ன மச்சி ரொம்ப சந்தோசமா இருக்குர போல இன்னைக்கு நைட் பார்ட்டி வைச்சிடு டா " என்று இப்பவே தண்ணி அடிச்சவன் போல ஒரு லுக் விட்டுட்டு சென்றான் ..
பாத்ரூம் போனவன் போன வேகத்தில் ஓடி வந்தான் .. டேய் என்னோட செயின் காணோம் டா " என்ற குண்டை தூக்கி போட்டன் .. என்னடா சொல்லுற நல்ல தேடி பாரு என்று ரூம் முழுக்க தேடி பார்தோம் ஓண்ணும் அக படவில்லை,
"என்னகு என்னமோ செயின் அந்த புதருகுள்ள தான் இருக்கும், டேய் அந்த செயின் என்னோட அப்பா ஆசையா வாங்கி குடுத்தாங்கடா. அதும் இல்லாம அந்த செயின் காலேஜ்ல இருக்குற எல்லோருக்கும் தெரியும்டா அத காணோமே" என்று புலம்பி அழுதான் .

"சரி மச்சி புலம்பாத நான் அங்க போய் பார்த்துட்டு வரேன்" என்று குமார் கிளம்பினான் நானும் வரேன் என்று அவனுடன் சென்றேன். நாங்கள் அந்த இடத்தை தொலைவில் இருந்தே நோட்டம்விட்டோம், இரவில் அந்த ஏரியா இருந்த மாதுரி இல்லை இப்பொது. ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது. நாங்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு குடிசை இருந்தது. , ரமேஷ் செயின் சீனியர் பசங்க கிட்ட கிடைச்சா அவள்ளவு தான். அதும் அவன் போட்டு இருந்த செயின்ல இருக்குற விநாயகர் படம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். யானை முடியில் விநாயகர் உருவம் செய்து இருபார்கள்.

சீனியர் ரூம்க்கு முன்பாக கொஞ்சம் கும்பல் இருந்தது, உத்து பார்ததில் எல்லாம் எங்க காலேஜ் பசங்க போல இருந்தாங்க. இந்த கும்பலில் சேராமல் எங்க கிளாஸ்மேட் பசங்க ரெண்டு பேரு ஓரமா நின்னுட்டு இருந்தாங்க. அவனுக அப்பாஸ் என்கிற சீனியர் ஸ்டுடென்ட் தம்பி மற்றும் அவன் சொந்தகார பையன். இப்போ அங்க போறதா வேண்டாமா என்று தெரியவில்லை "டேய் முர்த்தி அங்க பாரு முஸ்தபா அப்பறம் இலியாஸ் நிக்குறாங்க , நாம இங்கயே நின்னுட்டு இருக்குது நல்லா இல்ல. எவனாவது சந்தேகம் வந்துட போகுது ஒன்னு இங்க இருந்து உடனே கிளம்பனும் இல்ல அங்க போய் எட்டி பார்த்துட்டு வந்துடலாம்" என்றான் குமார் "சரி வாடா போகலாம்" என்று கிளம்பினோம் . டேய் சாதரணமா வா, முஞ்சில பயத்த கொண்டு வராத என்று எச்சரித்தான். கொஞ்சம் சீரியஸ் ஆக முகத்தை வைத்து கொண்டேன். என்ன தான் முகம் சீரியஸ்சா இருந்தாலும் மனதுக்குள் பயம் ஓவர்ரா இருந்துச்சு.

அவர்கள் ரூம்க்கு பக்கத்தில் சென்றோம், சீனியர் பையன் ஒருத்தன் எங்களை பார்த்து அவன் பக்கத்தில் வர சொன்னான். பயந்த மாதுரியே சென்றோம், எனக்கு பயம் அதிகமாக இருந்தது .

"எங்கட இங்க வந்திங்க" என்று அவன் கேட்க, என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தேன்.

சட்டேனே குமார் முந்திகொண்டு "அண்ணே அந்த சைடுல போயிட்டு இருந்தோம் உங்க ரூம் கிட்ட கூட்டமா இருந்துச்சு அதான் என்ன எதுன்னு பார்க்கலாம்ன்னு வந்தோம்" என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் பதில் கூறினான்.

"என்னனே எதாவது பிரச்சனையா" ?

"ஆமாடா நம்ம காலேஜ்ல எங்களுக்கு சூப்பர் சீனியர் இருந்த ஒருத்தர் அர்ரியர் பேப்பர் எழுத வந்து இருக்காரு, வந்தவரு எங்களுக்கு எல்லாம் தண்ணிய வாங்கி குடுத்தாரு. தண்ணிய போடுட்டு நாங்க எல்லாம் மட்டை ஆகிடோம், நைட் இவரு பாத் ரூம் போறதுக்கு போய் இருகாரு , அந்த நேரத்துல எவனோ களவாணி பையங்க இவர துக்கிட்டு போய் எதாவது பணம் செயின் இருக்குமான்னு பார்த்து இருந்து இருக்காங்க , ஒண்ணும் தேரலைன்னு நாலு சாது சாத்தி கயறு எடுத்து கை , கால் கட்டி வாசல போடுட்டு போய்டாங்க , அடிச்சது யாருன்னு தெரியல அந்த அளவுக்கு இவரும் போதைல இருந்து இருகாரு ".

அவன் அடுத்து சொன்னதை கேட்ட பிறகுதான் எங்களுக்கு பயம் அதிகம் ஆகியது. போலீஸ்க்கு சொல்லலாம் என்று முடிவு பண்ணி இருகிறார்கள் .
அடி வாங்கினவன் முகத்தை பார்க்கலாம் என்று அந்த கும்பலில் எட்டி பார்த்தோம்,

ஐயோ இவனா என்று மனம் முழுவதும் அலறியது!!!!! ...