~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ஜூனியர் ...


கடந்த 11 தேதி மாலை மகன் பிறந்தான் .

மனைவியை ஆபரேஷன் தியேட்டர்க்குள் அழைத்து சென்றதில் இருந்து எனக்கு பிடித்தது டென்ஷன்.

கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கிறது. நெஞ்சு பட பட என்று அடிக்கிறது. மதியத்தில் இருந்து ஏதும் சாப்பிட பிடிக்கவில்லை.

டென்ஷன் குறைக்க ஒரு தம் அடிக்கலாம் என்று டீ கடை வந்தேன். ஒரு வில்ஸ் தாங்க என்று கேட்கும் போதே எனது உதடுகள் டைப் அடித்தது.

சிகரட் வாங்கும் போது கைகள் கொஞ்சம் நடுங்கியது. அப்படியே ஒரு டீ கொஞ்சம் சக்கரை அதிகமாக போட சொல்லி குடித்தேன்.

ஹாஸ்பிடல் வந்த போது சொந்த பந்தங்கள் என்னை போலவே குழந்தையின் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள்.

நேரம் செல்லவே இல்லை. கடிகாரம் நின்றது போல ஒரு பிரம்மை. கொஞ்ச நேரத்தில் நர்ஸ் சிரித்த முகத்துடன் வந்தார்.

பையன் பிறந்து இருக்கிறான் என்று சொன்ன செய்தி கேட்ட போது சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போனது.

வாழ்த்துக்கள் பல வந்து அடைந்தது கொண்டு இருந்தே தவிர குழந்தையை கண்ணில் காட்டவே இல்லை.

சிறிது நேரத்தில் நர்ஸ் ஒருவர் குழந்தையுடன் வெளியே வந்தார்.. சந்தோஷத்தின் உச்சியில் நின்று கொண்டு இருந்தேன், எனது கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்ததை பொருட்படுத்தாமல் எங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசை கண்கள் இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்தேன்.

கடந்த 9 மாதங்களாக நான் மற்றும் என் மனைவி பட்ட வேதனைகளுக்கும் , சந்தோஷங்களுக்கும் ஒரு வழியாக விடை கிடைத்தது.

" அழகான விடை "


அடுத்து "ப்பா" என்று அவன் சொல்லும் அந்த வார்த்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் .