~~ROMEO~~

Everyday Starts with Happy :)

பிட் ...

இந்த பதிவுக்கு ஏன் பிட்ன்னு பேரு வச்சேன்னு கடைசில சொல்லுறேன், அதுக்காக கடைசி வரிக்கு உடனே போயிடாம முழுவதும் படிங்க.

கொஞ்ச நாளுக்கு முன்பு விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி தன் கணவர் அவரின் பெயரை சொல்லி கூப்பிடுவது இல்லைன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். அவரின் கணவரோ ரொம்ப சாதரணமா பதில் சொன்னார் நான் அவளின் பெயரை சொல்லி சில நேரங்களில் கூப்பிடுறேன். அவரு என்னோட முழு பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை, ஒருவேளை எனது பெயர் அவருக்கு பிடிக்காமல் இருக்கும் என்றார் அந்த பெண்மணி. அவரின் கணவரோ ஆமாம் என்பதா இல்லை என்பதா?? ஏதும் சொல்லாமல் முழித்தார். உங்கள் முழு பெயர் என்ன என்று கோபிநாத் கேட்க அதுவரை இருந்த கவலையை மறந்து சிரித்து கொண்டே சொன்னார்.

இந்த வாரத்தில் ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தேன், ஒரு கடைல தினகரன் ஹெட்லயன்ஸ் பேப்பர் கொட்டை எழுத்துல ஒரு நியூஸ் போட்டு இருந்துச்சு, படிச்ச உடனே சிரிப்பு அடக்க முடியல. அதே சமயம் அந்த நியூஸ் அவ்வளவு முக்கியமான்னு தோணுச்சு, நாட்டுல எவ்வளவோ நடக்குது அதை எல்லாம் விட்டுட்டு இதை போட்டு இருக்காங்களே என்கிற ஆதங்கம் வந்தது. சன் குழுமத்தின் ஒரு அங்கமான அந்த பத்திரிகைக்கு எப்படி விளம்பரம் பண்ணினால் விற்பனை ஜோரா நடக்கும் என்று நன்றாக தெரியும் அதை அன்று பார்த்து திரும்ப தெரிந்துகொண்டேன். அந்த மேட்டர் என்னன்னா ..

" ஷகிலாவுக்கு திருமணம் "

இப்ப தெரிஞ்சி இருக்கும் ஏன் இந்த பதிவுக்கு பிட் என்கிற பெயர் வைத்தேன் .

அந்த பெண்மணியின் பெயர் ஷகிலா பானு, அவரின் கணவர் இவரை பானு என்று தான் கூப்பிடுகிறார்.

டிஸ்கி:- மக்கா தயவுசெய்து ஷகிலாக்கு கல்யாண வாழ்த்துகள் என்று பின்னுடத்தில் சொல்லிடாதிங்க.