~~ROMEO~~

Everyday Starts with Happy :)

நாடோடிகள் திரை விமர்சனம் ..









ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது தியேட்டர் சீட் நுனி வரை இழுத்து சென்ற காட்சிகள் கொண்ட படத்தை பார்த்து ... முதலில் டைரக்டர் சமுத்திரகனிய பாராட்டனும் , சுப்பிரமணியபுரம் படத்துல நடிச்சு அத களம் பணின மனுஷன் இந்த படத்துல டைரக்டர் ஆகா இருந்து அத களம் பண்ணிட்டாரு.

படம் ஆரமிக்கும் போதே " எனது நண்பனுடைய நண்பன் எனக்கும் நண்பன்" என்ற வாசகம் எத்தனை உண்மை .. உங்கள் நண்பன் அவனின் நண்பனை அறிமுகப்படுத்தும் போதே அவன் நமது நண்பன் ஆகிவிடுகிறான். நண்பன் என்ற உறவைவிட வேறு எந்த உறவும் அங்கு நாம் எதிர் பார்க்க முடியாது .

நடு ரோடில் பயண பட்டு கொண்டே டைட்டில் கார்டு வரும் போதே எதோ ஒரு வித்தியாசம் காண முடிகிறது .அதும் படத்தின் தீம் மியூசிக் பின்னணில் ஒலித்து ஒரு வித எதிர்பார்பை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது .

படத்தில் நடித்து இருக்கும் சசி, பரணி, விஜய் இந்த முன்று கதாபாத்திரங்கள் தான் முக்கியமாக படத்தை கொண்டு செல்கிறார்கள் .

சசியின் நண்பன் அவரை தேடி ராஜபாளையம் வருகிறார். இவர்களுக்குள் சிறுவயது முதலே நட்பு இருக்கிறது. வந்தவர் ஒரு நாள் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயல்கிறார் . அதில் இருந்து காப்பற்றி ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்று விசாரிக்கும் போது, தான் ஒரு பெண்ணை காதலிபதாகவும், தன் காதலியின் அப்பா மற்றும் இவனின் அம்மா இதற்கு சமதிக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்கிறார் . இவரின் காதலுக்கு சசி மற்றும் இவரின் நண்பர்கள் பரணி மற்றும் விஜய் உதவிக்கு வருகிறார்கள் .

இதற்கு பிறகு நடக்கும் விறுவிறு கதையை திரைகதையின் முலம் நம்மை கொஞ்சமும் சோர்வடையாமல் நகர்த்தி செல்கிறார் சமுத்திரகனி. சமுத்திரகனிக்கு இது மூன்றாவது படம், தனது மூன்றாவது படத்தின் முலம் இவரால் முத்திரை பதிக்க முடிந்தது.

முதலில் சசியின் நடிப்பை பாராடியே திர வேண்டும் . தனது மாமா மகளிடம் காதல் கொள்ளும் போது அதை சிறப்பாக செய்து இருக்கிறார் . தனது நண்பன் தற்கொலைக்கு முயலும் போது அது தெரியாமல் பரணி தான் அவனை கிணற்றில் தள்ளி வீட்டதாக நினைத்து அவனை அடிக்கும் போதும், உண்மை தெரிந்து அவனை சமாதனம் படுத்தும் போதும் உண்மையாக இதே போன்று சில நண்பனை நாம் பார்த்து இருப்போம்.

நண்பனின் காதலியை கடத்தும் போது அந்த பர பர கட்சிகளில் கொஞ்சம் கூட டெம்ப் (Temp) குறையாமல் நடித்து தூள் கிளப்பி இருக்கிறார். பரணி மற்றும் விஜய் இருவரும் உடல் ஊனம் ஆகிவிட்டதை கண்டு அழுவதும் . தனது பாட்டி இறந்த பிறகு அவர் இருந்த இடத்திற்கு போய் அழுவதும் . மாமா மகள் இன்னொருவரை கல்யாணம் கொண்டு வரும் வேளையில் தனது காதல் தோற்றுவிட்டதை எண்ணி அழுவது. கல்யாணம் பண்ணி வைத்த பிறகு அவர்கள் பிரிந்ததை எண்ணி ஆதிரத்தில் பெருமவதும் என்று மனுஷன் படம் முழுக்க ஜொலிக்கிறார் .

பரணி படத்தின் அடுத்த ஹீரோ ... பெண்களை கண்டாலே MGR மாதுரி உதட்டை காவுவதும், அவரை பெண்கள் எல்லாம் மதிக்காமல் போனாலும் கொஞ்சம் கூட கேத்து குறையாமல் அடுத்த பெண்ணை பார்ப்பதும் என்று நன்றாக லுட்டி அடித்து உள்ளார். அந்த கடத்தல் காட்சியில் இவர் வாங்கும் அந்த அடி பார்க்கும் நமக்கே காதுக்குள் கோய் என்று சவுண்ட் கேட்க வைக்கிறது. கடைசி காட்சியில் அந்த பெண்ணை சுமோ காரில் வைத்து இவர் அடிக்கும் காட்சிகள் தியேட்டர் அதிர கை தட்டுகிறார்கள் மக்கள்.

விஜய் இவருக்கு ஏற்று இருக்கும் பாத்திரம் தெரிந்து அதிகம் சிரமம் படாமல் நடித்து இருக்கிறார். நண்பனின் தங்கையை காதலிக்கும் போது இவரின் அப்பா ஐடியா தருவதும் அதையே இவர் செய்வது என்று கொஞ்ச நேரம் நன்றாக கலகலப்பு ஆகி சென்றார் .

படத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத அந்த இன்னொரு நண்பரை கண்டிபாக பாராட்ட வேண்டும். இவர் சில கட்சிகளே வந்த போதும் சசிக்கு மிக முக்கியமான சந்தர்பத்தில் வந்து உதவுவது படத்திற்கு இன்னும் ஒரு ரசனை .

சசியின் மாமா மகள் அனன்யா இவர் பார்பதற்கு கொஞ்சம் போல் சர்மிலி நியாபகம் படுத்துகிறார் . எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே சசியை சுற்றி சுற்றி வருவது அப்பா தன்னை வேறு ஒருவருக்கு கல்யாணம் பணிக்க சொல்லி கேட்ட உடன் அதற்காக அழுது தனது இயலாமை இதுதான் என்று பார்பவர்கள் கண்களை கொஞ்சவும் கலங்கவும் வைத்துவிடுகிறார். எதுவாகிலும் அம்முனியை கொஞ்ச நாட்களுக்கு தமிழ் சினிமாவில் எதிர் பார்க்கலாம் அதற்கு உண்டான தகுதி உள்ளது என்றே நம்பலாம் .

சசியின் தங்கையாக வரும் அபிநயாவை பாராடியே தீர வேண்டும் . இவர் வாய் பேசமுடியாத காது கேக்க முடியாதவர். இதை நான் ஒரு பத்திரிகை முலமாக படம் பார்த்த பிறகுதான் படித்தேன். கொஞ்சம் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் இவர் நடித்து இருக்கும் காட்சிகள் எல்லாம் பிரமாதம் . அதும் விஜய்யை முனங்கிக்கொண்டே தூ என்று துப்புவது. விஜயின் கால்கள் இல்லததை பார்த்து அழுவது , தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் போது தனது அண்ணன் இடம் போய் தஞ்சம் அடைவது என்று இவரின் பாத்திரம் கொஞ்சம்னும் இம்மி பிசுகாமல் ஒரு தேர்ந்த நடிகை போல் நடித்து உள்ளார் . ஹட்ஸ் ஆப் அபிநயா .

படத்தின் கேமராமேன் கதிர் படதிற்கு நல்ல பலம். அந்த கடத்தல் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு இன்னும் ஒரு அதிர்வை கொடுக்கிறது. எடிட்டிங் ரமேஷ் எந்த காட்சிகளுக்கு என்ன மாதுரி எப்படி வர வேண்டும் என்று இவரும் தனது பங்கை சூப்பர்ரக செய்து முடித்து உள்ளார் , இவரின் எடிட்டிங் அந்த கடத்தல் காட்சியே போதும். அதே சமயம் "அடுங்கட" பாடலில் இவரின் கேமரா அங்கும் இங்குமாக அலை பாய்கிறது . இது இவரின் தவற இல்லை எடிட்டிங் தவற என்று தெரியவில்லை.

படத்தில் வரும் பரணி அப்பா , சசி அப்பா , விஜய் அப்பா, அனன்யா அப்பா என்று வித வித அப்பாகளை நமது கண்முன் நிழல் ஆட விட்டு இருக்கிறார். ஒவ்வொரும் ஒவ்வொரு விதம் தனது இரண்டாம் மனைவிக்கு பயந்து முதல் மனைவியின் மகனான பரணியை திட்டுவது அவர் சென்ற பிறகு இவனிடம் வந்து கொஞ்சுவது , தனது மகனின் காதலுக்கு தந்தையே ஐடியா குடுக்கும் விஜய் அப்பா. தனது மகன் எது செய்தாலும் அது நல்லதுக்கு என்று மகனுக்கு சப்போர்ட் பண்ணும் சசி அப்பா. அரசு துறையில் வேலை செய்யும் ஒருதருக்கு தான் தனது மகளை கல்யாணம் பண்ணிகூடுபேன் என்று எளவு வீட்டில் வந்து சவுண்ட் விடும் அனன்யா அப்பா என்று வித விதமான அப்பாக்கள் ..


முக்கியமாக இரண்டு பேரை நான் சொல்லியே ஆகவேண்டும் . முதலானவர் படத்தின் மியூசிக் டைரக்டர் சுந்தர்.C.பாபு . படத்தின் ஒவ்வொரு காட்சியில் படத்தின் டைரக்டர் , நடிகர்களின் உழைப்பை விட இவரின் உழைப்பு நமது கண்களுக்கும் காதுகளுக்கும் மிக பெரிய தீனி , இவர் இந்த படத்திற்கு மட்டும் 25 நாட்களுக்கு மேல் எடுத்து பின்னணி இசை சேர்த்து உள்ளார். இவரின் முந்திய படங்களான அஞ்சாதே மற்றும் சித்திரம் பேசுதடி படங்களில் கூட இவரின் பங்களிப்பு அருமையாக இருக்கும் . இந்த படத்தில் பாடல்கள் என்று சொல்லும் படியாக இருக்கும் சம்போ சிவா சம்போ கண்டிபாக ஒரு உற்சாக டானிக் தான். வெறி கொண்டு மட்டும் செய்ய துண்டும் எந்த ஒரு காரியத்தையும் இந்த பாடல் கேட்டு கொண்டு செய்தால் கண்டிபாக நம்முள் பெரிய உற்சாகத்தை கொடுக்கும் .

அடுத்து இயக்குனர் சமுத்திரகனி .. இவரின் முதல் இரண்டு படங்கள் சோடை போனதில் இருந்து மூன்றாவது படத்தை தமிழ் திரையுலகமே இவரை நிமிர்ந்து பார்க்க வைத்து உள்ளார் . இந்த கதையை இவர் எத்தனை தயாரிப்பாளர் , நடிகர்கள் இடம் சொல்லி எவரும் தயாரிக்க வராமல் நொந்து போய் இருந்த நேரத்தில் மைக்கல் ராயப்பன் தயாரிக்க முன்வந்தது பெருமைக்குரிய விஷயம் . இவரின் உழைப்பு படத்தை பெருமையை எங்கோ கொண்டு சென்றுவிட்டது . இந்த கருவை வைத்து கொண்டு நிறைய படங்கள் வந்து விட்டாலும் அதன் வலி , வேதனை என்று எவரும் சொல்லாத , செல்லாத பாதையில் கதையை நகர்த்தி சென்றது இவரின் சாமர்த்தியம் .. ராஜபாளையம் , நாமக்கல் , கன்னியாகுமரி என்று இந்த முண்று இடங்களை வைத்து கதையை நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார். நண்பன் கன்னியாகுமரி , நண்பனின் காதலி நாமக்கல் . இவர்கள் இருப்பதோ இந்த இரண்டு இடத்துக்கும் நடுவில் ராஜபாளையம் .
சசி நண்பனை கல்யாணம் பண்ணி வைத்து விட்டு அவர்கள் போகும் போது தனது கழுதில் இருக்கும் செயின் , பணம் எல்லாம் குடுத்து அனுப்பி விடும் கட்சி நிஜமாகவே ஒரு நண்பன் நமக்கு இந்த மாதுரி கிடைக்க மட்டான என்று ஏங்க வைக்கிறது. இந்த கட்சி முடியும் போது சசி நண்பர் பைக்கில் வந்து அவரை கூட்டிக்கொண்டு செல்லும் இடம் திரைகதையின் நச் என்று நமது மனதில் பதிய வைக்கிறார் . மற்ற நடிகர்களிடம் வேலை வாங்குவதை விட அபிநயாவிடம் வேலை வாங்குவதை ஒரு சவாலாக ஏற்று கொண்டு அவரிடம் இருந்த நடிப்பு திறனை உலகு அறிய செய்து இருக்கிறார், இதற்காக இவருக்கு மிக பெரிய பூ கோத்தே கொடுக்கலாம்.


இந்த படத்தை இன்னும் பார்க்காதவர்கள் உங்கள் வேலையை மற்றும் மற்ற சிந்தனையில் மட்டுமே இருப்பிர்கள் . படத்தை பார்த்த பிறகு கண்டிபாக மற்றதை மறத்து விடுவிர்கள்.

இந்த மாதுரி ரிஸ்க் எடுத்து நண்பன் கல்யாணத்தை நடத்தி வைத்த ஒருத்தர் இந்த படத்தை பார்த்த பிறகு கண்டிபாக அந்த ஜோடி இப்பொது என்ன பண்ணிக்கொண்டு இருக்கும் என்று நினைக்காமல் இருக்க மாட்டார் .


தியேட்டர்யில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

தியேட்டர்ரில் மெதுவாக ஆட்கள் வர ஆரமித்தர்கள் படதின் பெயர் போடும் போது அரங்கமே நிறைந்து இருந்தது .

எனது இருக்கை பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு ரசிகர் படத்தில் எங்கு எல்லாம் கை தட்ட வேண்டுமோ அங்கு எல்லாம் விசில் சேர்த்து கொண்டார்.

படத்தின் கடைசியில் பரணி அந்த பெண்ணை போட்டு ஆத்திரத்தில் கும்மு கும்மு என்று கும்மும் போது " அவ கழுதுலையே போட்டு மேதிடா " என்று குரல் குடுத்து அரங்கையே திரும்பி பார்க்க வைத்தார் .

இந்த மாதுரி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் கண்டிபாக பிச்சிக்கிட்டு ஓடும் ..