~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 27/09/09

இந்த வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தது. மனைவி இல்லாததாள் துணி துவைக்கும் வேலை இருந்தது . எப்போதும் எனது துணிகளை நான் தான் துவைப்பேன் இது பள்ளி பருவத்தில் இருந்து இருக்கும் ஒரு பழக்கம் ஆனால் கல்யாணத்துக்கு பிறகு இந்த வேலையை அவள் எடுத்து கொண்டாள் . இப்பொது அவள் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்றதினால் இந்த வேலையை நான் செய்ய வேண்டியதாக ஆனது. ரொம்ப நாட்களுக்கு பிறகு துணி துவைதத்தினால் கொஞ்சம் இல்லை நிறையவே அசதி ஆகிவிட்டது. லீவ் என்றால் மனைவி உடன் படத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளவன் நான். அந்த இரண்டு நாட்களும் தனிமையில் பிறக்க போகுமா குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றே யோசித்து கொண்டு இருந்தேன் சரி பிறந்த பிறகு பார்த்து கொள்ளலாம் இந்த வேலை எல்லாம் என்று செல்லமாக கூப்பிடும் பெயர் மட்டும் முடிவு பண்ணி உள்ளேன்.

ஆண் என்றால் : சிண்ணு
பெண் என்றால் : சிண்ணி
பெயர் ஓகே தானே ..


முடிவில் கண்டிப்பாக வால் பையனிடம் என்ன பெயர் வைப்பது என்பதை மட்டும் கேட்க கூடாது என்கிற முக்கிய முடிவை எடுத்தேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------

சே பற்றிய ஒரு படம் பார்த்தேன். சே எழுதிய "The Bolivian Diary" என்கிற நாட்குறிப்பு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட Biography படம் என்றே கூரலாம். (முதல் பாகத்தை இன்னும் பார்க்க வில்லை. இரண்டாம் பாகம் தான் கிடைத்தது). படம் அவர் கியூபா நாட்டை விட்டு செல்ல ஆரமிகிறது, அதன் பிறகு அங்கு நடக்கும் கொரில்லா போர் முறைகள் பின்பு அவர்கள் நாட்டில் நடந்த மிலிட்டரிக்கு எதிரான யுத்தத்தில் அவர் சிக்குவது பின்பு அவரை சுட்டு கொள்வது என்று படம் Documentary போல எடுத்து உள்ளார்கள். படத்திற்கு பின்னணி இசை தேவையான இடத்தில மட்டுமே உபயோக படுத்த பட்டு உள்ளது. சே வாக நடித்து இருக்கும் நடிகர் அருமையான நடிப்பை வெளி படுத்தி உள்ளார். அதும் அவர் ஆஸ்துமா தொந்தரவு காரணமாக அவதிப்படும் இடம் அருமை. படம் முழுக்க காடுகள் மற்றும் கிராமங்கள் சுற்றியே செல்கிறது.

ஒரு புரச்சியாளனை புத்தகமாகவோ இல்லை படமாகவோ கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிது அல்ல.


சேவுக்காக பார்க்கலாம் .

--------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று நடந்த பதிவர் சந்திப்புக்கு கண்டிப்பாக ஆஜர் ஆகி விடவேண்டும் என்கிற முனைப்புடன் சென்றேன். காந்தி சிலைக்கு பின்பாக சிலர் நின்று கொண்டு இருந்தார்கள் அருகில் சென்ற உடன் ஒரு நபர் வாங்க சார் என்று கை குலுக்கினர். நீங்க கார்க்கி தானே என்று கேட்டேன் இல்லை நான் அதிஷா என்று தன் பெயர் சொன்னார். அடுத்து நின்று இருந்த சிலரிடன் கை குலுக்கி என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். மிகவும் எதிர் பார்த்த தல கேபிள் சங்கர் கார்கோ பேன்ட் போட்டு கொண்டு தன்னை யூத் என நிருபிக்க வந்தார். அப்படி இப்படி என்று கூட்டம் சேர்ந்து முரளிகண்ணன் பேச ஆரமிக்கும் போது மழை வேகமாக கொட்ட தொடங்கியது. எல்லோரும் ஒரு மரத்து அடியில் நின்று கொண்டோம் இருந்தாலும் அனைவரும் மழையில் நனைந்தே நின்று கொண்டு இருந்தோம்.

மழை சிறிது நின்ற பிறகு கூட்டம் தொடங்கியது புதிய பதிவாளர்கள் அறிமுகம் என்று சிலர் அறிமுகப்படுத்தி கொண்டோம். அதில் இலங்கையில் இருந்து ஒரு பதிவாளர் வந்து அறிமுகப்படுத்தி கொண்டது என்னை ஆச்சரிய பட வைத்தது அதும் அவரின் அழகிய தமிழ் சொற்களை கேட்கும் போது நாம் பேசும் தமிழ் உடன் ஒப்பிட்டு பார்க்க தூண்டியது.

மழையின் காரணமாக பதிவாளர் சந்திப்பு என்பது ஒரு அறிமுக படலமாக தான் இருந்தது.

----------------------------------------------------------------------------------------------------------

மாச கடைசி என்றாலும் டிராபிக் போலீஸ்க்கு மற்றும் எங்கள் ஏரியாவில் இருக்கும் தூசிக்கு பயந்து புதிதாக ஒரு ஹெல்மெட் வங்கிவிட்டேன்.
---------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்

3 J A P A 6 = ??


என்னன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம் ???


இது கூட தெரியலையா ?


'MOONJA PAARU'
(3JA , PA6)
'மூஞ்ச பாரு'
ஐயோ ஐயோ ..