நவம்பர் 23 2008 , அன்று தான் எனக்கும் மகாலட்சுமிக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. எங்களது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.
முதல் வருட கல்யாண தினத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையை எங்கள் மகன் ஏற்படுத்திவிட்டான். அவனை விட எங்களுக்கு கொண்டாட்டம் ஒன்று பெரியது இல்லை தான் .
சென்னையில் நான், கரூரில் எங்கள் மகனுடன் மனைவி. லீவ் எடுக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், அதனால் அடுத்த வருடம் இதே தினத்தில் எங்காவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று மகனுடன் கொண்டாலாம் என்று நாங்கள் முடிவு பண்ணிரிகிறோம்.
இந்த ஒரு வருடத்தில் காதல், சண்டை, பிரிவு, முறைப்பு என்று எல்லாம் சேர்ந்த கலவையாக சுகமாக கழிந்தது.
தலை தீபாவளிக்கு ஏதும் வாங்கி தர முடியாமல் இருந்த வேதனையை இப்பொது சரி செய்து விட்டேன்.
என்னவளுக்கு புதிதாக Samsung S3600, Open டைப் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி பரிசளித்தேன். அவள் ஆசைப்பட்ட மாடல் ஆசையை பூர்த்தி செய்துவிட்டேன் என்கிற பெருமிதம்.
வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் அந்த மொபைலை காமித்து முதலாம் ஆண்டு கல்யாண தினத்திற்கு நான் வாங்கி தந்த பரிசு என்று சொல்லி சந்தோசப்படுகிறாள் என்னவள்.
இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர.
பொறுப்புகள் கூடி கொண்டே செல்கிறது , இன்னும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே மண்டையை போட்டு உலுப்புகிறது.
ஆனால் அடிமனதில் இருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்று தான்.
இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே .
13 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
வாழ்த்துக்கள் ரோமி.. அதான் மகன் பிறந்துவிட்டானே.. அதுக்கு மேல என்ன.. என் ஜாய்...:)
நன்றி கேபிள் தல,
எல்லாம் ஒரு ஆசை தான் .
வாழ்த்துக்கள் ராஜன். அட உங்களுக்கும் பதவி உயர்வா? (அப்பா என்கிற) பதவி தந்துடான். தாயும் சேயும் நலமே இருக்க என் பிராத்தனைகள். கொஞ்சம் அடக்கி வாசியுங்க கேட்க ஆள் இருக்கல்ல. சும்மா ஜோக்கு.
//இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே //
இன்னும் இன்னும் நிறைய உழைக்கனும்ங்குற எண்ணம் இருக்குல்ல.அப்புறம் என்ன??நால்லாருப்பீங்கன்ணே.டோண்ட் ஓர்ரி.
:)
பிறப்பில் வருவது யாதென கேட்டேன். பிறந்த பாரென இறைவன் பணித்தான். இறப்பில் வருவது யாதென கேட்டேன். இறந்து பாரென இறைவன் பணித்தான். மணையாள் சுகமெனில் யாதென கேட்டேன். மணந்து பாரென இறைவன் பணித்தான் (நன்றி-கவியரசு கண்ணதாசன்) சந்தோஷமும், சகல வாய்ப்புகளும் பெற வாழ்த்துக்கள்.
வாழ்துக்கள் தல :-))
// இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர. //
அட இதுக்கு மேல வேற என்னங்கவேணும்.
//இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே //
:-))
நன்றி நிலா ..
\\எம்.எம்.அப்துல்லா said...
//இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே //
இன்னும் இன்னும் நிறைய உழைக்கனும்ங்குற எண்ணம் இருக்குல்ல.அப்புறம் என்ன??நால்லாருப்பீங்கன்ணே.டோண்ட் ஓர்ரி.
:)//
நன்றி தல ...
\\tamiluthayam said...
பிறப்பில் வருவது யாதென கேட்டேன். பிறந்த பாரென இறைவன் பணித்தான். இறப்பில் வருவது யாதென கேட்டேன். இறந்து பாரென இறைவன் பணித்தான். மணையாள் சுகமெனில் யாதென கேட்டேன். மணந்து பாரென இறைவன் பணித்தான் (நன்றி-கவியரசு கண்ணதாசன்) சந்தோஷமும், சகல வாய்ப்புகளும் பெற வாழ்த்துக்கள்.//
நச்சுன்னு சூப்பர் கவிதை . உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
கார்த்திக் said...
வாழ்துக்கள் தல :-))
// இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர. //
அட இதுக்கு மேல வேற என்னங்கவேணும். //
உங்கள் வருகைக்கு நன்றி தல .
வாழ்த்துக்கள்.
கரூரா..நானும் தான்..
நம்மளோட ஒரே சாதனை புள்ளைங்கதான்... :) பெருமை படுங்க.
@ பின்னோக்கி
கரூர்ல எங்க தலைவரே ..
மகன்
பிறந்ததுக்கு
வாழ்த்துக்கள்
மாமனார் வீடு கரூரா ?? கரூர்ல எங்க? நான் கூட கரூர் தான்.
@ பின்னோக்கி நீங்களும் கரூரா?
Post a Comment