~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 30/11/2009

உங்கள் வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை நினைத்து பாருங்கள் அதற்கு முன்னரே அந்த விஷயம் உங்கள் நினைவுக்கு வந்து சென்று இருக்கும் அது கனவில் கூட வந்து இருக்கும். அதே போன்று ஒரு நிகழ்வு சென்ற வாரத்தில் நடந்தது எனக்கு.

இரவு பணி முடிந்து காலையில் தூங்கி கொண்டு இருந்தேன். எனது நினைவு எங்கு எங்கோ சென்றது, ரயிலில் பயணித்து கொண்டு இருந்த நான் அடுத்த நொடியில் ஆட்டோவில் செல்கிறேன், பக்கத்தில் ஒரு பெண் ஒருத்தி எதேதோ பேசிக்கொண்டு பேசி கொண்டு வந்தாள், அவள் பேச பேச "ம் ம்" என்று ஒரு குரல் மட்டும் அவள் பக்கத்தில் இருந்து கேட்டு கொண்டு இருந்தது அவர்களை பார்த்தால் வட நாட்டு தம்பதியர் போல இருந்தது , அடுத்த நிமிடம் நான் ஆபீஸ்ல இருந்தேன் இவை அனைத்தும் எனது கனவில் வந்து சென்ற நிகழ்வுகள்.

தூங்கி எழுந்து வேலைக்கு கிளம்பினேன். பார்க் ஸ்டேஷன் இருந்து ரயில் முலமாக கிண்டி வந்து அடைந்தேன், புரியாத மொழி பேசிக்கொண்டு என் அருகில் இருவர் நடந்து கொண்டு வந்தார்கள், திரும்பி பார்த்தால் வட நாட்டு தம்பதியர்கள் இருவர்.

"Hai" என்றார் , நானும் " Hai" என்றேன். ஒலிம்பியா டெக் பார்க் செல்ல எந்த வழி செல்ல வேண்டும் என்றார். நான் அந்த வழியாக தான் செல்கிறேன் வாங்க சேர்ந்தே போகலாம் என்றேன். கிண்டியில் இருந்து ஷேர் ஆட்டோவில் கிளம்பினோம், எனது கனவில் வந்த மாதிரியே அந்த பெண் அருகில் நான். அதே போன்று அவள் பேசி கொண்டு இருந்தாள் பக்கத்தில் இருந்த அவள் கணவன் "ம் ம்" என்று சொல்லி கொண்டே இருந்தான்.

இது தான் கனவுகள் மெய்ப்படும் என்பதா ??


---------------------------------------------
நண்பர் கார்த்திகேயன் சென்னை வந்துள்ளார், அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டேன், சென்ற வாரத்திலே சந்திக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சில காரணங்களால் அவரை சந்திக்க முடியாமல் சென்றது, அவரும் ஹைதராபாத் சென்றதால் இந்த வாரத்தில் சந்தித்துவிட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறேன்.

------------------------------------------


ஒரு சில பதிவாளர்கள் பதிவை படிக்கும் போது ரொம்ப எரிச்சல் அடைய வைக்கிறது. அரச்ச மாவையே அரைக்கிற மாதிரி இருக்கு. மொக்கை என்கிற பெயரில் நடக்கும் இந்த கொடுமைக்கு ஒரு விடுவு காலமே வராதா ?? ஆனால் சில பதிவாளர்கள் பதிவை ரொம்ப எதிர் பார்த்துகொண்டு இருப்பேன். அவர்கள் அதிகமாக எழுத மாட்டார்கள், மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் அதும் நச்சுன்னு இருக்கும். நான் அதிகம் எதிர் பார்க்கும் பதிவர்கள் சிலரே அதில் ஜாக்கி , கேபிள் சங்கர், வால்பையன், நர்சிம், தண்டோரா இப்படி விரல் விட்டு எழுதி விடலாம். ஆனால் மொக்கை போடுகிறவர்கள் லிஸ்ட் மட்டும் எண்ணுவதற்கு கை, கால் விரல்கள் பத்தவில்லை.

-------------------------------------






2 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

//இது தான் கனவுகள் மெய்ப்படும் என்பதா ??

//

விடியக்காலை கனவா?

 

சிலருடைய கனவுகள் மட்டும் நிஜமாகின்றன.....உண்மைதான்.