~~ROMEO~~

Everyday Starts with Happy :)

யோகி - இது விமர்சனம் அல்ல !!!

வெளிநாட்டு படங்களை குறிப்பாக உலக தரம் வாய்ந்த படங்கள் மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிய படங்களை பார்க்கும் மனிதர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்று பார்த்தால் ரஜினி படத்திற்கு முதல் காட்சியில் எத்தனை பேர் வருவார்களோ அவ்வளவே தான் இருக்கும் எண்ணிகையில். அவர்களின் விமர்சனத்தை தவிர்த்து அல்லது படிக்காமல் யோகி படம் பார்த்தால் இந்த படம் ஒரு புது முயற்சி அல்லது சூப்பர் படம் என்று சொல்லலாம்.படத்தை கண்டிப்பா பாருங்க உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும். உங்கள் கருத்துகளையும் சொல்லிடு போங்க.

ஏன் என்றால் நாம எல்லாம் காமன்மேன் ,,

13 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

ennaiபொறுத்தவரை நிச்சயமாய் அந்த லெவலில் கூட படம் இல்லை.. ரோமி.. ஒரு படம் காப்பியோ இல்லைய்யோ.. அதை ஞாபகபடுத்தினாலும் நம்மை ஒன்ற வைக்க வேண்டும் அது இதில் கிடையாது அதனால்தான் சொல்கிறேன்.

 

தல நீங்க அக்கு வேறு ஆணி வேறுன்னு படத்த பிரிச்சு மேஞ்சுடுவிங்க. எங்கள மாதிரி ஆளுங்களுக்கு பைசா வேஸ்ட் ஆகாம இருந்த ஓகே. அந்த வகையில் இந்த படம் எனக்கு புடிச்சிருக்கு, 30 ரூபா குடுத்து படத்த பார்த்தா ஒரு சந்தோசம் அல்லது மனசு நெறஞ்ச மாதிரி இருக்கனும், இதுல ரெண்டும் இருக்கு அப்பறம் என்ன வேணும்.

சரி சரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொவொரு ரசனை.

 

அருமை நண்பர் ராஜராஜன்,
விமர்சனமாக எழுதியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்குமே?
படம் சீக்கிரம் பார்ப்பேன்.

 

நா கேபிள்-க்கு சார்ந்து பேசணும்னு இத சொல்லல.

ஒரு படத்த நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி குடுத்தா சரி. ஆனா அப்படியே எடுத்து புதுசா ஒன்னும் இல்லாம நம்ம ஆள போட்டு நடிக்க சொல்லறதுக்கு ஒரிஜினல் படத்த டப் பண்ணி வெளியிடலாமே?

நானும் ஆங்கில படம் பார்க்குற ஆசாமி கெடையாது. ஆனா இந்த மாதிரி நேரங்கள டப் பண்ண ஒரிஜினல் நம்ம காப்பிய விட மேலா தெரியுது.

சரி சரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொவொரு ரசனை. :)

 

kathaiyum ellamal, antha oru logicum ellamal thiraiyil aththanaiyo padangal box office-il poyi kondirukkirathu, anmaiyil vantha athavan pola. so, Tamil nattil ethu pondra thraipadangalin puthiya muyarchikku, rome - in vimarsanam sariye...

-- as a common man

 

கேபிள் மாதிரி தெளிவா விமர்சனம் செஞ்சா தான் விமர்சனம்னு யார் சொன்னது.

நீங்க அக்கு வேறா ஆணி வேறா பிரிக்க வேண்டவே வேண்டாம். ஆனா உங்க கருத்துகள விவரமா போட்டா, உங்களுக்கு புடிச்ச சீன், பாட்டு, இப்படி விஷயங்கள போட்டா, உங்க பக்க விவாதம் பல பேருக்கு புரியும்.

நல்லதா நாலு வரி சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்ல.

 

நண்பர் கார்த்திகேயன்.

எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத வராது, விமர்சனம் என்கிற பெயரில் படத்தின் கதையை சொன்னாலும் சொல்லிவிடுவேன், அதனால் தான் அடக்கி வாசிக்கிறேன்.

 

நண்பர் செந்தில்நாதன் ,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி நல்லதா நாலு வரி தான் சொல்லிட்டேன்ல, படம் நல்ல இருக்குன்னு.
படத்துல எனக்கு பிடிச்சது இதுதான் என்று எதையும் சொல்ல விரும்பவில்லை, ஏன் என்றால் எல்லாமே எனக்கு புடிச்சிருக்கு.

 

அமீர் அந்த படத்தை அப்பட்டமாக காப்பியடித்தது(உன்மையில் திருடியது) கூட தப்பில்லை ஆனால் அதை ஒத்துக்கொள்ளாமல், நான் அந்த படத்தை பார்த்தது கூட இல்லைன்னு முழு புசணிக்காயை சோத்துல மறைப்பது கேவலமாக இருக்கிறது.
அதான் உன் திருட்டை கையும் களவுமாக பிடிச்சுடாங்களே அப்புறம் என்ன வியாக்கானம்.

 

\\Anonymous said...
kathaiyum ellamal, antha oru logicum ellamal thiraiyil aththanaiyo padangal box office-il poyi kondirukkirathu, anmaiyil vantha athavan pola. so, Tamil nattil ethu pondra thraipadangalin puthiya muyarchikku, rome - in vimarsanam sariye...

-- as a common man //

வாங்க அனானி , உங்க பெயர் ஆவது போட்டு இருக்கலாம்.
உங்கள் வருகைக்கு நன்றி . அடுத்த முறை வரும் போது பெயர் போட்டு போங்க புண்ணியமா போகும் .

 

நம்ம பதிவை வேறு யாராவது நம்முடைய அனுமதியில்லாமல் அவர்களுடைய தளத்தில் அவர்கள் எழுதியதாக கூறினால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். அதே உணர்வுடன் இந்த படத்தை அணுகுங்கள் அப்பொழுது தெரியும் அந்த வலி.அடுத்தவர்களின் கணவை திருடுகிறவன் நீண்டா நாளைக்கு நிலைக்க முடியாது

 

உங்கள் வருகைக்கு நன்றி Damildumil,

உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன், ஆனால் இந்த கதையை புல் ரைட்ஸ் வாங்கி தமிழ்நாட்டுல வேற யாரு இந்த அளவுக்கு எடுப்பாங்க சொல்லுங்க?
படத்துல இவர்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது. அதை மட்டும் பார்த்தால் போதும் இது சுட்டதா , சுடாததா என்கிற விமர்சனத்துக்கு நான் வரலை சாமீ..

 

Damildumil..... என்ன விடமாட்டிங்க போல இருக்கே !!! ஐயா இந்த படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் காப்பி அடிப்பதை பேசுவதற்கு இது இடம் அல்ல. நான் ஒத்துக்குறேன் இது காப்பி அடித்த படம் தான், அதை தவிர்த்து இந்த படத்தை பாருங்க பாஸ் நல்ல இருக்கா இல்லையானு சொல்லுங்க. அது அமீர் பிரச்சனை அவர் அதை பற்றி பேசட்டும் நமக்கு என்ன ?