~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கார்த்திகேயனுடன் ஒரு சந்திப்பு
சில சந்திப்புகளை நான் தவற விட்டுருக்கிறேன் ஒன்று அது எனக்கு பிடிக்காமல் இருக்கும் அல்லது அந்த சந்திப்புக்கு நான் தேவையில்லாதவன் வேறு வேலைகள் என்னை ஆட்கொள்ளும்.ஆனால் நண்பர் கார்த்திகேயன்யுடனான
சந்திப்பை தவிர்க்க கூடாது என்கிற முனைப்பில் இருந்தேன், அது நேற்று நிறைவேறியது.


கார்த்திகேயன் "கீதப்பிரியன்" என்கிற தலைப்பில் எழுதி வருகிறார். ஷார்ஜாவில் வேலை செய்பவர், இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார். வந்த முதல் நாளே அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டேன். அவரின் ஹைதரபாத் பயணத்தால் நேற்றுதான் சந்திக்க முடிந்தது.

மாலை 8 மணியளவில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து என்னை பிக் அப் செய்ய வண்டியுடன் வந்து இருந்தார். சுய அறிமுகத்துக்கு பிறகு அவரின் நண்பர் என்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார் என்றார். நேராக அவரின் நண்பர் கடைக்கு சென்றோம், பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் பக்கத்தில் இருந்த சின்ன ரெஸ்டாரண்ட் முன் நிறுத்தினர், உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் ஏதோ ஒரு மளிகை கடை அல்லது Stationary கடையாகதான் இருக்கும் என்று நினைத்தேன்


.

Buddha Hut என்று மங்கள் வெளுச்சதில் இருந்த போர்டு எங்களை வரவேற்றது, கடைதான் சிறியது ஆனால் உள்ளே இவர் செய்து இருக்கும் உள் கட்டமைப்பு பார்த்து வாயை பிளந்தேன். உண்மையில் அருமையான இருக்கிறது உள் கட்டமைப்பு.


ராஜகோபால் என்பது நண்பரின் பெயர், பெயர் தான் பழசு பார்க்க இளமையாக இருக்கிறார் தோற்றத்தில், அருமையாக சமைக்கிறார். அவரின் தொழில் எல்லாம் சிறுவர் முதல் இளைஞர் வரை அவரின் கடைக்கு இழுபதுதான் தான் குறி. அங்கு இருக்கும் ஐட்டம் எல்லாம் எனது வாழ்நாளில் இதுவரை கேள்விப்படாதது. வாயில் நுழையாத பெயர்கள்தான் லைட் அண்ட் டேஸ்டி உணவுகள்.

அவர் என்னிடம் பேசிய முதல் வரி " உங்கள எங்கையோ பார்த்து இருக்கேன்" . You too Rajagopal !!!! என்றது மனம். அது என்னமோ தெரியல சிலர் என்னை பார்க்கும் போது இந்த வார்த்தையை முதலில் கூறுவது அதிகமாகி கொண்டே வருகிறது ( ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ??? ஹி ஹி ஹி No Tension please ).

அருமையான Sandwich செய்து குடுத்தார், ரொம்ப லைட் மற்றும் சுவை .. ஹ்ம்ம் ஹ்ம்ம் பல்லாவரம் ஏரியா மக்கள் கண்டிப்பா இவரின் கடைக்கு ஒருமுறை உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு செல்லுங்கள் மாலை வேளையில் அருமையான உணவை குழந்தைக்கு வாங்கி குடுங்கள். அங்கு இருந்து கிளம்பும் போது சிறுவர் சிறுமியர் கூட்டம் அனைத்து இடங்களை ஆக்கிரமித்து கொண்டது. பேச்சு வாக்கில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு பதில் தராமல் மழுப்பிவிட்டார் , கேள்வி என்னவென்றால் கல்லா பெட்டி அருகில் துப்பாக்கி ஒன்றை மாட்டி வைத்து இருந்தார். " பாஸ் அந்த துப்பாக்கிய குருவிக்காரன் யாரவது கிட்ட இருந்து சுட்டிங்களா" என்றேன் சிரித்தாரே தவிர அதற்கு பதில் சொல்லவேயில்லை.

அடுத்த முறை பார்க்கும் போது கண்டிப்பாக பதில் வாங்கிவிடவேண்டும் .

அவரிடம் இருந்து விடைப்பெற்று நண்பர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றோம். அவரின் மனைவி , குழந்தை வர்ஷினி, அவரின் மச்சினன் ஹரி சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், பிறகு ஹரி அவர்களின் சொந்த ஊர் ஆனா காரைக்குடி பக்கம் என்று வேள்விப்பட்ட போது அங்கு இருக்கும் செட்டிநாடு ஆரண்மனைகள் பற்றி நிறைய பேசினோம். எங்க சந்திப்புக்கு முதல் நாள் தான் கலைஞர் தொலைகாட்சியில் செட்டிநாடு அரண்மனைகள் பற்றிய தொகுப்பை பார்த்தேன். என்ன ஒற்றுமை பாருங்க, தமிழ்நாட்டில் நான் செல்லாத ஒரு சில ஊருகளில் காரைக்குடியும் ஒன்று, அங்கு இருக்கும் செட்டிநாடு அரண்மனைகளை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன். காரைக்குடி வாழ் அன்பர்கள் யாரேனும் இதை படித்தால் என்னை தொடர்புகொள்ளவும் , உங்கள் ஊரு சிறப்பை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன். எங்க பேச்சு சினிமா பக்கம் சென்றது அவர் ரசித்த படங்கள், நான் ரசித்த படங்கள் என்று எங்கள் ரசனைகளை பகிர்ந்து கொண்டோம். ஜக்கி சேகர் வந்து சென்றதை பற்றி சந்தோசமாக பகிர்ந்து கொண்டார், ஒரு நாள் முதலே வந்திருந்தால் அவரையும் சந்தித்து இருந்து இருப்பேன். நடுவில் எனக்கு தோசை பரிமாற்றப்பட்டது அருமையான தோசை வித் கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி. சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது அவருக்காக நான் வாங்கி வந்த மதன் எழுதிய " வந்தார்கள் வென்றார்கள்" என்கிற புத்தகத்தை பரிசளித்தேன். அவர் எனக்கு ஒரு Body spray பரிசளித்தார். இனிதான சந்திப்பு இனிதாகவே முடிந்தது,

வரும் 12 ஆம் தேதி திரும்ப அமீரகம் செல்கிறார் அவர் கிளம்புவதற்கு முன் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அவரிடம் குடுக்க வேண்டும். அடுத்த முறை அவர் இந்திய வரும் போது இது எல்லாம் வாங்கிட்டு வாங்க என்று.

ஏன் என்றால் நான் ஒரு காமன் மென். ஹி ஹி ஹி .


22 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ??? ஹி ஹி ஹி No Tension please ).


//


புள்ள பெத்ததுக்கு அப்புறமும் பேச்சப்பாரு

:)))

 

அருமை நண்பர் ராஜராஜன்,
அருமையாக எழுதினீர்கள், என் நண்பனிடம் கூப்பிட்டு காண்பிக்கிறேன்.உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்

 

:)

போட்டோவுல நல்லா இருக்கீங்க

 

அது ஒண்ணுமில்ல தல!

நீங்க பாக்குறதுக்கு ஹாலிவுட் ஹீரோ மாதிரியே இருக்கிங்களா, அதான் யார் பார்த்தாலும் அப்படி கேக்குறாங்க!

 

//ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ???//

குசும்பு??? சரி..சரி..கொஞ்சமா ஒப்புக்கொள்ளலாம் :)

 

ஏன்பா நானும் போனேன்... கார்த்தியின் அன்பும் பாசமும் என்னை நெகிழவைத்துவிட்டது..உங்களுக்கும் தோசை எனக்கும் தோசைதான்...கார்த்தி மகள் வர்ஷினி நல்லா டிராயிங் பண்ணறா...இரண்டு மணிநேரம் அவர் வீட்டில் இருந்தேன் நேரம் போனதே தெரியவில்லை...இரண்டு நாளுக்கு முன்னாடி வந்து இருந்தா.. நாம மூனு பேரும் சந்திச்சு இருக்கலாம்....சரி உங்க வீட்டு பாப்பா எப்படி இருக்கின்றான்...

அன்புடன்
ஜாக்கி..

 

நான் பம்மலில்தான் இருக்கிறேன்.
93400 89989..(எனக்கும் தோசை பிடிக்கும்)

 

@ எம்.எம்.அப்துல்லா

எண்ணனே பண்றது எல்லாம் பிறவிளையே வந்தது .

 
This comment has been removed by the author.
 

@ கார்த்திக்கேயன் .

உங்களை சந்திததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி .

 

@ சென்ஷி

உங்கள் வருகைக்கும் பின்னுடதுக்கும் நன்றி நண்பரே .

 

@ வால்பையன்

இது கொஞ்சம் ஓவர்ஹா இருக்கே தல ..

 

@ பூங்குன்றன்.வே

உங்கள் வருகைக்கும் பின்னுடதுக்கும் நன்றி

அது என்ன பாஸ் கொஞ்சம் !! உங்க கிட்ட இருந்து நான் இன்னும் எதிர்பார்கிறேன் ஹி ஹி ஹி

 

@ jackiesekar .

முதலே தெரிந்து இருந்தால் கண்டிப்பா நாம சந்தித்து இருக்கலாம் தல . சரி பதிவர் சந்திப்பு நடக்கும் போது கண்டிப்பா சந்திக்கலாம்.உங்களையும் நான் சந்திக்கணும்ன்னு ரொம்ப ஆவல இருக்கிறேன் .

மகன் அருமையா இருக்கான் தல . ரொம்ப நன்றி ..

 

@ தண்டோரா

Please contact Mr.Karthikeyan for super Dosai .

 

நண்பர் கார்த்திகேயன் பழகுவதற்கு இனிமையானவர். அவரைப் பற்றிய பதிவு அருமை.

 

@ செ.சரவணக்குமார் .


உங்கள் வருகைக்கு நன்றி சரவணா குமார் . நீங்க சொல்லியது உண்மையே ..

 

அருமை,
நல்வாழ்த்துகள்

 

ஒருவேளை நான் அழகாகி கொண்டே வருவதால் இருக்குமோ??? ஹி ஹி ஹி No Tension please ).

//

புள்ள பெத்ததுக்கு அப்புறமும் பேச்சப்பாரு
:))) //

ஹாஹாஹா.... வழிமொழிகிறேன்.

 

@ தியாவின் பேனா


உங்கள் வருகைக்கும் பின்னுடதுக்கும் நன்றி

 

@ விக்னேஷ்வரி

ஒருத்தன் அழகாக இருக்க கூடாதே கும்பல சேர்ந்து கும்மி அடிசிடுவிங்களே..

 

நானும் இவரை சந்திக்க நினைத்து முடியவில்லை.