~~ROMEO~~

Everyday Starts with Happy :)

My Sassy Girl - 2003 & 2008




அழகான ராட்சஸி என்று தமிழ்ல் பெயர் வைத்து இந்த படத்தை யாராவது ரீமேக் செய்து வெளியிட்டால் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.

ரொமான்டிக் காமெடி படங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. ரொமான்டிக் படங்களில் காமெடி என்பது ஒரு இலை மாதிரி ஒட்டி கொண்டு வரும்.

ஆனால் இந்த படத்தில் காமெடிக்குள் தான் ரொமான்டிக் இருக்கிறது.

My Sassy Girl கொரியா மற்றும் ஆங்கிலதில் வெளிவந்த அருமையான படம்.

நான் முதலில் பார்த்தது My Sassy Girl - 2008 ஆங்கில பதிப்பை.




கதையின் ஓட்டம் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டி போட்டு விட்டது. ரொம்ப ரசனையான திரைக்கதை , சிரித்து சிரித்து ரசித்து ரசித்து பார்த்தேன்.

ஆங்கில பதிப்பை பார்த்த பிறகு கொரியன் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற வெறி உண்மையில் எனக்கு வந்தது.


எனது ராசி அடுத்த நாளே அந்த படத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். You Tube மூலமாக .

My Sassy Girl - 2003 (Korea)


உங்கள் காதலி என்னவெல்லாம் செய்தால் ரசிப்பிர்களோ அதை தான் கதையின் நாயகன் செய்கிறான். என்ன ஒரே வித்தியாசம் இதில் அவள் செய்வது இவனை இம்சை படுத்துவது தான்.

எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு அதை தாண்டும் போது தான் நாம் கோவப்படுகிறோம். ஆனால் இவனோ இவள் செய்யும் எல்லாவற்றையும் ரசிக்கிறான்.

இவளால் போலீஸ்யிடம் மாட்டிகொள்வது, பொது இடத்தில அவளின் ஹீல்ஸ் செப்பல் போட்டு கொண்டு நடப்பது, அவள் ரசிக்கும் அல்லது அவள் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்கிறாளோ அதை எல்லாம் மறுப்பு சொல்லாமல் செய்வது. அவள் அடிக்கும் அடிகளை பெற்றுக்கொண்டு அவன் காட்டும் முகப்பாவனைகள் எல்லாம் அவர்ளுடன் சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ரயில் வண்டியுள் ஒரு சிறுவன் கோட்டை கிழித்து கொண்டு இருப்பான். இவள் ஒரு போட்டி வைப்பாள் , அதில் அவன் தோற்று அவளிடம் அடிவாங்கும் காட்சி செம சிரிப்பை வர வைக்கிறது.

படத்தில் நடித்து இருக்கிற பெண்ணைவிட அந்த பையன் தான் சூப்பர். வீட்டில் அடிவாங்கும் போதும் சரி , அவளிடம் அடிவாங்கும் போதும் சரி அவன் காட்டும் முகப்பாவனை சூப்பர் ...

கொரியா படத்தில் இருக்கும் ரசனை , ஆங்கில படத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆங்கில படத்துக்காக பலது மாற்ற பட்டு இருக்கிறது.

ஆங்கில படத்தில் ஹீரோ இமேஜ் கேட்டு விடாமல் இருக்கும். ஆனால் கொரியன் படத்தில் அது எல்லாம் இருக்காது, இயல்பான நடிப்பின் மூலம் அழகா தெரிகிறது .

----------------------------------------------------------------
படத்தில் ஒரு காட்சியை பார்த்த போது இதை எங்கையோ பார்த்து இருக்கேன் என்று யோசித்தேன்.

அட அது நாம சிவா மனசுல சக்தி படத்துல வர சீன்.

கொய்யால இப்படி எல்லாம் சுட்டு தான் தமிழ் சினிமா வளந்துட்டு இருக்கு ..

படத்தை பார்க்காதவர்கள் அட்லீஸ்ட் You Tube வெப்சைட்ல பார்த்துடுங்க.
Torrentல சரியா டவுன்லோட் ஆகவில்லை.



9 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

சொல்றத பார்த்தா நல்லா இருக்கும் போலயே?!?!?!

அன்புடன் மணிகண்டன்

 

@ அன்புடன்-மணிகண்டன்


நல்ல இருக்கா ?? படத்தை பாருங்க பாஸ் உங்களை மறந்து அதில் ஒன்றி போய்விடுவிங்க ..

 

எனக்கும் ரொம்பப் பிடித்த படம்.. போன வாரம்தான் பார்த்தேன். கொரியன் வெர்ஷந்தான்...
நல்லாப்பதிவிட்டிருக்கீங்க...
//
அழகான ராட்சஸி//
நல்ல டைட்டில்...
ஆனா தமிழ்ல கொன்றுவானுங்க...
ஹீரோயின் தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது...
ட்ரெய்ன் சீன் சான்ஸ்லெஸ்..
இதிலிருந்து இன்னொரு சீன் மலையாளப் படமான ‘வினோத யாத்ரா’ வில வந்திருக்கும்.ஹீரொ, ஹீரோயினை முதன்முதலாப் பார்த்து ஹோட்டலுக்குக் கூட்டிட்டிப் போறது மட்டும்...
ரசனையான படம்,ரசனையான விமர்சனம்...

 

அருமை நண்பர் ராஜராஜன் அருமையாக பகிர்ந்தீர்கள், படம் பார்க்க ஆவல் ஏற்படுகிறது,

 

நண்பர் தமிழ்ப்பறவை உங்கள் வருகைக்கும் பின்னுடதுகும் நன்றி.

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

வாங்க பாஸ் .. மறக்காம படத்த பாருங்க உங்க பக்கங்களிலும் எழுதவும்

 

நான் கொரியன் படம் தான் பார்த்திருக்கேன். நீங்க சொல்லிதான் இங்கிலீஷ்ல வந்ததே தெரியுது. கொரியன் படம் டாப் கிளாஸ்.

 

ஹையா முதல் முதலா கொரியன் சினிமாவைப்பற்றி ஒரு தமிழ்ப்பதிவை படிக்கிறேன்...ரொம்ப சந்தோஷமா இருக்கு:) ஏங்க ஊருக்காரங்களுக்கு இன்னும் அவங்க படங்களைப் பத்தி அவ்ளோவா தெரியலையே என்று வருத்தம் தான்...கொரியன் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் இது!

கொரியாவில் இன்னும் எவ்வளவோ நிறைய சிறந்த திரைப்படங்கள் & ட்றாமாக்கள்(மெகா சீரியல் இல்லை) கொட்டிக்கிடக்கிறது... அவர்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலே இருக்கு.

இப்போ நம்மாளுங்க உஷார் ஆயிட்டதினால...இப்போ எல்லாம் ரஷ்யன், கொரியன் படங்களை கொப்பி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! இதே போலத்தான்... "மோதி விளையாடு" படத்தில கூட ஒரு கொரியன் படத்து ஐடியாவா கொப்பி பண்ணிட்டாங்க!( 100 days with Mr.Arrogant)

 

@தயா
நல்ல படம்மா இருந்தா சொல்லுங்க பாஸ் பார்த்துடலாம்