~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 07/12/2009

சொந்த வீடு கட்டி குடியேறுவது என்பது எவ்வளவு பெரிய வேலை. கடந்த 6 மாதமாக இருந்த டென்ஷன் எல்லாம் ஒரு வழியாக முடிந்து நேற்று எங்களின் புதிய வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்தி புதிய வீட்டில் குடி வந்துவிட்டோம். அப்பா அம்மாக்கு அளவில்லா மகிழ்ச்சியை குடுத்தது இந்த நிகழ்ச்சி. அப்பாவின் ஆசை என்பது ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே, 40 வருடங்கள் ஆகி விட்டது அவர் சென்னை வந்து. ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர், அவரின் ஆசை நிறைவேறியது .

வீட்டிற்கு அப்பா அம்மாவின் பெயர் வைத்துளோம்.

அன்பாலே அழகான வீடு , ஆனந்தம் அதற்குள்ளே.......
----------------------------------------------------------------------------------

போன வார ஹாட் டாபிக் சேவாக் தான். மனுஷன் என்ன அடி அடிக்கிறார் ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பே வந்து விட்டது அவர் அடிக்கும் பௌண்ட்ரி பார்த்து . பாவம் குலசேகரா தான் அவர் பவ்லிங் போட்டாவே அது எல்லை கோட்டை தண்டி தான் செல்கிறது. சங்ககார முகத்தில் சந்தோசத்தை பார்க்கவே முடியவில்லை.
ஒரு சில சமயம் இவரின் பேட்டிங் ஸ்டைல் பார்த்து வாய் அடைத்து போயிருக்கிறேன் , பல சமயம் சொற்ப்ப ரன்னில் அவுட் ஆகும் போது
ஏன்டா இவரை இன்னும் டீம்ல வச்சிருக்காங்க என்றே தோன்றும்.

எதுவாக இருந்தாலும் சரி இவரை பார்த்து எல்லா டீம்முக்கும் ஒரு பயம் இருப்பது என்னவோ உண்மைதான்.

----------------------------------------------------------------------------


ரேணிகுண்டா படத்தை பார்த்தேன். டிரைலர் பார்க்கும் போது இருந்த கற்பனையில் பாதி அளவே படத்தில் இருக்கிறது. ஆனால் படத்திற்கு செம ஓபனிங் என்றே சொல்லலாம்.

திரைகதையில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. படத்தின் எலும்பு சக்தியின் ஒளிப்பதிவு தான். பர பர சீன் எல்லாம் செம கிளாசா இருக்கு. அதும் ஜானி போடும் அந்த சண்டை கட்சியில் இவரின் கேமராதான் ஸ்டன்ட் மாஸ்டர். கால் ஊனமுற்ற பையன் என்னமா நடிச்சி இருக்கான். காமெடி , ரவுடி என்று அவன் செய்யும் சேட்டைகள் பல பல.

இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் இதை விட நல்ல படத்தை இதை விட தரமானதாக தர முடியும்.

ஒரு தடவை பார்க்கலாம். விரிவான விமர்சனத்துக்கு தல கேபிள் சங்கர் பதிவை பார்க்கவும்.

------------------------------------------------------------------

ஒரு சொல்லை ஒருவர் எத்தனை முறை சொன்னால் கேட்க புடிக்கும் ? ஒரு விளம்பரத்தை எத்தனை தடவை பார்த்தால் புடிக்கும் ? ஒரு பாடலை எத்தனை தடவை கேட்டால் புடிக்கும்??

எல்லாவற்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா !!

சாப்பிட சாப்பிட அமுதமும் நஞ்சு ஆகும் என்பது மாதிரிதான் இருக்கிறது இந்த Tata DOCOMO விளம்பரம். சேனல் திருபினால் docomo , docomoன்னு சொல்லுறத கேக்கும் போதே நம்ம மண்டைல யாரோ டொக்கு டொக்குன்னு கொட்டுற மாதிரி இருக்கு. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆரமிக்கும் இந்த விளம்பரம் தாம்பரம் வரை ஒவ்வொரு ரயில் நிலையம் வரும் போது கேட்டு கொண்டு இருக்கும். முதலில் இந்த விளம்பரம் வந்த போது ரொம்ப வித்தியாசமான சவுண்டா இருக்கே என்று விரும்பி பார்த்தேன். எங்க போனாலும் இந்த ஜிங்கல்ஸ் கேட்டு கேட்டு எரிச்சல் தான் இப்பொது வருகிறது. அதும் அந்த Friends Train என்கிற விளம்பரம் வரும் போது எல்லாம் எங்க இருந்துதான் எனக்கு அவ்வளவு எரிச்சல் வருமோ தெரியாது. டூ ட் டூ , டூ ட் டூ , டூ ட் டூ என்று இவர்கள் சொல்லுவதை கேட்கும் போது இவர்களிடம் "டூ" விட வேண்டும் என்கிற எண்ணம் தான் வருகிறது.

இப்போ புதுசா UNINOR என்கிற ஒரு மொபைல் கம்பெனி சென்னையில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது, இவர்கள் என்ன பாடுப்படுத்த போறார்களோ ..
----------------------------------------------------------------------

இன்னைக்கு படிச்சது போதும் நாளைக்கு திரும்ப வந்து பாருங்க. புது பதிவு இருந்தா அத படிங்க, புதுசு இல்லை என்றால் ????


இதையே படிச்சிட்டு போங்க..

26 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

புது வீடு கட்டியதற்க்கு வாழ்த்துக்கள்.

 

வீடு எலாருக்கும் ஒரு கனவுதான் தல
உங்க குடும்பத்தோட கனவு நனவானது மிக்க மகிழ்ச்சிதான்

உங்க டிரீட் கணக்குதான் ஏரிகிட்டே போகுது :-))

 

@ சின்ன அம்மிணி

ரொம்ப நன்றிக

 

@ கார்த்திக் ...

நன்றி தல .. ட்ரீட் தானே வச்சிட்ட போது ..

 

புது வீடு கட்டியதற்கு வாழ்த்துக்கள்

:)

 

புது வீடு கட்டி குடியமர்ந்ததிற்கு வாழ்த்துகள்.

 

புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் தல!

//உங்க டிரீட் கணக்குதான் ஏரிகிட்டே போகுது //

ஆமாங்க

ஜூனியர், புது வீடு!

 

வீடு கிரக பிரவேசம் செய்ததற்கு வாழ்த்துக்கள்,ரேணிகுண்டா பார்த்துவிட்டீர்களா?டாடா டொகோமோ பேரே எதோ பக்கோடா மாதிரி இருக்கு.:))))

 

roomi..புது வீடு.. புது குட்டி பையன், சபாஷ்.. வாழ்த்துக்கள்..

கேபிள் சங்கர்

 

@ எம்.எம்.அப்துல்லா

நன்றி அண்ணே ..

 

@ நிகழ்காலத்தில்

உங்கள் வருகைக்கும் பின்னுடத்துக்கும் ரொம்ப நன்றி .

 

@ வால்பையன்

நன்றி தல . உங்களுக்கு இல்லாத ட்ரீட்ஹா . ஈரோடு வரும் போது கண்டிப்பா வைக்கிறேன் .

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

பக்கோடான்னு சொல்லும் போதே வாய் ஊருது . டோகோமோன்னு சொல்லும் போது மண்டைல உருணுது தல .

 

@ Cable sankar

ஆமா தல கொஞ்ச நாளா எல்லாம் சந்தோஷமான விஷயமா நடக்குது. ரொம்ப நன்றி தல .

 

புது வீடு செய்திக்கு வாழ்த்துக்கள்... :)

 

வாழ்த்துக்கள் வீட்டுக்கு..வீடை கட்டிய உங்களுக்கு.

--

டோகோமோ..எனக்கும் கடுப்பு ஏற்றுகிற விளம்பரம் அந்த டிரெயின்.

 

புது வீடு கட்டியதற்கு வாழ்த்துக்கள்

:)

டோகோமோ ஹி ஹி எனக்கு ரொம்ப பிடிக்கும்

 

புது வீடு கட்டியதற்கு என் இனிய வாழ்த்துக்கள். இது போன்ற நிறைய சந்தோச தருணங்கள் உங்களுக்கு வர வேண்டும் என ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

சென்னையில் புது வீடு........ வாழ்த்துக்கள்! உங்க அப்பா அம்மா மனதுகளை குளிர பண்ணியதே ஆசிர்வாதம்தான்.

 

@ அன்புடன்-மணிகண்டன்

நன்றி மணிகண்டன்

 

@ பின்னோக்கி ..

நன்றி பின்னோக்கி .. டோகோமோவால் இன்னும் எத்தனை பேரு மண்டை காய போகுதோ ..

 

@ தாரணி பிரியா

நன்றி தாரணி . டோகோமோ மோ மோ மோ மோ $#%^&@^%$@%>> :(

 

@ என். உலகநாதன்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சார் ..

 

@ Chitra

ரொம்ப நன்றி சித்ரா . அடிகடி இந்த சைடு வந்துட்டு போங்க ..

 

சொந்த வீடு : வாழ்த்துக்கள்.

சேவாக் : அதிரடி

ரேணிகுண்டா: ஒரு தடவை பார்க்கலாம்....பாப்போம்

Tata DOCOMO : மண்டையடி

புதுசு இல்லை என்றால்: நக்கலு :)

நல்லா இருக்கு தம்பி உங்க கதம்பம்.

 

சென்னையில் சொந்த வீடு கொடுப்பிளைதான்...40 வருடம்...வாழ்த்துக்கள்..