The Red Cliff I & II
ஆங்கில ஆக்ஷன் படங்களை மிகவும் நேசிக்கும் ரசிகர்களுக்கு டைரக்டர் John Woo தெரியாமல் இருக்காது.
Mission Impossible - 2 , Face off , Broken Arrow போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த படமே The Red Cliff
சீனா நாட்டில் மிக பெரிய அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கோகோ குறுநில மன்னர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார். அதன் பொருட்டு அவரின் தலைமையின் கீழ் மிக பெரிய படையோடு Sun Quan and Liu Bei என்கிற இரண்டு நாட்டை கைப்பற்ற கிளம்புகிறார்.
இவரின் பெரும் படையை எப்படி எதிர்கொள்கிறார்கள் இந்த அரசர்கள் , எப்படி எல்லாம் யுகம் அமைத்து வெற்றிகண்டார்கள் என்பதை வெண்திரையில் அல்லது DVDயில் காண்க.
படத்தில் இருப்பது இரண்டே இரண்டு சண்டை காட்சிகள். ஒன்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றொன்று இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ். இரண்டும் வெகு அருமை, சீனா படங்களில் நடைபெறும் சண்டை காட்சிகள் போலவே இருந்தாலும் அந்த சண்டை துடங்குவதற்கு முன் அவர்கள் செய்யும் போர் தந்திரங்கள், குறைந்த அளவே உள்ள படைகளை வைத்துகொண்டு எப்படி அவ்வளவு பெரிய படையை அழித்தார்கள் என்பது ரொம்ப சுவாரசியமாக விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் நிலத்தில் நடக்கிறது , இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் நீரில்.
ஒரு பெரும் படையை அழிக்க தேவைப்படுவது வீரம் மட்டும் அல்ல ராஜதந்திரமும் கூட. படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும் அந்த ராஜதந்திரம் என்ன என்று.
Don't Miss to Watch this Movie.
-------------------------------------------------------------------------------------------------------
ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ருத்ர தாண்டவம் படத்தை பார்க்க நேர்ந்தது. வி.கே.ராமசாமி, நாகேஷ் நடித்த படம் படத்தில் வி.கே.ராமசாமி சிவனாகவும், நாகேஷ் கோவில் பூசாரி ஆகவும் நடித்து உள்ளனர்.
படத்தில் சிவன் வெகு இயல்பாக பேசியது தான் அருமை. கடவுள் எல்லாம் வரத்தை குடுக்கணும் அல்லது உபதேசம் மட்டுமே பண்ணவேண்டும் என்கிற கொடுமையை அப்பவே உடைத்து எரிந்துள்ளர்கள். ஒரு இடத்தில நாகேஷ் இந்திய பெரிய நாடுதானே பேசாமல் மாநிலங்களை எல்லாம் பிரித்துவிடலாம் என்று யோசனை சொல்லுகிறார் அதற்கு வி.கே.ராமசாமி சொல்லும் பதில் அருமை. இன்றைய காலகட்டத்துக்கு ஒத்துபோகிற நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளது.
படத்தில் ஒரு காட்சி :-
கோவிலில் இருக்கும் பார்வதி சிலையை கடத்திவிடுகிறார்கள் அதை தெரிந்து சிவன் ரொம்ப சோகமாக கோவிலில் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்லும் நாகேஷ் தனது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சிவனோ ரொம்ப பயந்து போய் இருக்கிறார், பூசாரி இப்போ பார்வதியை அமெரிக்காக்கு கடத்திட்டு போய்ட்டாங்க, நாளைக்கு என்னைய சீனாக்கு கடத்திடான்கனா அதுக்கு அப்பறம் நானும் பார்வதியும் ஒண்ணு சேரவே முடியாதே. சீனா அமெரிக்க ஒண்ணு சேர்ந்தாதான் நாங்க சேருவோம். அதற்கு நாகேஷ் சொல்லுவர் நான் இருக்குறார் வரைக்கும் உங்க மேல ஒரு கை வைக்கவிடமாட்டேன்.
இந்த வசனத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம் சாமியோட நிலைமை என்னனு.
-------------------------------------------------------------------------------------------------------
போர்க்களம் - நண்பன் ஒருவன் ரொம்ப வற்புறுத்தி சொல்லியதால் பார்த்த படம், நிஜமாலுமே படத்தை தியேட்டர்ல பார்க்காதது பெரும் தவறு :(. பாண்டி சரோஜ் குமார் இயக்கம் சிம்ப்லி சூப்பர்.
எல்லா இடத்திலையும் ஏதோ ஒரு வித்தியாசத்தை ஆங் ஆங்கே புகுத்தி அசத்தியுள்ளார். கேமரா கோணம் எல்லாம் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத புதுவித கோணம்.
படத்தின் கதைக்களம் அருமை, மாஸ் ஹீரோ யாரவது நடித்து இருந்தால் படம் செம ஓட்டம் ஓடி இருக்கும், கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. சத்யன் படத்தில் அருமையாக நடித்துள்ளார். இயக்குனர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது .இவரின் அடுத்த படத்தை கண்டிப்பாக முதல் காட்சிளையே பார்த்துவிடவேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
நான் சிறுகதைகளை முழு மூச்சாக படிக்கமாட்டேன், எந்த ஒரு புத்தகத்தையும் அப்படி படிப்பதுயில்லை. காரணம் அதன் தாகம் என்னில் கொஞ்ச நேரமே இருக்கும் அதனால் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அந்த புத்தகத்தின் தாக்கத்தை என்னுள் பல நாட்கள் இருக்கும் படி செய்துகொள்வேன். கேபிள் புத்தகம் வெளிவந்து பல நாட்கள் ஆகிறது ஆனால் நேற்றுதான் கடைசி பக்கத்தை படித்து முடித்தேன்.
புத்தக வெளியிட்டு விழா அன்று அஜயன் பாலா புத்தகத்தை பற்றி பேசும் போது துரை.. நான்.. ரமேஷ்சார் என்கிற கதை ரொம்ப அருமையாக இருக்கிறது என்று சொன்னார். அவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். மற்ற எல்லா கதைகளைவிட இந்த கதை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அந்த பெண்மணி மூலம் கதையை நகர்த்தி கொண்டு சென்றது நல்ல உக்தி. சமிபத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி நாவல் படித்தேன், அதற்கு வெகு அருகில் செல்கிறது இந்த கதை. இந்த புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்றால் தனி பதிவே போடவேண்டும்.
புத்தகத்தில் இருக்கும் பலகதைகள் பாலியல் அல்லது காதலை மையப்படுத்தியே இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு கதைகள் தான் வேறுதளத்தில் அருமையாக பதிகப்படுள்ளது.
பிடித்தது என்று ஒன்று இருக்கும் எனில் பிடிக்காதது என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்
அது என்னை பிடிக்கவில்லையா..? தான் . கள்ளகாதல் என்றுமே ஏற்புடையது அல்ல இது எனது வாதம்.
மற்றபடி 15+ படிக்கவேண்டிய புத்தகம்.
இந்த ஆண்டுக்குள் சீக்கிரம் அடுத்த புத்தகத்தை ரிலீஸ் பண்ணிவிடுவார் போல இருக்கிறது. புத்தகம் வெளியாகி 10 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் 3 சிறுகதைகளை எழுதிவிட்டார்.
With Love
Romeo ;)
10 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடுகை........... இது எப்படி இருக்கு?
ரோமியோ அனைத்தும் வேறு வேறு கோண விமர்சனங்களாய் முடித்திருக்கிறீர்கள். ருத்ரதாண்டவம் இதுவரை பாக்கல..இப்பப் பாக்கனும்னு தோனுது
ருத்ரதாண்டவம் தான் இன்றைய அறை எண் 305ன் கடவுள். இந்த படத்தை ராதாரவி நடித்து இயக்க பிரமிட் சாய்மீராவில் அட்வான்ஸ் வாங்கிய்ருந்தார்.
அந்த படம் வி.கே.ஆரின் சொந்த படம்.
என்னை பிடிக்கலையா கதையில் கள்ளக்காதலை நான் ஆதரிக்கவில்லை. அது எதனால் ஏற்படுகிறது எனபதை சொல்லத்தான் எழுதினேன். ஒரு சின்ன விஷயம் கூட ரிலேஷன்ஷிப்பில் பெரிய கேப்பை உண்டாக்கும்.
கேபிள் சங்கர்
நீங்க சொல்லியிருக்கும் படங்களும் இன்னும் பார்க்கவில்லை. புத்தகமும் படிக்கவில்லை.
என்ன நண்பா ஏகப்பட்ட மேட்டர் ஒரே பதிவில் எழுதிடுறீங்க. ஆனா நல்லா தான் இருக்கு
நானும் ரெட் கிளிஃப் படம் பார்த்தேன் ரோமியோ..
கடைசில அவ்வளவு பெரிய தளபதி முக்கிய போர்க்கட்டத்தில் டீ சாப்பிட ஆசைப்பட்டு சாம்ராஜ்யத்தையே இழப்பார் என்பதெல்லாம் செம காமெடி..
ருத்ர தாண்டவம் நல்ல திரைப்படம் தான்.. வி.கே.ராமசாமியும் நாகேஷ் அவர்களும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.. திரைப்படங்களில் வரும் வசனங்களை வைத்து கடவுளின் நிலைமையை தெரிஞ்சிக்கரீங்களா?? கில்லாடி பாஸ் நீங்க..
போர்க்களம் இன்னும் பார்க்கலை.. விரைவில் பார்க்கணும்..
//கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. //
ரைட்...அது உங்க பார்வை....
கிஷோர் இஸ் பெர்பெக்ட் ஹீரோ...
போர்க்களத்தில் புதியதாக நிறைய விஷயங்கள்
இருந்தாலும் சலிப்புக்கு குறைவில்லை...
சுவாரசியமும் இல்லை.... இயக்குனர் சராசரி
சினிமா ரசிகர்களை கவர தவறிவிட்டார்.....
@ Chitra
நன்றி மற்றும் அருமை
@ புலவன் புலிகேசி
பாருங்க சகா. படம் சூப்பரா இருக்கு
@shortfilmindia.com
அந்த படம் டிராப் ஆகிடுச்சா தலைவரே ?? எனக்கு புரியுது பாஸ், ஆனால் கள்ளகாதல் என்பது ஏற்கமுடியாத ஒன்று அதைதான் சொன்னேன்.
@சின்ன அம்மிணி
கொஞ்சம் ட்ரை பண்ணுங்க படத்தையும் பார்க்கலாம். புத்தகத்தை படிக்கலாம்
@மோகன் குமார்
நன்றி பாஸ்.
@அன்புடன்-மணிகண்டன்
நண்பா அந்த படம் உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டது. அவங்க சாம்ராஜியத்தை இழக்கவில்லை, அந்த போரில் தோற்துவிடுகிரர்கள்.
@ ஜெட்லி
சராசரி படம் இல்லை அது சகா. ஒரு மசாலா படத்திருக்கு தேவையான நிறைய மேட்டர் இருக்கு. ஆனால் அதை ரொம்ப வித்தியாசமா எடுத்து இருக்கார் இயக்குனர். கிஷோர் ஒரு ஹீரோவா பார்க்க முடியல சகா, அவரின் நடிப்பு அருமை ஆனால் அது ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு இல்லை.
நண்பா,
ஜான் வூ நல்ல இயக்குனர்.பிரம்மாண்டத்தை ஓவ்வொரு ஃப்ரேமிலும் செதுக்குவார்.
நல்ல பகிர்ந்தீர்கள்,மேலும் எழுதுங்கள்.புத்தக விமர்சனமும் சீக்கிரம் போடுங்கள்.
ஃபார்மாலிட்டி டன் நண்பா
Post a Comment