கோபி எப்படியும் இந்த காரியத்தை முடித்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் அவன் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். எங்கள் சங்கத்தில் அவனை போல தைரியசாலி யாரும் இல்லை, இந்த வேலை செய்ய அவன் ஒருவனைவிட்டால் வேறு ஆள் முன்வரமாட்டார்கள்.
எங்களை பார்த்தாலே சுடுவிடுவதை போல பார்க்கும் அந்த மீசைக்காரர்க்கு இதைவிட வேறு அதிர்ச்சி ஏதும் இருக்காது.
இதோ கோபி வந்துவிட்டான்.
மச்சி காரியம் கச்சிதமா முடிஞ்சிடுச்சு - சொல்லும் போதே மிக பெரிய சாதனை செய்தவன் போல நெஞ்சை நிமிர்த்தி சொன்னான். அவன் கைகளில் அது இருந்தது.
ஆள் ஆளுக்கு அவனை பாராட்டினோம். நாளைக்கு காலைல யாரும் அந்த சைடு போகாதிங்க என்று எல்லோருக்கும் அறிவுரைதான்.
அடுத்த நாள் காலனியில் எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. சங்கத்தின் உறுபினர்கள் மொட்டைமாடியில் கூடி தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்று விவாதித்தோம்.. கோபி ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டான், தான் தவறு ஏதும் செய்யவில்லை சந்தோஷ் சொல்லி குடுத்த முறையைத்தான் பின்பற்றினேன் என்றான்.
சரி மணி ஆகிவிட்டது எல்லோரும் அவர் அவர் வீட்டிற்கு சென்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு டியூஷன் சென்றோம் மீசைகாரரிடம்.
எங்கள் யூகம் தவிடுபொடி ஆனது , மீசைக்காரர் முகத்தில் அது .
அப்ப கோபி எடுத்துட்டு வந்தது??
மீசைகாரரின் அம்மா கோபியின் கால்களை மிதித்துவிட்டார்.
"யப்பா என்னோட கண்ணாடி எங்கையாவது இருக்கானுபாரேன். கண்ணு சரியா தெரியல"
"அம்மா நீ அந்த பக்கம் எல்லாம் போகாதா நான் நாளைக்கு புதுசா கண்ணாடி வாங்கிதரேன் சொன்னேன்ல. இப்படி வாமா , கண்ணாடிய எங்கையாவது வச்சிட்டு ஏன் எங்க உசுர வாங்குற. போய் படு அந்தாண்ட "
சரி பசங்களா எல்லோரும் அஞ்சாவது வாய்பாட்டை படிங்க. டேய் கோபி மூணாவது வாய்பாட்டை படிச்சியா?? வாடே இங்க, எங்க உன்னோட கூட்டாளிங்க எல்லாம் ??
மவுனமாய் நின்று கொண்டு இருந்தான் கோபி. அவன் கால்சட்டை பையில் அந்த கண்ணாடி.
With Love
Romeo ;)
Romeo ;)
15 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
1/25
raittu
aduththa book ungalodatha?
ம்ம்ம்ம்ம்ம்... கலக்குங்க
:-)))
என்னா பில்டப்பு....நடத்துங்க..
innum konjam clarity ..:)
இத நாங்க திருபாச்சியிலயே பார்த்துட்டோம்!
மவுனமாய் நின்று கொண்டு இருந்தான் கோபி. அவன் கால்சட்டை பையில் அந்த கண்ணாடி.
........... சரிதான் ....... புத்தக வெளியீட்டு விழாவுக்கு, கண்டிப்பா வாரேன்.
புத்தகக் காட்சியில் எடுத்துக்கொண்ட படம் பத்திரமா இருக்கு, பிற்காலத்தில பயன்படும் :)
www.writeromeo.com
www.romeo.in
www.romeoonline.com
எது நல்லா இருக்குனு சொன்னீங்கன்னா, ஆரம்பிச்சிடலாம்
ஒரு 'ர்' விட்டுப்போச்சி
www.writerromeo.com
ரைட்...புக் ரீலீஸ் எப்போ....
என்னா வில்லத்தனம் ...?
திருப்பாச்சி part 2 வா? கலக்குங்க romeo.. நல்லா இருக்கு build uppuuu..
@அதி பிரதாபன்
தெரியல பாஸ் :D
@கவிதை காதலன்
நன்றி boss
@ஈரோடு கதிர்
பாஸ் நான் காமெடி பண்ணல பாஸ்.. இப்படி எல்லாம் ஸ்மைலி போட்டு பதிவ காமெடி பீஸ் ஆகிடாதிங்க.
@புலவன் புலிகேசி
நன்றி சகா
@Cable Sankar
அடுத்த அடுத்த கதைகளில் கண்டிப்பா வரும்.
@வால்பையன்
பாஸ் சீக்ரெட் வெளிய சொல்லாதிங்க.
@Chitra
ஏங்க நீங்களுமாக :(
@சங்கர்
romeoonline.com ஓகே சகா
@ஜெட்லி
என்னை ரவுடின்னு நினைச்சிட்டு இருக்குற அப்பாவி நீயுமா சகா ??
@ஸ்ரீராம்
வில்லத்தனம் இன்னும் இருக்கு பாஸ்
@திவ்யாஹரி
நன்றி
நண்பா புது டெம்ப்ளேட் ,கதை அருமை
கலக்குங்க,ஃபார்மாலிட்டி டன்
கதை நல்லாயிருக்கு.. நீங்க தான் அந்த கோபியா? ஹா ஹா ஹா..
Post a Comment