~~ROMEO~~

Everyday Starts with Happy :)

விட்டுவிட்டேன்








  இதே போன்று உங்களுக்கும் ஏற்படலாம் அல்லது  ஏற்படாமலும் போகலாம் 




சி நாட்களாக வலது காலில் வலி அதிகமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக சில நாட்கள் காலில் வலி வந்து பாடாய் படுத்திவிடும். தூங்கும் போது கால்களை நேராக வைத்து படுக்க முடியாது. வலது கால் முழுக்க வலி இருந்து கொண்டே இருக்கும். எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் வலியுடன் தூங்கிய நாட்கள் அதிகம். ஏன் எதனால் என்று தெரியாமல் இருந்தேன். 5 மருத்துவர்களை மாற்றி மாற்றி சந்தித்த போது அனைவரும் வலிநிவாரணி மருந்தையே தந்தார்கள். ஒருவர் இது கண்டிப்பாக யானைக்கால் வியாதின் ஆரம்பம் என்றார். அவர் எழுதி குடுத்த மாத்திரையை ஒரு மாதம்  உட்கொண்டேன் ஒரு ப்ரோஜனமும் இல்லை. சென்ற இடம் எல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  நண்பர்கள் சிலரிடம் இதை பற்றி பேசியபோது இது நரம்பு சம்பந்தபட்டது அதனால் அதற்குண்டான மருத்துவரை பார்க்க சொல்லி பரிந்துரைத்தார்கள். 





மருத்துவர்களை பார்த்து பார்த்து ரொம்ப சலித்து போனதால் நரம்பியல் மருத்துவரை சந்திப்பதை சிறிது காலம் தள்ளி போட்டு கொண்டு வந்தேன். இன்நிலையில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவதை நிறுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். டீ , காபி, டிபன், சாப்பாடு என்று எதை சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது வாந்தியாக வெளிவந்துவிடுகிறது. வெளியே எங்கு சென்றாலும் தண்ணி கூட குடிப்பது இல்லை. வர வர உடல் நிலை மோசமாவதை கண்கூடாக பார்த்தேன் முன்றே வாரங்களில் 4 கிலோ கம்மியாகி போனேன். 

 ஏன் எதற்கு என்று தெரியாமல் வெறுப்பின் உச்சியில் சிலநாட்கள் இருந்தேன் , மாத்திரை சாப்பிட சாப்பிட அதன் மேல் ஒரு வித வெறுப்பு உண்டானது .  மனைவி ரொம்ப பயந்துவிட்டாள் சென்ற முறை ஊருக்கு சென்ற போது இதன் தாகம் அதிகமாக இருந்தது. அங்கு இருக்கும் ஒரு மருத்துவரை பார்க்கும் படி என்னை வற்புறுத்தினாள், சரி என்று அவரை சந்திதேன் அதும் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். எனது உடன் நிலையை பற்றி அவரிடம் முழுவதுமாக சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.  

"நீங்க புகைபிடிபவரா  ?" 

ஆம் என்று ஒத்து கொண்டேன்.  உங்களது  அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம் என்று அவர் சொல்லிய விளக்கங்களை  கேட்ட போது என்னை அறியாமல் உயிரின் மேல் ஒரு வித பயம் வந்துவிட்டது.

புகைபிடிப்பதால் கேன்சர் மட்டுமே வரும் என்று நிறைய பேர் நினைத்து கொண்டு இருகிறார்கள். அது தவறு உங்களுக்கு அல்சர், அஜீரண கோளாறு, முச்சு விடுவதில் சிரமம், கால் வலி போன்று நிறைய வியாதிகள் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான் .  உங்கள் கால் நரம்புகளில் செல்லும் இரத்தம் தடைபடும் போது தான் வலியை உணருவீர்கள். இதற்கு ஒரு வழி புகைபிடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றார். 

உடனே நிறுத்துவது சிரமம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறேன் என்றேன்.  அது எல்லாம் கூடாது நீங்கள் இப்பவே நிறுத்த வேண்டும், இல்லை என்றால் உங்கள் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றவர் உதரணத்துக்கு ஒன்றையும் சொன்னார். என்னை போன்றே ஒருவர் கால் வலி  சிகிச்சைக்காக வந்தார் அவருக்கும் இதே போன்று வலி இருந்தது. மருத்துவர் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் புகைப்பதை அவர் நிறுத்தவேயில்லை அதனால் அவரின் ஒரு கால் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எடுத்தும் விட்டார். 

இதை கேட்கும் போதே நினைத்து கொண்டேன் இந்த சனியனை விட்டோழிய வேண்டும் என்று. 

அதை செயல்படுத்த என்னால் முடியவில்லை. கண்டிப்பாக நான் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறேன். எப்பொழுதும் மனம் புகைப்பதை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறது . எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை, காலையில் எழுந்தது முதல் சிந்தனைகள் எல்லாம் அதிலே முழ்கி இருக்கும். எப்போது வெளியே போகலாம் புகைக்கலாம் என்று சிந்தனைகள் சிதறடித்து இருக்கும். எனது நிலையில் நான் உறுதியாக இருக்கவேண்டும் என்று மிக தீவிரமாக இருக்கிறேன். புகைப்பதை நிறுத்துவது அவ்வளவு எளிது அல்ல என்பதை 3  நாட்களில் தெரிந்துகொண்டேன். குடும்பத்தை நினைக்கும் போது எனது செயலில் நான் உறுதியாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. வெகு சிரமத்துக்கு பிறகு இப்பொழுது முழுவதுமாக நிறுத்தி விடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  நிறுத்தியவுடனே எனது உடலில் பல பல மாற்றங்களை நான் சந்திப்பேன் என்றால் அது சுத்த பொய். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேரும். அதே சமயம் மனதை கட்டுபாடுடன்  வைத்துகொள்ள வேண்டும். தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 

 நண்பர்களுடன் நானும் ரவுடி தான் என்கிற திமிரில் ஆரமித்த பழக்கம், 15 ஆவது வயதில் இருந்து தினமும் என்னுடன் வந்துகொண்டு இருக்கிறது. இது தவறு என்று தெரிந்தே அதனுடன் உறவாடிய நாட்கள் அதிகம். வாழத்தான் வேண்டும் என்கிற நிலை வரும் போது பிரிவது நன்று தான். 

விட்டுவிடுவோம் புகையை  


With love
Romeo ;)

27 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

............ரோமியோ சார், ப்ளீஸ்.......... கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, நீங்கள் முழுவதுமாக குணமாக வேண்டும்.
சீக்கிரம், நீங்கள் பூரண நலத்துடன் இருக்கும் செய்தியையும் சொல்லுங்கள்.

 

அன்புள்ள ரோமியோவிற்கு,
உங்கள் வயது 30க்குள் இருக்கிறது. மனதிடம் நன்றாக இருக்கக்கூடிய வயது.
ஒரே மனதாக இந்த பழக்கத்தை உடனே விட்டு விடுங்கள். உங்கள் குடும்பத்தை நினையுங்கள்.
என்னுடைய நண்பர்கள் ஒருவருக்கு காலை எடுத்தாகிவிட்டது. இன்னொருவர் எமலோக வாசல் வரை எட்டிப்பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார்.
யோசியுங்கள்.

 

நல்ல விஷயம்.....
கொஞ்சம் கடினமான விஷயமும் கூட.....

 

ரோமியோ,

புகைப்பதை நிறுத்திவிட்டு தினமும் தியானம், யோகா செய்யுங்கள். நடைபயிற்சி செய்யுங்கள். முடிந்தால் வாரத்தில் 4 நாட்கள் ஜிம் செல்லுங்கள். பின் மாற்றங்களை உணர்வீர்கள். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையென்றாலும் நான் தினமும் அனைத்தையும் செய்கிறேன். அடுதத சிகரட் எடுக்கும்போது உங்கள் மனைவியின் முகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.

 

நல்லதொரு மாற்றம்..

புகைபிடிக்க வேண்டுமென்று தோன்றினால் அந்நேரம் உங்களுக்கு பிடித்த இன்னொரு விசயத்தில் கவனம் செலுத்துங்கள்..சினிமா,புத்தகங்கள்,பிளாக்,செக்ஸ்..இது போல ஏதாவது ஒன்று..

விரைவில் முழுதும் குணமடைய வாழ்த்துக்கள்..!

 

முயன்றால் முடியாததில்லை. காலைக் காப்பாற்ற இதைக் கூட விடமுடியாதா?

 

தல சுத்தமா இனி நெனச்சிக் கூட பாக்காதீன்க...நல்ல முடிவெடுத்திருக்கிறீர்கள்..

 

நல்ல முடிவு. ஒன்று செயுங்களேன். உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒருத்தரிடம் தினமும் இரவு "இன்று புகை பிடிக்கவில்லை" என்று சொல்ல ஆரம்பிங்களேன். தினமும் அதை சொல்லவே புகை பிடிக்காமல் இருக்க முயற்சிங்கள்.

அப்புறம், என்னைய மாதிரி நிறைய பேர் ஐடியா குடுக்க ஓடி வருவோம். ஆனா எது உங்களுக்கு பிடிக்குதோ அதே தேர்ந்து எடுத்து அதை மட்டும் கடைபிடிங்க.

There is nothing called "one solution for all".

 

எண்ணெய் கொப்பளித்தல் செய்யுங்கள்.,

உடல்பாதிப்புகள் நிச்சயம் குறையும்.,

புகையை நிறுத்தி விட்டீர்கள் என நம்புகிறேன்.

 

விரைவில் முழுவதுமாக குணமடையுங்கள் ரோமியோ.. பலரும் இந்த கன்றாவி பழக்கத்தை விட வேண்டும்.

 

//நண்பர்களுடன் நானும் ரவுடி தான் என்கிற திமிரில் ஆரமித்த பழக்கம்,//

உண்மைதான் இது போல் ஆரம்பிக்கும் பழக்கம் தான் ...நல்ல விசயம் கண்டிப்பாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள்..

 

அவசியம் நிறுத்தி விடுங்கள் ரோமியோ. எனது அண்ணன் பல வருடங்கள் புகை பிடித்து, குழந்தை பிறந்த பின் முழுமையாக விட்டு விட்டார். மனது வைத்தால் முடியும். மீண்டும் பழக்கத்துக்கு சென்று விடாதீர்கள்.

 

நல்ல விஷயம்...உடனே நிறுத்தி விடுங்கள்...என்ன இருக்கிறது அதில்... காதலும் கத்திரிக்காயும் என்ற 'எங்கள்' இடுகையும் இதைத்தான் வலியுறுத்துகிறது...

 

அன்புடன் நண்பருக்கு வணக்கம் இந்த பதிவு மிக அருமை இந்த காலத்திருக்கு அவசியம். புகை பிடிப்பதை நிறுத்தி !!!பின்னர் புகை பிடிப்பவர் அருகில் வந்தாலே வாந்தி வரும் அளவுக்கு எளிய பயிற்சி உள்ளது எனது மெயிலில் கேளுங்கள் (இதிலே எழுதலாம் அனால் சில பின்தொடர்ச்சி உள்ளதால் தனியாக கேட்க )இலவசம்தான் s.n.ganapathi..ganalatha05@gmail.com

 

நல்ல முடிவு ரோமியோ.. வாழ்த்துக்கள்... :)

 

உடம்பைப்பாத்துக்குங்க நண்பா!

அதை விட்றுங்க!

 

நல்லமுடிவு..........சீக்கிரத்தில் காரணத்தை இனம் கண்டது இன்னும்மகிழ்ச்சி.........நலம் பெற வேண்டுகிறேன்.
மனது வைத்தால் எல்லாம் முடியும். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 

பின்னுடம்யிட்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் அக்கரை என்னை ஏதோ செய்கிறது. சந்தோசமாக சீக்கிரம் சொல்வேன் நான் நலம் என்று.

 

ரோமியோ..

மருத்துவர் சொல்வது தயவு செய்து கடைப்பிடியுங்கள்..!

உங்களுக்குக் குடும்பம் இருக்கிறது. அவர்களைவிட அந்த சனியன் பிடிச்ச சிகரெட் முக்கியமில்லை..!

தலையைச் சுற்றித் தூக்கித் எறியுங்கள்..!

இந்த அளவுக்கு சீக்கிரமாக உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியிருக்கும் முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆக வேண்டியதை பாருங்கள்..!

 

விட்டுவிடுவோம் புகையை //

OK..:))

 

//இந்த அளவுக்கு சீக்கிரமாக உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியிருக்கும் முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆக வேண்டியதை பாருங்கள்..!//
உ.த அண்ணன் சொல்றதக் கேட்டு விட்டுறாதீங்கண்ணே!
உங்களுக்கு புடிக்கலைன்னா மட்டும் விடுங்க.

 

@ Chitra
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

@Dr.P.Kandaswamy
ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி. கண்டிப்பாக விட்டு விடுகிறேன்

@ஜெட்லி
ஆமா சகா

@என். உலகநாதன்
ஜிம்மு தான் செல்லலாம் என்று இருக்கேன் தலைவரே.

@வெற்றி
உண்மையில் கவனத்தை எங்கு திசை திருப்ப முடியாது தலைவரே. மனசு எல்லாம் அதில் தான் இருக்கும்.உங்கள் கருத்துக்கு நன்றி.


@ தாமோதர் சந்துரு
விட்டுவிட்டேன் சார்.உங்கள் கருத்துக்கு நன்றி

@புலவன் புலிகேசி
நானும் அதை தான் ரொம்ப தீவிரமா பண்ணிட்டு இருக்கேன் சகா

@செந்தில் நாதன்
செந்தில் சார் தினமும் நான் எனது மனைவிடம் இன்னைக்கு சிகரட் புடிக்கல என்று சொல்லி கொண்டு இருக்கிறேன். நன்றி சார்

@ நிகழ்காலத்தில்
எண்ணெய் விஷயத்தில் முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன் பாஸ்.

@SanjaiGandhi
கண்டிப்பா தலைவரே.

@நாடோடி
விடுப்பட்டு விட்டேன் என்று சொல்லலாம் தலைவரே.

@மோகன் குமார்
நிறுத்திவிட்டேன் தலைவரே.

@ஸ்ரீராம்
கண்டிப்பாக பாஸ்

@hamaragana
சார் கண்டிப்பா உங்களுக்கு நான் மெயில் பண்ணுறேன்.

@அன்புடன்-மணிகண்டன்
நன்றி மணி

@ சுரேகா
கண்டிப்பா தலைவரே

@உண்மைத் தமிழன்
கந்தனுக்கு அரோகரா

@ஷங்கர்.
ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகாதிங்க, உங்களுக்கு சேர்த்தே தான்.

@Cable Sankar
டிக்கெட் வாங்காம இருந்த தான் இந்த ரைட்டா

@மயில்ராவணன்
அப்ப என்னோட கால் போனால் பரவாலையா. நல்லா சொல்லுரிங்க ஐடியா

 

உங்களை சுற்றியுள்ள எல்லோரிடமும் இனி நான் தம்மடித்தால் என்னை அறைந்துவிடுங்கள் என்பது போல் அடிக்கடி சொல்லி பந்தா பண்ணுங்கள் , ( இதுவும் ஒரு வழிதான் )

 

Chitra said...

தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

............ரோமியோ சார், ப்ளீஸ்.......... கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, நீங்கள் முழுவதுமாக குணமாக வேண்டும்.
சீக்கிரம், நீங்கள் பூரண நலத்துடன் இருக்கும் செய்தியையும் சொல்லுங்கள்.

எனக்கும் சொல்லுங்க romeo sir..

 

ரைட்டு, தல.

முடிவெடுத்துருங்க, நாங்க இதையெல்லாம் தாண்டி வந்துட்டோம்.

 

``இத்தீய பழக்கம் இளைநர்களிடமிருந்து ஒழிய வேண்டும்`` என்று இப்பதிவை வெளியிட்ட உங்கள் உண்மை நோக்கத்திற்கு முதலில் பாராட்டுகள்.. இதில் ``படிப்படியாக `` என்று ஒன்றுமில்லை...இந்த நொடி ``டாடா`` காட்டி விடுங்கள் அந்த ``சனியனுக்கு``
எத்தனை உடல் / மன பிரச்சினைகளை கிளப்பிவிட்டிருக்கிறது..