~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சுட்ட கவிதை

எனது தோழி கண்மணி அனுப்பிய கவிதை இது. காதலில் ரொம்ப அவஸ்தைபட்டவர். அவரின் கவிதைகள் எல்லாம் ரொம்ப சோகமாக தான் இருக்கும். இன்று ஏனோ கொஞ்சம் சந்தோஷத்துடன் இந்த கவிதையை எழுதி இருக்கார். ரொம்ப நாளுக்கு பிறகு அவரிடம் தெரிந்த சந்தோஷத்தை. அவரின் ஒப்புதலுடன் சில மாற்றங்கள் செய்து இங்கே.நீ
எனது
நடமாடும்
இரண்டாம் உயிர்
என் வானத்தில் இரு சந்திரன்
ஒன்று மேலே .
மற்றது என்னருகில் நீ.


காற்றின் மேல்
எனக்கு தீரா கோபம் !
ஐந்து அங்குல இடைவெளியில்
நீ
கொடுத்த முத்தத்தை
காற்று எனக்கு வேண்டும் என்று கவர்ந்து சென்றது ..


உன் இடையில் ஹெல்மட் வைத்து
நீ
நடக்கையில்
ரசித்து நான் சொல்லுவேன் . .
இத மாதிரி நான் நம்ம
குழந்தைய சுமக்கனும்டா என்று.
சொல்லுகையில் நெற்றி பொட்டில்
நீ
முத்தமிடுகையில்
அந்த ஆசையெல்லாம் அடங்கி செத்துவிட தோணுமடா


உன் தோளில் தெரியாத்தனமாய்
பட்டாம்பூச்சி உட்கார ....
நீ
அதை "சூ" என்று துரத்தினாய் ,,,,
நான் பதிலுக்கு அதை நசிக்கியே விட்டேன் ..
அத ஏண்டி கொன்னுட்ட என்று நீ கேட்டபோது
வாழ்கையில் அது செய்த மிகபெரிய தவறு உன்மேல் உட்கார்ந்தது அதற்கு உண்டான தண்டனையை நான் குடுத்தேன்...
உன் மூச்சு காத்து என்மேல் மட்டும் தான் படனும்டா.
நீ
எனது தெய்வம் டா .


உங்க வீட்டு தஞ்சாவூர்
பொம்மை மட்டும்
தலையை ஆட்டுவதற்கு
பதிலாக கண்ணடிக்க தொடங்கிற்றே . .
அதற்கும் உன்மேல் காதலா

நீ
முகம்
கழுவும் தண்ணீரை
நான் பருக வந்த போது ..
"போடீ லூசு " என்று நீ விரட்டினாய் ,
முகம் சுருங்கி போன என்னை
அள்ளி அனைத்து எச்சில் பண்ணினாய் கண்ணத்தை ..
சிணுங்கலுடன்
"நான் தண்ணி தானே கேட்டேன் ..
நீ
தீர்த்தமே கொடுத்துட்ட "


ஒருநாள் உன்னுடன் நான் பேசுகையில்
நகம் கடித்த போது
நகத்தை கடிக்காத என்று சட் சட் எனது விரலில் அடித்தாய்
அன்றில் இருந்து இன்று வரை
உன்முன் நகத்தை கடிக்காமல் நான் பேசியதில்லை

உனக்கு என்னடா பிடிக்கும்
என்று நான் கேட்ட போது
நீ
சொன்னாய் "உன்ன தாண்டி பிடிக்கும்"
உனக்கு என்று திருப்பி கேட்டாய்
"உன் நிழல் கூட பிடிக்கும் " என்று
நான் சொன்னவுடன் .
நீ
கட்டி அணைத்ததில்
உன் உப்பு நீர் வாசமும் பிடித்துப்போனது எனக்கு..With Love
Romeo ;)

படித்து முடித்த புத்தகம் - நான் சந்தித்த மரணங்கள்

என்னை ரொம்ப பாதித்த ஒரு மரணம் என்றால் அது எனது தம்பி மரணம் தான். எனது சித்தப்பாவின் மகன், அவன் மறைந்த போது வயது 20க்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியான சுபாவம் கொண்டவன் யாரிடமும் அதிகம் பேசமாட்டான். ஒல்லியான உடல்வாகு கொண்டவன். அவனும் எனக்கும் சிறிய கைகலப்பு நடந்தது அது ஒரு சின்ன விடயம் தான், அப்பொழுது நானும் கொஞ்சம் அவரசப்பட்டேன், அவன் அப்போது சிறியவன் அதனால் அவனுக்கு அவன் செய்யும் காரியம் பெரிதாகப்படவில்லை, என்னை ஒருமையில் அழைத்தால் கொஞ்சம் கடுமையாக நான் நடந்து கொள்ளவேண்டியது ஆயிற்று. அந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களுக்கு பிறகு அவனிடம் சகஜமாக பேச ஆரமித்தேன். நான் கோவையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த சமயம் ஒரு நாள் எனது சித்தப்பா கைபேசியில் அழைத்து அவனின் மறைவு பற்றி சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. நட்ட நடு சாலையில் அழுதேன், இதற்கு முன்னால் யாருடைய மரணத்துக்கும் இந்த மாதிரி அழுதது இல்லை. அடித்து பிடித்து அவனை வைத்து இருந்த பிணவறை சென்றேன் ஒரு மூட்டையில் அவனை கட்டி வைத்து இருந்தார்கள். ரொம்ப கொடுமையான நிகழ்வு அது, எனது மனதை விட்டு நீங்காத வடுவாங்க அமைந்துவிட்ட சம்பவம். இப்போது நினைத்தாலும் மனதில் ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போல இருக்கும்.


இதே மாதிரி நம்மில் நிறைய மனிதர்கள் தங்களில் வாழ்கையில் சந்தித்த ஒரு மரணத்தையே தாங்க முடியாமல் , மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் தனது வாழ்கையில் பிறந்தது முதல் இப்பொழுது வரை தான் நேசித்த மனிதர்களின் மரணங்களைஅருகில் இருந்து பார்த்தே வாழ்ந்துகொண்டு இருக்கிறார் மரண கானா விஜி.

நான் சந்தித்த மரணங்கள் புத்தகத்தில் மரண கானா விஜி தனது வாழ்கையில் சந்தித்த மரணங்களை பற்றி கூற கார்கோ அதை தொகுத்துள்ளார்.

அவரின் வாழ்க்கை எங்கு இருந்து தொடங்கியது, எப்படி நண்பர்கள் சேர்ந்தார்கள், மெரினா பீச்சில் நடக்கும் கொடுமைகள், சுடுகாடு வாழ்க்கை, காதல், காமம், பாசம், பணம், கானா என்று அவரின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை கொண்டது இந்த புத்தகம்.

புத்தம் வாங்கி இதுவரை 5 முறைக்கு மேல் படித்துவிட்டேன், மரணங்களை வெகு அருகில் இருந்து பார்த்தது போல இருக்கிறது ஒவ்வொரு சம்பவமும். ஒரு பிரிவு என்பது நம்மை எப்படி எல்லாம் துன்பப்படுத்துமோ அதே போன்று தான் இந்த புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகிறது.

எனக்கு தெரிந்து தமிழில் மரணங்களை மட்டுமே சொல்லிய ஒரு புத்தகம் இதுவரை வந்தது இல்லை. ரொம்ப சுவாரசியம் எல்லாம் இல்லை, ஆனால் படிக்கும் போது ஏதோ நம்மில் ஒருவர் இறந்தால் ஏற்படும் ஒருவித வெறுமையை போன்று மனதில் சூழ்ந்துகொள்கிறது.

புத்தகத்தில் சில குறைகள் இருப்பது என்னவோ உண்மை ,
மச்சான் மச்சான் என்று நிறைய இடத்தில வருவது, ஒரு இடத்தில் தான் செய்த தப்புக்கு மக்களிடம் அவரே தண்டனை தர சொல்லி கேட்ப்பது, இப்படி மிக சில விஷயங்களை தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.
புத்தகம் கிடைக்கும் இடம்

நான் சந்தித்த மரணங்கள்
மரண கானா விஜி
தொகுப்பு : கார்க்கோ
விலை : ரூ. 40/-
கருப்பு பிரதிகள்
பி - 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை,
சென்னை - 600 005
தொலைபேசி : 94442 72500
மின்னஞ்சல்: karuppu2004@rediffmail.com------------------------------------------------------------------------------------


(பி. கு): இந்த புத்தகத்திற்கு பிறகு வேறு ஒரு புத்தகம் படித்தேன் .

என் வாழ்கையில் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை படித்து அதனால் சிறிது நேரத்திற்கு எல்லாம் என்னை சொர்கத்திற்க்கு அழைத்து சென்றது ஏதும் இல்லை. (பலான புக் இல்லீங்கோ)

அந்த வெகு சூடான புத்தகத்தை பற்றி அடுத்த பதிவில். .
with love
Romeo ;)

ஆயிரத்தில் ஒருவன் படமும் கேபிள் சங்கரின் கதையும்..
பதிவர் சங்கருடன் நேற்று ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். ரீமா சென் மற்றும் பார்த்திபன் நடிப்பு சூப்பர். பார்த்திபன் ஓபனிங் சீன் செம ஹாட்.. கார்த்திக்கு கூட அந்த மாதிரி இல்ல. .. தூய தமிழ் பேசப்படும் இரண்டாம் பாதி அமர்க்களம். அதும் ரீமா சென் நடிப்பு சிம்ப்ளி சூப்பர். படத்தில் சில சில காட்சிகளை பார்த்து கண்கலங்கியது என்னவோ நிஜம். படத்தின் இறுதி கட்டம் தான் ரொம்ப கொடுமையாக இருக்கிறது. கண்டிப்பாக 15 வயதுக்கு மேற்ப்பட்ட நபர்கள் தான் படத்தை பார்க்கணும்.படத்தின் ஸ்டார் என்றால் டைரக்டர் செல்வா, நடிகர் பார்த்திபன், நடிகை ரீமாசென்,
ஆர்ட் டைரக்டர் சந்தானம்,
ஆடை வடிவமைப்பாளர் -
இரும் அலி,
இசைஅமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் ,
ஒளிபதிவாளர் - ராம்ஜி ..

படத்தை பற்றி ஏற்கனவே நிறைய விமர்சங்கள் வந்துள்ளது. நான் பார்த்தவரை தமிழில் இந்த மாதிரியான பாண்டஸி படம் எடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், அதும் சோழ மன்னர்கள் பற்றி என்றால் நிறைய மெனக்கெட வேண்டும். இவர்களின் உழைப்பு ஒவ்வொரு பிரேமில் தெரிகிறது.

Hatts Off to Selva and Team .

-------------------------------------------------------------------------
படத்தை பார்த்துவிட்டு கேபிள் சங்கருடன் பேசியபோது அவரின் கருத்துகளும் எனது கருத்துகளும் வேறு வேறு மாதிரி இருந்தது (இருக்கிறது) , ஆனால் இந்த படத்தை இப்படி கூட எடுக்கலாம் என்று ஒரு கதை சொன்னார்,படத்தின் முதல் 10 நிமிடங்கள் அதே போன்று இருக்கும், ரீமா சென் தொல்பொருள் ஆராய்சியாளர் அவருக்கு உதவ கார்த்திக் வருகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது, ரொம்ப உறுதியான காதலில் இருக்கும் இருவரும் சோழர்கள் வாழும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். பழங்கால மண்டபங்கள் இருக்கும் இடத்திருக்கு வரும் போது கேட்கும் அந்த வீநோத ஒலி இருவரையும் பலநூறு வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்கிறது. கார்த்திக் சோழ வம்சத்தில் பிறந்தவன் என்கிற அடையாளங்கள் காட்டபடுகிறது , ரீமா பாண்டிய வம்சத்தில் பிறந்தவள் போல அடையாளம் காட்டப்படுகிறது. இப்பொது பாண்டிய மற்றும் சோழ வம்சத்தில் பிறந்த இந்த காதலர்கள் எதிரிகள் ஆகிறார்கள். ரீமா தனது ஆட்களை கொண்டு கார்த்திக்கை எதிர்க்கிறார். கார்த்திக் சோழ வம்சத்தில் இப்போது இருக்கும் சிலருடன் எதிர்க்கிறார். ரீமாவின் ஆசை எல்லாம் அந்த சிலையின் மீதுதான் இருக்கிறது, கடைசி கட்டத்தில் இவர்கள் சண்டையிட்டு இருக்கும் இடம் வெடித்து சிதறுகிறது. சோழ வம்சத்தை சார்ந்த இளவரசன் ஒருவனை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரீமாவிற்கு அந்த சிலை கிடைகிறது. இருவரும் சகஜ நிலைமைக்கு திரும்புகிறார்கள். சேர்ந்தே இந்திய வந்தடைகிறார்கள்.

- Story by Cablesankar.

கதை எப்படி ?? கருத்துகள் எல்லாம் கேபிள் சங்கருக்கே.


With Love
Romeo ;)

யுவகிருஷ்ணாவின் பின்னுடத்துக்கு எனது பதில்


பதிவர் யுவகிருஷ்ணா எனது
முந்தைய பதிவிற்கு முதல் முதலில் பின்னுடம்யிட்டு சென்றார். அவர் தரப்பு நீயாயத்தை கூறினார். அவரின் அவ்வளவு பெரிய பின்னுடத்துக்கு இந்த பதிவில் பதிலளிக்கிறேன்.
1.புத்தகக்காட்சிக்கு நான் பதிவர்களை சந்திக்க வரவில்லை. இரண்டு கோடி புத்தகங்கள் குவிந்திருக்கும் ஒரு கண்காட்சி நடத்தப்படுவது சந்திப்புகளுக்காக அல்ல. சந்திக்க அது பீச்சோ அல்லது பார்க்கோ அல்ல.

பதிவர்கள் யாருமே பதிவர்களை சந்திபதற்கு மட்டுமே வருவதுயில்லை. கண்காட்சிக்கு வந்த அனைவரும் ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கி தான் சென்றார்கள். பதிவர் சர்புதீன் சந்திப்பு மட்டுமே திடீர் என்று முடிவாகி சந்தித்தோம். சந்திப்புகள் நடப்பதற்கு பீச் அல்லது பூங்காவில் தான் சந்திக்க வேண்டுமா என்ன ??


2. கண்காட்சி நடந்த பத்து நாளும் நான் வந்திருந்தேன். வேடிக்கை பார்க்கவோ, புத்தகம் வாங்கவோ மட்டுமல்ல. எங்களுடைய ஸ்டால் அங்கிருந்தது. பணிநிமித்தமாக வந்தே ஆகவேண்டிய கட்டாயம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நான் ஸ்டாலில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.

லக்கி உங்கள் ஸ்டால் அங்கு இருந்தது எனக்கு தெரியும்,
நான் அங்கு இருந்த 3 நாட்களில் ஒரு தடவை கூட உங்களை நான் அங்கு பார்த்தது இல்லை . பா. ராவிடம் மட்டும் பேச நேரம் இருந்த உங்களிடம் எங்களை கண்டுக்காமல் இருந்தது என்ன அர்த்தம்?
பா. ராவிடம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் மற்றும் சிலர் அருகில் வந்தோம். எல்லோரிடமும் பா.ரா பெயர் கேட்டார். நீங்க எதுவுமே நடக்காத மாதிரி அல்லவா இருந்திங்க. ஒரு வார்த்தை கூட பேசவில்லையே !!!


3. புத்தகக் காட்சியில் பதிவர்களை சந்தித்துதான் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்ற அவசியம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுதான் ‘நகர்வு' எனப்படுமெனின் நாங்கள் நகராமல் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம்.

பதிவர்களை சந்திப்பதால் நீங்க அல்ல எவருமே எங்கும் சென்று விட முடியாது. மெரீனா பீச்ல் நடந்த கடைசி பதிவர் சந்திப்பில் உங்களிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் அதிகம்
படித்தது உங்களின் பதிவுகள்தான் என்று உங்களிடமே சொன்னேன் அது உண்மையும் கூட . அப்பொழுது புதிய தலைமுறை இதழ் வெளிவர இருந்த வாரம். நீங்க மற்றும் ஆதிஷா இருவரும் அதில் பணியாற்றுவதை பற்றி கூட கேட்டேன் . ஆனால் இன்றோ?? உங்களிடம் ஒருவர் எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார். அவருக்கு உங்களின் பதில் சிரித்த முகத்துடன் நலம் என்று சொல்லிவிட்டு, அடுத்த விநாடி அப்பறம் பார்க்கலாம் என்று முகத்தில் அடித்தார் போல சொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்வது எந்த விதத்தில் நியாயம்?? இதை இதழ் வருவதற்கு முன்னால் - இதழ் வந்த பின்னால் என்று எடுத்து கொள்ளவும்.

இதை தான் நான் அடுத்த கட்டம் என்று சொன்னேன்.


4. உங்களை அங்கே நேரில் சந்தித்தபோது புன்னகைத்தேன். பதிலுக்கு நீங்களும் புன்னகைத்தீர்கள். அடுத்தமுறை எங்காவது சந்திக்கும்போது உங்களை கண்டு நான் புன்னகைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி

நான் உங்களை ஒதுக்கவில்லை, இப்போது கூட அதிஷாவின் பதிவிற்கு
பின்னுடம்யிட்டுள்ளேன், எனது கோவம் உங்களின் செயலில் தானே தவற உங்களின் எழுத்துகள் மீது அல்ல . அடுத்த முறை உங்களை சந்தித்தால் கண்டிப்பாக எப்பொழுதும் போல கைகுடுத்து நலம் விசாரிப்பேன். ஏன் என்றால் எனக்கு முச்சாயம் பூசி பழக்கம் இல்லை, அதே போன்று அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இல்லை.போன பதிவில் எனது ஆதங்கத்தை தான் சொல்லி இருக்கிறேன் . அன்று நீங்க நடந்து கொண்ட செயல் என்னை சிறிதளவு பாதித்தது என்னவோ உண்மையே.


With Love
Romeo ;)

புத்தக சந்தையில் பதிவர்கள் சந்திப்பு

புத்தக கண்காட்சியில் பதிவர்கள் சந்திப்புன்னு கேபிள் பதிவில் படித்ததும் சொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. புத்தக கண்காட்சிக்கு செலவதே ரொம்ப சந்தோசம், இதில் பதிவர்கள் சந்திப்பு என்றால் இரட்டிப்பு சந்தோசம் தானே.

பதிவர்கள் சந்திப்பிற்கு முன் எழுத்தாளர் அழகிய பெரியவனை சந்தித்து, சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் கிழக்கு பக்கம் பதிவர்கள் வர ஆரமித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது. சர்புதீன் பேசியபோது பதிவர்கள் சிலர் இடை இடையே பேசிக்கொண்டு இருந்ததால் அவரின் பேச்சை முழுமையாக கேட்க முடியவில்லை. அவராலும் முழுமையாக பேசமுடியவில்லை போன்று இருந்தது அவரின் பேச்சு. அவரை மட்டுமே பேசவிட்டு கடைசியில் தங்களது எண்ணங்கள் மற்றும் கேள்வியை எழுப்பி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். சர்புதீன் பதிவர்களை தனியாக சந்திக்கும் போது தனது நோக்கத்தை திரும்ப விளக்கி கொண்டிருந்தார்.

பதிவர்கள் மற்றும் புத்தக கண்காட்சியில் எடுத்த புகைப்படங்கள்கார்க்கி, பலா பட்டறை, ஜெட்லி, மீன்துளியான், புலவன் புலிகேசி மற்றும் பலரை முதல் முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அண்ணன்கள் ஜாகி, கேபிள், தண்டோரா, நரசிம்,பைத்தியக்காரன்,அப்துல்லா, காவேரி கணேஷ், Butterfly சூர்யா மற்றும் சிலரை சந்தித்ததில் சந்தோஷமாக கழிந்தது அன்றைய மாலை பொழுது.
அண்ணன் தண்டோரா ஒரு கதை சொன்னார், அதை அவரின் பதிவில் எழுத சொன்னேன் பார்க்கலாம் எழுதுவாரா என்று.

அடுத்த முறை கண்டிப்பாக இதே போன்று ஒரு பதிவர் சந்திப்பை புத்தக கண்காட்சியில் வைக்கவேண்டும், இதே போன்று சந்தோஷமாக கும்மி அடிக்கவேண்டும் ...


மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? பதிவுலக ஸ்டார் என்கிற நிலை போய் இவரும் ஒரு பதிவர் என்கிற ரகத்தில் சேர்ந்தாலும் சேரலாம்.புத்தக சந்தையில் - இரண்டாம் நாள்

பதிவரும் திருநெல்வேலி ஹலோ FM பண்பலை தொகுப்பாளியான தமயந்தி அவர்களுக்கு ஆனந்த விகடன் 2009கான சிறந்த தொகுபாளியாக தேர்ந்தெடுத்து இருக்கார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதே போன்று நமது பாசத்துக்குரிய, மரியாதைக்குரிய, நேசத்துக்குரிய அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சிறுகதை புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர்கள் சிலர் தங்களது பதிவில் புத்தக கண்காட்சிக்கு எதிரே பழைய புத்தகங்கள் விற்பனை செய்வதை எழுதி இருந்தார்கள், அதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று புத்தக கண்காட்சிக்கு திரும்ப சென்றேன். பதிவர் சங்கர் கண்காட்சிக்கு வருவதாக சொல்லிருந்தார் அவரையும் பார்த்த மாதிரி இருக்குமே என்று சென்றேன்.

பழைய புத்தங்கள் விற்பனை செய்யும் இடத்தில் ஆங்கில புத்தகங்களே 95% ஆக்கிரமித்து இருந்தது. ஆங்கில புத்தகங்களை படிக்கும் அளவுக்கு இன்னும் அறிவு வரவில்லை என்பதால் ஏதும் வாங்காமல் பார்த்து கொண்டே வந்தேன். இரண்டு புத்தகங்கள் என்னை ரொம்ப ஈர்த்தது 1. Khushwant Singh எழுதிய Women and Men in my Life 2. The White Tiger by Aravind Adiga. இரண்டும் விலை கம்மியாக கிடைத்தது இருந்தாலும் Women and Men in my Life புத்தகத்தை மட்டும் 20 ரூபாய்க்கு வாங்கினேன். White Tiger புத்தகத்தின் விலையோ 70 ருபாய் (புத்தக சந்தையில் அதன் விலை 395ருபாய்).

மாலை 3 மணிக்கே கண்காட்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லா கடைகளிலும் திரும்ப ஒரு முறை சென்றேன்.

அப்பாக்கு "தினம் ஒரு திருவாசகம்"
அம்மாவிற்கு "கம்பராமாயணம்"
எனக்கு "திருக்குறள்" . முன்று புத்தகங்களை மட்டும் வாங்கினேன்

காலச்சுவடு அருகில் வருவோர் போவோருக்கு எல்லாம் கைகளில் இலவசமாக தங்களது காலச்சுவடு பத்திரிகையை திணித்து கொண்டு இருந்தார்கள், நானும் 2 பிரதி வாங்கினேன் தேதி பார்த்தேன் 2005யில் வெளிவந்த பத்திரிக்கை!!!!
ஒரு புரட்டு புரட்டினேன் மக்கி போக இருக்கும் பேப்பர் வாசனை வந்தது. பழையது என்றாலும் உள்ளே இருக்கும் தொகுப்புகள் நன்றாக இருந்தது படிப்பதற்கு. "Old is Gold"
கால சுவடு மாதிரி முலிகை குழந்தை என்கிற பத்திரிகையை 3 குடுத்தார்கள்.

எனது கல்லூரில் படித்த எனது சீனியர் மற்றும் ஜூனியர் இருவரை சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி.

நடிகர் சிவகுமார் காலச்சுவடு அரங்கில் பேசினார், கூட்டம் அதிகமாக இருந்ததால் என்ன பேசினார் என்று ஒண்ணும் கேட்கவில்லை. கவிஞர் சல்மா வந்திருந்தார், திருக்குறள் புத்தகத்தில் அவரின் கையெழுத்து வாங்கினேன், என்ன திருக்குறள் புத்தகம்?என்றார் . நான் படிக்க தான் வாங்கினேன் என்றேன். ரொம்ப ஆச்சரியமாக பார்த்தார் ( ஏங்க நான் திருக்குறள் படிக்க கூடாத என்ன ??).
பதிவர் எறும்பு மற்றும் சங்கருடன் சிறிது நேரம் அரங்கில் செலவிட்டது சந்தோஷமாக இருந்தது. இன்று நிறைய புகை படங்கள் எடுத்தேன் அவைகள் இங்கே

இன்று மாலை அரங்கில் நடக்கும் சிறிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதை பற்றிய விரிவான சிறிய பதிவு நமது அண்ணன் கேபிளார் பதிவில் உள்ளது.


மீண்டும் சந்திப்போம் ......
With Love
Romeo ;)

புத்தக சந்தையில்

படிக்கணும் பாஸ் .. நிறைய படிக்கணும். அலுக்க அலுக்க படிக்கணும். தேடி புடிச்சி படிக்கணும், வெறியா படிக்கணும்..

யாராவது என்னை புத்தகம் படிப்பதை பற்றி கேட்டால் நான் முன்னர் சொன்னது தான் பதிலாக இருக்கும்.

நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் .. ஒவ்வொரு ஸ்டாலாக சென்று என்ன மாதிரியான புத்தகம் இருக்கிறது என்று பார்த்து கொண்டே வந்தேன்.

சிறுவர்களுக்கு என்று நிறைய புத்தகங்கள் இருக்கிறது. சில புத்தகங்களை வாசித்த போது நான் சிறியவனாக இருந்தே இருக்கலாம் என்று தோன்றியது.

மாணவ மாணவியர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட கடைகளில் மொய்த்தார்கள்.

கிழக்கு பதிப்பக நூல்கள், சுஜாதா நூல்கள் தான் நிறைய கடைகளில் இருந்தது. புத்தக கண்காட்சியில் அறிவியல் பற்றிய நிறைய நூல்கள் இடம் பெற்றிருந்தது சந்தோஷமே.


கண்காட்சில் எடுத்த சில புகைப்படங்கள்.

3 மணிக்கு சென்றவன் மாலை 7.30 மணிக்கு தான் வெளியே வந்தேன். 3 மணி முதலே மக்கள் வர ஆரமித்து விட்டார்கள் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே தான் இருந்தது

சாரு, ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்தது சந்தோசமாக இருந்தது. இருவரிடமும் அவர்களின் புத்தகங்களின் பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்


உரிமை பதிப்பகத்தில் நிறைய கூட்டம், அதே போன்று கிழக்கு பதிப்பகத்தில்.கை நிறைய புத்தகங்களுடன் வெளியே வந்தேன், வாங்கிய புத்தகங்கள் பட்டியல்

நக்கீரன் - சேலஞ்ச
நான் சந்தித்த மரணங்கள்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மாமனிதர் நபிகள் நாயகம்
ராஜீவ் கொலை வழக்கு
கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளி
சர்வம் ஸ்டாலின் மயம்
பாரதியார் கதைகள்
ஊறு பசி - ராமகிருஷ்ணன்
காமரூப கதைகள்
ரெண்டாம் ஆட்டம்
கடவுளும் நானும்
அதிகாரம், அமைதி, சுதந்திரம்
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி
மரப்பாச்சியின் சில ஆடைகள்
பெருவெளி சலனங்கள்


பண பற்றாக்குறை காரணமாக வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” , ஜெயமோகனின் ஏழாம் உலகம் , ராமகிருஷ்ணனின் யாமம் புத்தகங்கள் வாங்க முடிவில்லை.இன்றோ நாளையோ கண்டிப்பாக திரும்ப செல்வேன் என்று நினைக்கிறன்.