~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ஆயிரத்தில் ஒருவன் படமும் கேபிள் சங்கரின் கதையும்..
பதிவர் சங்கருடன் நேற்று ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். ரீமா சென் மற்றும் பார்த்திபன் நடிப்பு சூப்பர். பார்த்திபன் ஓபனிங் சீன் செம ஹாட்.. கார்த்திக்கு கூட அந்த மாதிரி இல்ல. .. தூய தமிழ் பேசப்படும் இரண்டாம் பாதி அமர்க்களம். அதும் ரீமா சென் நடிப்பு சிம்ப்ளி சூப்பர். படத்தில் சில சில காட்சிகளை பார்த்து கண்கலங்கியது என்னவோ நிஜம். படத்தின் இறுதி கட்டம் தான் ரொம்ப கொடுமையாக இருக்கிறது. கண்டிப்பாக 15 வயதுக்கு மேற்ப்பட்ட நபர்கள் தான் படத்தை பார்க்கணும்.படத்தின் ஸ்டார் என்றால் டைரக்டர் செல்வா, நடிகர் பார்த்திபன், நடிகை ரீமாசென்,
ஆர்ட் டைரக்டர் சந்தானம்,
ஆடை வடிவமைப்பாளர் -
இரும் அலி,
இசைஅமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் ,
ஒளிபதிவாளர் - ராம்ஜி ..

படத்தை பற்றி ஏற்கனவே நிறைய விமர்சங்கள் வந்துள்ளது. நான் பார்த்தவரை தமிழில் இந்த மாதிரியான பாண்டஸி படம் எடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், அதும் சோழ மன்னர்கள் பற்றி என்றால் நிறைய மெனக்கெட வேண்டும். இவர்களின் உழைப்பு ஒவ்வொரு பிரேமில் தெரிகிறது.

Hatts Off to Selva and Team .

-------------------------------------------------------------------------
படத்தை பார்த்துவிட்டு கேபிள் சங்கருடன் பேசியபோது அவரின் கருத்துகளும் எனது கருத்துகளும் வேறு வேறு மாதிரி இருந்தது (இருக்கிறது) , ஆனால் இந்த படத்தை இப்படி கூட எடுக்கலாம் என்று ஒரு கதை சொன்னார்,படத்தின் முதல் 10 நிமிடங்கள் அதே போன்று இருக்கும், ரீமா சென் தொல்பொருள் ஆராய்சியாளர் அவருக்கு உதவ கார்த்திக் வருகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது, ரொம்ப உறுதியான காதலில் இருக்கும் இருவரும் சோழர்கள் வாழும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். பழங்கால மண்டபங்கள் இருக்கும் இடத்திருக்கு வரும் போது கேட்கும் அந்த வீநோத ஒலி இருவரையும் பலநூறு வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்கிறது. கார்த்திக் சோழ வம்சத்தில் பிறந்தவன் என்கிற அடையாளங்கள் காட்டபடுகிறது , ரீமா பாண்டிய வம்சத்தில் பிறந்தவள் போல அடையாளம் காட்டப்படுகிறது. இப்பொது பாண்டிய மற்றும் சோழ வம்சத்தில் பிறந்த இந்த காதலர்கள் எதிரிகள் ஆகிறார்கள். ரீமா தனது ஆட்களை கொண்டு கார்த்திக்கை எதிர்க்கிறார். கார்த்திக் சோழ வம்சத்தில் இப்போது இருக்கும் சிலருடன் எதிர்க்கிறார். ரீமாவின் ஆசை எல்லாம் அந்த சிலையின் மீதுதான் இருக்கிறது, கடைசி கட்டத்தில் இவர்கள் சண்டையிட்டு இருக்கும் இடம் வெடித்து சிதறுகிறது. சோழ வம்சத்தை சார்ந்த இளவரசன் ஒருவனை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரீமாவிற்கு அந்த சிலை கிடைகிறது. இருவரும் சகஜ நிலைமைக்கு திரும்புகிறார்கள். சேர்ந்தே இந்திய வந்தடைகிறார்கள்.

- Story by Cablesankar.

கதை எப்படி ?? கருத்துகள் எல்லாம் கேபிள் சங்கருக்கே.


With Love
Romeo ;)

22 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

இரண்டு பேர்களும் சேர்ந்து நல்லா "கதை" விட்டு இருக்கீங்க.......... அதிலும் கேபிள் சங்கரனார் கதையை நல்லா சுட்டு ஒரு பதிவு. சூப்பர் ஹிட் படம்தான்!

 

இப்பல்லாம்.. எதிர் கவுஜயை விட்டுட்டு.. எதிர் கதையே போடுறோமா???! :) :)

படத்தை.. இன்னும் ஒரு 5-6 மாசத்துக்கு பார்க்க முடியாததால் நோ கமெண்ட்.

 

ஏனப்பா, பக்கத்திலேயே தானே நானும் இருந்தேன், எப்போ, எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு இந்த கதை டிஸ்கஸ் பண்ணினீங்க :))

 

படத்துக்கு அந்த போட்டோல மீச வெச்சிக்கிட்டு இருக்கறவர்தான் ஹீரோவா??? ::))

 

கேபிள் சார் சொன்ன கதை தெலுங்கு படம் மகதீரா கதையை கொஞ்சம் உல்டா பண்ண மாதிரி இருக்கு

 

@ Chitra
ஏதோ எங்களால முடிஞ்சது ..

@ ஹாலிவுட் பாலா
என்ன பண்ணுறது ?? கேபிள் கூட சேர்ந்தா இப்படி தான் .

@சங்கர்
ஆபீஸ்க்கு வந்து அவருக்கு பேசினேன். அப்பதான் இந்த கதையை சொன்னாரு .

@பலா பட்டறை
என்ன கொடுமையான கேள்வி இது.. பாஸ் இப்படி எல்லாம் கேட்டு என்னை கதற வைக்காதிங்க.

@ Movie Posters
அது மகதீரா இல்ல... இப்ப வந்த ஆயிரத்தில் ஒருவன்

@ angel

ரொம்ப நன்றிங்க .உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் என்னையே சேரட்டும். திட்டுகள் எல்லாம் கேபிளை சேரட்டும் ..

 

நாங்களும் விமர்சனம் எழுதுவோம்ல ?!

ஆயிரத்தில் ஒருவன் என்னுடைய விமர்சனம் .....

http://desandhiri.blogspot.com/2010/01/blog-post_15.html

 

/ரொம்ப நன்றிங்க .உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் என்னையே சேரட்டும். திட்டுகள் எல்லாம் கேபிளை சேரட்டும் ..
//

என்னா ஒரு நல்ல மனசுய்யா..:))

 

@ தேசாந்திரி
உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது .

@ Cable Sankar
தலைவரே எல்லாம் ஒரு எச்சரிக்கை தான் .

 

//அதும் சோழ மன்னர்கள் பற்றி என்றால் நிறைய மெனக்கெட வேண்டும்.//

சகா தப்பா நினைக்காதிங்க.. சோழர்களின் வாழ்வை காட்டும் எந்த காட்சி படத்தில் இருந்தது?

தஞ்சையில் நெல்லாடிய நிலமென்பது சரி. அந்த தீவில் சோழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக நெல் விளையுமா? அது அந்த மண்ணை சார்ந்த விஷயம் இல்லையா? அங்கே இந்த பாடலை போடுவது அபத்தமாக தெரியவில்லையா?

படத்தில் கொண்டாட வேடிய விஷயம் எது?

திரைக்கதையா? மேக்கிங்கா? ஸ்க்ரிப்ட்டா? நடிப்பா? இசையா?

நடிப்பு மட்டும் நல்லா இருக்கு. உங்களை கவர்ந்த அம்சம் எது?

 

"... தூய தமிழ் பேசப்படும் இரண்டாம் பாதி அமர்க்களம். அதும் ரீமா சென் நடிப்பு சிம்ப்ளி சூப்பர். ..."

தூய தமிழ்...சிம்ப்ளி சூப்பர்....
எல்லாம் நம்ம விதி :( :( :(

 

@ கார்க்கி

சகா நான் சொன்னது அவர்களின் மொழி மற்றும் அவர்களின் உடை அலங்காரம். பார்த்திபன் மற்றும் அவரின் துணைவியார் போல இருக்கும் (இருக்கலாம்) அந்த பெண்மணிகளில் உடைகள்.

\\அந்த தீவில் சோழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக நெல் விளையுமா? அது அந்த மண்ணை சார்ந்த விஷயம் இல்லையா? அங்கே இந்த பாடலை போடுவது அபத்தமாக தெரியவில்லையா?//

அவர்கள் இப்போது எங்கே இருகிறார்கள் என்றே அவர்களுக்கு தெரியவில்லை நண்பா. அவர்களிடம் ரீமாசென் சொல்லிய பொய்யை கூட நம்பிவிடு அங்கு இருந்து கிளம்பும் மனிதர்கள் தானே. பாடலின் வரிகளை பாருங்கள் ரொம்ப அருமையாக இருக்கிறது தானே.

படத்தை அவர்கள் எடுத்து இருக்கும் முயற்சி தான் சகா அருமை. திரைகதையை விடுங்கள் (ஒத்து கொள்கிறேன் இரண்டாம் பாதி ரொம்ப கொழப்பிடாங்க), இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு, ஆடை வடிவமைப்பு ....

 

@ ரகுநந்தன்

ஏன் என்ன ஆச்சு ?? :-?

 

சகா, இசையையும் வரிகளையும் சிலாகித்து நான் பதிவே போட்டிருக்கிறேன். ஆனால் பிண்ணனி இசை ஸப்பா... மசாலா மிக்ஸ்தான். ஜிவிக்கு அனுபவம் இல்லை. அதனால் குறை சொல்லக்கூடாது. ஆனால் அதுக்காக நல்லா இருக்குன்னு சொல்ல முடியல. பாடல் வரிகளும் படத்தோடு ஒட்டவில்லை.

//அவர்கள் இப்போது எங்கே இருகிறார்கள் என்றே அவர்களுக்கு தெரியவில்லை நண்பா//

சோழ நாட்டை விட்டு வெளியே வந்துவிட்டோம். மீண்டும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்கிரார்களே. அப்படியெனில் அந்த வரிகள் எப்படி பொருந்தும்?அதுவும் சாப்பாட்டுக்கே இல்லாமல், ஆயிரக்கணக்கில் தனித்து வாழ்பவர்களுக்கு எப்படி அத்தனை ஆயிரம் அம்புகள்? சாப்பாட்டுக்கே அழும் மக்களுக்கு அந்த சண்டை விளையாட்டு? மழையே இல்லை என்னும்போது அரசவையில் அருவி?

கலையும் ஒளிப்பதிவும் நானும் ரசித்தேன்.

 

@ கார்க்கி


\\சோழ நாட்டை விட்டு வெளியே வந்துவிட்டோம். மீண்டும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்கிரார்களே. அப்படியெனில் அந்த வரிகள் எப்படி பொருந்தும்///

அந்த அரசனின் சோகம் தானே வரிகளாக வருகிறது ?? இப்பொழுது இருக்கும் இடத்தில இது எல்லாம் இல்லை என்கிற ஏக்கம் தானே அந்த பாடலின் வரிகளில் வருகிறது.

அதான் சகா நான் சொன்னேன்ல இரண்டாம் பாதி திரைகதை ரொம்ப கொழப்பிடாங்க. கடைசி சண்டை காட்சியில் ரீமாசென் அண்ட் கோ பாண்டியர்கள் போல உடுப்பு உடுத்தி கொண்டு வருவது ரொம்ப ஓவரா தான் இருக்கு.

விடுங்க சகா இப்படியே ஒண்ணு ஒண்ணு குறை சொல்லிட்டு இருந்தா நமக்குதான் டைம் வேஸ்ட். படத்தை பற்றிய உங்கள் ரசனை வேறு மாதிரியாக இருக்கிறது எனது ரசனை வேறு.

 

இந்த படத்தை பற்றிய சிறு தகவல்கள்.

நடிகர் கார்த்திக் அவர்கள் படம் முழுவதிலும் காலனி அணியாமலே நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு கொடூரமாகவும் கம்பீரமாகவும் தோன்றும் திரு. பார்த்திபன் அவர்களுக்கு மேக் அப், உடல் கவசமும், செளரி பின் மயிரும் மட்டும் பொருத்தி இருகிறார்கள். :-)

நடிகை Andrea, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை தலை கழுவான் உபயோகிதாராம்.

படத்தில் எனக்கு பிடித்த காட்சி...

1. சோழ நாட்டை அடைந்த பிறகு அங்கு அவர்களுக்கு நிகழ்ந்த ஆபத்து (High frequency Sound), நல்ல சிந்தனை.

2. ஒரு தாயின் பட்டினி பசியை காண்பித்த காட்சி மனதை உறையவைத்து விட்டது.

 

இந்த படத்தை பற்றிய சிறு தகவல்கள்.

நடிகர் கார்த்திக் அவர்கள் படம் முழுவதிலும் காலனி அணியாமலே நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு கொடூரமாகவும் கம்பீரமாகவும் தோன்றும் திரு. பார்த்திபன் அவர்களுக்கு மேக் அப், உடல் கவசமும், செளரி பின் மயிரும் மட்டும் பொருத்தி இருகிறார்கள். :-)

நடிகை Andrea, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை தலை கழுவான் உபயோகிதாராம்.

படத்தில் எனக்கு பிடித்த காட்சி...

1. சோழ நாட்டை அடைந்த பிறகு அங்கு அவர்களுக்கு நிகழ்ந்த ஆபத்து (High frequency Sound), நல்ல சிந்தனை.

2. ஒரு தாயின் பட்டினி பசியை காண்பித்த காட்சி மனதை உறையவைத்து விட்டது.

 

திவ்யாஹரி said ....

"ரொம்ப நன்றிங்க .உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் என்னையே சேரட்டும். திட்டுகள் எல்லாம் கேபிளை சேரட்டும்"

haa haa haa.. padam parthtu entha kathai nalla irukunu solren..


மன்னிச்சிகோங்க Publish பண்ணுறதுக்கு பதில் Reject பண்ணிட்டேன் :(

 

@ கொங்கு புயல்
தம்பி புது புது மேட்டரா எடுத்து விடுறியே..

@திவ்யாஹரி
கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க.

 

படம் அவ்வளவாப்பிடிக்கலைங்க.

 

@ சின்ன அம்மிணி

சரி விடுங்க. தல படம் வர போகுது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க