~~ROMEO~~

Everyday Starts with Happy :)

புத்தக சந்தையில் - இரண்டாம் நாள்

பதிவரும் திருநெல்வேலி ஹலோ FM பண்பலை தொகுப்பாளியான தமயந்தி அவர்களுக்கு ஆனந்த விகடன் 2009கான சிறந்த தொகுபாளியாக தேர்ந்தெடுத்து இருக்கார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதே போன்று நமது பாசத்துக்குரிய, மரியாதைக்குரிய, நேசத்துக்குரிய அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சிறுகதை புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர்கள் சிலர் தங்களது பதிவில் புத்தக கண்காட்சிக்கு எதிரே பழைய புத்தகங்கள் விற்பனை செய்வதை எழுதி இருந்தார்கள், அதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று புத்தக கண்காட்சிக்கு திரும்ப சென்றேன். பதிவர் சங்கர் கண்காட்சிக்கு வருவதாக சொல்லிருந்தார் அவரையும் பார்த்த மாதிரி இருக்குமே என்று சென்றேன்.

பழைய புத்தங்கள் விற்பனை செய்யும் இடத்தில் ஆங்கில புத்தகங்களே 95% ஆக்கிரமித்து இருந்தது. ஆங்கில புத்தகங்களை படிக்கும் அளவுக்கு இன்னும் அறிவு வரவில்லை என்பதால் ஏதும் வாங்காமல் பார்த்து கொண்டே வந்தேன். இரண்டு புத்தகங்கள் என்னை ரொம்ப ஈர்த்தது 1. Khushwant Singh எழுதிய Women and Men in my Life 2. The White Tiger by Aravind Adiga. இரண்டும் விலை கம்மியாக கிடைத்தது இருந்தாலும் Women and Men in my Life புத்தகத்தை மட்டும் 20 ரூபாய்க்கு வாங்கினேன். White Tiger புத்தகத்தின் விலையோ 70 ருபாய் (புத்தக சந்தையில் அதன் விலை 395ருபாய்).

மாலை 3 மணிக்கே கண்காட்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லா கடைகளிலும் திரும்ப ஒரு முறை சென்றேன்.

அப்பாக்கு "தினம் ஒரு திருவாசகம்"
அம்மாவிற்கு "கம்பராமாயணம்"
எனக்கு "திருக்குறள்" . முன்று புத்தகங்களை மட்டும் வாங்கினேன்

காலச்சுவடு அருகில் வருவோர் போவோருக்கு எல்லாம் கைகளில் இலவசமாக தங்களது காலச்சுவடு பத்திரிகையை திணித்து கொண்டு இருந்தார்கள், நானும் 2 பிரதி வாங்கினேன் தேதி பார்த்தேன் 2005யில் வெளிவந்த பத்திரிக்கை!!!!
ஒரு புரட்டு புரட்டினேன் மக்கி போக இருக்கும் பேப்பர் வாசனை வந்தது. பழையது என்றாலும் உள்ளே இருக்கும் தொகுப்புகள் நன்றாக இருந்தது படிப்பதற்கு. "Old is Gold"
கால சுவடு மாதிரி முலிகை குழந்தை என்கிற பத்திரிகையை 3 குடுத்தார்கள்.

எனது கல்லூரில் படித்த எனது சீனியர் மற்றும் ஜூனியர் இருவரை சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி.

நடிகர் சிவகுமார் காலச்சுவடு அரங்கில் பேசினார், கூட்டம் அதிகமாக இருந்ததால் என்ன பேசினார் என்று ஒண்ணும் கேட்கவில்லை. கவிஞர் சல்மா வந்திருந்தார், திருக்குறள் புத்தகத்தில் அவரின் கையெழுத்து வாங்கினேன், என்ன திருக்குறள் புத்தகம்?என்றார் . நான் படிக்க தான் வாங்கினேன் என்றேன். ரொம்ப ஆச்சரியமாக பார்த்தார் ( ஏங்க நான் திருக்குறள் படிக்க கூடாத என்ன ??).
பதிவர் எறும்பு மற்றும் சங்கருடன் சிறிது நேரம் அரங்கில் செலவிட்டது சந்தோஷமாக இருந்தது. இன்று நிறைய புகை படங்கள் எடுத்தேன் அவைகள் இங்கே





இன்று மாலை அரங்கில் நடக்கும் சிறிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதை பற்றிய விரிவான சிறிய பதிவு நமது அண்ணன் கேபிளார் பதிவில் உள்ளது.


மீண்டும் சந்திப்போம் ......
With Love
Romeo ;)

8 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

எத்தனை போட்டோ, இப்பவே கண்ணை கட்டுதே,

சாயுங்காலம் பார்க்கலாம்

 

தமயந்தியை உடனே கால் பண்ணி வாழ்த்தி பேசினேன். தகவல் தெரிவித்தமைக்கு நன்றிங்க.
போட்டோஸ் எல்லாம் பாத்து முடியறுதுக்குள்ளே, அடுத்த புத்தக காட்சி வந்திடும் போல. :-)

 

ரொம்ப நன்றி ரோமியோ,
இவ்வளவு போட்டோக்கள் அப்லொட் செய்த்தற்கு, புத்தககாட்சிக்கு நான் போகாத குறை தீர்ந்தது,ஓட்டுக்கல் போட்டாச்சு

 

i love books and really miss this exhibition..it is been 20 years...on seeing your photoshots, feel like flying back to chennai just to attend...but i am seeing this today...thanks a lot for making me feel that i have gone through the exhibition...next year will not miss it...will schedule it ...thanks once again..
sriganeshh

 

also please dont remove this photoshots....it will be my motivation to take leave for long pending chennai trip...
thanks once again..

sri

 

@ சங்கர்

இதுக்கே இப்படியா?? போட்டோ நல்லா இருந்துச்சா ?? கண்டிப்பா சந்திக்கலாம்

@ Chitra

ஏதோ என்னால முடிந்தது ..

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
நன்றி தலைவரே ..

@ sriganeshh
உங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ. படங்களை எடுக்க மாட்டேன் .

 

தமயந்திக்கு சிறந்த பதிவர் விருது தங்கள் மூலமா தான் அறிந்தேன் நன்றி..

நாங்க சென்ற அன்று கூட சல்மா வந்திருந்தாங்க. பதிவர் சந்திப்புக்கு என்னால் வர முடியலை. இன்னோர் முறை சந்திப்போம்

 

யோவ் என்னாய்யா ஒன்னும் எழுதாமே ஃப்லிம் காட்டுற,என்ன இதுக்கு இவ்ளோ போட்டோ?கண்ணு கூசுது