~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அப்படி இப்படி

தமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.
இந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்!!!!
அட ராமா நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா ??? அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்காங்க" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு !!!!!

"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா" சொல்லி போன் கட் பண்ணினேன்.

--------------------------------------------------------------------------------------------

இந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா "7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க"

அப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்

"உன்னை சொல்லி குதம் இல்லை,
என்னை சொல்லி குதம் இல்லை
காலம் செய்த கோலமடா "

என்ன?? என்றாள் தங்கமணி.

மீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

சென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு?? அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார்!!. நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.

கொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்பறமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.

எனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் ?? மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் ??

--------------------------------------------------------------------------------------------
அடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.
அட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .

--------------------------------------------------------------------------------------------

தல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.
எப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் "அசல்" படம் பதிவர்களுக்கு "அவல்".

--------------------------------------------------------------------------------------------
போன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் " நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா?? என்னால நம்ப முடியலையே" ரொம்ப டவுடா கேட்டான்.
ஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.

--------------------------------------------------------------------------------------------

ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.
நாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


16 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

கதம்ப மாலை. பல விஷயங்களை நன்றாக தொடுத்து, அழகாக தந்து இருக்கிறீர்கள்.


பி.கு.: நம்புறோம். ஆனால் அடுத்த வாட்டி, அம்மணியின் பெயர் முதலிலியே கேட்டுருவீங்கன்னும் நம்புறேன். :-)

 

:) நல்ல தொகுப்பு.

 

இந்த மெகா சீரியல்...

ரொம்ப கொடுமைங்க ரோமி ..:(

ஆனாலும் உங்க பாட்டு அருமை :)

---------

ரயில் சிநேகமும் சூப்பர் .. எனக்கும் உண்டு அந்த அனுபவங்கள்.. நானும் எப்போதும் பெயர் கேட்டதில்லை..:)
அதென்னவோ அப்படியே எப்போதும்..:)

நல்ல பதிவு.

 

நல்ல தொகுப்பு....

 

தமிழ் படம் பத்தி உங்க நண்பர்
சொன்ன கமெண்ட்....முடியலை...

 

சீரியல்கள் Homemaker பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் பெரிய ஆறுதலாய் உள்ளது. என்ன செய்வது? எனது தந்தை, மாமானார் குடும்பம் எல்லாரும் இப்படியே!!

 

@ Chitra
ஹி ஹி ஹி ட்ரை பண்றேன்.

@வானம்பாடிகள்
நன்றி சார்

@ஷங்கர்
நன்றி ஷங்கர்

@Sangkavi
நன்றி பாஸ்

@ஜெட்லி
சில ஜென்மங்கள் இப்படி தான் பாஸ். மத்தவங்கள மண்டைகாய வைக்கவே போறது இருக்காங்க.

 

@ மோகன் குமார்
Same Blood மோகன் .. ஹி ஹி ஹி

 

எனக்கென்னவோ ராஜேஷ் குமாரிடம் பெப் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு வாரமும் வைக்கும் ட்விஸ்டை முன்னமே கண்டுபிடித்துவிடுகிறேன்.

 

நண்பா,
வீட்டில் எல்லோரும் நலமா?
வழக்கம் போல கலக்கல் தான்.

 

அது என்னங்க உங்க தங்க மணிமட்டும் குழந்தயை பாத்துகிறது நீங்களும் முறை எடுத்து பாத்துக்கணும் புரிஞ்சுதா.......அவாளும் சீரிய பார்க்கட்டுமே ..சும்ம ஜோக்குங்க.

 

//நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.//

உண்மை தான்..அனுபவம் இருக்கு..

 

சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது"//

ஏங்க..இன்னொரு டிவி வாங்கிட வேண்டியதுதானே..கலைஞர் உங்களுக்கு இன்னும் டிவி தரலையா..

 

தல தமிழ்ப்படம் சூப்பர்....

//எப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் "அசல்" படம் பதிவர்களுக்கு "அவல்". //

அசல் சுமார் ரக படம் தல..அரச்ச மாவு..யாருக்கும் நடிக்க வாய்ப்பில்ல..

 

@Cable Sankar
ஒரு ரவுடி எப்படி இருப்பார்ன்னு இன்னொரு ரவுடிக்கு தானே தெரியும் .

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
எல்லோரும் நலம் தலைவரே. ரொம்ப நன்றி

@ நிலாமதி
நானும் ஒரு காமெடிக்கு தான் அக்கா எழுதினேன்.

@ நாடோடி
கருத்துக்கு நன்றி பாஸ்

@ ஸ்ரீராம்
கலைஞரின் கடைகண் பார்வை இன்னும் எங்கள் மேல் படவில்லை தலைவரே.

@vidhya
நன்றி வித்யா

@ புலவன் புலிகேசி
படத்த பார்த்துடிங்களா சகா!!!