~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கொலுசு - முதல் சிறுகதை


என் இனிய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2004
நான் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன், சும்மா பார்த்துட்டே இருக்கியே எதாவது பேசு,
உன்னதான் எதாவது பேசு டா .
நீ ரொம்ப அழகா பேசுற
போடா உனக்கு இதே வேலையா போச்சு
- வெட்கப்பட்டாள்

எனக்கு ஒரு ஆசைடி, உனக்கு ஒரு கொலுசு வாங்கி தரனும்
அத போட்டுகிட்டு ஜல் ஜல்ன்னு நீ நடந்து வரத பார்க்கணும்
உனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை?
ஏனென்றால் உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்
உண்மையா ??
- வெட்கப்பட்டாள்

2005
எனக்கு ஒரு ஆசைடி
போதும் நிப்பாட்டு, உன்னோட ஆசையை தூக்கி குப்பைல போடு
நான் என்ன பண்ணட்டும் காசு இருந்தா இப்பவே வாங்கி தருவேன்
அப்ப காசு இருக்கும் போது இந்த டயலாக் பேசு.
-கோவப்பட்டாள்

2006
கொலுசு நல்ல இருக்கா?? என் அப்பா வாங்கி தந்தார்.
2000 ரூவா.
நான் 5000 ரூவாக்கு கொலுசு வாங்கிடறேன் பாரு

ஹலோ யார் பிரசாத்தா?
ஆமா நீங்க யாரு?
நீ லவ் பண்ணுறியே சங்கீதா அவளால ஏமாத்தப்பட்டவன்
என்ன சொல்லுர? என் சங்கீதா அந்த மாதிரி எல்லாம் பண்ணமாட்ட
ரொம்ப ஓவரா நம்பாத அவள. நான் வாங்கி குடுத்த கொலுசதான் இப்ப போட்டு இருக்கா
2000 ரூவா , அவ அப்பன் வாங்கி குடுத்தான்னு சொல்லி இருப்பாளே??
என்ன சொல்லுர நீ? அப்ப அந்த கொலுச நீதான் வாங்கி கொடுத்தியா ?


ஹாய் டா ஏன் முகம் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு ?
யாரு அந்த பையன் ?
யாருனா ? எந்த பையன கேக்குற ?
உனக்கு கொலுசு வாங்கி குடுத்தானே அவன கேக்குறேன்.
-மௌனம் ஆனாள் .

2008
என்னங்க நான் ஒரு கொலுசு வாங்கிட்டுமா
நான் அன்னைக்கே சொன்னேன்ல நான் ஏன் கொலுசு வெறுக்கிறேன்னு, வேற எது வேணா கேளு வாங்கிதறேன் கொலுசு மட்டும் வேண்டாம்.
-அமைதி ஆனாள்.

2018
அப்பா
என்னடா செல்லம்
என்னோட பர்த்டேக்கு என்ன வாங்கி தருவிங்க?
உனக்கு என்னடா வேணும்?
எனக்கு கொலுசு வேணும் பா.
அப்பாக்கு கொலுசு புடிக்காதே மா.
அப்ப எனக்கு பர்த்டே கிப்ட் ஏதும் வேண்டாம் போ.
-கோவப்படாள்

அப்பாகிட்ட என்னடா கோவம் உனக்கு? டின்னர் வேண்டாம்ன்னு சொன்னியாமே?
ஆமா எனக்கு கொலுசு வாங்கி தர மாட்டேன்னு சொன்னிகள்ல
அதுக்காக சாப்பிடமாட்டியா?
கொலுசு வாங்கிதறேன் வா வந்து சாப்பிடு.
தேங்க்ஸ் பா
- நான் சந்தோஷமானேன்.

-----------------------------------------------------------------------------------------------