~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் 21/09/09

இந்த வாரம் கொஞ்சம் டல் தான் . இந்த வாரம் எல்லாம் காலை நேர வேலை என்பதினால் காலை 4 மணிக்கே எழுந்து குளிச்சி கிளம்பி விடுகிறேன். 2 பஸ் , 1 ட்ரைன் புடிச்சு ஆபீஸ்க்கு வரதுகுள்ள கண்ணுல பாதி துக்கம் வந்துடும் . என்ன தான் கிளபினாலும் 6 மணி ஷிபிட்க்கு 6.30 மணிக்கும் தான் ஆபீஸ் போறேன். கிண்டில என்னுடன் ட்ரைன்ல வருகிற வேற கம்பெனி பெண்கள் கையில் சாப்பாடு பையை பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் எத்தனை மணிக்கும் எழுந்து சமைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை . நடுத்தர வர்க்க பெண்கள் தான் அனைவரும் காசோட அருமை தெரிந்தவர்கள் . .

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் முழுக்க பிரபல பதிவாளர்கள் உன்னை போல ஒருவன் விமர்சனம் எழுதி ஹிட் மேல ஹிட் வங்கிடங்கன்னு சொல்லலாம். அந்த படத்தை நான் ஹிந்தியில் ஏற்கனவே பார்த்துவிட்டேன் இருந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு எப்படி செய்து இருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று தான் பார்த்தேன்.
மிக அருமை, படத்தின் இசை யாரையும் சார்ந்து இல்லாமல் சுருதிஹாசன் அருமையாக செய்து உள்ளார். படத்தின் கேமராமேன் உழைப்பு சூப்பர். கமல் நின்று இருக்கும் அந்த மொட்டை மாடியில் இருந்து காட்ட படும் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர். இப்ப வர படத்தில் எல்லாம் ஒரு கலர் டோன் எங்கேயும் தெரியும் படி காமித்து விடுகிறார்கள் அந்த வகையில் சில்வர் கலர் போன்ற மேக கூட்ட கலர் கமல் இருக்கும் இடத்தை ஆக்கிரமிப்புக்கு செய்து விடுகிறது.
Don't Miss the chance to watch this movie in Theater.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று எங்க கம்பெனி மேனேஜர்க்கு நிச்சயதார்த்தம். அதுக்காக ஆபீஸ்ல இருந்து ஒரு கும்பலே புறப்பட்டு வேன்ல திண்டிவனம் போனோம். அங்கு போய் மேனேஜர் கிட்ட ட்ரீட்ன்னு அவர் செலவில் தண்ணிய போடலாம் என்று பிளான் பண்ணினோம் .
வண்டி மரக்காணம்ல காலை டிபன்காக நின்னுச்சு, ஹோட்டல் சரவணா பவன் உயர் தர சைவ உணவகம் என்று எழுதி இருந்த ஹோட்டல்க்கு உள்ளே சென்றோம். கை கழுவலாம் என்று வாஷ் பேசின் தேடினால் ஒரு இருட்டு ரூம்ல ரெண்டு பேரு கைய துடச்சிட்டு வந்தாங்க. உள்ள போனா ஒரே இருட்டு அப்படி இப்படின்னு தட்டி தடவி கைய கழுவிட்டு வந்து டேபிள்ல உட்கார்ந்தோம். சர்வர் தண்ணி கொண்டு வந்து வைத்தார் அதை பார்த்த உடனே கோவம் தலைக்கு ஏறியது. பின்ன அவரு தண்ணி கொண்டு வந்த குடுத்த கிளாஸ்குள்ள எல்லா விரலையும் தண்ணிக்குள்ள விட்டு கொண்டு வந்தாரு. அத பார்த்தா கோவம் வருமா வராதா? வைத்த உடனே அதை எடுத்துட்டு போ என்று திட்டிவிட்டேன். அவருக்கு கோவம் வந்து முனைங்கிடே எடுத்துட்டு போய்ட்டாரு.


ஆளுக்கு 3 இட்லி என்று முதலில் சொல்லிவிட்டு Bisleri வாட்டர் பாட்டில்ல இருக்கும் கண்ணனுக்கு தெரியாத கிரிமியை குடித்தோம். இட்லி முடிச்சு அடுத்ததுக்கு வெயிட் பண்ண முடியாது என்று அங்கு இருந்து எழுந்து வந்துட்டேன். நம்ம பிரண்ட் Wills வாங்கி பற்றவைத்தேன். சிறிது நேரத்தில் எல்லோரும் வந்துவிட வண்டி திண்டிவனம் நோக்கி நடையை கட்டியது. ஏதே எதோ ஊரு எல்லாம் சுத்திட்டு போச்சு, எங்க மேனேஜர் சந்தோசமா வண்டில முன்னாடி உகாந்துக்கிட்டு இயற்கையை தனது டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து கொண்டு வந்தார். மனுஷன் கொஞ்ச நாள் தான் இனி சந்தோசமா இருக்க போகிற என்கிற நினைப்பில் அவரை பார்த்து பரிதாபட்டேன் ( அனுபவம் தான் வேற என்னத்த சொல்லுறது).

நிச்சயதார்த்தம் சுபமாக நடந்தது பசி வேற உயிர் போகுது மச்சி உனக்கு பசிகலையாடா என்று கூட இருந்த நண்பனிடம் கேட்டேன் . நான் தான் 3 இட்லி 2 புரி செட் சாபிட்டேன்ல அதன் பசிகல என்று பதில் வந்தது. அடடா நாம தான் சுறு சுருபா எழுந்து வந்துடோம் , இவங்க எல்லாம் காலைலே புல்லா கட்டிடங்க என்று பந்திக்கு முந்திக்கோ என்கிற வாசகம் நினைவுக்கு வர சாப்பிடும் இடம் நோக்கி சென்றான் மற்றவர்கள் பிறகு வந்து சேர்ந்து கொண்டார்கள். சாப்பாடு அருமையாக இருந்தது பெல்ட் லூஸ் பணிகொண்டு மேலெ வந்து உட்கார்ந்தால், நண்பன் கேட்டான் மச்சி சரக்கு அடிக்கலாமா என்று ??? கொஞ்ச நேரத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன்.


எல்லாம் நல்லபடியாக முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம் ஆபீஸ்ல பார்க் பண்ணி வைத்த வண்டிய எடுக்கலாம் என்று சென்றேன். ஏதோ ஒன்று குறைகிறதே என்று தேடினால் வண்டில மாட்டி வைத்து இருந்த ஹெல்மெட் காணோம் !!!!

என்ன கொடுமை சார் இது ?? அந்த ஹெல்மெட் மோந்து பார்த்தா மயங்கி விழுதுடுவங்க என்று தான் நான் அத பார்கிங் ஏரியாலயே விட்டு போறேன் அத ஒருத்தன் ஆட்டைய போட்டுட்டு போய்டான். அவன் நிலைமை என்ன அச்சோன்னு தான் கவலையா இருக்கு ..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக் :

தெரியாமல் இருப்பது தவறு இல்லை ,

தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் தவறு .





குவாட்டர் : 68 ருபாய் .





5 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

நான் தான் பஸ்டா ...........சாப்பாடு அந்த மாரி இருந்துச்சா .......பெல்ட் லூஸ் பண்ணும் அளவுக்கு......சமைச்ச கைக்கு காப்பு ( தங்கம்) போடல்லாம்என்று சொல்றீங்க....

 

//குவாட்டர் : 68 ருபாய் .//

இம்மாதிரி தவறான தகவல்களை பரப்பவது அதைவிட தவறு!

60 ருபாயிலிருந்து ஆரம்பித்து 1500 வரை சரக்கு இருக்கிறது

பிராண்ட் வாரியாக விலைப்பட்டியல் எழுதவும்!

 

உங்கள் வருகைக்கு நன்றி நிலாமதி.

அதற்கு தான் சம்பளம் வாங்கி விட்டார்களே பின் எதற்கு தங்க காப்பு,

அது எல்லாம் மனைவிகோ இல்லை மச்சிநிச்சிகோ செய்து போடலாம் ..

 

//இம்மாதிரி தவறான தகவல்களை பரப்பவது அதைவிட தவறு!

60 ருபாயிலிருந்து ஆரம்பித்து 1500 வரை சரக்கு இருக்கிறது

பிராண்ட் வாரியாக விலைப்பட்டியல் எழுதவும்//


ஐயா ராசா நான் டஸ்க்மார்க்ல வேலை பார்களா .

என்ன விட்ருங்க பாஸ்.