திருப்பூர் வலைப்பதிவர்கள் said... நல்ல பகிர்வு. நீங்க எப்படி பதிவு எழுத வந்தீங்கனு சொல்லவே இல்லியே ராஜராஜன்!
படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தினமும் பேப்பர் படிக்கும் வழக்கம் நான் 7ஆம் படிக்கும் போது ஆரமித்தது . பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் போது பாட புத்தங்கள் உடன் குங்குமம் வார இதழ் படித்து கொண்டு இருப்பேன். நாங்கள் இருந்த பகுதி தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்து கொடுத்த குடியுருப்புயில் அது அப்பார்ட்மென்ட் போல இருக்கும். மாடியில் படிக்க போறேன் என்று சொல்லி விட்டு கும்குமம் வர இதழை மறைத்து எடுத்து சென்று படிப்பேன் எனக்கு வர இதழ் என்றல் குங்குமம் புத்தகம் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ராணி , தேவி போன்ற இதழ்கள் எல்லாம் கடைகளில் பார்த்து அது பெண்களுக்கான பத்திரிகை என்று வாங்காமல் இருந்து உள்ளேன்.
பிறகு காலேஜ் சேர்ந்த பிறகு கல்லூரி நண்பன் முத்துகிருஷ்ணன் ராஜேஷ்குமார் நாவல் அறிமுகம்படுத்தி வைத்தான். காலேஜ் முடியும் வரை ராஜேஷ்குமார் நாவல் அதிகமாக படித்து இருக்கிறேன். அவரின் நாவலை முதல் பத்து பக்கங்கள் படித்து விட்டு அப்படியே ஜும்ப் பண்ணி கடைசி பக்கம் சென்று முடிவை தெரிந்து கொண்டு பிறகு முதலில் இருந்து படிக்க ஆரமிப்பேன் . இந்த மாதுரி கதைகளை படிக்கிறது ஒருவித ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு மட்டுமே .
கட்டுரைகள் எல்லாம் படிக்கமாட்டேன். சினிமா , கிரைம் , கதைகள் , கிசு கிசு இது மட்டும் தான் ரொம்ப ரசித்து படிப்பேன். தொடர் கதைகள் ஒரு வாரம் படிக்காமல் விட்டுவிட்டால் பிறகு அதை தொடர்ந்து படிக்க மாட்டேன், சுவாரசியம் போய்விடும் என்கிற காரணத்தினால் (எடுத்துகாட்டு - ஆனந்த விகடன்ல இப்பொது தொடர் கதையாக வந்து கொண்டு இருக்கும் குமார சம்பவம் முன்று வரங்கள் படித்தேன் நான்கு மற்றும் ஐந்து ஆம் வாரம் படிக்காமல் விட்டதினால் அந்த தொடரை இப்பொது படிப்பதே இல்லை).
ராஜேஷ்குமார் நாவல் படித்த பிறகு நாம் ஏன் கதை எழுத கூடாது என்ற எண்ணம் தோன்றியது அவ்வாரே எனது கல்லூரியில் படிக்கும் போதே ஒரு நாவல் எழுதினேன், தமிழை நான் படிக்கும் அளவுக்கு எழுத தெரியாது, இப்பொது கூட என்னுடைய எழுத்துகளில் நிறைய எழுது பிழைகளை காணலாம்.
நண்பன் ஒருவன் படித்து பார்த்து ரொம்ப கேலி செய்தான் "நீ எல்லாம் கதை எழுதி என்ன பண்ண போற? ஒழுங்கா அர்ரியர் முடிக்க பாரு" என்று திட்டினான். இது எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு நாம எழுதுறது இவனுக்கு புடிகலையா இல்ல கதை நல்ல இல்லையா என்று தெரியவில்லை சரி இத்தோட கதை எழுதுறத விட்டுடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.
"ஏன் இப்படி காதலிகிரிங்க"? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது ?? அதே மாதுரி தான் இதும். கிரைம் புத்தகம் கூட இப்படித்தான் அறிமுகம் ஆகியது. இப்பொது வாரம் ஆனால் ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடன் வாங்க மறப்பதில்லை, என்னோட அப்பா வார வாரம் ஜூனியர் விகடன் வாங்கிடியா என்று மறக்காமல் கேட்பார்.
சாரு நிவேதா, குஷ்பு கற்பு பற்றி பேசிய பேச்சுகள் எல்லாம் ஓய்ந்த பிறகு ஆனந்த விகடன் பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது , அதை படித்து பார்த்த போது யாருடா இந்த ஆளு இவள்ளவு தைரியமா பேசுறாரே என்கிற ஒரு வித மதிப்பு மற்றும் பிரமிப்பு வந்தது. இன்டர்நெட்ல சும்மா இவரை பற்றி எதாவது இருக்கன்னு தேடும் போது இவரே ஒரு வெப்சைட் வைத்து இருக்கிறார். என்னத்த எழுதி இருகார்ன்னு கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரமித்த உடன் என்னையும் அறியாமல் அவரின் வெப்சைட்யை bookmark செய்தது. இவரின் 0டிகிரி நாவல் தான் நான் வாங்கிய முதல் குண்டு புஸ்தகம். முதல் தடவை படிக்கும் போது ஒண்ணுமே புரியல, காசு வேஸ்ட் பணிடோமோன்னு நினைச்சேன்.
டிரைன்ல போகும் போது திரும்ப திரும்ப முன்று தடவை படித்தேன் அப்பதான் கொஞ்சம் புரிந்தது இந்த புத்தகத்தை வாங்கியது வீணாக போகவில்லை என்று. அதன் பிறகு இவரின் ராஸ லீலா , முடு பனி சாலை , மதுமிதா சொன்ன பாம்பு கதை என்று இவரை சுற்றி பயணிக்க ஆரமித்தேன்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு புத்தங்கள் எல்லாம் அருமை, அதும் Biography புத்தகம் எல்லாம் சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான படைப்பில் உள்ளது. இப்பொது எல்லாம் மாதத்துக்கு ஒரு புத்தகம்மாவது வாங்கி படித்து விடுகிறேன். அடுத்து லக்கிலுக் .. இவர்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார் அது எப்படின்னு தெரியல. ஒரே ஒரு கட்டுரை தான் படித்தேன் அழகாக எழுதி இருந்தார். இவரை தொடர்ந்து அதிஷா , கேபிள் சங்கர், பரிசல் , கார்க்கி , ஜாக்கி சேகர், வால் பையன் இன்னும் பலரை படித்து கொண்டு இருந்தேன்.
இவர்கள் பார்த்துதான் நான் எழுத வந்தேன் , நமக்குன்னு ஒரு ப்ளாக் ஓபன் பண்ணனும் அதை எப்படி பண்ணுறதுன்னு தெரியல. யாருகிட்டையும் கேக்காம நானே எல்லாதையும் செய்தேன். வால் பையன் ஒரு முறை தமிழில் டைப் பண்ண உதவும் ஒரு சாப்ட்வேர் குடுத்தார்.. ஆனால் அதை சரியாக உபயோக படுத்த தெரியவில்லை. இப்போது google transliterate தான் எனக்கு தமிழில் டைப் பண்ணுவதற்கு உதவுகிறது. என்னுடைய ப்ளாக் எப்படி தமிழ்மணத்தில் சேர்ப்பது என்று கொஞ்சம் யோசிச்சு அவர்கள் முலமாக தெரிந்து கொண்டேன்.
கேபிள் சங்கர் எழுதும் விமர்சனம் ரொம்ப அருமையா இருக்கும் அதை பார்த்து நான் இரண்டு படங்களுக்கு விமர்சனம் எழுதினேன், ஆனா அவர் மாதுரி எழுத முடியல "உனக்கு தெரிஞ்சத உன்னால எது முடியுமோ அத மட்டும் எழுது மத்தவங்கள பார்த்து காபி அடிக்காதன்னு" மனம் சொல்லியது .
அப்ப என்னோட தனி தன்மை எது ?? இதற்கு விடை தொடர் கதை . அட பார் ரா என்கிற தொடர் கதையை நான் எழுத ஆரமித்தேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா குமுதம் பத்திரிகைக்கு குடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். கணேஷ் , வசந்த் புதிய தொடர் முதல் வாரம் வந்தது அதற்கு பிறகு அவர் சொல்லியது "இனி இந்த தொடர் எப்படி வரும் என்று எனக்கே தெரியாது" அதே மாதுரி தான் நானும் தொடர் கதை எழுத ஆரமிக்கும் போது இது எப்படி போகும் என்று தெரியவில்லை ஆனால் சுவாரசியம் குறையாமல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. இப்பொது எல்லாம் பதிவு எழுதும் போது நிறைய சந்தோசமா இருக்கு, நான் ஏதோ சாதித்து விட்டது போல ஒவ்வொரு பதிவையும் பதிவேற்றம் செய்யும் போது தோன்றும்.
சந்தோசம் அவ்வளவே ,
இது தொடர் பதிவு என்பதனால் கார்த்திகேயன் மற்றும் நிலாமதி இருவரையும் அழைக்கிறேன் ..
7 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
ரொம்ப நல்லா எழுத வந்ததை சொன்னீர்கள். நானும் மகிழ்ச்சியாக தொடர்கிறேன்.
தமிலிஷ் ஓட்டு பட்டயை இணைத்துவிடுங்கள்.
ஓட்டு போட வசதியாயிருக்கும்.
அருமை நண்பர் ராஜராஜன்,
நானும் கூகுள் ட்ரான்ச்லிட் தான் தமிழில் எழுத உபயோகிப்பேன்.
இப்போது nhm writer உபயொகிக்கிறேன்.
இதை தரவிரக்கி இன்ச்டால் செய்யுங்கள்.
உங்கள் எழுத்துபிழைகளை களைந்து வெளியிடுங்கள்.
அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எனக்கு மெயில் செய்யுங்கள்.
நான் பிழை நீக்கி தருகிறேன்.
ஒரு நாலு பதிவுக்கு.
அப்புறம் நீங்களே கிளம்பிவிடுவீர்கள்.
நண்பா ராஜராஜன்..........என்னையும் மதித்து பதிய அழைத்தமைக்கு நன்றி.விரைவில் தொடர்கிறேன்.
நல்லா எழுதியிருக்கீங்க.. ராஜராஜன்.. நைஸ். அதென்ன நான் விமர்சனம் மட்டும்தான் நல்லா எழுதுறேனா..?:(
நன்றி கார்த்திக்கேயன்
NHM Writer இப்பொது தான் கொஞ்சம் கொஞ்சம் யூஸ் பண்றேன் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது . போக போக பழகிடும் என்று நினைகிறேன் .
தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் கண்டிபாக திருத்தி கொள்கிறேன்.
நன்றி நிலாமதி,
உங்கள் பதிவு அருமை .
//Cable Sankar said...
நல்லா எழுதியிருக்கீங்க.. ராஜராஜன்.. நைஸ். அதென்ன நான் விமர்சனம் மட்டும்தான்//
எல்லோருக்கும் ஒரு தனி தன்மை இருக்கும், கேபிள் சங்கர் என்றால் விமர்சனம். உங்களை போல யாரும் படத்தை இந்த அளவுக்கு விமர்சனம் செய்தது இல்லை. உங்களின் கதைகள் கூட அருமை தான் . அப்பறம் கொத்து பரோட்டா சூப்பர் ..
Post a Comment