~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கொஞ்சம் இடைவேளை

ஏன் எழுதவேண்டும் என்று இப்பொழுது எல்லாம் ரொம்ப யோசிக்கிறேன். எனக்கு படிப்பதில் தான் அதிக விருப்பம். புதிதாக எழுத வரும் போது ஏன் எதற்கு என்று தெரியாமல் ஒரு வித ஆர்வ கோளாறில் எழுதினேன். இப்போது அந்த ஆர்வம் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

இரண்டு வருடங்களாக புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வம் வலைதளத்திலும் திருப்பி இரண்டையும்  ஒரு சேர படித்தேன். புத்தகங்களை பயணங்களில் தான் அதிகம் படிப்பேன். அலுவலகம் வந்த பிறகு வேலையில்லாத சமயங்களில் ஏதோ தேட போய் வலைப்பூ பற்றி  தெரிந்து கொண்டு படிக்க வந்தேன்.திகட்ட திகட்ட படித்தேன், படித்துகொண்டு இருக்கிறேன்.
 


நான் ஏன் எழுதவேண்டும் என்று சில நாட்களாக மனதை போட்டு குழப்பிக்கொண்டு இருக்கிறேன். எனது எழுத்துகளுக்கு அவ்வளவு வரவேற்புயில்லை என்பது எனக்கு தெரியும். பிறகு நான் ஏன் எழுதுகிறேன்??

எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை சொல்கிறேன், கொஞ்சம் கற்பனை கலந்த கதையை சொல்கிறேன், கவிதை எழுத முயற்சித்து தோற்றுள்ளேன், தொடர்கதை எழுதி வரவேற்பு இல்லாமல் நிறுத்தியுள்ளேன், சிறுகதை எழுதுவதில் கொஞ்சம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நான் படித்த புத்தகங்களை பற்றி எனது பார்வையில் எழுதியுள்ளேன். இதன் பிறகும் ஏன் நான் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.

எனது நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள வயதுவித்தியாசம் இல்லாமல் அதிக மக்களை நண்பர்களாகியுள்ளேன், எதிரிகள் என்று சொல்ல ஒருவருமில்லை. பிறகு நான் ஏன் லக்கி, அதிஷாவிடம் எழுத்தின் மூலம் சண்டை போட்டேன் ?? இதற்கா  எழுதவந்தேன்


எழுதுவதற்கு எவ்வளோ இருக்கிறது அதில் எதை எழுதுவது என்று மனதில் குறித்து வைத்து இருந்தது எல்லாம் எழுதும் போது மறந்து போய்விடுகிறது அல்லது அது தேவைதான என்று தோன்றுகிறது.   நான் எழுதுவதினால் யாருக்கு பயன்? நான் எழுதாமல் இருந்தால் யாருக்கு பயன்? எழுதி என்ன கிழிக்க போறேன்?? போதும் என்று நினைக்க தோன்றுகிறது.

ஒரு விஷயத்தை ரொம்ப ஆர்வமாக தொடங்கிவிடுவேன், கொஞ்ச நாட்கள் செல்ல செல்ல அதில் இருக்கும் போதை, ஆர்வம் அல்லது வசீகரம் எல்லாம் என்னை விட்டு  போய்விடும். பிறகு அதுவோரு வேற்றிடமாகதான் எனக்கு தோன்றும். அதைவிட்டு தூர சென்றுவிடுவேன், சில நாட்களுக்கு பிறகு அதை திரும்ப பார்க்கும் போது அழகாக தெரியும், ஆர்வம் மேலிடம், அதில் சென்று ஊற வேண்டும் என்று தோன்றும். அன்றைய காலம் வரும் அப்பொழுது திரும்பி வருவேன்.


எனக்கு படிப்பதில் தான்  ஆனந்தம். அதில் இருக்கும் சுகமே தனி.

இந்த மாதம் முதல் எனது வலைப்பூவில் நான் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று இருக்கிறேன்.

                     கொஞ்சம் இடைவேளை


With Love
Romeo ;)

23 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

எனக்கும் இந்த ஃபீலிங் வந்துச்சி. இப்பவும் இருக்குன்னு நினைக்கிறேன்.

தோணும் போது எழுதறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். இல்லைன்னா வார்த்தைகளை பிடுங்கனும். அதுக்கு எழுதாம இருக்கறதே பெட்டர். ஆனா வரவேற்பில்லைன்னு எல்லாம் ஏன் நினைக்கறீங்க??? :)

மறுபடி தோணும்போது.. திரும்ப வாங்க!!! :)

 

பாலா நீங்க சொன்னது உண்மை.
\\தோணும் போது எழுதறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். இல்லைன்னா வார்த்தைகளை பிடுங்கனும். //

இது தான் பாலா எனக்கு நேர்ந்து இருக்கு. நான் ஒண்ணும் எழுத்தான் இல்லை வார்த்தைகள் வந்து ஜாலம் போட. ஏதோ எழுதணும்ன்னு எழுதினேன் அவ்வளவு தான், இப்போ போதும்ன்னு தோணுது நிறுத்திக்கிறேன்.

 

"Taking a Break" - அதை கூட என்னமா எழுதி இருக்கீங்க!!!
உங்களுக்கு எழுத தோன்றும் போது, மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதத்தானே, உங்களுக்கு என்று ஒரு ப்லாக் இருக்கிறது. இதில் வெற்றி தோல்வி என்ன? முற்றும் போடாமல், தொடரும் என்று போட்டு இருப்பதால், ஓகே.
நீங்கள் படித்த புத்தகங்களின் விமர்சனங்கள், உங்களுக்கு பிடித்த ப்ளொக்ஸ் என்ற பிரிவுகளில் தொடர்ந்து எழுதலாமே.
விரைவில் உற்சாகம் பெருகி, திரும்ப எழுத வாருங்கள்.

 

உங்களுக்கு வந்த உணர்வு சரியே..

எனக்கும் அதே நிலை வந்திருக்கிறது..

வெறுமை... சூழ்ந்து நின்றிருக்கிறது..

ஆனாலும் எழுத்தைக் கைவிட நான் தயாரில்லை..

காரணம்...

இந்த எழுத்துதான் உங்களை....
ஏன்... இன்று வலையுலகில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கொடுத்தது...

 

இது எல்லார் மனசுலயும் இருக்கற டெம்ப்ளேட் பதிவுதான் ரோமி..:)

பாலா சொல்றத நானும் ஆமோதிக்கிறேன். பதிவர்கள் என்பது போய் பகிர்வர்கள் என்பதுதான் சவுகரியம் போல.. நல்லா ரெஸ்ட் எடித்துட்டு சும்மா ஃப்ரெஷ்ஷா திரும்பி வாங்க.

இங்கே அதிகபட்சம் எதிர்பார்க்ககூடியது நல்ல நட்புகள் மட்டுமே. அது கிடைத்தபின் வேறெதுவும் பெரிதில்லை என்பது என் எண்ணம்.:)

 

//சில நாட்களுக்கு பிறகு அதை திரும்ப பார்க்கும் போது அழகாக தெரியும், ஆர்வம் மேலிடம், அதில் சென்று ஊற வேண்டும் என்று தோன்றும்.//
அந்த‌ நாட்க‌ள் வெகுதூர‌த்தில் இல்லை ந‌ன்ப‌ரே..வெகுவிரைவில் வருவீர்க‌ள்.

 

தவறான முடிவு ரோமியோ.. எழுதுவதெல்லாம் பெரும் படைப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனசுல தோன்றுவதை சும்மா ஜாலியா எழுதுங்க.. வலைப்பூ என்பது நம் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளத்தான்.. படைப்புகளை பிரசுரிக்க மட்டும் அல்ல.. உங்கள் முடிவை கைவிட்டு தொடர்ந்து எழுதுங்க..

 

ரோமியோ! வருத்தமா இருக்கு உங்க பதிவைப் படிச்சப்போ! சரி, எனக்கென்ன தெரியும்... நானும் ஏதோ வலைப்பூ எழுதி, வசவு வாங்கிட்டு இல்லையா! ஏதாச்சும் எழுதுங்க ரோமியோ! அதிகம் படிக்கிறது நல்ல விஷயம்தான். படிச்சதை வலைப்பூவுல பகிர்ந்துக்குங்களேன். தொடர்ந்து எழுதுங்க! எழுதணும் கண்டிப்பா!

 

நண்பா போன மாசம் எனக்கும் இதே ஃபீலிங் தான்.சொன்னா நம்ப மாட்டீங்க.
எழுதியது வெறும் மூன்றே இடுகைகள்.
இப்போது இப்படி ஃபீல் செய்யும் நீங்கள்
அடுத்த மாதம் வேறு மாதிரி சிந்திப்பீர்கள்.

எனக்கு இப்படி தோன்றும் போதெல்லாம் நான் வெறும் பின்னூட்டம் மட்டுமே இடுகிறேன். அப்போது அப்டேட்டில் இருந்தா மாதிரியும் ஆச்சு.

இன்னொன்னு எழுதாம விட்டால் தான் பிரபலமாம்.நிறைய பேர் அப்படியும் திரிகிறார்கள்.

 

@Chitra
நன்றி மீண்டும் சந்திப்போம்

@ஈரோடு கதிர்
தலைவரே நட்பு என்பது வேறு எழுத்துகள் என்பது வேறு தானே. நான் கொஞ்சம் இடைவேளை தான் விட்டு இருக்கிறேன் தலைவரே.

@ஷங்கர்
உங்கள் கருத்தை நான் ஏத்துகிறேன் பாஸ்.

@நாடோடி
நன்றி பாஸ் , மீண்டும் சந்திப்போம்.

@SanjaiGandhi
இது எனக்கு தவறு என்று தெரியல பாஸ். கொஞ்சம் இடைவேளை மட்டுமே, இது என்னை நானே புதிப்பித்து கொள்ள உதவும்.

@கிருபாநந்தினி
உங்கள் அன்புக்கு நன்றி. கண்டிப்பாக எழுதுகிறேன்

@கார்த்திக்கேயனும்
இருக்கலாம் பாஸ், இப்பொது எனக்கு இது போர் அடிக்குது அதான் கொஞ்சம் விலகி இருக்க விரும்புகிறேன்.


\\இன்னொன்னு எழுதாம விட்டால் தான் பிரபலமாம்.நிறைய பேர் அப்படியும் திரிகிறார்கள்//

அது நான் இல்லை பாஸ் :))))

 

ஹ்ம்ம்..நானும் இந்த நிலைமைல தான் இருக்கேன்..ஆனா என்னோட முடிவு, தொடர்ந்து என் வலைபக்கத்தில் எழுதி வரைவில் சேமித்து வைப்பது. ஒரு மூணு மாசம் கழிச்சு படிச்சாலும் எனக்கு புடிச்சா, பதிவா போட யோசிப்பது..

//இல்லைன்னா வார்த்தைகளை பிடுங்கனும்.// இது சரி.

நம்மள மாதிரி நிறைய பேர் இருக்காங்க..நல்ல வாசகர்கள். எழுத்தார்கள் கிடையாது. ஆனா வார்த்தைய புடுங்காம அவங்களுக்கு தோன்றத எழுதிகிட்டு..வரைவில் சேமியுங்களேன். புடிச்சா வெளியுடுங்க..

it is not that you have to play in IPL to play cricket..road side கிரிக்கெட் brings joy to everyone..we all are roadside cricketers..even if there is no audience, let us write for our own joy.

Hope to see a "நா திரும்ப வந்துட்டேன்" post

 

படிக்கறதுதான் காரணம்னு சொன்னா சரி. ஆனா திரும்ப வரணும்...

 

நல்ல பகிர்வு நண்பரே .
கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி !

 

இது மாதிரி எல்லாருக்குமே தோணும். படிக்கறதுக்காக இடைவேளைனா கட்டாயம் ஒரு பிரேக் எடுத்துக்க வேண்டியதுதான்.

சீக்கிரம் திரும்பி வாங்க. இன்னும் வீரியமா.. நிறைய சண்டை போடலாம் நண்பா!

 

ஏன் ரெமோ.. என்ன பிரச்சனை.. எழுத்துங்கிறது உங்க திறமை மட்டுமல்ல... நீர் காற்று போல அவசியமானதும் கூட..... அதனால் விடாமல் எழுதுங்கள்....

(இப்படி பதிவு போட்டால், ஏதோ நீங்கள் சுயவிளம்பரம் செய்வது போலவும், மற்றவர் எழுதுங்கள் என்று கேட்க்க வேண்டும் என்பதும் போலவும் தோன்றும்.. ஆக....... இனி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அது உங்கள் விருப்பம்).

 

@செந்தில் நாதன்
உங்கள் கருத்துக்கு நன்றி.

@புலவன் புலிகேசி
படிக்கிறது மட்டுமே காரணம் இல்லை பாஸ். ஏதோ ஒரு வித வெறுமை தான்.

@ பனித்துளி சங்கர்
நன்றி சங்கர்

@அதிஷா
ஹா ஹா . இனி நோ சண்டை ஒன்லி நட்பு :)


@பிரேமா மகள்
நான் சுயவிளம்பரதுகாக இப்படி எழுதவில்லை. எனக்கு தோன்றியதை, பிடித்ததை எழுதும் போது எழுதினேன் படிச்சிங்க, அதே மாதிரி தன இதுவும். கொஞ்ச நாள் நிப்படி வைக்கலாம் என்று தோணுது அதையும் உங்கள் எல்லோரிடனும் சொல்லிவிட்டே செய்யலாம் என்று தான் எழுதினேன். கொஞ்சம் கேப்....

 

படித்ததை பகிர நினைக்கும் பொது அல்லது தானாக எழுத என்று ஏதாவது கிடைக்கும்போது எழுதுதல் நலம். அவ்வப்போது எழுதிக் கொண்டிருங்கள். நீண்ட இடைவெளி வேண்டாம்.

 

நல்ல விசயந்தான்.எந்த வேலையா இருந்தாலும் ஒரு ‘Breathing Gap’ வேணும்.பொறுமையாத் திரும்ப வாங்க.தொடர்ந்து வாசிங்க....keep in touch......All s Well..

 

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

 

நீங்க சொல்லிட்டீங்க. நான் சொல்லலை. அது தான் வித்தியாசம்.

 

"கொஞ்சம் இடைவேளையாகவே" இருக்கட்டும்.. திரும்பி வாருங்கள் நண்பா..

 

இப்போது இடைவெளி விடத் தோணியது போல் விரைவிலேயே எழுதத் தோணி திரும்பி வர வாழ்த்துகள் ரோமியோ.

 

எனக்கும் இது போல் அப்பப்போ தோணும்....