~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள் - 2

பயணங்கள் - 2


சென்ற கட்டுரையில் கோவைக்கு சென்றதை எழுதி இருந்தேன், இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி கோவையில் இருந்து சென்னைக்கு வந்தது.

கும்பலாக இருந்து கும்மி அடித்து கொண்டு இருந்தோம் கல்யாணத்தில் , அத்தை மகள் ஒருத்தியை பார்த்ததும் ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன். அவளின் கலயாணத்துக்கு முன்பு தேவதை போல இருந்தாள். நல்ல வளத்தி, ஒல்லியாக ரொம்ப அழகாக இருப்பாள். அவளின் இரண்டு கன்னங்களில் விழும் அந்த குழியை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதற்காகவே அவளை சிரிக்க சொல்லுவேன் அது பள்ளி காலத்தில். அப்போது அவளின் மேல் எந்த ஒரு ஆசையும் இல்லை ஒரு சிறுவன் சிறுமி விளையாட்டு போல இருந்தது . அவள் கல்யாணம் முடிந்து போன பிறகு அவளை பார்க்கவே இல்லை கிட்டதட்ட 3 வருடங்கள் கழித்து இந்த கல்யாணத்தில் சந்தித்த போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உடம்பில் சதை போட்டு இருந்தாள் பார்ப்பதற்கு 30 வயது போல இருந்தாள். என்னால் நம்பவே முடியவில்லை இவளா என்று. நான் இருப்பதை எங்கிருந்தோ பார்த்தவள் ரொம்ப சந்தோசமாக வந்து என்னருகில் வந்து அமர்ந்தாள் குழந்தையுடன். வெகு நாட்களுக்கு பிறகு பார்த்ததினால் வார்த்தைகள் ஆதிகமாக வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரமித்தோம். பேச்சு நீண்டு கொண்டு இருந்தது எங்களின் தற்போது வாழ்கை எப்படி செல்கிறது என்கிற கேள்வி எழும் போது அவள் உச் கொட்டினாள் சென்னை போன்ற பரபரப்பு நகரத்தில் வளர்ந்தவள் குமாரபாளையத்தில் கல்யாணம் கட்டி கொண்டு சென்றதால் வந்த விரக்தி. . இந்த தருணத்தில் எதாவது பேசி சங்கட பட வைக்க வேண்டம் என்று வேறு பேச்சு பேச ஆரமித்தோம். கடைசியாக விடைபெறும் நேரத்தில் அவளை சிரிக்க சொன்னேன் எதற்கு என்றவளின் கன்னங்களை பார்த்தேன் அந்த குழி மட்டும் மாறவில்லை.


அன்று மதியமே கோவை எக்ஸ்பிரஸ்ல் அப்பா, அம்மா உடன் கிளம்ப வேண்டிய கட்டாயம். முன்பே முன்பதிவு செய்ததினால் இந்த தடவை டிக்கெட் பரிசோதகரை எதிர் பார்க்காமல் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சொந்த பந்தங்கள் உடன் நிறைந்து இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்த சந்தோஷம் இப்பொது காணாமல் போனதை உணர்ந்தேன். இந்த மாதிரி மதியம் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு சவுகரியம் ரயில்க்குள்ளே விற்றுக்கொண்டு வரும் திண்பண்டங்கள் தான். கட்லெட், சமோசா , வடை, நிமிடத்துக்கு ஒரு முறை வரும் டீ, காபி , கூல் ட்ரிங்க்ஸ், மாலை வேளையில் வரும் தக்காளி சூப் , மசால் தோசை, பிரட் அம்லேட் தின்னுவதற்கே 200 ருபாய் அழவேண்டும். ரயிலில் வரும் மற்ற விற்பனையாளர்கள் புத்தகங்கள் , குழந்தைகளுக்கு ஆனா விளையாட்டு பொருட்கள், முறுக்கு, கண் தெரியாதவர்கள் விற்றுக்கொண்டு இருந்த டோர கலரிங் புக் இவைகளுடன் புது படங்களை கூட ஒருவர் விற்றுக்கொண்டு வந்தார்.தூக்கம் கண்ணை முடியதால் திருப்பூர் தாண்டி சேலம் வரை நன்றாக தூங்கி கொண்டு வந்தேன் உட்கார்ந்தபடியே. சேலத்தில் கூட்டம் கொஞ்சம் ஏறியது படிப்பதற்கு புத்தகம் ஏதும் இல்லாமல் ரொம்ப எரிச்சலாக இருந்தது. பகல் நேர பயணங்களில் புத்தம் இல்லாமல் நான் புறப்படமாட்டேன் அன்று அவசரம் காரணமாக ஏதும் எடுத்து கொண்டு வரவில்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது சிறிது நேரம் கதவு அருகில் நின்று கொண்டு வருவது என்று நேரத்தை கழித்து கொண்டு வந்தேன். வண்டி ஆம்பூர் தாண்டி சென்று கொண்டு இருந்தது. கழிவறை செல்ல எழுந்தேன் அதன் அருகில் சிலர் கீழே எதோ பார்த்து கொண்டு இருந்தார்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆவலில் நானும் பார்த்தேன் பார்வையற்றவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் என்னவென்று விசாரித்தேன். கதவுக்கு நடுவில் இருக்கும் ஜன்னல் முடும் போது இவரின் விரல்கள் அடி பட்டு விட்டது என்றார். ரயில்களில் இரண்டு ஜன்னல்கள் இருக்கும் ஒன்று கண்ணாடியால் ஆனது , மற்றொன்று இரும்பால் ஆனது. இரும்பால் ஆனா ஜன்னல் தான் இவரின் விரல்களை பதம் பார்த்து இருந்தது.


கூடி இருந்த ஒருவர் கூட அவருக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. அந்த விரல்களை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு சுற்றி இருந்தார். ரத்த போக்கு அதிகமாக இருந்ததை அவர் பேன்ட் காமித்தது , ரத்தத்தை அவர் பேண்டில் துடைத்து இருந்தார் போல. பார்த்ததும் என்னால் இவர்களை போல வேடிக்கை பார்க்க முடியவில்லை. கும்பலில் இருந்த ஒருவர் முதலுதவி பெட்டி எங்கு இருக்கும் என்று டீ விற்கும் ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார். இது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவர் எழுப்பி விரல்களில் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் கவர்யை நீக்கினேன். ரத்தம் உறைந்து போய் இருந்தது அவர் கை முழுக்க ரத்த கறைகள். சுற்றி இருந்தவர்களின் அலச்சியம் அப்போது தான் தெரிந்தது. அவரின் உடை ரொம்ப அழுக்காகி இருந்தது ஒருத்தரும் உதவிக்கு வராதது கண்டு என்னை அறியாமல் கோவப்படேன். ஒரு இளைஞர் கொஞ்சம் போல பஞ்சு கொண்டு வந்தார் அதை தண்ணிரில் நனைத்து உறைந்து போன ரத்த கறைகளை சுத்தம் பண்ணினேன். அந்த பஞ்சு போதுமானதாக இல்லை. எனது கைக்குட்டையை தண்ணிரில் நனைத்து முடிந்த வரை சுத்த படுத்தினேன். பிறகு அதை வைத்தே அவரின் கைகளை சுற்றி விட்டேன். காட்பாடி சென்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்ல முதலுதவி பெட்டி இருக்கும் அவர்களிடம் மருந்து வைத்து கொள்ளுங்கள் என்றேன். "அது எல்லாம் வேண்டம் சார் அவங்க எங்களுக்கு எல்லாம் உதவ மாட்டாங்க" என்றார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது அதை சொல்லும் போதே ஒரு வித விரக்தியை அவரின் பேச்சில் தெரிந்தது. சரி டாக்டர் போய் பாருங்க காயம் ஆழமாக இருக்கும் போல இருக்கு என்றேன். சரி என்றார் இதிலும் அதே விரக்தி.

எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன் மனம் அவரின் இந்த நிலைமையை நினைத்து கேள்விகளை அடுக்கிக்கொண்டு சென்றது. தனக்கு எங்கு காயம் பட்டு இருக்கிறது என்று கூட தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் , ரத்த கரைகளை எப்படி சுத்தபடுத்துவது தெரியாமல் அவரின் கண்களை பறித்த இறைவனை திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் திட்ட மனம் வரவில்லை அதற்கு பதில் நன்றியை தான் சொன்னேன் அவருக்கு என்னால் முடிந்த உதவி செய்ததுக்கு.

காட்பாடி ரயில் நிலைத்தில் அவர் இறங்கினர் , ஓடி சென்று வலியின் திவிரத்தை கேட்டேன். இப்ப வலி இல்ல சார் என்றார். பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு டாக்டரிடம் செல்லுமாறு சொன்னேன். வேண்டாம் சார் என்று எதோ ஒரு ஆயில்மேன்ட் பெயரை சொல்லி அதை பூசினால் சரியாகிடும் என்றார். காயம் ஆழமாக இருக்கிறது எதுக்கோ நீங்க டாக்டர் பாருங்க என்றேன், இப்போதும் அதே போல விரக்தியின் சிரிப்பு. பார்க்கலாம் சார் உங்க உதவிக்கு நன்றி என்றார்.

எனக்கு புரிந்தது அவரிடம் பணம் இல்லை என்று. எனது பாக்கெட்யில் கைவிட்டேன் 120 ருபாய் இருந்தது. 100 ருபாய் எடுத்து அவரிடம் குடுத்தேன், வேண்டாம் என்று ரொம்ப மறுத்தார் , நான் விடாமல் அவரின் சட்டை பாக்கெட்யில் திணித்தேன். முதலில் டாக்டர் பாருங்க என்றேன் ரயில் கிளம்பியது. அவரிடம் இன்னொரு முறை இதே ரயிலில் வரும் போது சந்திக்கலாம் என்று சொல்லி விடைப்பெற்றேன்.

இறைவனுக்கு இன்னொரு முறை நன்றி சொன்னேன் அவருக்கு திரும்ப உதவி செய்ய வைத்ததற்கு.