~~ROMEO~~

Everyday Starts with Happy :)

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...

10 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

காதில் பஞ்சு வைத்து கொள்ளுங்கள்!

 

\\வால்பையன் said...
காதில் பஞ்சு வைத்து கொள்ளுங்கள் //

அப்படின என்னோட மாத சம்பளத்தில் நான் ஒரு பகுதியை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

 

நானும் இது மாதிரி எரிச்சல்பட்டிருக்கேன். mp3 யை ஹெட் செட் இருந்தாலும் சத்தமா மத்தவங்களுக்கு கேக்கறமாதிரி வைக்கறது இது மாதிரி.

 

நிஜமாவே இது பெரிய இம்சை தான். பேசாம Ear Plug வாங்கி மாட்டிக்கோங்க. யார் பேசுறதும் உங்களுக்கு கேக்காது. வீட்ல அம்மா திட்டும் போது நான் அதை தான் உபயோகிப்பேன்.

 

\\ சின்ன அம்மிணி said...
நானும் இது மாதிரி எரிச்சல்பட்டிருக்கேன். mp3 யை ஹெட் செட் இருந்தாலும் சத்தமா மத்தவங்களுக்கு கேக்கறமாதிரி வைக்கறது இது மாதிரி.//

தன்னிடம் கூட mp3 பிளேயர் போன் இருக்கிறது என்பதை காட்ட ஆசை படும் ஒரு சில அறிவி ஜிவியின் இம்சை இது.

 

\\ விக்னேஷ்வரி said...
நிஜமாவே இது பெரிய இம்சை தான். பேசாம Ear Plug வாங்கி மாட்டிக்கோங்க. யார் பேசுறதும் உங்களுக்கு கேக்காது. வீட்ல அம்மா திட்டும் போது நான் அதை தான் உபயோகிப்பேன்.//

நல்ல ஐடியா தான் ட்ரை பண்ணி பார்கிறேன்.

 

பாத்து சூதானமாயிருங்க நன்பரே,
எனக்கும் இதே போல எரிச்சல் வரும்ங்க, எல்லோரும் முகம் சுளிப்பான்,ப்ச் கொட்டுவான்,ஆனால் ஒருத்தனும் சப்போர்டுக்கு வரமாட்டான்.

நீங்க ரயில்ல போய் வரதுனால கராத்தே கற்றுக் கொள்ளுங்கள்.உபயோகமாயிருக்கும்.

 

பாத்து சூதானமாயிருங்க நண்பரே,
எனக்கும் இதே போல எரிச்சல் வரும்ங்க,அதுல ஒரு கூத்து பாருங்க , எல்லோரும் முகம் சுளிப்பான்,ப்ச் கொட்டுவான்,ஆனால் ஒருத்தனும் சப்போர்டுக்கு வரமாட்டான்.

நீங்க ரயில்ல பின்னிரவு நேரத்தில் போய் வரதுனால கராத்தே கற்றுக் கொள்ளுங்கள்.உபயோகமாயிருக்கும்.

 

கராத்தே வா ?? பாஸ் எனக்கு இந்த அடிதடி எல்லாம் ஒத்துவராது. பேசாம கைல பொருள் எதாவது வச்சிக்க ஐடியா குடுங்க

 

எனக்கும் இதே மாதிரி ஓரு சூழ்நிலை வந்தது. நான் என்னுடைய மொபைலிலும் அதே மாதிரி அலற வைத்தேன். அந்த நபர் திருந்திவிடுவரென்று நினைத்தேன். ஆனால் அவரோ தன் மொபைலை அமத்திவிட்டு என் மொபைலிலுருந்து வரும் பாட்டை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். இவர்களை என்ன செய்வது?