~~ROMEO~~

Everyday Starts with Happy :)

50 பைசாவும் மாறாத மனிதர்களும்.

இந்த 50 பைசா தொலை இப்ப எல்லாம் ஓவர்ரா இருக்கு. கடைக்காரன் 50 பைசா சில்லற இல்லனா ஒரு முட்டாய் எடுத்துதாரன் அத நாம வேண்டம்ன்னு சொன்னாலும் சில்லற இல்ல நி இருந்ததா கூடு நான் ஒரு ரூபா தரேன்னு சொல்லுறன். நம்ம கிட்ட இருந்த குடுக்கலாம் இல்லேன்னா? அந்த சாக்லேட் இல்லனா ஹால்ஸ் வாங்கிக்கிட்டு போகணும்.

போன வாரம் எங்க ஏரியால இருந்து ஆபீஸ்க்கு வண்டில வந்துடு இருந்தேன். வர வழியில ஒரு டி கடைல வில்ஸ் வாங்கினேன் அதோட விலை 3 ரூபா 50 பைசா நான் குடுத்தோ 5 ரூபா கடைகாரர் மீதி 1 ரூபா குடுத்துட்டு ஒரு ஹால்ஸ் குடுத்தார்.இதற்கு பிறகு எங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை படிங்க .




நான்: வில்ஸ் விலை ஏறிடிச்சா என்ன ?


கடைகாரர்: இல்லையே சார்.

நான்: அப்பறம் ஏன் ஒரு ரூபா மட்டும் தரிங்க ?

கடைகாரர்: அதன் ஹால்ஸ் குடுத்து இருக்கேன்ல .

நான்: நான் ஹால்ஸ் கேட்கலையே .

கடைகாரர்: என்கிட்ட 50 பைசா இல்லையே

நான்: அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?

கடைகாரர்: நீங்க 50 பைசா குடுங்க நான் ஒரு ரூபா தரேன்

நான்: என்கிட்ட இல்லையே !

கடைகாரர்: என்கிட்டையும் இல்லையே ! என்ன சார் பார்த்தா எதோ பெரிய கம்பெனி வேலை செய்றிங்க போல இருக்கு 50 பைசாக்கு பேசிட்டு இருக்கிங்களே.

நான்: அப்ப கண்டிப்பா 50 பைசா கிடைக்காதுன்னு சொல்லுங்க

கடைகாரர்: அப்பறம் எப்படிங்க இந்த ஹால்ஸ் எல்லாம் விக்கிறது? (ஹி ஹி என்று சிரித்தார்)

நான்: உங்க கிட்ட இருக்குற பொருளை மத்தவங்க கிட்ட வித்துகொங்க வேண்டாம் சொல்லல அத ஏன் அவங்க கிட்ட தினிகிரிங்க?

கடைகாரர்: சார் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுக பக்கதுல இருக்குற கடைல எங்கையாவது 50 பைசா இருக்குமான்னு பார்க்குறேன் இருந்தா வாங்கி தரேன்.

நான்: அது எல்லாம் வேண்டாம் இந்த கடைக்கு நான் எத்தன தடவை வந்து இருக்கேன் ?

கடைகாரர்: இப்பதான் உங்கள பார்க்குறேன்.

நான்: உங்க கடைக்கு இப்பதான் நானும் வரேன். சரி விடுங்க நான் இந்த ஹால்ஸ் எடுத்துக்குறேன். சில்லரை இல்லனா முதல சொல்லிடுங்க அப்பறம் முட்டாய் குடுங்க.


கடைகாரர்: சார் அடுத்த முறை வாங்க கண்டிப்பா முதலே சொல்லிடுறேன்.

நான்: என்ன முட்டாய் எடுத்துகோங்கனா?

கடைகாரர்: இல்ல சார், சில்லற இல்லைன்னு .

அடுத்த நாள் அதே கடை அதே சிகரட் ...

கடைகாரர்: சார் 50 பைசா இல்லையே.

நான் : இன்னைக்குமா ?

கடைகாரர் : யாருமே 50 பைசா குடுக்குறது இல்லையே.

நான்: அப்ப இந்தாங்க 50 பைசா எனக்கு ஹால்ஸ் வேண்டாம் ஒரு ரூபா தாங்க .

கடைகாரர் : சார் இந்த காசு செல்லாது ..

நான் : என்னது? ரெண்டு 25 பைசா செல்லாதா? ஏன் ? கவர்மென்ட்ல எதாவது சட்டம் போட்டு இருகுறங்கள என்ன?

கடைகாரர்: இந்த ஏரியால ஓடுறது எல்லாம் லாரி வண்டி தான் , முக்கா வாசி ஆந்திரல இருந்து தான் வராங்க அங்க
எல்லாம் 25 பைசா வாங்கிக்க மாட்டாங்க. அதனால இங்க கடைகளையும் அவங்க வாங்குறது இல்ல.

நான்: அவங்க வாங்காம போனா எனக்கு என்ன? நீங்க வாங்கிகோங்க .

கடைகாரர்: அத நான் எப்படி சார் மாத்துறது?

நான் : ஆந்திரகாரங்க தானே வாங்க மாட்டாங்க? தமிழ்நாட்டுகாரங்க வாங்குவங்கள ? அவங்ககிட்ட குடுங்க .

கடைகாரர்: என்ன சார் உங்களோட ஒரே தொந்தரவா போச்சு.

நான்: நான் என்ன உங்க சொத்தையா கேட்டேன்? என்னோட 50 பைசா தானே கேட்டேன்.

கடைகாரர்: இருந்தா கண்டிப்பா குடுப்பேன் சார். என்கிட்ட இல்லையே.

நான்: சரி அப்ப இந்த ஹால்ஸ் வாங்கிகோங்க. நேத்து நீங்க குடுத்தது .

கடைகாரர்: இது எல்லாம் வாங்கிக்க முடியாது சார்.

நான்: காசு குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுரிங்க, சரி உங்க பொருளே குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன்னு சொன்ன என்ன அர்த்தம்?

கடைகாரர்: சார் நான் வியாபாரி. என்கிட்ட காசு கொடுத்து பொருள வாங்கிகோங்க.

நான்: என்ன மாதுரி ஆளுங்க உங்க கடைக்கு வரத்து நாளதான் நீங்க வியாபாரி. ஒருதரும் கடைக்கு வரலைனா? நீங்களும்
எங்களை போல சாமானியன் தான்.

கடைகாரர்: சரி சார் இப்ப நான் இத வாங்கிகுறேன் அடுத்த முறை வரும் போது இந்த மாதுரி எல்லாம் பண்ணாதிங்க. சில்லரை கரெக்டா குடுத்து பொருள வாங்கிகோங்க.

நான்: பஸ்ல எல்லாம் ஒட்டி இருக்குற மாதுரி நீங்களும் பேசாம "சரியான சில்லரை குடுத்து பொருளை வாங்கவும்" சைடுல எங்கையாவது எழுதிவைங்க. இல்லனாஎன்ன மாதுரி ஆளுங்க நிறைய பேரு கிளம்பிடுவாங்க.

கடைகாரர்: முதல நீங்க கிளம்புங்க சார். வியாபாரத்த கெடுகாதிங்க.


டென்ஷன் ஆனவர் அவரே போய் ஒரு டீ போட்டு குடித்தார், வடிக்கையளர் இல்லாத கடையில்..



4 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

சில்லறதனமால இருக்கு...ஹி ஹி..

 

enna solrathunne theriyala

evano oruvan movie paarkavum

 

அம்பது பைசாவுக்கு மதிப்பே இல்லியா . எல்லாம் காலம் தான்

 

Oru 50 paise ku 8 Page kadhai elutha mudiyum nu ippo thaan therinjukiten.. Nandri ayya.. Naanum oru 25 paise eduthutu poi innoru kadhai eluthuren.....