~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள் - 1

சென்ற வாரம் தங்கையின் கல்யாணத்தில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்று இருந்தேன். மாலையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலையில் இருந்ததால் காலையில் நடக்கும் முகுர்த்தத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள சென்றேன். முன்பதிவின் இடம் கிடைக்காததால் பொது பெட்டியில் அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். ரயில் நிலையம் சென்ற போது நீலகிரி எக்ஸ்பிரஸ் பொது பெட்டி நிரம்பி இருந்தது. அதில் பாதிக்கு பாதி வட மாநில ஆண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். உட்கார்வதற்கு இடம் இல்லாததால் முன்பதிவு பெட்டியில் ஏதேனும் இடம் காலியாக இருக்குமா என்று நப்பாசையில் ஒவ்வொரு பெட்டிளையும் ஒட்டி இருக்கும் சார்ட்யை பார்த்து கொண்டு வந்தேன். எல்லாம் புக் ஆகி இருந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி பார்க்கலாம் என்று அவர் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.

அடிக்கும் வெப்பத்திலும் கோட் போட்டு கையில் பெட்டியுடன் வருபவரை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம் இவர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று. அவ்வாறே ஒருவர் வந்தார் யாரேனும் முந்தி கொள்வார்களோ என்கிற பயத்தில் அவர் பெட்டியில் ஏறும் முன்னரே " சார் ஓபன் டிக்கெட் தான் ஏதேனும் பர்த் கிடைக்குமா" என்று பொய்யான சிரிப்பு சிரித்து கேட்டேன். "S9ல உட்காருங்க வரேன்" என்றார், அவருக்கு என்று ஒதுக்க பட்டு இருக்கும் சைடு சீட்டில் எனக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் காலியாக இருந்த ஒரு இடத்தில உட்கார்ந்தேன். அவரை பார்த்தேன் அவரின் கையில் ராஜேஷ்குமார் க்ரைம் நாவல். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒருவர் ராஜேஷ்குமார் நாவல் படிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு வந்தது. அதை அவர் கவனித்து விட்டார் போல ஏன் சார் சிரிகிரிங்க என்று கேட்டு தனது கைகுட்டையால் முகத்தில் துடைத்து கொண்டார். எனக்கு கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது " ஒன்னும் இல்ல சார் ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் நாவலை ஒருத்தர் படிக்கிறத பார்க்கும் போதும் நான் ராஜேஷ்குமார் நாவல் படித்த நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்" என்ற உண்மையை சொன்னேன்.


ரசனை ஒற்றுமையோ என்னவோ இரண்டு பேரும் அரகோணம் வரும் வரை எங்களை பற்றி அறிமுகம், சொந்தபந்தம், வேலை, சேமிப்பு, படிப்பு, பொழுதுபோக்கு என்று இடைவேளை இல்லாமல் நீண்டு கொண்டு இருந்தது எங்கள் பேச்சு. அவரின் வயது 35 அல்லது 40 இருக்கும், ரொம்ப மரியாதையை குடுத்து பேசினார், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து இருந்ததால் அவரின் பேச்சில் மரியாதையை அவர் அறியாமல் வந்தது. டிக்கெட் பரிசோதகர் எனக்கு அடுத்த பெட்டியில் இடம் ஒதுக்கி தந்தார் இந்த முறை உண்மையான சிரிப்பு சிரித்து அவருக்கு நன்றி சொன்னேன். விடைபெறும் நேரம் என்பதால் அவரிடன் கை குலுக்கி சென்றேன். எனது சீட் நம்பர் தெரிந்து கொண்டவர் நிம்மதியாக துங்குங்க என்று சொல்லிவிடு அவர் தூங்காமல் பயணத்தை மேற்கொண்டார். அறிமுகம் இல்லாத ஒருவரிடம் அந்த ஒரு மணிநேரம் பேசியது நெருங்கிய நண்பன் இடம் பேசியதை போன்று இருந்தது.


எனக்கு குடுத்தது லோயர் பர்த் அங்கு சென்று பார்த்த போது வேறு ஒருவர் படுத்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் , இது என்னுடைய இடம் சார் என்றேன் மனிதர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் போல எழுந்ததும் என்னை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தார். " அது எல்லாம் முடியாது வேற எங்கயோ போய் படு" என்று அவர் பேசி கொண்டு இருந்தார். எனக்கு ஒன்றும் புரியல " சார் இது எனக்கு ஒதுக்கிய இடம் நீங்க படுத்து இருக்கிங்க தப்பு உங்க மேல தான் இருக்கு முதல்ல எழுந்துரிச்சு உங்க பர்த்ல போயப்படுங்க" என்று நானும் எரிச்சலுடன் பேசினேன். எனக்கு எந்த சங்கடமும் இல்லை படுப்பதற்கு. அதை அவர் கனிவாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக சரி என்று சொல்லி இருப்பேன் ஆனால் ஏதோ அவரின் இடத்தை நான் கேட்டது போல என்மீது கோவபட்டது என்னையும் கோவமடைய செய்தது . அவருக்கு எதிரில் படுத்து இருந்த ஒரு பெண்மணி என்னிடம் மேல் பர்த்ல படுத்கொங்க சார் இவரால மேல ஏற முடியாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக தெரிந்தார், " வேண்டுகோள சொன்ன கேக்குறேன் இவர் என்னமோ அதிகாரம் பண்றாரே?? . "மன்னிச்சிகோபா கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்ல இவருக்கு" என்று சொன்னார்.

ஓ நாம கூட கொஞ்சம் அவரசப்பட்டோம் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்து மேல் ஏறி படுக்க சென்றேன்.


என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்களை திறந்தால் அந்த போலீஸ்காரர் "வடகோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்துடுச்சு சார் எழுந்துருங்க" என்றார். மணி பார்த்தேன் காலை 4. நன்றி கூறி கீழே இறங்கினேன் சிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். போலீஸ்காரர் வந்து எழுப்பியதை பார்த்தது நாளவோ இல்லை வேறு மாதிரி நினைத்தார்களோ என்னவோ ??


இறங்கிய பின் பார்த்தேன் அந்த பெரியவர் தலைக்கு அந்த பெண்மணி குல்லா மாட்டி விட்டு கொண்டு இருந்தார் பாசத்தின் பிணைப்பு ..

11 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

நல்லா இருக்கு பயணக்கட்டுரை. ஆரம்பத்தில சில எழுத்துப்பிழைகள் மட்டுமே திருஷ்டி.

 

நானும் இதே மாதிரி ஒன்னு எழுதனும்னு வருஷக் கணக்கா நினைச்சிட்டு இருக்கேன். நினைச்சிட்டே...... இருக்கேன்.

நல்லா இருக்கு உங்க பயண அனுபவம்.

 

நன்றி சின்ன அம்மிணி...

என்னதான் கண்கொத்தி பாம்பு மாதிரி படிச்சு பார்த்து பதிவு செய்தலும் பேசுற அளவுக்கு எனக்கு தமிழ் எழுத வராது.

 

நன்றி வால் ..

என்ன தல சும்மா ஒரு ஸ்மைலி போடு எஸ்கேப் ஆகிடிங்க

 

நன்றி விக்னேஷ்வரி..

நீங்களும் எழுதுங்க இருவர் ரசனையும் எப்படி என்று பார்க்கலாம்.

 

சட்டுன்னு வந்த கோவம்! சாந்தமான பெண்மணியின் முகம் பார்த்து வந்த இறக்கம்! ராஜேஷ்குமாரின் ரசிகன்!

ஒரு மனிதருக்குள் இவ்வளவு மனிதர்களா :-)

நல்ல மனித நேயம் மிக்க உங்க உணர்வுகளை பாராட்டுகிறேன்!

தொடரவும் அடுத்த கட்டுரையை !

 

பயண கட்டுரை நல்லா இருந்திச்சு:)

 

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ரம்யா.

பயணங்கள் தொடரும் அடிகடி வந்து செல்லவும் .

 

//என்ன தல சும்மா ஒரு ஸ்மைலி போடு எஸ்கேப் ஆகிடிங்க//

ஸ்மைலி போட்டா, இதனால் சொல்லவரும் கருத்து என்ன? என்று அர்த்தம்!

 

என்ன கருத்தா ??? நான் அவன் இல்லை தல .. நான் பாட்டுக்கு எனக்கு தெரிஞ்சத எழுதுறேன் அவ்வளவு தான் ..

 

என் ரயில் பயண அனுபவத்தையும் படியுங்கள் நண்பா..

http://anbudan-mani.blogspot.com/2009/10/blog-post.html