சென்னைக்கு வந்த புதுசுல இப்படி தான் சொல்ல துண்டியது . வேறு என்ன சொல்ல ராமமுர்த்தி என்கிற நான் எதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து வரவில்லை . அழகும் , தொழில்லும், மரியாதையும் நிறைந்த கோவையில் இருந்து தான் வந்தேன் . என்னதான் இருந்தாலும் நான் சென்னை வரும் பொது முதல் முதல் காட்சியாக ஒரு பெண் ஒரு ஆணின் உடன் பைக்ல இப்படி ஒட்டி கொண்டு அதும் காலை 6 மணிக்கும் போறதா பார்க்கும் போது இப்படி தான் சொல்ல தோன்றியது. கோவையில் பெண்கள் இப்படி எல்லாம் போறது ரொம்ப அரிது. எந்த மூலைல எந்த சொந்தக்காரன் இருப்பான் என்றே தெரியாது. அதும் கோவை நகரம் என்பது சென்னை போன்று மிக பெரியது இல்லை . சுற்று முற்றும் 20 கிலோமீட்டர்குள்ள தான் சிட்டி இருக்கும் .
படிச்சது M.Com அதும் 1 வருடம் கழித்துதான் அர்ரியர் வச்சி பாஸ் பண்ண முடிஞ்சது . கோவைல ஒரு ஆடிடோர் ஆபீஸ்ல கொஞ்ச நாட்கள் குப்பை கோடிட்டு இருந்தேன் . மனதில் எதோ ஒரு பச்சி சொன்னது சென்னைக்குபோ ஒரு மலையே வாங்கிடலாம் என்று.
அதனால் நேற்றே ரயில் ஏறி சென்னை வந்துட்டேன் . வந்து முதலில் என் கண்ணில்பட்டது தான் மேலே சொன்னது . நண்பன் குமாரிடம் முதலே தகவல் தெரிவித்து விட்டேன். அவன் தங்கி இருக்கும் மேன்சன் தான் நானும் தங்க போறேன் . கையில் இருக்கும் காசு ரூம் அட்வான்ஸ்க்கு மற்றும் இந்த மாதம் சாப்பாடு செலவுக்கு தேறும். இந்த மாதத்துக்குள் எதோ ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்து விடுவது என்ற கொள்கை கொண்டு உள்ளேன் .
குமார் என்னை ரயில்வே ஸ்டேஷன் வந்து தனது பைக்கில் ஏற்றி சென்றான் . இந்த இடத்தில் குமார் பத்தி கண்டிபா சொல்லவேண்டும் . ஆளு பார்கிறதுக்கு ஆண் அழகன் மாதுரி இருப்பான் . ஆறு அடிக்கு கொஞ்சம் கம்மி , மாநிறம் என்னுடன் தான் காலேஜ் முடிச்சன் . இரண்டு பெரும் ஒரே ஊர் என்பதினால் அடிகடி சந்தித்து கொள்வோம் .
காலேஜ் படிக்கும் போது கிளாஸ்ல நாங்க இருந்த நேரத்தை விட கேன்டீன் மற்றும் தியேட்டர்ல இருந்த நாட்கள் தான் அதிகம் . குமார் கொஞ்சம் பணக்காரன் அவனின் அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் பணம் புழுங்கும் இடத்தில கை நிறையே லஞ்சம் வாங்கும் அதிகாரி . அதனால் கையில் எப்படியும் 500 ருபாய் இல்லாமல் அவன் காலேஜ் வந்தது இல்லை . இவனுக்கு என்று ஒரு பட்டாளமே இருக்கிறது . எங்கு போனாலும் 2 ஒண்டிபுலி இவன் பின்னாலே சுற்றும் .
முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்கை என்பது யாருக்கும் அவள்ளவு சந்தோசமாக இருந்தது இல்லை எங்களுக்கும் கூட ஒரு வித பயத்துடன் செல்வோம் . சீனியர் பசங்க ராக்கிங் பண்றது என்பது எங்கள் கல்லூரியில் கொஞ்சம் அதிகமே . பஸ்ல , கான்டீன்ல , ரோடுல , என்று எங்களை அவர்கள் படுத்து பாடு சொல்லிமாளாது . அப்ப எல்லாம் ராக்கிங் செய்தல் கடும் தண்டனை என்று கல்லூரி நிர்வாகம் சொன்னாலும் அதை எல்லாம் எங்க சீனியர் பசங்க சட்ட செய்வது இல்லை .
குமார் வளத்தி என்பதனால் கடைசி பெஞ்ச்ல அவனே போய் உட்கார்ந்து கொண்டான் அவனுக்கு முன்னாடி இருக்கும் பெஞ்ச்ல நான் மற்றும் சில அடி போடிங்க இருந்தோம் . எங்க பேரு வத்தியார்க்கு தெரியுமோ இல்லையோ எங்க சீனியர் பசங்களுக்கு நன்றாகவே தெரியும் . கரெக்டா பேரு சொல்லி குபிட்டு ராக்கிங் செய்வாங்க .. குமார் மட்டும் கொஞ்சம் முரண்டு பிடித்தான், சீனியர் யாராவது ராக்கிங் பண்ண அவனுக்கு பிடிக்காது. அதனாலே அவன் மேல் சீனியர் பசங்களுக்கு செம எரிச்சல் . இந்த சீனியர் பசங்கள எதாவது பண்ணும் என்றே நானும் , குமாரும் பேசிட்டு இருப்போம் . எதோ காலேஜ் வந்தோம் படிச்சோம்ன்னு இல்லாம இவனுக யாருடா நம்மள ராக்கிங் பண்றது என்றே நாங்கள் கர்ஜித்து கொண்டு இருந்தோம் .
இதுக்கு எல்லாம் சேர்த்து அவனுகளுக்கு பெரிய ஆப்பு வைக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம் என்று நாங்கள் ஐடியா பண்ணிக்கொண்டு இருந்தோம் .
குமார் : Got It மச்சி !!!!!
2 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
கதையின் ஓட்டத்தை எழுத்து பிழைகள் வெகுவாக பாதிக்கிறது!
கொஞ்சம் பாருங்களேன்!
அப்படியே வேர்டு வெரிபிகேஷனை தூக்குங்க!
உண்மையே சொல்லனும்னா எனக்கு சத்தியமா தமிழ் ஒழுங்காவே வராது .
நன்றி வால் ..
கண்டிபாக ஒன்றுக்கு பத்து முறை படித்து பார்த்து பதிவு ஏற்றம் பண்ணுகிறேன் ..
Post a Comment