சிலவற்றை திரும்பி பார்கிறேன் (3)
Posted by
Romeoboy
at
5:42 AM
எங்கேயோ ஆரமிச்சு கதை எங்கயோ போயிட்டு இருக்கு , நாட்கள் உருண்டு ஓடியது , நட்பின் ஆழம் மறைந்து வாழ்கையின் ஆழம் புரிய ஆரமித்தது. படிப்பு மற்றும் வேலை காரணமாக நான் கோவை இருந்த 8 வருடங்கள் அவனை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது . என்னக்குள் இருந்த நியாபகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்மாக மறைந்தது . 2006 ஆம் வருட தொடக்கத்தில் சென்னை வந்து வேலை பார்க்கலாம் என்று வந்தேன் . ராயபுரம் ஏரியா தாண்டும் பொது எல்லாம் . பழைய நினைவுகள் சற்றே பின்னோக்கி செல்ல துண்டியது, இப்பொது இருக்கும் நண்பர்கள் யாரேனும் அவனை பற்றி தெரிந்து வைத்து இருபார்கள் என்ற நம்பிக்கையுடன் சில நண்பர்கள் இடம் கேட்டேன் . சுதாகர் மட்டும் அவனை திருவல்லிகேணி பக்கம் பார்த்தாக சொன்னான். நாட்கள் உருண்டு ஓடியது, எனக்கு வேலையும் கிடைத்தது எப்போது பைக் சவாரி செய்யும் நான் ஒரு முறை பஸ்சில் செல்ல நேர்ந்தபோது என் கண்ணில் அகபட்டன் சரவணன். நான் பஸ்சில் அவன் பல்சர் பைக்கில் போனதை பாத்தேன் . ஒரு டிராபிக் சிக்னலில் எனது பஸ் முன்னால் நின்று கொண்டு இருந்தான். ஆள் வாடசடமாக இருந்தான் . எப்படியும் அவனை பிடித்து விடலாம் என்று பஸ் விட்டு இறங்கி நடந்தேன் . அவனது தோளில் கை வைத்தேன், போலீஸ்காரன் தான் தன்னை மீது கை வைத்தானோ என்று ஒருவித பயத்துடன் திரும்பி பார்த்தான். எனது முகத்தை மறந்து இருப்பான் என்று நினைத்தேன், ஆனால் சரியாக கண்டு பிடித்துவிடான், அவனது சந்தோசம் முகத்தில் தெரிந்தது . பைக் பின்னாடி ஏறிக்கொண்டேன், நேராக திருவலிகேணி நோக்கி சென்றோம். ஒரு டீ கடை வாசலில் நின்ற்து அவனை பார்த்தும் கல்லாவில் இருந்தவர் சிநேகமாக புன்னகைதார் . அவன் என்னை பற்றி கேட்டு கொண்டே டீ மற்றும் சிகரெட் வாங்கினான், அவனை பற்றி விசாரிதேன் , +2 படிக்கும் போதே அவனது அப்பா மஞ்சள் கமலை நோயால் இறந்து விட்டாராம், தம்பி , தங்கை , அம்மா என்று இவனை எதிர்பார்க்க ஆரமித்தது . +2 பிறகு அவன் படிப்பிற்கு டாட்டா சொல்லிவீட்டு அப்பாவின் கடை எடுத்து நடத்த ஆரமித்துவிட்டன் . Painter தொழில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் இவனையும் விட்டு வைக்கவில்லை. மதத்தில் 15 வேலை இருந்தாலே பெரிது . அப்படி இப்படி என்று கொஞ்சம் பணம் சேர்த்து DTP, Photoshop என்று கற்று கொண்டு, ஒரு டிஜிட்டல் போர்டு தயாரிக்கும் கம்பெனி வேலைக்கு சேர்ந்து விட்டன் . இப்பொது வாழ்கையில் தும்பம் ஏதும் இல்லை. சந்தோசம் என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை . பாதிக்கு பாதி என்றே சொல்லலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
Post a Comment