~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சின்ன சின்ன கதைகள் - 1/25



கோபி எப்படியும் இந்த காரியத்தை முடித்துவிடுவான் என்கிற  நம்பிக்கையில் அவன் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். எங்கள் சங்கத்தில் அவனை போல தைரியசாலி யாரும் இல்லை, இந்த வேலை செய்ய அவன் ஒருவனைவிட்டால் வேறு ஆள் முன்வரமாட்டார்கள். 

எங்களை பார்த்தாலே சுடுவிடுவதை போல பார்க்கும் அந்த மீசைக்காரர்க்கு இதைவிட வேறு அதிர்ச்சி ஏதும் இருக்காது. 


இதோ கோபி வந்துவிட்டான்.

மச்சி காரியம் கச்சிதமா முடிஞ்சிடுச்சு - சொல்லும் போதே மிக பெரிய சாதனை செய்தவன் போல நெஞ்சை நிமிர்த்தி சொன்னான். அவன் கைகளில் அது இருந்தது.

ஆள் ஆளுக்கு அவனை பாராட்டினோம். நாளைக்கு காலைல யாரும் அந்த சைடு போகாதிங்க என்று எல்லோருக்கும் அறிவுரைதான். 

அடுத்த நாள் காலனியில் எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. சங்கத்தின் உறுபினர்கள் மொட்டைமாடியில் கூடி தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்று விவாதித்தோம்.. கோபி ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டான், தான் தவறு ஏதும் செய்யவில்லை சந்தோஷ் சொல்லி குடுத்த முறையைத்தான் பின்பற்றினேன் என்றான். 

சரி மணி ஆகிவிட்டது எல்லோரும் அவர் அவர் வீட்டிற்கு சென்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு டியூஷன் சென்றோம் மீசைகாரரிடம்.

எங்கள் யூகம் தவிடுபொடி ஆனது , மீசைக்காரர் முகத்தில் அது . 

அப்ப கோபி எடுத்துட்டு வந்தது?? 

மீசைகாரரின் அம்மா கோபியின் கால்களை மிதித்துவிட்டார். 

"யப்பா என்னோட கண்ணாடி எங்கையாவது இருக்கானுபாரேன். கண்ணு சரியா தெரியல" 

"அம்மா நீ அந்த பக்கம் எல்லாம் போகாதா நான் நாளைக்கு புதுசா கண்ணாடி வாங்கிதரேன் சொன்னேன்ல. இப்படி வாமா , கண்ணாடிய எங்கையாவது வச்சிட்டு ஏன் எங்க உசுர வாங்குற. போய் படு அந்தாண்ட "

சரி பசங்களா எல்லோரும் அஞ்சாவது வாய்பாட்டை படிங்க. டேய் கோபி மூணாவது வாய்பாட்டை படிச்சியா??  வாடே இங்க,  எங்க உன்னோட கூட்டாளிங்க எல்லாம் ?? 

மவுனமாய் நின்று கொண்டு இருந்தான் கோபி. அவன் கால்சட்டை பையில் அந்த கண்ணாடி.  




With Love
Romeo ;)

சில திரைபடங்களும் ஒரு புத்தகமும்


The Red Cliff  I & II

ஆங்கில ஆக்ஷன் படங்களை மிகவும் நேசிக்கும் ரசிகர்களுக்கு டைரக்டர் John Woo தெரியாமல் இருக்காது. 

Mission Impossible - 2 , Face off , Broken Arrow போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த படமே The Red Cliff 






சீனா நாட்டில் மிக பெரிய அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கோகோ குறுநில மன்னர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்.  அதன் பொருட்டு அவரின் தலைமையின் கீழ் மிக பெரிய படையோடு   Sun Quan and Liu Bei என்கிற இரண்டு நாட்டை கைப்பற்ற கிளம்புகிறார்.

இவரின் பெரும் படையை எப்படி எதிர்கொள்கிறார்கள் இந்த அரசர்கள் , எப்படி எல்லாம் யுகம் அமைத்து வெற்றிகண்டார்கள் என்பதை வெண்திரையில் அல்லது DVDயில் காண்க.


படத்தில் இருப்பது இரண்டே இரண்டு சண்டை காட்சிகள். ஒன்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றொன்று இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ்.  இரண்டும் வெகு அருமை, சீனா படங்களில் நடைபெறும் சண்டை காட்சிகள் போலவே இருந்தாலும் அந்த சண்டை துடங்குவதற்கு முன் அவர்கள் செய்யும் போர் தந்திரங்கள், குறைந்த அளவே உள்ள படைகளை வைத்துகொண்டு எப்படி அவ்வளவு பெரிய படையை அழித்தார்கள் என்பது ரொம்ப சுவாரசியமாக விறுவிறுப்பாக  சொல்லி இருக்கிறார் இயக்குனர். 


முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் நிலத்தில் நடக்கிறது , இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் நீரில். 

ஒரு பெரும் படையை அழிக்க தேவைப்படுவது வீரம் மட்டும் அல்ல ராஜதந்திரமும் கூட. படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும் அந்த ராஜதந்திரம் என்ன என்று. 


Don't Miss  to Watch this Movie.


-------------------------------------------------------------------------------------------------------

ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ருத்ர தாண்டவம் படத்தை பார்க்க நேர்ந்தது. வி.கே.ராமசாமி, நாகேஷ் நடித்த படம் படத்தில் வி.கே.ராமசாமி சிவனாகவும், நாகேஷ் கோவில் பூசாரி ஆகவும் நடித்து உள்ளனர். 

படத்தில் சிவன் வெகு இயல்பாக பேசியது தான் அருமை. கடவுள் எல்லாம் வரத்தை குடுக்கணும் அல்லது உபதேசம் மட்டுமே பண்ணவேண்டும் என்கிற கொடுமையை அப்பவே உடைத்து எரிந்துள்ளர்கள்.    ஒரு இடத்தில நாகேஷ் இந்திய பெரிய நாடுதானே பேசாமல் மாநிலங்களை எல்லாம் பிரித்துவிடலாம் என்று யோசனை சொல்லுகிறார் அதற்கு வி.கே.ராமசாமி சொல்லும் பதில் அருமை. இன்றைய காலகட்டத்துக்கு ஒத்துபோகிற நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளது.  

படத்தில் ஒரு காட்சி :-

கோவிலில் இருக்கும் பார்வதி சிலையை கடத்திவிடுகிறார்கள் அதை தெரிந்து சிவன் ரொம்ப சோகமாக கோவிலில் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்லும் நாகேஷ் தனது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சிவனோ ரொம்ப பயந்து போய் இருக்கிறார், பூசாரி இப்போ பார்வதியை அமெரிக்காக்கு கடத்திட்டு போய்ட்டாங்க, நாளைக்கு என்னைய சீனாக்கு கடத்திடான்கனா அதுக்கு அப்பறம் நானும் பார்வதியும் ஒண்ணு சேரவே முடியாதே. சீனா அமெரிக்க ஒண்ணு சேர்ந்தாதான் நாங்க சேருவோம். அதற்கு நாகேஷ் சொல்லுவர் நான் இருக்குறார் வரைக்கும் உங்க மேல ஒரு கை வைக்கவிடமாட்டேன். 

இந்த வசனத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம் சாமியோட  நிலைமை என்னனு.
     

-------------------------------------------------------------------------------------------------------

போர்க்களம் - நண்பன் ஒருவன் ரொம்ப வற்புறுத்தி சொல்லியதால் பார்த்த படம், நிஜமாலுமே படத்தை தியேட்டர்ல பார்க்காதது பெரும் தவறு :(.  பாண்டி சரோஜ் குமார் இயக்கம் சிம்ப்லி சூப்பர். 

எல்லா இடத்திலையும் ஏதோ ஒரு வித்தியாசத்தை ஆங் ஆங்கே புகுத்தி அசத்தியுள்ளார். கேமரா கோணம் எல்லாம் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத புதுவித கோணம். 



படத்தின் கதைக்களம் அருமை,  மாஸ் ஹீரோ யாரவது நடித்து இருந்தால் படம் செம ஓட்டம் ஓடி இருக்கும், கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. சத்யன் படத்தில் அருமையாக நடித்துள்ளார்.  இயக்குனர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது .இவரின் அடுத்த படத்தை கண்டிப்பாக முதல் காட்சிளையே  பார்த்துவிடவேண்டும்.


-------------------------------------------------------------------------------------------------------








நான் சிறுகதைகளை முழு மூச்சாக படிக்கமாட்டேன், எந்த ஒரு புத்தகத்தையும் அப்படி படிப்பதுயில்லை. காரணம் அதன் தாகம் என்னில் கொஞ்ச நேரமே இருக்கும் அதனால் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அந்த புத்தகத்தின் தாக்கத்தை என்னுள் பல நாட்கள் இருக்கும் படி செய்துகொள்வேன். கேபிள் புத்தகம் வெளிவந்து பல நாட்கள் ஆகிறது ஆனால் நேற்றுதான் கடைசி பக்கத்தை படித்து முடித்தேன். 

புத்தக வெளியிட்டு விழா அன்று அஜயன் பாலா புத்தகத்தை பற்றி பேசும் போது துரை.. நான்.. ரமேஷ்சார் என்கிற கதை ரொம்ப அருமையாக இருக்கிறது என்று சொன்னார். அவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். மற்ற எல்லா கதைகளைவிட இந்த கதை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அந்த பெண்மணி மூலம் கதையை நகர்த்தி கொண்டு சென்றது நல்ல உக்தி. சமிபத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி நாவல் படித்தேன், அதற்கு வெகு அருகில் செல்கிறது இந்த கதை. இந்த புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்றால் தனி பதிவே போடவேண்டும். 


புத்தகத்தில் இருக்கும் பலகதைகள் பாலியல் அல்லது காதலை மையப்படுத்தியே இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு கதைகள் தான் வேறுதளத்தில் அருமையாக பதிகப்படுள்ளது. 


பிடித்தது என்று ஒன்று இருக்கும் எனில் பிடிக்காதது என்று ஒன்று இருக்கத்தானே செய்யும் 
அது என்னை பிடிக்கவில்லையா..? தான் . கள்ளகாதல் என்றுமே ஏற்புடையது அல்ல இது எனது வாதம்.

மற்றபடி 15+ படிக்கவேண்டிய புத்தகம். 

இந்த ஆண்டுக்குள் சீக்கிரம் அடுத்த புத்தகத்தை ரிலீஸ் பண்ணிவிடுவார் போல இருக்கிறது. புத்தகம் வெளியாகி 10 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் 3 சிறுகதைகளை எழுதிவிட்டார். 



With Love
Romeo ;)

கிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்

பதிவர் நண்பர் மணிகண்டன் அன்புடன் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவு.
--------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. யார் வேண்டுமாலும் எழுதலாம். ( நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டாங்க அதான்)




1. பிடித்த கிரிக்கெட் வீரர்?  ஸ்டீவ் வாக் , சச்சின்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
(கள்)? பாகிஸ்தான் வீரர்கள் 

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் 
மெக்ராத் மற்றும் அம்ப்ரோஸ் 

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
 ஆசிப் 


5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, ஹர்பஜன் 

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் 
அஜந்தா மெண்டிஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் 
சச்சின்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் 
மிஸ்பா உல் ஹக், ஆம்லா 

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் 
கில்க்ரிஸ்ட், ஜெயசூரியா 

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர்
 மைக்கல் பெவன் 

11. பிடித்த களத்தடுப்பாளர் 
ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் 
கிளார்க் 

13. பிடித்த ஆல்ரவுண்டர் 
காலிஸ், பிளின்டாப் 

14. பிடித்த நடுவர் 
 டேவிட் ஷெபெர்ட 

15. பிடிக்காத நடுவர் 
 இந்தியன் டீம்க்கு அவுட் குடுக்குறவங்க

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் 
 ஹர்ஷா போகலே, டோனி கிரெய்க்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் 
சித்து, சுனில் கவாஸ்கர்  

18. பிடித்த அணி 
இந்தியா, நியூசிலாந்து

19. பிடிக்காத அணி 
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் 


20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- 
இந்தியா ஆடும் அணைத்து போட்டிகளும்


21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- 
பாகிஸ்தான் - இங்கிலாந்து 

22. பிடித்த அணி தலைவர் 
 டோனி, வெட்டோரி 


23. பிடிக்காத அணித்தலைவர் 
பாண்டிங்  

24. பிடித்த போட்டி வகை
 ட்வென்டி ட்வென்டி

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி 
கங்குலி சச்சின் 

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி 
மொக்கை போடும் வீரர்கள் 

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் 
சச்சின், டிராவிட் 

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் 
சச்சின், பிரட்மன் 





நான் முதலே சொன்னது போல இதை தொடர நினைக்கும் நண்பர்கள் யார்வேண்டுமாலும் எழுதலாம். நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.