~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label பதில். Show all posts
Showing posts with label பதில். Show all posts

யுவகிருஷ்ணாவின் பின்னுடத்துக்கு எனது பதில்


பதிவர் யுவகிருஷ்ணா எனது
முந்தைய பதிவிற்கு முதல் முதலில் பின்னுடம்யிட்டு சென்றார். அவர் தரப்பு நீயாயத்தை கூறினார். அவரின் அவ்வளவு பெரிய பின்னுடத்துக்கு இந்த பதிவில் பதிலளிக்கிறேன்.




1.புத்தகக்காட்சிக்கு நான் பதிவர்களை சந்திக்க வரவில்லை. இரண்டு கோடி புத்தகங்கள் குவிந்திருக்கும் ஒரு கண்காட்சி நடத்தப்படுவது சந்திப்புகளுக்காக அல்ல. சந்திக்க அது பீச்சோ அல்லது பார்க்கோ அல்ல.

பதிவர்கள் யாருமே பதிவர்களை சந்திபதற்கு மட்டுமே வருவதுயில்லை. கண்காட்சிக்கு வந்த அனைவரும் ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கி தான் சென்றார்கள். பதிவர் சர்புதீன் சந்திப்பு மட்டுமே திடீர் என்று முடிவாகி சந்தித்தோம். சந்திப்புகள் நடப்பதற்கு பீச் அல்லது பூங்காவில் தான் சந்திக்க வேண்டுமா என்ன ??


2. கண்காட்சி நடந்த பத்து நாளும் நான் வந்திருந்தேன். வேடிக்கை பார்க்கவோ, புத்தகம் வாங்கவோ மட்டுமல்ல. எங்களுடைய ஸ்டால் அங்கிருந்தது. பணிநிமித்தமாக வந்தே ஆகவேண்டிய கட்டாயம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நான் ஸ்டாலில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.

லக்கி உங்கள் ஸ்டால் அங்கு இருந்தது எனக்கு தெரியும்,
நான் அங்கு இருந்த 3 நாட்களில் ஒரு தடவை கூட உங்களை நான் அங்கு பார்த்தது இல்லை . பா. ராவிடம் மட்டும் பேச நேரம் இருந்த உங்களிடம் எங்களை கண்டுக்காமல் இருந்தது என்ன அர்த்தம்?
பா. ராவிடம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் மற்றும் சிலர் அருகில் வந்தோம். எல்லோரிடமும் பா.ரா பெயர் கேட்டார். நீங்க எதுவுமே நடக்காத மாதிரி அல்லவா இருந்திங்க. ஒரு வார்த்தை கூட பேசவில்லையே !!!


3. புத்தகக் காட்சியில் பதிவர்களை சந்தித்துதான் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்ற அவசியம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுதான் ‘நகர்வு' எனப்படுமெனின் நாங்கள் நகராமல் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம்.

பதிவர்களை சந்திப்பதால் நீங்க அல்ல எவருமே எங்கும் சென்று விட முடியாது. மெரீனா பீச்ல் நடந்த கடைசி பதிவர் சந்திப்பில் உங்களிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் அதிகம்
படித்தது உங்களின் பதிவுகள்தான் என்று உங்களிடமே சொன்னேன் அது உண்மையும் கூட . அப்பொழுது புதிய தலைமுறை இதழ் வெளிவர இருந்த வாரம். நீங்க மற்றும் ஆதிஷா இருவரும் அதில் பணியாற்றுவதை பற்றி கூட கேட்டேன் . ஆனால் இன்றோ?? உங்களிடம் ஒருவர் எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார். அவருக்கு உங்களின் பதில் சிரித்த முகத்துடன் நலம் என்று சொல்லிவிட்டு, அடுத்த விநாடி அப்பறம் பார்க்கலாம் என்று முகத்தில் அடித்தார் போல சொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்வது எந்த விதத்தில் நியாயம்?? இதை இதழ் வருவதற்கு முன்னால் - இதழ் வந்த பின்னால் என்று எடுத்து கொள்ளவும்.

இதை தான் நான் அடுத்த கட்டம் என்று சொன்னேன்.


4. உங்களை அங்கே நேரில் சந்தித்தபோது புன்னகைத்தேன். பதிலுக்கு நீங்களும் புன்னகைத்தீர்கள். அடுத்தமுறை எங்காவது சந்திக்கும்போது உங்களை கண்டு நான் புன்னகைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி

நான் உங்களை ஒதுக்கவில்லை, இப்போது கூட அதிஷாவின் பதிவிற்கு
பின்னுடம்யிட்டுள்ளேன், எனது கோவம் உங்களின் செயலில் தானே தவற உங்களின் எழுத்துகள் மீது அல்ல . அடுத்த முறை உங்களை சந்தித்தால் கண்டிப்பாக எப்பொழுதும் போல கைகுடுத்து நலம் விசாரிப்பேன். ஏன் என்றால் எனக்கு முச்சாயம் பூசி பழக்கம் இல்லை, அதே போன்று அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இல்லை.



போன பதிவில் எனது ஆதங்கத்தை தான் சொல்லி இருக்கிறேன் . அன்று நீங்க நடந்து கொண்ட செயல் என்னை சிறிதளவு பாதித்தது என்னவோ உண்மையே.


With Love
Romeo ;)