~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label எரிச்சல். Show all posts
Showing posts with label எரிச்சல். Show all posts

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...

இந்த அலம்பரை தாங்கல ..

ர வர தமிழ் நாட்டுல காமெடி பண்ணுறவங்க அதிகம் ஆகிடே போறாங்க .


இப்ப மேட்டர்க்கு வருவோம், கொஞ்ச நாளாவே எங்கயும் பிளேக்ஸ் போர்டு, டிஜிட்டல் போர்டு என்கிற கலாச்சாரம் அதிகமா ஆகிட்டு இருக்கு. அதுல என்ன சிரிக்க வாய்த்த மற்றும் எரிச்சல் அடைய வைத்த சில சம்பவங்கள் பாருங்க

என்னோட நண்பன் ரமேஷ் குழந்தைக்கு காது குத்து . இதுக்காக அவன் சொந்த ஊருக்கு போய் இருந்தேன். நண்பன் நல்ல வசதி படைத்தவன் , நான் அங்கு சென்ற பொது எனக்காக ஹோட்டல்ல ரூம் எல்லாம் போட்டு குடுத்தான். சரி குளிச்சு முடிச்சு அவன் வீட்டுக்கு கிளம்பினேன் . ஹோட்டல்க்கும் அவன் வீட்டுக்கும் 3km, ஆட்டோல போய்டலாம் என்று கிளம்பினேன் , சரியாக 1km தாண்டியே பிறகு ரோடு சைடு எல்லாம் டிஜிட்டல் போர்டு கண்ணில்பட்டது. யாரோ அரசியல் தலைவர் வருகிறார் என்று அவரை வரவேற்று அவரது தொண்டர்கள் எல்லாம் கலர் கலர்ரக வரவேற்று வைத்து இருந்தார்கள். கிட்டதட்ட நுற்றுக்கு மேல் இருக்கும் அதில் எல்லாம் சொல்லி வைத்து போல யாராவது ஒருத்தர் கண்டிப்பாக cell phone பேசிட்டு இருக்குற மாதுரி போஸ் குடுத்துட்டு பல்ல காமிச்சுட்டு இருபாரு . ஏன்யா உங்க கிட்ட செல் போன் இருக்குனு எல்லோருக்கும் தெரியுறதுகாக போன்ல பேசுறது மாதுரி போஸ் குடுத்து அத இந்த மாதுரி டிஜிட்டல் போர்டுல எல்லாம் உங்க தலைவர் படத்துக்கு கீழ போட்டு வைக்கணுமா ??? Rs.1000 ருபாய்க்கும் கம்மியா மொபைல் வந்துடுச்சு, பிச்சைக்காரன் கூட மொபைல் வச்சி இருப்பானுக . அதும் இவங்க அதுல ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போஸ் குடுப்பாங்க பாருங்க அந்த கர்ண கொடுர காட்சிய பாத்தா செம கண்டா இருக்கு . இவங்கள எல்லாம் அரசியல் பண்ணுறதுக்கும் மத்தவங்களுக்கு குஜா துக்குறதுக்கும் இந்த மாதுரி தட்டி எல்லாம் வச்சி கடுப்பு எதுறங்க

சிரிப்பும் எரிச்சலுடன் நண்பன் வீட்டுக்கு வந்தால் அவன் குடும்பத்துடன் பல்ல காமிச்சிட்டு இருக்கும் பேனர் என்கண்ணில் பட்டது . குழந்தையுடையே தாதாவே தட்டி வச்சி பேரன வாழ்த்துறது தான் கொஞ்சம் இல்ல அதுக்கும் மேல எரிச்சல் அடையே வைக்கிறது.

ஊருல எல்லாம் இந்த மாதுரின சென்னை மாதுரி ஏரியால கொஞ்சம் அதிகமா இருக்கு. 

என்னோட அண்ணன் டிஜிட்டல் பிளேக்ஸ் பிரிண்டிங் பண்ற ஆபீஸ் வசி இருக்கிறான். எனக்கும் அவனுக்கும் 1 வருடம் தான் வித்யாசம் என்பதனால் வாடா போடா என்றே கூப்பிட்டு கொள்வோம். அவன் கடையில் இந்த மாதுரி கூத்து எல்லாம் நடக்கும்.

கொஞ்ச நாட்கள் முன்னால்
தனது நண்பன் கல்யாணத்துக்காக ஒரு 25 வயது மிக்க பையன் பேப்பர்ல எப்படி போடணும்ன்னு எழுதிட்டு வந்து அண்ணன் கிட்ட கூடுதான். கூடவே உட்கார்ந்து எந்த கலர்ல எப்படி எல்லாம் போடணும்ன்னு ஆர்டர் பண்ணிட்டு இருந்தான். இந்த பையன் அஜித் போடோ ஒரு சைடுல போட்டு விஜய் போடோ ஒரு சைடுல போட சொன்னான் . என்னடா இது தண்ணியும் நெருப்பும் ஒரே எடத்துல வருதேன்னு அவனிடம் ஏன்பா இவங்க 2 பேருக்கும்தான் ஆகாதே அப்பறம் ஏன் இவங்க ரெண்டு பேரோட போடோவும் ஒரே பேனர்ல போடுற என்று . அதுக்கு அந்த பையன் ஒரு லாஜிக் பதில் சொன்னான் .  
மணமகன் அஜித் ரசிகர் , மணமகள் விஜய் ரசிகை அதனால ரெண்டு பேரோட போடோ போடுறேன் என்றான். இந்த மாதுரி நடிகர்கள் போடோ போடுறது நால இவங்களுக்கு என்ன கிடைக்க போகுதோ இல்லையோ என்னோட அண்ணன் கம்பெனி லாபகரமாக ஓடுகிறது. ச்சே இப்படி எல்லாம் யோசிச்சு கலகுறனே என்ற கடுப்புடன் நடக்க இருந்த அடுத்த கொடுமையே பார்த்துக்கொண்டு இருந்தேன் . பேனர் ஓட நடு பகுதியில் WWE John Cena போடோ போட சொன்னான் பாருங்க இந்த கொடுமைதாங்க என்னால தாங்க முடியல . இது எதுக்கு என்று கேட்டேன் ?? மணமகன் ஓட அக்கா பையனுக்கு John Cena  புடிக்குமாம் .  

முடியலடா சாமீ என்று அங்கு இருந்து நடை கட்டினேன் வீட்டுக்கு .  


விளம்பரம் பண்ணுவதற்கு என்றே பிறந்த ஜென்மங்கள் இருக்கிறது . அந்த மாதுரியான ஜென்மங்கள்ல ஒருதர் எங்க ஏரியால இருக்காரு. யாராவது தன்னோட பிறந்தநாள்க்கு தானே போஸ்டர் அடிச்சு ஓட்டுரத பார்த்து இருக்குரிங்கள ??? 
இவரு தேசிய அரசியல் கட்சியின் நகர தலைவர். இவரு தன்னோட பிறந்தநாளுக்கு இவரே போஸ்டர் அடிச்சி அந்த நகரம் எல்லாம் ஒட்டி வச்சாரு . இத கூட விட்டலாம்க . இவரு 25வது தடவையாக சபரி மலை போறாரம் இத கூட இவரு போஸ்டர் அடிச்சு ஓடுறது எந்த விததில் எடுத்துகிறது .  


கோமாளிகள் இருக்கும் வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை . ஆனால் அந்த கோமாளிகள் பண்ணுகிற செயல் எல்லாம் எல்லா நேரமும் சிரிப்பு வருவது இல்லை சில நேரம் எரிச்சல் அடைய வைக்கிறது . நல்ல வேலை தேர்தல் ஆணையம் இந்த கூத்துக்கு எல்லாம் மிக பெரிய ஆப்பு வைத்தது இந்த தடவை அதற்காக அவர்களுக்கு கோடி முறை நன்றி கூறலாம் ..